Dr. சரஸ்வதி
வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாய் இந்நோய் உலகளவில் மக்களை பாதித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும், 5,000 அமெரிக்கர்கள், மிக முக்கியமாய் வயதானவர்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இப்படி இறப்பவர்களின் எண்ணிக்கை, உலகளவிலே 180,000. இப்படி ஆஸ்த்மாநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்ததன் காரணத்தை முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எனினும், இதுவரை உள்ள விபரங்களின் மூலம், ஆஸ்த்மாநோய் மேலைநாடுகளில் அதுவும் ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மிக அதிகமாய் பரவியிருப்பதாயும், ஆப்பிரிக்க மூலை முடுக்குகளில் சுத்தமாய் இந்த நோய் காணப்படுவதில்லை எனவும் தெரிய வருகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம், 13 – 14 வயதானவர்களிடம் இழுப்பு (wheezing) என்று சொல்லக்கூடிய ஆஸ்த்மா நோய் இருப்பதற்கான ஒரு அறிகுறியின் கணக்கீடு. இந்த கணக்கீடு, ஆஸ்த்மா நோய் மற்றும் சிறுவர் சிறுமிகளின் அல்ர்ஜி பற்றிய சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் முக்கிய ஆராய்ச்சி புள்ளிவிவரத்தை அடிப்படையாய்க் கொண்டது. இந்த 13 – 14 வயதானவர்களிடம் காணப்பட்ட இழுப்பின் குணாதிசயங்கள் இதைவிட வயது குறைந்த குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் ஒருங்கே காணப்பட்டது.
ஆஸ்த்மா நோய் கொண்ட தாயோ அல்லது தகப்பனோ, ஒரு குழந்தை ஆஸ்த்மா நோய் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்றிருந்தாலும், புள்ளிவிவரங்கள் மூலம், வம்சாவழி மரபை விட சுற்றுப்புற சூழலும், வளரும் வாழ்க்கை முறையும்தான் மிக அதிகமாய் ஆஸ்த்மா நோய்க்கு காரணமாய் இருப்பதாய் தெரிகிறது. முக்கியமாய் எந்தெந்த அம்சங்கள் ஆஸ்த்மாநோய்க்கு காரணமாய் இருக்கின்றன என நுண்மையாக இன்னும் தெரியவில்லை. காரணங்களாய் கருதக்கூடிய சிலவற்றில் மிக முக்கியமான ஒன்று – தற்போதைய குழந்தைகள் முந்தைய காலத்தவர்களை விட அதிகமாய் வீட்டுக்குள்ளும், வேறு கட்டிடத்துக்குள்ளும் நேரத்தை செலுத்துகிறார்கள் என்பது. இப்படி நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் மிக அதிகமாய் வீட்டில் இருக்கக்கூடிய அலர்ஜி சம்பத்தப்பட்டவைகளினால் (தூசிகளில் வளரும் பூச்சிகள், எலி, கரப்பான் போன்றவைகள் உட்பட) பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முக்கியமான கருத்தின் படி, மேலை நாடுகளின் குழந்தைகளின் நுரையீரல் சம்பத்தப்பட்ட வியாதிகளின் தடுப்புச்சக்தி, வளரும் நாடுகளின் குழந்தைகளின் தடுப்புச்சக்தியை விட குறைந்ததாய் இருக்கிறது. மேலை நாடுகளிளுள்ள குழந்தைகள், பூச்சிகளின் அருகே வளர்ந்து பழக்கப் படாதவர்கள். எனவே, இவர்கள் மிக எளிதாக ஆஸ்த்மா நோய்க்கும், வேறு சில அலர்ஜி சம்பத்தப்பட்ட வியாதிகளுக்கும் (hay fever and eczema ) ஆளாகி விடுகிறார்கள்.
அநேகமாக, பாதி ஆஸ்த்மா நோய்க்காரர்கள் அலர்ஜி (குடும்ப வம்சாவழி சம்பத்தப்பட்டதாக இருக்கக்கூடியது) மூலமாக ஆஸ்த்மா நோய் அடைந்திருக்கிறார்கள். மீதப்பாதி, அலர்ஜி மூலம் இல்லாமல், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமல், வயதான பிறகு நோயடைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு, முதலில் சாதாரண ஜலதோஷமாய் இருந்து, படிப்படியாய், இழுப்பு வந்து, நாட்கணக்காய், மாதக்கணக்காய் சுவாசிக்க கஷ்டப்பட்டு ஆஸ்த்மா நோய் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த இரு விதமாய் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், மூச்சிழுக்கும் வழி சுருங்கிவிடுகிறது. ஆஸ்த்மா நோய் குழந்தைகளிடம் அதிகமாய்ப் பரவி இருந்தாலும் – தற்சமயம் அமெரிக்காவில் இது ஒரு சாதாரண ( ஏராளமானவர்களுக்கு வரக்கூடியதாய் ) குழந்தை வியாதி – ஏகப்பட்ட வயதானவர்களும் ஆஸ்த்மா நோய்வாய்ப் பட்டிருக்கின்றனர். மேலும், இரசாயணத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களிடம், அந்த இரசாயணப் பொருட்களீன் மூலமாகக் கூட ஆஸ்த்மா ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலுள்ள தொற்றுநோய் கிருமிகளிலுருந்து, உடற்பயிற்சி, குளிற்காற்று, உணர்ச்சி கொந்தளிபிரின் மற்றும் ஒசோன் போன்ற இராசாயனப் பொருட்கள் ஆஸ்த்மா நோயைத் துரிதப் படுத்துவையாக இருக்கின்றன.
இருந்த போதிலும், வெளிக்காற்றின் கிருமிகள் ஆஸ்த்மா நோய் உருவாக காரணம் என இதுவரை உறுதிப் படுத்தப் படவில்லை. வாழும் ஊரின் ஏழ்மை சிறிது காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் போர்டோ ரிக்கோவைச் சேர்ந்தவர்களிடமும், ஆப்பிரிக்க வழி மக்களிடமும், ஆஸ்த்மா நோய் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. புகை பிடிப்பது ஆஸ்த்மா நோயை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது, பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்த்மா நோய் வருவதற்கு வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது. உடல் குண்டாக இருப்பது கூட ஆஸ்த்மா நோயுடன் சம்பத்தப் பட்டதுதான்.
இப்படி மிக ஏராளமான காரணங்களும், விவரங்களுடனும் ஆஸ்த்மா நோய் சம்பத்தப் பட்டிருப்பதால், விஞ்ஞானிகளால் இதுவரை இதன் முழுத்தன்மையை புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், இவர்கள் மிகச் சிறப்பாய் வேலை செய்து, inhaled steroids போன்ற ஒருசில மருந்துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவும், வேறு சில புதிய மருத்துவ முறைகளும் சரியாகவும், தொடர்ந்தும் உபயோகப்படுத்தினால், ஆஸ்த்மா நோய் மூலமான சில இறப்புகளை தவிர்க்கலாம்.
திண்ணை
|