ஐயாசாமியும் தெனாலிராமனும்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

பா குமரன்


இடுகாட்டின் நுழைவாயில் சத்தம் பலமாக கேட்டது. “ஜாதி சர்ட்டிபிகேட் இருந்தா தான் அடக்கம் பண்ண முடியும் .
ஜென்ரல் கோட்டால எடம்இல்ல பிசி இல்ல எஸ்சியா இருந்தா சொல்லுங்க அடக்கம் பண்றேன்.” ஏம்பா என்று பிணத்தோடு வந்தவர்கள் வாதாட ” கவர்மென்ட் ஸ்ட்டிக்டா ஆடர்
போட்டுருக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது” என்று இடுகாட்டு இன்ஸ்பெக்டர் அதாவது வெட்டியான் வாதாட, ஐயாச்சாமி
மட்டும் அமைதியாய் பாடையில் கிடந்தார்.

டீக்கடைக்கு டீக்கடை இதே பேச்சு..

“நம்ம சுடுகாட்டுல எதோ அனாதை பொணத்தை அடக்கம் பண்ண எடம் இல்லை யாமே?” ..

“அட எடம் இருகாம்பா ஜாதி சட்டிபிகேட் இல்லையாம்”..

“இப்படி எல்லாத்தையும் கோட்டாவுல குடுத்துட்டா, கோட்டா இல்லாதவனுங்க என்னா பண்னுவாங்க?”..

“அதான் நம்ம மினிஸ்ட்டர் சொன்னாரேப்பா பக்கத்துல இருக்கிற ஸ்கூல் ஆஸ்பத்திரி எல்லாம் இடிச்சி எடத்த அதிகப்படுத்தபோறோம்ன்னு”..

பக்கத்தில் ஐயாசாமியின் ஆவி நின்று கேட்டுக்கொண்டிருப்பது யாருக்கும் தெரியாது.

“ஒன்னு பண்னுங்க வி எ ஒ பாத்து ஒரு ஜாதி சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வாங்க அடக்கம் பண்ணிரலாம்” என்று
இடுகாட்டு இன்ஸ்பெக்டர் ஐடியா குடுக்க கூட்டம் வி எ ஒ வீட்டுக்கு படையெடுத்தது. “எனக்கே தெரியாது நான் என்ன
ஜாதின்னு வி எ ஓ க்கு எப்படிதெரியும்?” என்ற ஆச்சரியத்தில் ஐயாச்சாமியின் ஆவியும் அவர்களுடன் சென்றது.

இந்த கிராமத்துல இப்படி ஒரு வீடான்னு எல்லோரும் வாய பொளக்குற அளவுக்கு இருந்தது வி எ ஒ வீடு.
“சும்மாவ பின்ன கவர்மென்ட் கோட்டா சிஸ்டம் போட்டாலும் போட்டுச்சி, இப்ப எல்லாம் யாரும் எம் எல் ஏ கிட்டையோ எம் பி
கிட்டையோ ரெக்கமன்டெஸனுக்கு போறது இல்ல, நேற இங்க வரானுங்க ஒரு சர்ட்டிபிகேட் வாங்குறானுங்க அப்புறம் என்னா
எங்க வேணும்னாலும் எடம் வாங்கிகிறானுங்க..என்ன விஎஒவை கொஞ்சம் கவனிச்சா போதும்.” ..”கொஞ்சம் இல்லப்பா
நல்லாவே கவனிக்கணும் போல .. வீட்டை பாத்தா தெரியல” என்று கூட்டத்தில் பல விவாதங்கள்.

“ஐயா இப்பவந்துருவாரு” என்று வி எ ஒவின் எடுபிடி முன்அறிவிப்பு கொடுத்தான். அத்தோடு நில்லாமல் “என்ன
விசயம் என்கிட்ட சொல்லுங்க நான் ஐயா கிட்ட சொல்றேன்” என்றான். “அது ஒன்னும் இல்லப்பா ஒரு ஜாதி சட்டிபிகெட் வேணும்
அதுதான் வாங்கிட்டுபோலான்னு வந்தோம்”. “ஓ அவளவு தானா எஸ்சின்னா 20 , ஓபிசின்னா 15 பிசின்ன 10”. அனாதை
பொணத்துக்கு எதுக்கு அதிகம் செலவழிக்கனும்னு “பிசியே போதும்பா இந்தா பத்துரூவா” என்றார். “என்னாது பத்துரூபாவா?
நான்சொன்னது பெரிய பத்து.” “என்னது பத்தாயிரமா? அனாதை பொணத்துக்கு எவன்யா பத்தாயிரம் கொடுப்பான்” ..
“அதல்லாம் எனக்கு தெரியாது பனம் இருந்தாதான் வேலை ஆகும்” என்று எடுபிடி வி எஒ ரெஞ்சுக்கு பேசினான். இதுசரிப்பட்டு
வராது என்று அனைவரும் இடத்தை விட்டு நகர்ந்தனர், ஐயாச்சாமி உட்பட.

பொழுதும் சாய்ந்தது. எல்லொரும் அனாதை பிணத்தை அனாதையாய்(??) விட்டுவிட்டு சென்றனர். ஐயாச்சாமி
செய்வதறியாது நிற்க. எமதூதர்கள் வந்து பிடித்துசென்றனர். அப்பாடா இதுக்கு நரகமே மேல் என்று அவர்களுடன்சென்றான்.

ஆனால் அங்கும் ஐயாச்சாமிக்கு சோதனை காத்திருந்தது. சவத்தை அடக்கம் செய்தால்தான் ஐயாச்சாமி
எமலோகத்தில் நுழையமுடிம் என்றான். ஐயாச்சாமி விழிபிதுங்கி நின்றான். அப்போதுதான் தெனாலிராமன் அங்குவந்தான்.
ஐயாச்சாமிக்கு சந்தோஷம்தாளவில்லை..”ஐயா நீங்க எப்படி இங்க?” என்றான்”அதுவா ஐயாச்சாமி நான் இங்க எமதருமராஜன்
சபைல தான் இருக்கேன். உன்னமாதிரி அப்பாவிகளுக்கு உதவிபண்ணத்தான் இருக்கேன்.” இதைக்கேட்டதும்
ஐய்யாச்சாமிக்கு தலைகால் புரியவில்லை.

ஐயாச்சாமியின் பிரச்சனயைக் கேட்ட தெனாலிராமன்., ஒரு யோசனை சொன்னான். “நான் சொல்வதை அப்படியே
போய் மினிஸ்ட்டர் அபிமன்யு சிங்கிடம்சொல் . அவர் கண்ணுக்கு மட்டும் நீ தெரிவாய். என்று சொல்லி அனுப்பினான்.

திடீரென்று ஒரு உருவம் தன்முன் தோன்றியதும் அபிமன்யு சிங் பயந்தே விட்டார். இப்போது ஐயாச்சாமி பேச
ஆரம்பித்தான். “ஐயா நன் ஒரு அனாதை பொணம். எந்த சுடுகாட்டுக்கு போனாலும் சாதி சட்டிபிகேட் கேக்குறாங்க. இப்பிடியே
விட்டா ஊரே நாறிப்போகும்.. கொஞ்சம் யோசிச்சு பாருங்க பொணத்துக்கு தான் ஓட்டுரிமை கிடையாதே, அதனால
எங்களுக்கு கோட்டா குடுத்தாலும் குடுக்கலைன்னாலும் யாரும் உங்களுக்கு ஓட்டுப் போடபோறது இல்ல. அதனால இடுகாட்டில்
இட ஒதுக்கீடுசட்டத்தை மட்டும் நீக்கிட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்” இதை கேட்டதும் அபிமன்யுசிங்கின்
மனம் இளகியது..பிணங்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்ற லாஜிக் சரியாக பட்டது.. சரியென்று அவரும்
ஏற்றுக்கொன்டார்.அப்பாடா என்ற பெருமூச்சுடன் ஐயாச்சாமி எமலோகம்புறப்பட்டான்.

எமலோக வாயிலிருந்து தெனாலிராமன் சோகமாய் வெளியே வந்து னொன்டிருந்தான். ஐயாச்சாமி மகிழ்ச்சியுடன்
அவரிடம் நடந்ததை சொன்னான்.

பிறகு” ஏங்க சோகமாய் இருக்கிறீங்க?” என்றான். அதை ஏம்ப்பா கேக்குறா நேத்து நீ பாக்க போனியே
அபிமன்யுசிங் , அவங்க அப்பா செத்து மேலவந்தான்.. வந்தவன் இங்கேயும் பாலிட்டிக்ஸ் பண்ணிக் கோட்டா சிஸ்டம்
கொன்டுவந்துட்டான், கடைசில என்னை ஓசின்னு சொல்லி வெளியே தள்ளிட்டாங்கபா…” என்றான் தெனாலிராமன்..

ஐயாச்சாமி தலைசுற்றி கீழே விழுகிறான்…


Series Navigation

பா குமரன்

பா குமரன்