இந்தோனேஷியக் காடுகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue


1980களில் எந்த வேகத்தில் இந்தோனேஷியக்காடுகள் அழிந்து வந்தனவோ, அதைவிட இரண்டு மடங்கு வேகத்தில் இன்று இந்தோனேஷியக்காடுகள் அழிந்துவருவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்து எச்சரிக்கை அளித்துள்ளார்கள்.

இந்தோனேஷியாவின் பல தீவுகளில் இருக்கும் மலைச்சாரல் காடுகள், உலகத்திலேயே, விலங்குகளிலும் தாவரங்களிலும் மிகவும் வளமையானவையாகக் கருத்தப்பட்டு வருகின்றன. அந்தக் காடுகள் இன்று மிகவும் வேகமாக அழிந்துவருவது மிகவும் கவலையை உருவாக்கி உள்ளது.

இதற்குக் காரணமாக, இந்தோனேஷியாவில் பரவலாக இருக்கும் ஊழல்தான், இவ்வாறு பாதுகாக்கப்பட்ட காடுகளை அழிக்க அனுமதிப்பதற்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டு World Resources Institute (WRI), Global Forest Watch (GFW), and Forest Watch Indonesia (FWI). ஆகிய நிறுவனங்களிடமிருந்து வந்திருக்கிறது.

இந்தோனேஷியக்காடுகளின் நிலைமை என்ற இந்த அறிக்கையில் முதன் முறையாக இந்தோனேஷியாவின் எல்லாக்காடுகளும் வரைபடமாக அளிக்கப்பட்டு அதன் அழிவு வேகமும் குறிக்கப்பட்டுள்ளது.

1980களில் சுமார் 10 லட்சம் ஹெக்டேர்கள் வருடாந்தரம் அழிக்கப்பட்டு வந்தன. இப்போது அது சுமார் 20 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது.

1950களில் இந்தோனேஷியக்காடுகளின் பரப்பளவு சுமார் 1620 லட்சம் ஹெக்டேர்களாக இருந்தது. இப்போது அது வெறும் 980 லட்சம் ஹெக்டேர்களாக சுருங்கிவிட்டது.

சுலவேஸி தீவிலிருந்த மலைச்சாரல் காடுகள் சுத்தமாக அழிந்துவிட்டன.

2005இல், சுமத்ரா தீவு முழுவதும் காடுகள் அழிக்கப்பட்டு விடும் என்றும், 2010இல் கலிமந்தன் தீவு காடுகள் சுத்தமாக அழிக்கப்பட்டுவிடும் என்று எச்சரித்துள்ளார்கள்.

‘இந்தோனேஷியா வெகுவேகமாக காடுகள் நிறைந்த நாட்டிலிருந்து காடுகள் அற்ற நாடாக மாறிவருகிறது ‘ என்று இந்த அறிக்கையின் ஆசிரியருள் ஒருவரான எமிலி மாத்யூஸ் குறிப்பிடுகிறார்.

டோகு மனுரங் என்ற FWIஇன் இயக்குனர் இந்த அறிக்கையின் இன்னொரு ஆசிரியர். இவர், ‘1980களிலும், 1990களிலும் வெகுவேகமாக உருவான பொருளாதார வளர்ச்சியின் விளைவே சுற்றுச்சூழல் நாசமும், பிராந்திய மக்களின் கலாச்சார அழிவும். ‘

‘இந்த கண்டுபிடிப்புகள் நம்பிக்கை தருவதாக இல்லை ‘

இந்த அறிக்கையின் படி, ஊழலும், சட்ட ஒழுங்கு சீர்குலைவும், சட்டத்துக்கு புரம்பான மரம் வெட்டுதலும், அரசியல் நிலையற்ற சூழ்நிலையும், வெகுவேகமாக வளரும் காடுசார்ந்த தொழிற்சாலைகளும் இந்த அழிவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டுகிறது.

Series Navigation

செய்தி

செய்தி