எழுத்தின் அரசியல் கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் கலை இலக்கிய முகாம்

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

ஹெச்.ஜி.ரசூல்


கடல்சூழ் இயற்கையின் மடியில் மூன்றுநாள் கலை இலக்கிய நிகழ்வுகள் நடை பெற உள்ளன

நாள்: மே14,15,16
வெள்ளி, சனி,ஞாயிறு
இடம்
சிஎஸ் ஐ ரிட்ரீட் மையம்,முட்டம்

வெள்ளி பிற்பகல் மூன்றுமணிக்குமுகாம்துவக்க அமர்வு சி.சொக்கலிங்கம்தலைமையில்.துவக்கவுரை தஞ்சைபல்கலைகழக பேராசிரியர் கவிஞர் இரா.காமராசு.
முதலமர்வில் கேரளதலித் ஆளுமைகள் பற்றி ஆர் பிரேம்குமார்,ரெட்டைமலை சீனிவாசன் தேசிய உருவாக்கத்தின் எதிர்வுபற்றி அ.ஜெகநாதன்,ஆசீவகம் பற்றி செந்தீநடராஜன் இப்பொருள்கள் பற்றிய கருத்துரையை அண்ணாமலைப் பல்கலை கழக முனைவர் செல்வகுமாரன் வழங்குகிறார்.

பண்பாட்டியல் ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன் அவர்களுக்கான பாராட்டுநிகழ்வில் அறியப்படாத தமிழகம்,பண்பாட்டு அசைவுகளின்வழி தொ.பா.வின் ஆய்வுலக்ம் குறித்து முனைவர் ஞா.ஸ்டீபன்பாராட்டுரை நாவலாசிரியர் பொன்னீலன். தொடர்ந்து நிகண்டு-நவீன எழுத்துதிறனாய்வுதொகுப்புநூல் வெளியீடு நடைபெற உள்ளது.

சனிகாலை இரண்டாம் அமர்வு தமிழ் பண்பாட்டு இனவியலின் துவக்கங்கள் தலித் ஆய்வாளர் சிவராமனிந்தலைமையில் வள்ளலார்பற்றி பேரா.சிவசுப்பிரமணியம்,ஆபிரகாம்பண்டிதர்பற்றி முனைவர் நா.இராமச் சந்திரன்,தேவநேயப் பாவாணர்பற்றி முனைவர் டி.தர்மராஜன்,தமிழ்வரலாற்றுஎழுத்தியல் பற்றி பேரா.ஸ்டாலின்ராஜாங்கம் ஆய்வுரை நிகழ்த்துகின்றனர்.பிற்பகல் அமர்வு முனைவர் பா.ஆனந்தகுமார்தலைமையில் கவிஞர் பழனிவேள் நிலவியல் ஒலிகளும்,மாந்திரீக இனவியல் நாவல் பிரதிகளும்.தோழர் சாகித் ஹெச்.ஜி.ரசூலின் பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள் பற்றியும் ஆய்வுரை நிகழ்த்த நாவலாசிரியர் ஜாகிர்ராஜா கருத்துரை நிகழ்த்துகிறார்.
நான்காம் ஊடகவெளி அமர்வுக்கு எஸ்.ஜே.சிவசங்கர் தலைமைதாங்க எடிட்டர் லெனின் மாற்று ஊடக காட்சிமொழி பொருளில் பேசுகிறார். மாற்றுக் குறும்படங்கள் ஆவணப்படங்கள் திரையிடப்படுகின்றன. கருத்துரையை நாவலாசிரியர் மீரான்மைதீன்,லீனாமணிமேகலை நிகழ்த்துகின்றனர்.

ஞாயிறுகாலை புனைவின் அரசியல் அமர்வுக்கு ஹெச்.ஜி.ரசூல் நெறிப்படுத்த பெண்மொழிஎதிர்ப்பின் கவிதை,லீனாமணிமேகலை. சமகால புனைவுகள் கதைஎழுத்து பேரா.நட.சிவகுமார் பேசுகின்றனர். கவிஞர் ஜி.எஸ்தயாளன் கருத்துரை நிகழ்த்துகிறார்.
இறுதிஅமர்வுக்கு ஹமீம்முஸ்தபாநெறிப்படுத்த முனைவர் நா.முத்துமோகன் அடையாள அரசியல் கருத்தியல் பின்புலம் என்ற பொருளில் ஆய்வுரை வழங்குகிறார்.நிறைவுரையை பெ.அன்புநிகழ்த்த முகாம் பொறுப்பாளர் கே.பிரசாத் நன்றி கூறுகிறார்.இந் நிகழ்வை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டம் நடத்துகிறது.தமிழகம் முழுவதிலும் உள்ள படைப்பாளிகள்,ஆய்வாளர்கள்,கலைஇலக்கிய வாசகர்கள் கலந்துகொள்கின்றனர்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்