நேசகுமார்
பாபுஜி என்பவர் 1செப்டம்பர்,2006 திண்ணையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் எனது எண்ணச்சிதறல்களில் வந்துள்ள இரு தகவல்கள் பிழையானது என்று தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டிக் காட்டியுள்ள இரண்டாவது பிழையைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் காலச்சுவடு மற்றும் டெஹல்காவில் வந்துள்ள தலையங்கம் மற்றும் கட்டுரைகள்(முறையே) பற்றிய எனது மதிப்பீடுகளை ‘ பிடிவாதமான புரிதல்’ என்று விமர்சிக்க அவருக்கு சுதந்திரம், உரிமை உண்டு. அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் எனக்கில்லை. கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையே இந்த மாறுபட்ட கருத்துக்கள், புரிதல்கள்தாம்.
ஆனால், முதல் குற்றச்சாட்டாக அவர் முன்வைத்திருப்பது, நான் தவறான தகவலை வாசகர்களுக்கு முன்வைப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதால் அதை மட்டும் விளக்க, ஆதாரங்களை முன்வைக்க முயற்சிக்கிறேன்.
முதலாவதாக, கமலா சுரையாவாக மதம் மாறிய மாதவிக்குட்டி(எ)கமலாதாஸ் தமக்கு மதம் அலுத்துப் போனது (மதம் மடுத்து) என்கிற தலைப்பில் எழுதியிருந்த நீண்ட, அழகிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இதே திண்ணையில் ஜனவரி 20, 2005 அன்று வெளியாகியிருந்தது. மொழியாக்கம் செய்தவர், தமிழிலக்கிய உலகம் நன்கு அறிந்த திரு.இரா.முருகன். அக்கட்டுரையை இங்கே காணலாம்( http://www.thinnai.com/?module=displaystory&story_id=60501205&format=html).
நான் குறிப்பிட்டிருந்த அனைத்து விஷயங்களையும் மாதவிக்குட்டி(எ)எக்ஸ்-சுரையா(எ)கமலாதாஸ்(எ) கமலா சுரையா அவர்கள் விளக்கமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்:
“நான் கொஞ்ச நாள் நானாகவே இருந்தேன். அப்போ கொஞ்சம் போல காதல் எல்லாம் வந்தது. கொஞ்ச நாள் விதவையா வாழறேன். அப்படி இருக்கறபோது, நேசம் தரேன்னு ஒருத்தன் சொன்னான். நானும் ஒரு பெண்ணில்லையா ? அவனெ நம்பினேன். பெண்ணுக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாளன் வேணும். அவன் என்னை மதம் மாறச் சொன்னான். நானும் மாறினேன். காதலுக்காக எதையும் துறக்க நாம் தயார் ஆச்சே.”
மேலே கண்ட வரிகளில் கமலாதாஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார், தாம் மதம் மாறியது தன்னை காதலிப்பதாக சொன்ன ஒருவனின் நிர்ப்பந்தத்தால்தான் என்று. காதலினால் மதம் மாறினேன் என்று கமலாதாஸே ஒப்புக் கொண்டபின் இதை ஒப்புக் கொள்வதில் யாருக்கும் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்றே கருதுகிறேன்.
மேலும் எழுதுகிறார் கமலாதாஸ்:
“இப்போ இந்த வேஷம் (தலையில் முக்காடாக வந்து, முகம் மறைக்காத பர்தா) தான் பாக்கி. இது மோசமில்லைன்னு தோணுது. என் முடியெல்லாம் நரைச்சுப் போனது வெளியிலே தெரியாதில்லையா ?….”
தாம் பர்தா அணிந்திருப்பது மதநம்பிக்கையால் அல்ல, தலையில் உள்ள நரைமுடிகள் வெளியில் தெரியாமலிருக்கத்தான் என்று.
தாம் எந்த மதத்திலும் தற்போது நம்பிக்கை வைக்கவில்லை என்று இன்னொரு வரியில் குறிப்பிடுகிறார்:
“மதமெல்லாம் எனக்கு அலுத்துப் போச்சு. இப்ப எந்த மதத்திலும் எனக்கு நம்பிக்கை இல்லை.”
மதத்தில் நம்பிக்கை போய்விட்டது என்று சொல்கிறவர் இன்னமும் இஸ்லாத்தில் இருக்கிறார் என்று நம்பிக்கொண்டிருக்க யாருக்கும் உரிமை உண்டு, ஆனால் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணம் கடைசிப் பாராவில் மீண்டும் தெளிவாக இப்படி அறிவிக்கிறார்:
“நான் இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது ஒரு முஸ்லீம் பெண் எழுதக்கூடியதில்லை. அதனால் ஒருவேளை என்னை மதத்தை விட்டு விலக்கலாம். இந்த நாவலை எழுதும்போது நான் பழைய மாதவிக்குட்டிதான். நாலப்பாட்டு மாதவிக்குட்டிக்குத்தான் அதை எழுத முடியும். சில உண்மைகளை இன்னும் நான் உலகத்துக்குச் சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் சொல்லிய பிறகு நான் போய்ச் சேர்ந்திடுவேன்.”
பழைய மாதவிக்குட்டிதாம் தான் என்று ஜனவரி, 2005ல் எழுதிய கமலாதாஸ், இஸ்லாம் இன்றைய உலகிற்கு தேவையில்லை என்று சொல்லும், எழுதும் தஸ்லிமா நஸ்ரீனை தம் வீட்டில் வரவேற்று பேசும்போது இஸ்லாத்துக்கு மதம் மாறியது குறித்து வருந்தியிருக்கிறார். இது பற்றிய பிடிஐ செய்தி:
“On Kamala Surayya’s decision to embrace Islam, Nasreen said: “I asked her why did you do that. She was silent. I asked whether she regretted it. She said “yes,” Nasreen revealed at a meet-the-press programme here.
Nasreen said Kamala Surayya was now in a cage and she should have the freedom to come back and “live the life she likes.”
http://www.outlookindia.com/pti_news.asp?id=408787
மற்ற பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது இது. பார்க்க:
“Controversial Bangladeshi writer Taslima Nasreen said here on Tuesday that Anglo-Indian poet and novelist Kamala Surayya (also known as Kamala Das) had told her that she regretted converting to Islam.Talking to mediapersons at the Press Club, Ms Nasreen said that she had met Surayya the other day and had asked her whether she regretted becoming a Muslim. “She replied yes,” said Ms Nasreen. “She has understood that Islam does not provide equality,” she added. Kamala Das had made a much-publicised conversion to Islam some years ago. Ms Nasreen said that Islam was not compatible with the ethos of the 21 st century. “Islam and its scriptures are out of place in the modern world,” she said. “It still follows the laws of the seventh century.””
http://news.sulekha.com/newsitemdisplay.aspx?cid=140749
***
இஸ்லாம் என்பது இரண்டு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று, அல்லாஹ்வே கடவுள் என்பது. இரண்டாவது முகமதுவே கடவுளின் தூதர்(கடைசித் தூதர் என்று இன்று அர்த்தப்படுத்தப்படுகிறது). இந்த இரண்டிலும் நம்பிக்கை வைக்காத சுரையா இன்னமும் இஸ்லாத்தில் தான் இருக்கிறார் என்றால் அது வெறும் நம்பிக்கைதான் – நிதர்சனம் அல்ல. வஹாபிசத்தைப் பற்றி விலாவாரியாக எழுதும் பாபுஜிக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும்.
எந்தவொரு விதத்திலும், அல்லாஹ்வின் மீதோ முகமதுவின் நபித்துவத்தின் மீதோ அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது, ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று அறிவிப்பதற்கொப்பாகும் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதெல்லாம் சரி, அவர் ஏன் வெளிப்படையாக தான் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று அறிவிக்கவில்லை என்ற அறிவுஜீவித்தனமான கேள்வி அடுத்து எழலாம்.
இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை என்று மதம் போதிக்கும்போது, அப்படிப்பட்ட போதனைகள் கடவுளால் சொல்லப்பட்டது என்று ஒரு பெரும் கூட்டம் நம்பும்போது, வெளியேறுபவர்களுக்கு – வெளிப்படையாகப் பேசுபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை சிவில் சமூகம் வழங்காமல் இருக்கும்போது கமலா சுரையாதான் என்ன செய்வார்? வயோதிக காலத்தில் ஒரு இஸ்லாமியனின் ஆசை வார்த்தைகளால் வன்கோட்பாட்டொன்றில் சென்று அகப்பட்டுக்கொண்டு வெளியேறினால் எதோ ஒரு அடிப்படைவாதியினால் கழுத்தறுபட்டு சாக அவருக்கு நிச்சயமாக விருப்பம் இருக்காது.
எனவே காலம்காலமாக இஸ்லாத்தில் மாட்டிக்கொண்டவர்கள் செய்யும் அதே விஷயத்தை அவரும் செய்துள்ளார். அதாவது symbolic ஆக தமது எதிர்ப்பை, தமது அவநம்பிக்கையை தெரிவிப்பது. அதன் எதிரொலியே “இஸ்லாம் என்பது விஷப்பாம்பு” என்று வெளிப்படையாக எழுதும், பேசும் தஸ்லிமா நஸ்ரீனை(பார்க்க அவரின் அயான் ஹிர்ஸி அலியின் The Caged Virgin நூல் விமர்சனம் – Outlookindia 28th August 2006 Issue – http://www.outlookindia.com/full.asp?fodname=20060828&fname=Booksa&sid=1- பதிவு செய்தால் தான் அவுட்லுக்கைப் படிக்க முடியும். இல்லையேல் இங்கே பார்க்கலாம்: ttp://64.233.183.104/search?q=cache:kZn4QClz4m0J: www.outlookindia.com/full.asp%3Fsid%3D1%26fodname%3D20060828%26fname%3DBooksa+I+Say,+Three+Cheers+For+Ayaan&hl=en&gl=in&ct=clnk&cd=1 ) வீட்டுக்கு அழைத்து தமது ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் இந்த செய்தியை உலகிற்கு வழங்கியிருக்கிறார்.
***
இப்படி எதிர்ப்பை தெரிவிக்கும் முறை இஸ்லாத்தில் வன்முறை மூலம் விமர்சனங்களை, முகமது மீதான அவநம்பிக்கையை அடக்க முற்பட்ட காலம்தொட்டே தொடங்கிவிட்டது.
இதன் நல்ல உதாரணமாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீ·ப் அவர்களின் சகோதரரின் மனைவி தெஹ்மினா துர்ராணி எழுதிய Blasphemyயைக் குறிப்பிடலாம். சல்மான் ருஷ்டி வெளிப்படையாக முகமதுவை விமர்சித்த சாத்தானின் கவிதைகள் இஸ்லாமியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதே விஷயத்தை மிகவும் சாதுர்யமாக முகமதுவை புகழ்ந்துகொண்டே ஆனால் பூடகமாக எழுதிய தெஹ்மினாவின் புத்தகம் Blasphemy, எங்கும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது – சென்னையிலும் பிரபல புத்தகக் கடைகளில் கிடைக்கின்றது.
***
வேறெதும் ‘அபாண்டங்கள்’ எனது கட்டுரைகளில் எங்கேனும் தென்பட்டால் சகோதரர் பாபுஜி அவர்கள் அவற்றையும் தெரிவிக்கலாம். விளக்கத்தயாராகவுள்ளேன்.
அன்புடன்,
நேசகுமார்
nesakumar@gmail.com
- சென்று வா நேசமலரே!
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- கழிப்பறை காதல்
- மூதாய் சொல்லித் தந்த மார்க்ஸீய கதைகள்
- கடித இலக்கியம் – 21
- மருத்துவக் கல்லூரியில் கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு உதவுங்கள்
- கீதாஞ்சலி -89 திடீர் அழைப்பு எனக்கு
- எந்த வகை அறிவுஜீவிகள்…..?
- 33-வது இலக்கியச் சந்திப்பு – ஈழத்தமிழ் இலக்கியத்தில் மனித உரிமை – செப் 23,24 – 2006
- கடிதம்
- கடிதம் – மதம் மடுத்த சுரையா
- காயல்பட்டணம் இஸ்லாமிய மண்ணறை (கல்லறை)க் கல்வெட்டுகள்
- அரண்/கீர்த்தி சக்கரம் : திரை விமர்சனமல்ல: பாரத மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரிந்துரை
- வெங்கட் சாமிநாதன்
- சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் கலை இலக்கிய ஒன்றுகூடலும்
- நாசா விண்வெளித் தேடலில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் செல்லும் எதிர்காலத் திட்டங்கள்-2
- கவிதைகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:1)
- இசையாக
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (44-73)
- பெரியபுராணம் – 103 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது. (சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.)
- துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு கணிதம் என்பது அறிவியல் மொழி – தொடர்ச்சி – காலம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 14. கலை
- விளையாட்டு பற்றி சில சீரியஸ் சிந்தனைகள்
- பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி
- பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 2
- மடியில் நெருப்பு – 2
- இரு வழிகள்