பண்டிதர் பிரம்மராயர்
புலம்பெயர்ந்த இலக்கியச் சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிீப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில் செய்திருக்கின்றார்கள். எங்குமிருப்பது போல் இங்கும் நிறையத் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. பெரும்பாலானவை தமிழக அல்லது ஈழத்துப் பத்திரிகைகளின் நகல்களாகயிருக்கின்றன அல்லது பிரச்சாரம் செய்கின்றன.
வியாபாரமே இவற்றின் முக்கிய குறிக்கோள். இணையத்தின் வளர்ச்சி இவர்களிற்குப் பெரிதும் உதவுகின்றதென்றே கூற வேண்டும்.
தமிழிலக்கியம் , வளர்ச்சியென்று பார்த்தால் இங்கும் சில சிற்றிதழ்கள், சில தனி மனிதர்களே நினைவிற்கு வருகின்றார்கள். ‘காலம் ‘, ‘தேடல் ‘, ‘தாயகம் ‘, ‘நுட்பம் ‘ , ‘ழகரம் ‘, ‘மறுமொழி ‘ இப்படிச் சில இதழ்கள். செல்வம், ஐயகரன், George குருஷேவ் , வ.ந.கிரிதரன், ஞானம் லம்பேட், அ.கந்தசாமி, திருமாவளவன்,குமார் மூர்த்தி, சேரன், சிவதாசன், ஆனந்தப் பிரசாத், செழியன், குறமகள், மொனிக்கா , கவிஞர் கந்தவனம் இப்படிச் சிலரே ஞாபகத்தில் வருகின்றார்கள். ‘காலம் ‘ காலம் தப்பியாவது வெளி வந்துகொண்டிருக்கின்றது. ‘தேடலை ‘த் தேட வேண்டியிருக்கின்றது. ‘தாயகத் ‘தின் முகவரியையே காணவில்லை. தற்போது இணையத்தில் ‘பதிவுகள் ‘ தொடங்கியிருக்கின்றது. ‘தாயகம் ‘ ‘தேடல் ‘ போன்றவற்றை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களே அதிகம். அவற்றையும் மீறி அவை கனேடியத் தமிழ் இலக்கியத்திற்காற்றிய பங்களிப்பு பாராட்டப் பட வேண்டியதொன்று. ‘காலம் ‘ அடிக்கடி ‘வளரும் தமிழ் ‘ என்று புத்தகக் கண்காட்சிகளை நடாத்துகின்றது (செல்வம் நூல் விலைகள் விடயத்தில் சிறிது தாராளம் காட்டுவாரா ?). பாரதி மோகனும் (இவர் கரவை கந்தசாமியின் மகன்) தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத் தட்டிக்கொண்டவரிவர்.
சிலர் தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது காத்திரமான இலக்கிய அமர்வுகளை நடாத்துகின்றார்கள். ‘ரூபவானி ‘ புகழ் விக்கினேஸ்வரன் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முன்னால் தமிழ்ப் பிரிவின் தலைவரான ராஐசுந்தரம் போன்றோர் ‘முரசம் ‘ என்று Media சம்பந்தமான பல அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார்கள். மிகவும் பயனுள்ள அமர்வுகள் அவை. பல புகழ் பெற்ற திரைப் படங்கள் ,Cycle Thief போன்றன, இவ் அமர்வுகளில் திரையிட்டு விவாதிக்கப் பட்டன. தமிழர் வகை துறை வள நிலையமும் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருகின்றது. அண்மைக் காலமாக ஞானம் லம்பேட் , மகரந்தன் போன்றோர் இத்தகைய அமர்வுகளை ஆரம்பித்து நடாத்தி
வருகின்றார்கள். இது தவிர பல சங்கங்கள் அமைப்புக்கள்(பட்டியலிட முடியாதவளவிற்கு) பல்வேறு விதமான களியாட்ட விழாக்களை நடாத்தி த் தாமும் பங்களிப்புச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ‘பிரபலங்க ‘ளை அழைத்துச் சம்பாதிப்பதை சேவையென்று கூட இவர்கள் கூறிக் கொள்கின்றன.
சிறுகதைத் துறையினைப் பொறுத்தவரையில் நிறையவே பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அமரர் நிலா குகதாசன், George குருஷேவ், வ.ந.கிரிதரன், சக்கரவர்த்தி, சம்பந்தன், குமார் மூர்த்தி, அ.கந்தசாமி, மொனிக்கா போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். நூல்களாக குமார் மூர்த்தியின் ‘முகம் தேடும் மனிதன் ‘ (தமிழகத்தில் ‘காலம் ‘ வெளியீடாக வெளி வந்தது), வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா ‘ (தமிழகத்தில் ‘சிநேகா ‘ பதிப்பக வெளியீடாக வெளி வந்தது) , சம்பந்தனின் ‘வித்தும் நிலமும் ‘ , கடல் புத்திரனின் ‘வேலிகள் ‘ போன்றன வெளி வந்திருக்கின்றன. கவிதைத் துறையினப் பொறுத்த வரையில் ஐயகரன், சேரன், அ.கந்தசாமி, திருமாவளவன், நிலா குகதாசன், வ.ந.கிரிதரன்,கெளரி, சக்கரவர்த்தி , கவிஞர் கந்தவனம், மொனிக்கா, செழியன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். நூல்களாக சேரனின் ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம் ‘, சக்கரவர்த்தியின் ‘யுத்த சன்னியாசம் ‘, அ.கந்தசாமியின் ‘கானல் நீர்க் கனவுகள் ‘, வ.ந.கிரிதரனின் ‘எழுக அதிமானுடா ‘ , நிலா குகதாசனின் ‘இன்னொரு நாளில் உயிர்ப்பேன் ‘, செழியனின் ‘அதிகாலையினிலே ‘ கெளரியின் ‘அகதி ‘ ,மற்றும் ‘காலத்தின் பதிவுகள் ‘ போன்றன வெளிவந்திருக்கின்றன. நாவல் துறையினைப் பொறுத்தவரையில் ‘தாயகம் ‘ சஞ்சிகையில் தொடராக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்களின் தொகுப்பாக தமிழகத்திலிருந்து ‘மண்ணின் குரல் ‘ குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. செழியனின் ‘ஒரு போராளிியின் நாட் குறிப்பு ‘ , இதுவு ம் ‘தாயகத் ‘தில் தொடராக வெளி வந்தது, அண்மையில் தமிழகத்தில் நூலாக வெளி வந்திருக்கின்றது. இது தவிர ரவீந்திரநாதன், வீணைமைந்தன் , இரா தணி போன்றோர் இங்கு வெளிவரும் cut & paste பத்திரிகைகளில் அண்மைக் காலமாகத் தொடர் கதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நாடகத் துறையினப் பொறுத்தவரையில் ‘மனவெளி ‘ அமைப்பினர் கனடாத் தமிழ் நாடகத் துறையினை நவீனமயப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கவிஞராக இனங் காணப்பட்ட ஐயகரன் நல்லதொரு நாடகாசிரியராகவும் மலர்ந்திருக்கின்றார். இது தவிர N.K.மகாலிங்கத்தின் ‘சிதைவுகள் ‘ நல்லதொரு மொழி பெயர்ப்பு நூல். நோபல் பரிசு பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான Cinua Achebe ‘ யின் ‘Things Fall Apart ‘ இன் தமிழாக்கமிது. ‘காலம் ‘ வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளி வந்தது. வ.ந.கிரிதரனின் ‘நல்லூர் ராஐதானி: நகர அமைப்பு ‘ (நல்லூர் நகர அமைப்பு பற்றிய ஆய்வு நூல்), ‘தாயக ‘தில் தொடராக வெளி வந்தது, அண்மையில் தமிழகத்தில் ‘சிநேகா ‘ பதிப்பக வெளியீடாக வெளி வந்திருக்கின்றது. அதே சமயம் குழு மனப் பான்மை இங்கும்
இருக்கின்றது. முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம்
இலக்கியவாதிகளிடத்தில் இன்னும் இல்லை தான். முரண்பாடுகள் தான் வளர்ச்சியின் அறிகுறி என்பதை விளங்கிக் கொண்டால் , புரிந்து கொண்டால், முரண்பாடுகளிற்கிடையில் ஒருவித இணக்கம் காணப் பக்குவம் அடைந்து விட்டால் அது ஆரோக்கியமான தொரு இலக்கியச் சூழலை உருவாக்குமென்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது. மொத்தத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியத்திற்கு தாங்கள் அளித்த பங்களிப்பினையிட்டுக் கனடாத் தமிழ் எழுத்தாளர்கள் நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளர்ந்து வரும் புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் பாதையில் இவையெல்லம் மைல் கற்களே
திண்ணை
கனடாத் தமிழ் இலக்கியம்பண்டிதர் பிரம்மராயர் புலம்பெயர்ந்த இலக்கியச் சூழலில் கனடாத் தமிழ் இலக்கியத்திற்குத் தனியிடமுண்டு. கவிதை, சிறுகதை, நாவல், சிற்றிதழ் எனத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தம் பங்களிீப்பை கனடாத் தமிழ்ப் படைப்பாளிகள் பெருமைப்படத் தக்க அளவில் செய்திருக்கின்றார்கள். எங்குமிருப்பது போல் இங்கும் நிறையத் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. பெரும்பாலானவை தமிழக அல்லது ஈழத்துப் பத்திரிகைகளின் நகல்களாகயிருக்கின்றன அல்லது பிரச்சாரம் செய்கின்றன. வியாபாரமே இவற்றின் முக்கிய குறிக்கோள். இணையத்தின் வளர்ச்சி இவர்களிற்குப் பெரிதும் உதவுகின்றதென்றே கூற வேண்டும். தமிழிலக்கியம் , வளர்ச்சியென்று பார்த்தால் இங்கும் சில சிற்றிதழ்கள், சில தனி மனிதர்களே நினைவிற்கு வருகின்றார்கள். ‘காலம் ‘, ‘தேடல் ‘, ‘தாயகம் ‘, ‘நுட்பம் ‘ , ‘ழகரம் ‘, ‘மறுமொழி ‘ இப்படிச் சில இதழ்கள். செல்வம், ஐயகரன், George குருஷேவ் , வ.ந.கிரிதரன், ஞானம் லம்பேட், அ.கந்தசாமி, திருமாவளவன்,குமார் மூர்த்தி, சேரன், சிவதாசன், ஆனந்தப் பிரசாத், செழியன், குறமகள், மொனிக்கா , கவிஞர் கந்தவனம் இப்படிச் சிலரே ஞாபகத்தில் வருகின்றார்கள். ‘காலம் ‘ காலம் தப்பியாவது வெளி வந்துகொண்டிருக்கின்றது. ‘தேடலை ‘த் தேட வேண்டியிருக்கின்றது. ‘தாயகத் ‘தின் முகவரியையே காணவில்லை. தற்போது இணையத்தில் ‘பதிவுகள் ‘ தொடங்கியிருக்கின்றது. ‘தாயகம் ‘ ‘தேடல் ‘ போன்றவற்றை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களே அதிகம். அவற்றையும் மீறி அவை கனேடியத் தமிழ் இலக்கியத்திற்காற்றிய பங்களிப்பு பாராட்டப் பட வேண்டியதொன்று. ‘காலம் ‘ அடிக்கடி ‘வளரும் தமிழ் ‘ என்று புத்தகக் கண்காட்சிகளை நடாத்துகின்றது (செல்வம் நூல் விலைகள் விடயத்தில் சிறிது தாராளம் காட்டுவாரா ?). பாரதி மோகனும் (இவர் கரவை கந்தசாமியின் மகன்) தனிப்பட்ட ரீதியில் சில புத்தகக் கண்காட்சிகளை நடாத்தியிருக்கின்றார். மிகவும் நியாயமான விலையில் நூல்களை விற்றுப் பலரின் பாராட்டுதல்களைத் தட்டிக்கொண்டவரிவர். சிலர் தனிப்பட்ட ரீதியில் அவ்வப்போது காத்திரமான இலக்கிய அமர்வுகளை நடாத்துகின்றார்கள். ‘ரூபவானி ‘ புகழ் விக்கினேஸ்வரன் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன முன்னால் தமிழ்ப் பிரிவின் தலைவரான ராஐசுந்தரம் போன்றோர் ‘முரசம் ‘ என்று Media சம்பந்தமான பல அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார்கள். மிகவும் பயனுள்ள அமர்வுகள் அவை. பல புகழ் பெற்ற திரைப் படங்கள் ,Cycle Thief போன்றன, இவ் அமர்வுகளில் திரையிட்டு விவாதிக்கப் பட்டன. தமிழர் வகை துறை வள நிலையமும் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருகின்றது. அண்மைக் காலமாக ஞானம் லம்பேட் , மகரந்தன் போன்றோர் இத்தகைய அமர்வுகளை ஆரம்பித்து நடாத்தி வருகின்றார்கள். இது தவிர பல சங்கங்கள் அமைப்புக்கள்(பட்டியலிட முடியாதவளவிற்கு) பல்வேறு விதமான களியாட்ட விழாக்களை நடாத்தி த் தாமும் பங்களிப்புச் செய்வதாகப் பெருமைப் பட்டுக் கொள்கின்றன. அடிக்கடி தமிழ் நாட்டிலிருந்து ‘பிரபலங்க ‘ளை அழைத்துச் சம்பாதிப்பதை சேவையென்று கூட இவர்கள் கூறிக் கொள்கின்றன. சிறுகதைத் துறையினைப் பொறுத்தவரையில் நிறையவே பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அமரர் நிலா குகதாசன், George குருஷேவ், வ.ந.கிரிதரன், சக்கரவர்த்தி, சம்பந்தன், குமார் மூர்த்தி, அ.கந்தசாமி, மொனிக்கா போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். நூல்களாக குமார் மூர்த்தியின் ‘முகம் தேடும் மனிதன் ‘ (தமிழகத்தில் ‘காலம் ‘ வெளியீடாக வெளி வந்தது), வ.ந.கிரிதரனின் ‘அமெரிக்கா ‘ (தமிழகத்தில் ‘சிநேகா ‘ பதிப்பக வெளியீடாக வெளி வந்தது) , சம்பந்தனின் ‘வித்தும் நிலமும் ‘ , கடல் புத்திரனின் ‘வேலிகள் ‘ போன்றன வெளி வந்திருக்கின்றன. கவிதைத் துறையினப் பொறுத்த வரையில் ஐயகரன், சேரன், அ.கந்தசாமி, திருமாவளவன், நிலா குகதாசன், வ.ந.கிரிதரன்,கெளரி, சக்கரவர்த்தி , கவிஞர் கந்தவனம், மொனிக்கா, செழியன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். நூல்களாக சேரனின் ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம் ‘, சக்கரவர்த்தியின் ‘யுத்த சன்னியாசம் ‘, அ.கந்தசாமியின் ‘கானல் நீர்க் கனவுகள் ‘, வ.ந.கிரிதரனின் ‘எழுக அதிமானுடா ‘ , நிலா குகதாசனின் ‘இன்னொரு நாளில் உயிர்ப்பேன் ‘, செழியனின் ‘அதிகாலையினிலே ‘ கெளரியின் ‘அகதி ‘ ,மற்றும் ‘காலத்தின் பதிவுகள் ‘ போன்றன வெளிவந்திருக்கின்றன. நாவல் துறையினைப் பொறுத்தவரையில் ‘தாயகம் ‘ சஞ்சிகையில் தொடராக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவல்களின் தொகுப்பாக தமிழகத்திலிருந்து ‘மண்ணின் குரல் ‘ குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளிவந்திருக்கின்றது. செழியனின் ‘ஒரு போராளிியின் நாட் குறிப்பு ‘ , இதுவு ம் ‘தாயகத் ‘தில் தொடராக வெளி வந்தது, அண்மையில் தமிழகத்தில் நூலாக வெளி வந்திருக்கின்றது. இது தவிர ரவீந்திரநாதன், வீணைமைந்தன் , இரா தணி போன்றோர் இங்கு வெளிவரும் cut & paste பத்திரிகைகளில் அண்மைக் காலமாகத் தொடர் கதைகள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நாடகத் துறையினப் பொறுத்தவரையில் ‘மனவெளி ‘ அமைப்பினர் கனடாத் தமிழ் நாடகத் துறையினை நவீனமயப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். கவிஞராக இனங் காணப்பட்ட ஐயகரன் நல்லதொரு நாடகாசிரியராகவும் மலர்ந்திருக்கின்றார். இது தவிர N.K.மகாலிங்கத்தின் ‘சிதைவுகள் ‘ நல்லதொரு மொழி பெயர்ப்பு நூல். நோபல் பரிசு பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான Cinua Achebe ‘ யின் ‘Things Fall Apart ‘ இன் தமிழாக்கமிது. ‘காலம் ‘ வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளி வந்தது. வ.ந.கிரிதரனின் ‘நல்லூர் ராஐதானி: நகர அமைப்பு ‘ (நல்லூர் நகர அமைப்பு பற்றிய ஆய்வு நூல்), ‘தாயக ‘தில் தொடராக வெளி வந்தது, அண்மையில் தமிழகத்தில் ‘சிநேகா ‘ பதிப்பக வெளியீடாக வெளி வந்திருக்கின்றது. அதே சமயம் குழு மனப் பான்மை இங்கும் இருக்கின்றது. முரண்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் இலக்கியவாதிகளிடத்தில் இன்னும் இல்லை தான். முரண்பாடுகள் தான் வளர்ச்சியின் அறிகுறி என்பதை விளங்கிக் கொண்டால் , புரிந்து கொண்டால், முரண்பாடுகளிற்கிடையில் ஒருவித இணக்கம் காணப் பக்குவம் அடைந்து விட்டால் அது ஆரோக்கியமான தொரு இலக்கியச் சூழலை உருவாக்குமென்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது. மொத்தத்தில் புலம் பெயர் தமிழ் இலக்கியத்திற்கு தாங்கள் அளித்த பங்களிப்பினையிட்டுக் கனடாத் தமிழ் எழுத்தாளர்கள் நிறையவே பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வளர்ந்து வரும் புலம் பெயர்ந்தோர் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் பாதையில் இவையெல்லம் மைல் கற்களே
|
|
Thinnai 2000 February 13 |
திண்ணை
|