இவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

அறிவிப்பு


சுகம் சுகமே.. திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜனகன் படநிறுவனத்தினரின் சார்பில் மற்றுமொரு கலைப்படைப்பான சிவரஞ்சனி திரைப்படத்தைக் கனடாவைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீமுருகன் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை இம்மாதம் வெள்ளிக்கிழமை (25-07-2008) முதன் முதலாகக் கனடாவில் திரையிட இருக்கிறார்கள்.
கனடிய இந்திய கலைஞர்களின் உதவியுடன் தயாரான இத்திரைப்படத்தின் மூலக்கதை பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் நாவலான ‘சொல்லடி மனம் கல்லோடீ’ என்ற நாவலைத் தழுவியதாக அமைந்திருக்கிறது. இப்படத்தின் திரைக்கதை வசனத்தை, சுகம் சுகமே, வேலி போன்ற திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்ற குரு அரவிந்தனே மிகவும் சிறப்பாக எழுதியுள்ளார்.
கனடிய கலைஞர்களான ஸ்ரீமுருகன், கலைக்கதிர் கதிர் துரைசிங்கம், கரு கந்தையா, கலகலப்பு தீசன், கபிலேஸ்வர், நீதன், சங்கீதபூசணம் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், புதுவைராமன், ஷான் சந்திரசேகரன், ரமேஸ் ஆகியோருடன் நட்புக்காக வெற்றிமணி ஆசிரியர் சிவகுமாரனும், தமிழக சின்னத்திரை நட்சத்திரங்களான கோவை பாபு, ஹேமா, பிரியா, கே.ஆர். வக்சலா, ஹரிஸ்மா போன்றவர்களும் இத் திரைப்படத்தில் பங்கு பற்றியிருக்கிறார்கள். துரையின் இயக்கத்தில் செந்தில் குமரன் கமராவைக் கையாண்டிருக்கிறார். கனடாவில் நடந்த படப்பிடிப்பில் பிரபல கலைஞர் மதிவாசனின் இயக்கத்தில், மூர்த்தி கமராவைக் கையாண்டிருக்கிறார். கபிலேஸ்வர் இசை அமைக்க, அருள், ரமேஸ் ஆகியோர் தொழில் நுட்பத்துறையில் தங்கள் திறமையைக் காட்டியிருக்கிறார்கள்.
கனடியத் தமிழத் திரைபட உலகின் வெற்றிக்கு, ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துவோம்.


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு