இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

ஜடாயு


திண்ணை ஜூலை-27 இதழில் ‘குண்டு வெடிப்பில் குளிர்காயும் சண்டாளர்கள்’ என்ற தலைப்பில் தேசத்துரோக உள்நாட்டு ஜிஹாதி தீவிரவாதிகளுக்கும் லஷ்கர் –ஏ-தொய்பாவுக்கும், பாகிஸ்தானுக்குமே வக்காலத்து வாங்கும் தொனியில் இப்னு பசீர் என்பவர் எழுதியிருக்கிறார். “எந்த தடயமும் இல்லாமல்” சிமியும், LeT-யும், பாகிஸ்தானும் குற்றம் சாட்டப் படுவதாக இவர் புலம்புவதைப் பார்த்தால், இவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்ற சந்தேகம் தான் வருகிறது. உளவுத் துறை, மும்பை காவல் துறை, பத்திரிகைகள் எல்லாம் பத்தி பத்தியாக நாள்தோறும் மும்பை குண்டுவெடிப்பு என்னும் மாபாதகச் செயலின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன, இவர்கள் எந்த இயக்கத்தை, குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற புள்ளி விவரம் உட்பட. ஆனால் இவர் தனது கட்டுரையில் தரும் சுட்டிகள் என்ன ? – சிமி குற்றவாளி அல்ல என்று முலாயம் சிங் சொன்னது, சிமி ஆட்களின் பேட்டி ! மற்ற செய்திகள் எல்லாம் எஙகே ஐயா போயின?

வேறு ஒரு முக்கியமான சுட்டியைக் கொடுக்க விட்டுவிட்டார். “நாங்கள் 800 ஆண்டுகள் இந்த நாட்டில் அரசாண்டோம். இன்ஷா அல்லாஹ், மறுபடியும் நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.” இதைச் சொன்னது யார்? LeT தலைவரோ, அல்-கொய்தா தலைவரோ, சிமி தலைவரோ கூட அல்ல, ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் புகாரி !

http://news.webindia123.com/news/articles/India/20060718/394446.html

ஜிஹாதிகளின் உண்மையான நோக்கத்தை ஒளிவு மறைவில்லாமல் சொன்ன அவுரங்கசீபின் வாரிசு இமாம் புகாரிக்கு நன்றி! இது மட்டுமல்ல, இதைச் செய்தது ஆர்.எஸ்.ஏஸ், வி.ஹெச்.பி ஆக இருக்கலாம் என்றும் இமாம் சொல்லியிருக்கிறார் (இப்னு பஷீரும் இதே தொனியில் பேசுவதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை)

அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மும்பையைச் சேர்ந்த பல முஸ்லீம் தலைவர்களும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுமே இது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜிஹாதிகளின் வேலை என்று கூறி இதைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள் . இந்த நிலைமையில், சிமியும், ஜிஹாதி அமைப்புகளும் ஏதோ அமைதித் தூதுவர்கள் என்ற போக்கில் இப்னு பஷீர் கட்டுரை எழுதுவது எதற்காகவோ? அத்வானி நாட்டிலிருந்தே துடைத்தெறிய வேண்டும் என்று சொன்னது “சிமி போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை” மட்டும் தான். அமைதி விரும்பும், தேச நலன் விழையும் முஸ்லிம் அமைப்புகளை அல்ல. அவரது கூற்றை சரியாகப் படியுங்கள். அதில் தேச நலன் விரும்பும் யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது.

தேசபக்த முஸ்லீம்கள் துணிச்சலுடனும், தெளிவுடனும் ஜிஹாதி தீவிரவாதத்தைக் கண்டித்து, அதை அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது. இத்தருணத்தில், இப்னு பஷீர் போன்றவர்களின் பூசி மெழுகல்கள் கவலையளிக்கின்றன.

jataayu_b@yahoo.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு