பாவண்ணன்
ஒன்று
திரைச் சீலையை ஒதுக்கும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள் அல்லி. பணிப்பெண். ஒருகணம் நேருக்கு நேர் பார்த்த பின்னர் சட்டென்று பார்வையைத் தாழ்த்தி விளக்கின் பக்கம் சென்றாள் அவள். கையிலிருந்த கலயத்திலிருந்து எண்ணெயை ஊற்றித் திரியைச் சரிப்படுத்தினாள். ஒரு பெருஞ்சுடர் எழுந்து சில கணங்களில் தணிந்து சீராக எரியத் தொடங்கியது. விரலில் இருந்த எண்ணெய்ப் பிசுக்கைத் தலையில் தேய்த்தபடியே ‘இன்னும் தூங்கவில்லையா ராணி ‘ எனறு கேட்டாள்.
பணிப்பெண்ணை வெளிச்சத்தில் நன்றாக உற்றுப் பார்த்தாள் அல்லி. பேச்சு எழவில்லை. அவள் மனம் குழப்பங்களாலும் கேள்விகளாலும் தத்தளித்துக் கொண்டிருந்தது. அக்குவியலின் ஒற்றைச் சொல்லைக் கூட அப்பணிப்பெண்ணின் முன் தன் மனப் பாரத்தைக் கொட்டி ஆற்றிக் கொள்ள முடியாது என்று தோன்றியது. ராணி என்கிற பட்டமும் அந்தஸதும் அவள் வாயைக் கட்டியிருந்தன. விளக்குக்கு அருகிலேயே அவள் தொடர்ந்து நின்ற கோலம் அவளுக்கு எரிச்சலூட்டியது. சரேலென சீற்றம் பொங்கியது. புரட்டிக் கொண்டிருந்த ஓலையை மஞ்சத்தின் மேல் வைத்துவிட்டு பணிப்பெண்ணை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள். மெளனம் நீண்டது. பணிப்பெண்ணின் பார்வை அல்லியின் முகத்திலும் கண்களிலும் படர்வதும் விலகுவதுமாக இருந்தன. அவளது இருப்பு அல்லியின் மனத்தில் கடுமையான கோபத்தையும் ரோஷத்தையும் தூண்டியது. அவளைக் காயப்படுத்துகிற மாதிரி நாலு வார்த்தை சொல்லித் துரத்தியடிக்க வேண்டும் என்கிற வெறி துடிப்போடு எழுந்த கணத்தில் பணிப்பெண் மறுபடியும் கேட்டாள். இன்னும் தூங்கவில்லையா ராணி ?
தூக்கம். நிம்மதியான தூக்கத்தைப் பறிகொடுத்து எத்தனை ஆண்டுகள் உருண்டுவிட்டன ? அல்லியின் நெஞ்சில் கசப்பான சிரிப்பு நெளிந்தது. பாரம் எதுவுமற்ற விடுதலையான தூக்கம். சுதந்தரமான வெளியில் சிறகடித்து உயரே உயரே பறந்தபடி போகிற ஆனந்தம். அந்த ஆனந்த உலகில்தான் எத்தனை எத்தனை கனவுகள். எத்தனை எத்தனை நிறங்கள். ஒரு குழந்தையை அழைத்துச் செல்வதைப் போல கனவுகள் அழைத்துச் செல்லும். அவற்றில் விரியும் மலைச் சிகரங்கள். மணல்வெளி. முடிவின்றி நீளும் இன்பமயமான பயணங்கள். எல்லாவற்றையும் பலி கொடுத்தாகிவிட்டது. இந்த சாம்ராஜயத்தின் சுமை தோள்களை அழுத்தி விட்டன. எதிரிகளின் தந்திரங்களை முறியடிக்கத் தீட்டும் மாற்றுத் திட்டங்களில் முழ்கி முழ்கி மனம் சலித்துவிட்டது. அரசியல் நெருப்பில் தூக்கம் என்ற சிறகு பொசுங்கிச் சாம்பலானது.
‘ராணி ‘
மீண்டும் ஏதோ சொல்ல வந்த பணிப்பெண்ணை அரைக் கணத்தில் கையை உயர்த்தி அடக்கினாள். உயர்ந்த கைகள் அவளை வெளியே போகச் சொல்லும் ஆணையைச் சைகையால் உணர்த்தின. அவள் வார்த்தைகளைக் கேட்க அல்லிக்கு விருப்பமில்லை. ஆதரவு ததும்பும் அவ்வார்த்தைகளில் எவை உணர்த்தப்படும் என்பது பழகிய விஷயம்தான். ஒரு கண நேரத்தில் அரச கோலத்தை உதறிச் சாமானியப் பெண்ணாக மாற முன்வைக்கப்படும் கோரிக்கை அது. எளிய சாதாரணப் பெண். கணவனின் காமத்துக்கும் ஆணைக்கும் கட்டுப்படும் பெண். ஆனந்தத்தில் துள்ளும் பெண். அமைதியில் திளைக்கும் பெண்.
தீபத்தின் சுடரில் அப்பாவின் முகம் அசைவதைக் கண்டாள் அல்லி. ஒரு கணம் அவள் மனம் சிலிர்த்தது. இந்த உலகத்தில் தன் நேசத்துக்குரிய ஒரே மனிதர் அவர் மட்டும்தான் என்று தோன்றியது. கம்பீரமான உருவம். உறுதியான தோள்கள். வடு நிறைந்த கைகள். விரிந்த மார்பு. கரிய நிறம். இமைக்கும் கண்களும் கடகடவென்ற சிரிப்பும் இல்லையென்றால் அவர் உருவம் ஒரு மாபெரும் சிலையின் உருவம்தான். சிரிக்கும்போது சத்தம் போட்டுச் சிரிப்பார் அவர். சிரிப்பின் முடிவில் அவர் உதிர்க்கும் வாசகங்கள் எப்போதும் அவர் மன உறுதியைக் காட்டும்படி இருக்கும். அல்லியை ஓர் ஆணைப்போல வளர்த்தது அவர்தான். குதிரையேற்றம், வாள்பயிற்சி, வில்பயிற்சி, நீச்சல், ஈட்டி எறிதல் எல்லாம் அவர் முன்னிலையிலேயே சொல்லித் தரப்பட்டன. வைகையின் குறுக்கில் கம்பங்கள் நட்டு, கம்பங்களை இணைத்த கயிற்றில் தொற்றித் தாவி ஆற்றைக் கடந்த போது அவர் ஆனந்தத்தில் கூச்சலிட்டார். ஏணியில் ஏறி கோட்டைமதில் ஏறி உச்சி உப்பரிகைக்கு நொடியில் போவதும் நூலேணியில் சரேலென்று கீழே இறங்கி வருவதும் விளையாட்டுக்கள் போல நிகழும். வைகை மனற்கரையில் குதிரையைத் துரத்தச் சொல்வார். மதம்பிடித்த யானைகளை அடக்கச் சொல்வார்.
‘பெண்பிள்ளையை இப்படிக் கெடுக்காதீர்கள் ‘ என்று அம்மா அவரிடம் வந்து கெஞ்சுவாள்.
‘போடி..பயந்தாங்கொள்ளி அவள் பெண்ணல்லடி. நூறு ஆண்களுக்குச் சமமடி ‘ என்று அம்மாவுக்கு ஆறுதல் ொசல்லி அனுப்புவார். அற்பாயுளிளேயே இந்த உலகத்தை விட்டே நீங்கி விடுவோமென அவருக்கத் தெரிந்திருந்ததோ என்னமோ. அல்லி அனைத்துக் கலைகளிலும் முழுத்தேர்ச்சி பெற்று நின்ற கணத்தில் அவர் உயிர் பிரிந்தது. வேட்டைக்குப் போன இடத்தில் புலி அடித்துவிட்டது. மகுடம் சூட்டி மதுரை சாம்ராஜயத்துக்கு அரசியானாள். அன்று முதல் தூக்கத்தைப் பறிகொடுத்தாள் அவள். நாள் முழுக்க இயங்கிக் கொண்டே இருக்கும் பொறிபோல மாறினாள். அரியணைக்கட்டிலில் ஏறிய சில நாட்களிலேயே ஊர் உலகம் உற்றம் சுற்றத்தாரின் இன்னொரு முகம் புரிந்தது. சுபாவத்திலேயே வணங்காமுடியாக வளர்ந்த அல்லி அந்த வக்கிரங்களைக் கண்டு கொதித்தாள். உடல் முழுக்கக் கண்களாக மாறி அனைவரையும் ஒற்றறிந்தாள். ஆண்களாகத் தோற்றம் கொண்டவர்களின் உள்மனக் கோலத்தைக் கண்டு அருவருப்பு அடைந்தாள். வெறுத்தாள். இந்த அரசாங்கம், மகுடம், ஆடை, ஆபரணங்கள் அனைத்தையும் உதறிவிட்டு எங்கேயாவது அருவிக் கரையோரம் அக்கடாவென்று ஒரு குடிசையில் படுத்துக் கிடக்கலாம் போலத் தோன்றியது. அப்போதுதான் தன்னால் உறங்க முடியும் என்றும் தோன்றியது. மறுபடியும் திரைச்சீலை அசையும் ஓசை. அதே பணிப்பெண்.
‘என்ன ? ‘ என்று அதட்டினாள் அல்லி.
‘எதற்கடி வந்து வந்து தொல்லை தருகிறாய் ? ‘ குரலில் சற்றே கடுமை கூடிவிட்டது.
பணிப்பெண்ணின் கண்களில் சின்ன மிரட்சி மின்னலைப் போல தெரிந்து மறைந்தது. ஓரடி பின்வாங்கித் தயங்கிச் சில கணங்களுக்குப் பின்னர் மறுபடியும் அல்லியின் முன்னால் நின்றாள்.
‘தீபத்துக்கு எண்ணெய் விடட்டுமா ராணி ‘
அல்லிக்கு அதிர்ச்சி. அதற்குள் வற்றிப்போய்விட்டதா ? அவளை அறியாமல் அவள் வாய் கேட்டது. அவள் பார்வை ஒரு முறை பூட்டியிருந்த சாளரத்தின் பக்கம் சென்று திரும்பியது.
‘விடிவதற்கு இன்னும் ஒரு நாழிகைதான் உள்ளது ராணி ‘ என்று தலைவணங்கி நின்றாள் பணிப்பெண்.
அல்லி மஞ்சத்தை விட்டு எழுந்தாள். மடியிலிருந்த ஓலையைச் சுருட்டித் தலையணைக்கடியில் வைத்தாள்.
இரண்டு
*******
நீராடிவிட்டு ஆடைகளை அணியத் தொடங்கிய தருணத்தில் அல்லியின் அம்மா வந்து நின்றாள். மகாராணியைக் கண்டதும் பணிப்பெண்கள் ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேறினார்கள். அம்மாவைக் கண்டதும் தன் மனத்தின் சமநிலை குலையத் தொடங்கியதை உணர்ந்தாள் அல்லி. நெற்றியிலும் மார்பிலும் வேர்வைக் கோடுகள் இறங்கின. எதுவும் பேசாமல் மார்புக் கச்சையை இறுக்கி முடிச்சிட்டாள். ஆபரணங்களை எடுத்து அணியத் தொடங்கினாள். இருவருக்கிடையிலும் ஆழ்ந்த மெளனம் நிலவியது. அவள் பார்வை அல்லியின் கழுத்தில் நிலை கொள்வதையும் உடனடியாக ஒரு பெருமுச்சு வெளிப்படுவதையும் பார்க்காமலேயே அல்லியால் உணர முடிந்தது. முதல் நாள் காலையிலிருந்தே அம்மா தன் பார்வையில் படவில்லை என்கிற எண்ணம் அவள் கவனத்துக்கு வந்ததும் சட்டென வருத்தம் கொண்டாள். நேற்றும் இப்படித்தான் குளித்து தலைமுடியும் தருணம் அம்மா வந்து நின்றாள். அர்ஜூனன் என்னும் அரசன் மேற்கிலிருந்து வர இருக்கும் செய்தியைச் சொன்னாள். அவனாவது அவளுக்குப் பொருத்தமானவனா என்று பார்த்துச் சொல்லும்படி வேண்டினாள்.
அல்லி சட்டென வெகுண்டாள். அம்மாவுக்கு இதே வேலை. நேற்று தக்காணத்திலிருந்து ஒரு இளவரசன். இதற்கு முன்னர் கருநாடகத்திலிருந்து ஒருவன். அதற்கும் முன்பு கிழக்கிலிருந்து ஒருவன். கணக்கே இல்லை. பாரக்க் மறுத்து எத்தனை முறை திருப்பி அனுப்பினாலும் அவர்களுக்கும் கூச்சம் இல்லை. செய்தி கொண்டுவரும் அம்மாவுக்கும் கூச்சம் இல்லை. அக்கணத்தில் அம்மாவின் மீது கடும்கோபம் வந்தது.
‘என்னம்மா நீ .. எந்தக் கழுதையையும் பிடிக்கவில்லை என்கிறேன். திரும்பத் திரும்ப இவனைப் பிடிககிறதா அவனைப் பிடிககிறதா என்று கேட்கிறாயே ? ‘ வார்த்தைகள் சட்டென்று சிதறின.
‘யாரையாவது ஒருவனை மணந்து கொண்டுதானே ஆக வேண்டும் அல்லி ‘
‘திருமணமே வேண்டாம் அம்மா எனக்கு ‘
ஒரு கணம் அமைதி. மறுகணம் தயங்கித் தயங்கி அம்மா தொடங்கினாள்.
‘யார் மீதாவது உன்மனத்தில் ஆசை இருந்தால் சொல்லிவிடு அல்லி ‘
உடல் மீது அருவருப்பான ஒன்று வந்துவிழுந்தது போல இருந்தது அல்லிக்கு. உடல் கூசியது. ஒருகணம் கண்களை முடி சீற்றத்தை அடக்கினாள்.
‘எனக்கு எந்த ஆணையும் பிடிக்கவில்லை அம்மா ‘
அம்மாவுக்கு அதிர்ச்சி.
‘உன்னை உன் அப்பா நன்றாகக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கிறாரடி அல்லி ‘ என்றாள் எரிச்சலுடன். அப்பாவைப் பற்றிக் கேவலமாகச் சொன்னதும் அல்லி கொதித்துவிட்டாள்.
அப்பாவைப் போல ஓர் ஆண் உலகத்திலேயே இல்லை அம்மா. அவரோடு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாயே , அவரைப் பற்றி என்னதான் நீ புரிந்து வைத்திருக்கிறாய் ? என்று தைக்கிற மாதிரி கேட்டாள்.
‘அல்லி.. ‘ என்று அலறினாள் அம்மா. அடிபட்ட மான்போல ஒரு கணம் நிமிர்ந்து அல்லியின் கண்களை நோக்கினாள். அடுத்த நொடியே முந்தானையால் வாயைப் பொத்தியபடி வெளியே ஓடிப்போனாள்.
‘என்னம்மா ..இன்றைக்கு எந்த இளவரசனைப் பற்றிய செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாய் ? ‘ இயல்பாய்த்தான் கேட்க நினைத்தாள் அல்லி. எனினும் அவள் கட்டுப்பாட்டையும் மீறிக் கொஞ்சம் கிண்டல் கலந்து விட்டது.
‘ஏன்டி என்னை இப்படி இம்சிக்கிறாய் ? பேசாமல் ஒரு கிண்ணம் விஷம் கொடு. குடித்துவிட்டுச் சாகிறேன். அப்புறம் நீ நிம்மதியாக இரு ‘
அவள் கலக்கம் அல்லியை உருக்கியது. தாயுள்ளத்தின் ஆசைகளை அல்லி நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள். அவள் ஆசைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாத அளவுக்கு அவள் மனநிலை மாறிவிட்டதும் அதற்கு எதிர் நிலையில் மனத்தில் ஏதோ ஒரு முலையில் அதற்கான விழைவும் எங்கோ ஒட்டிக் கொண்டு உத்வேகமுட்டிக் கொண்டிருப்பதும்தான் அவள் பிரச்சனை. படிபபு, பயிற்சி. சிந்தனை. எதுவுமே ஒரு முடிவுக்கு வர உதவவில்லை. அவள் கோபத்துக்கு அதுதான் காரணம்.
‘இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறாய் அம்மா ? நீ காட்டுகிறவனைக் கட்டிக் கொண்டு வருஷத்துக்கொன்றாய்ப் பிள்ளைகளைப் பெற்றது இந்த சாம்ராஜயத்துக்கு வாரிசுகளை உருவாக்க வேண்டும் என்கிறாயா ? ‘ சட்டென்று சீறினாள் அல்லி.
‘அல்லி.. ‘ என்று நகர்ந்து வருத்தமே அற்ற பாவனையில் அல்லியின் தலைமுடியை உதறிச் சிக்கெடுக்கத் தொடங்கினாள்.
‘இந்த சாம்ராஜயம் வேண்டாம் மகளே.பெண்ணால் முடியாது என்பதற்காகச் சொல்லவில்லை நான். உனக்கு வீண்சுமை என்பதால் சொல்கிறேன். தப்பாய்ச் சொல்லிச் சொல்லி உன் முளையை உன் அப்பா கெடுத்து வைத்திருக்கிறார். உன் அப்பாவைப் பெற்ற மகராசிஉன்னைப் போலவே வைராக்கிய விரதம் பூண்டிருந்தால் உன் அப்பா பிறந்திருப்பாரா அல்லி. யோசித்துப் பார். இந்த அரச பாரத்தை உன் சித்தப்பாவுக்கோ , சித்தப்பா பிள்ளைகளுக்கோ கொடுத்துவிடு அல்லி. காலம் முழுக்க எச்சரிக்கையொடு பதறுவதைவிட கைகழுவிவிட்டு நிம்மதியாய் இரு அல்லி. உன் வயதையொத்த பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் என் பெற்ற வயிறு எரிகிறதடி அல்லி. அவளவளுக்கும் நான்கு பிள்ளைகள். முன்று பிள்ளைகள். மார்பிலும் தோளிலும் ஆட்டம் போட சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீ தனிமரமாய் இப்படி இருப்பதைக் காணும்போது என் நெஞ்சு கலங்கிப் போகிறதடி கலங்கிப் போகிறது ‘
அம்மாவை உற்றுப் பார்த்தாள் அல்லி. ஒல்லியான தேகம். ஒடுங்கிய கன்னம். கழுத்தில் தொங்கும் வைரமணிமாலை ஒன்றுதான் மகாராணியின் அடையாளம். ஆற்றாமையால் குமுறும் அவள் கோலத்தைக் கண்டு அல்லியின் மனம் குழம்பியது. மெதுவாய் மஞ்சத்தில் உட்கார்ந்தாள். தன் அவஸதைகளை அம்மாவுக்கு எப்படி புரிய வைப்பது என்று தத்தளித்தாள். எப்படிச் சொல்வது ? ஆண்மைக்குத் தந்திரமென்றும் அருவருப்பென்றும் மனம் மாறி மாறிக் கொள்ளும் பொருளை. எடுத்துக்காட்டாக மாறி மாறி எழும் உருவங்களை ? விரிந்த இன்பவெளியில் பெண்மையை அணைத்து அழைத்துச் செல்லும் காதல் இந்த ஆண்மையின் குணம் என மனம் நம்ப மறுப்பதை ? புரியுமா அவளுக்கு ? புரியும்படி சொல்ல முடியுமா ? முளை வெடித்துவிடும்போல இருந்தது. இரண்டு விளிம்புகளுக்கிடையில் சதா உருளும் பாறையாக மனம் மாறிவிட்டது. எப்போதும் உருளும் ஓசை. வேதனை. ரத்தக் கொதிப்பு. அப்பாவின் அரவணைப்புக்குள் விழுந்திருக்கக் கூடாது. அப்பா தொட்டுத் தூக்கி வாளும் வில்லும் பயிலக் கற்றுத் தந்த நிமிஷத்தில் வேதனையின் முட்செடிக்குரிய விதை விழுந்துவிட்டது. வளர்ந்தபின்னர் கீறிவிட்டது. காற்றில் கிளை திரும்பும்போதெல்லாம் பிராண்டியது. வலிக்க வலிக்கக் கிழித்தது. அன்றே அம்மா தன்னை நோக்கி வளைத்திருந்தால் அழகு படுத்திக் கொண்டு அலங்காரம் செய்துகொண்டு அம்மா காட்டும் ஆணைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெற்றிருக்கலாம். காலம் கடந்து விட்டது. பகல் முழுக்க வெற்றி கொண்ட ராணியின் கோலம். இரவில் அம்மாவின் மகளாய் இருக்க இயலாத தாபம். இந்தக் குழப்பத்திலிருந்து மீள்வது எப்படி. மீண்டும் மீண்டும் குழப்பம்.
அம்மாவைப் பார்க்கும்போது அல்லிக்கும் பாவமாய் இருந்தது. அரண்மனைக் காரர்கள் சொல்லித் திரிகிற மாதிரி அல்லி அகங்காரி என்று அவளும் நினைக்கிறாளோ என்று சந்தேகம் வந்தது. என்ன செய்வது ? மதுரை நகரே வேஷதாரிகளின் நகராகிவிட்டது. ஒற்றர்கள் ஊரில் கலகம் உண்டாக்க அலைகிறார்கள். வலிமை கொண்ட கயவர் படைகள் அசந்திருந்த நேரத்தில் அடித்து வீழ்த்தி சாம்ராஜயத்தைப் பிடுங்கிவிடலாம் என்று தருணம் பார்க்கிறார்கள். அரண்மனைக்குள் புகழ் மாலை பாடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே கையூட்டு பெற்றக் கொண்டு காட்டித்தர அலைகிறார்கள். நம் ராணி நல்லவள் எனறு கண்முன்னால் ஒரு பேச்சு. என்ன திமிர் பார் இந்தப் பொட்டைக் கழுதைக்கு . நேரம் வராமல் போகாது. அவள் அகங்காரத்தை அடக்காமல் விடமாட்டேன். என்று முதுகுக்குப் பின்னால் இன்னொரு பேச்சு. அவளால் முடியவில்லை. முகஸதுதிகளின் நெருப்பு வளையங்களுக்குள் புகுந்து வர இயலவில்லை. இது ஒரு புறம். இன்னொரு புறத்தில் காதல் பேச்சில் மயங்கி மார்பில் விழும் குணம் அவள் ரத்தத்திலேயே இல்லை. ஆட்சித் திட்டங்களும் யுத்தத் தந்திர உத்திகளும் அவளக்கு ஏக்கம் எழுவதைத் தடுக்கவில்லை. உடல் நரம்புகளில் தீப்பற்றி எரிவது போல இருந்தது. காதல் என்றால் எனன ? அதை உணர்ந்தவர் யார் ? காதல் என்பது இல்லவே இலலை என்றால் அந்தச் சொல்லும் அதைப் பற்றியுமான ரசமான கதைகளும் இந்த சமுகத்துக்குள் எப்படி வந்தன ? உலகம் தோன்றிய நாள் முதலாக மனித அனுபவத்துக்குள் அகப்பட்ட உண்மைக்குக் காதல் அல்லாமல் வேறென்ன பெயர் ? தரையில் இறங்கிய பறவை போல அவள் கேள்வி மனத் தரையில் அலைந்தபடி இருந்தது. குழப்பத்தில் தவித்து நெருப்பில் அணுஅணுவாய் வெந்து நீறாகிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சின் ஆழத்தில் செவிக்கு எட்டாத தொலைவில் ஓர் இனிய இசை நிரம்பி வழிந்தது. உடலின் ஒவ்வொரு நரம்பிலும் அந்த இசை ஆறு போலப் பரவி வழிந்தது. இதுதான் காதல. இதுதான் உண்மை. இதைத் தவிர உண்மையில்லை. அல்லியின் மனம் ஆசுவாசம் கொண்டது. மறுநொடியே மீட்டப்படாத இசைக்கும் ஜடத்துக்கும் என்ன வித்தியாசம் என்று அவநம்பிக்கையில் கவிந்தது மனம்.
சுக்குநூறாய் வெடித்துச் சிதறுவதைப்போல தலை வலித்தது. அல்லி கண்களை முடிச் சாய்ந்தாள். விரிந்த வானம். சூரியன் ஒரு பெரும் ஒளிக் கோளமாக எழுந்தது. உயர்ந்தது. சுழன்று சுழன்று சரிந்தது. மறுகணமே நிலவு தண்ணென்று உருண்டு வந்தது. உயர்ந்தது. சரிந்தது. அடுத்த கணத்தில் விளிம்பில் சூரியப் பந்தின் தலை. இரண்டும் ஒன்றா ? வேறுவேறா ? யோசனை ஒரு பெரும் பாரமாய் நெஞ்சில் கவிந்தது. அதை உதற முனையும் தோறும் முன்பிருந்ததை விட கூடுதலான வேகத்தில் கவிந்தது. உயிரைக் கவ்விப் பிடித்துத் துப்பிவிடுவது போல. சட்டென்று காணாத ஒரு தேவதை தன்னைத் தூக்கிச் சென்று வேறு திசையில் பறப்பது போல இருந்தது. பாரத்தை ஒவ்வொன்றாய்ப் பிய்த்துப் பிய்த்துப் பிடுங்கி எறிவது போல இருந்தது. முற்றிலும் எடையே இல்லாததைப் போல ஆனது. வெறும் இசை அலையாக உயிர் மாறி காற்றோடு காற்றாக கலந்தது. காற்று மண்டலம் முழுக்க இசைமயம் இசையின் தீபம். இசையின் வெள்ளம். இசையின் வாசம். உயிர், உடல் இரண்டையும் துறந்து அந்த இசையில் நனைவது போன்ற உணர்வு.
தன் மனமே தனக்கு எதிரி என்று முடிவுக்கு வந்தாள் அல்லி. இரு விளிம்புகளுக்குமிடையே அலைந்து தவிப்பது அதுதான். அதற்கு ஒரு விடை சொன்னால் போதும். அடங்கி வணங்கி விடும். அந்த விடை என்ன ? கண்டுபிடிக்க இயலாத சிக்கலல்ல அது ? கண்டபின்னர் அத்தோடு மனம் ஒன்றிக் கிடக்குமோ என்கிற சந்தேகம். ஒரு நுனியை சந்தேகத்தோடும் மறுநுனியை சம்மதத்தோடும் பற்ற நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றம். கண்களின் முன் அப்பா சிரிப்பது போலத் தோற்றமெழுந்தது. அந்தப் புன்னகை. அந்தக் கம்பீரம். அப்படி ஓர் ஆள் தனக்குக் கிடைப்பார் என்ற நம்பிக்கை எழுந்தது. அப்படி ஒரு ஆணைக் காணும்போது தன் பிடிவாதங்கள் ஒவ்வொன்றும் தளர்ந்து நொறுங்கி விழுந்து விடும். அந்த நாள் வரும். அப்படி ஒரு ஆண் கிடைப்பான். அன்று முதல் எந்த அவஸதையும் இருக்காது. அந்த ஆணே அவள் விழைவு. அந்த ஆணே அவள் கனவு. அந்த ஆணே அவள் காதல். அவள் நரம்புகளில் கசியும் இசையை அந்த ஆண் மீட்டிப் பெருக்குவான். அவள் வழியாகவும் பொங்கிப் பிரவகித்து வரும் இசை நதி சங்கமம் கொள்ளும். அவன் இல்லாமல் அவள் இல்லை. அவள் இல்லாமல் அவன் இல்லை. அந்த ஆணை அடைவதே அவள் விழைவு. ஆனால் அது இப்போது இல்லை. இந்தக் கணம் அம்மா காட்டும் ஆணைத் தன் மனம் விழையும் ஆணாக மாற்றிப் பார்ப்பது ஒன்றுதான் எளிய வழி. அவனே அவனே என்று கணந்தோறும் சொல்லிச் சொல்லி இவனை அவனாக மாற்றிக் கொள்ளலாம். எவ்வளவு வேகமாய் மனம் பழகுகிறதோ அவ்வளவு எளிதான காரியம்தான். கடுமையான போர்ப்பயிற்சியில் கவனங்களை ஒருமுகமாய்க் குவித்துப் பயின்ற மனத்துக்கு இப்பயிற்சி ஒரு பொருட்டே அல்ல. பழக்கிப் பழக்கி மனத்தை கட்டுப்படுத்தும் போது அவள் இம்சை தொலைந்துவிடும். அமைதி. ஆனந்தம். இன்பமான இாசயின் எழுச்சி. நிம்மதியான தூக்கம். எல்லாம் மனத்தின் பாவனைதான். மனம் தன் பாவனையை உதறிவிடும் தருணத்தில் ஒருமை குலைந்து மறுபடியும் முடிவற்ற வேதனை தொடங்கிவிடும்.
‘அல்லி ‘ என்றாள் அம்மா. ‘ஏன் அல்லி தலையைப் பிடித்துக் கொண்டாய் ? வலிக்கிறதா ? ஏன் எந்தப் பதிலும் சொல்லாமல் இருக்கிறாய் ? ‘
‘அம்மா, கொஞ்ச நேரம் என்னைத் தனியே இருக்கவிடு அம்மா.. ‘ தீனமான குரலில் அல்லி கெஞ்சினாள். அவள் கண்கள் சிவந்திருந்தன. ‘அல்லி.. ‘ பதறிய அம்மாவின் கைகள் அல்லியை நோக்கி நீண்டு அவள் முகத்தைத் தாங்கிப் பிடித்தன.
ஏஅல்லி. மீனாட்சி அம்மன் ஆலயததில் நேற்றிலிருந்து திரவிழா. நேற்றுத்தான் முதல்நாள். முதல் பூசை அரச குடும்பத்தின் பூசையாகத்தான் இருக்க வேண்டும். நேற்று நீ இல்லாமல் நான் போய் வந்தேன். இன்றாவது நீ போய் வர வேண்டாமா மகளே.. ‘ ஆதரவோடு சொல்லி முடித்தாள்.
‘சரி அம்மா ‘
அல்லியின் இசைவான பதில் அம்மாவுக்கு ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருந்தது. சந்தோஷம் மிக்க பார்வையை அல்லி மீது படர விட்டாள். அவள் மனம் அல்லிக்குப் புரிந்தது. பொய் இல்லை அம்மா , நிச்சயம் போய் வருகிறேன் என்று சிரித்தபடி அம்மாவின் கன்னத்தை வருடிவிட்டு ஒப்பனை அறைக்குள் சென்றாள் அல்லி.
முன்று
மதுரை நகரம் பரபரத்துக் கொண்டிரந்தது. ஏதோ பறவைகளின் கூட்டுக் குரல்கள். வீட்டு வாசல்களில் கோலங்கள். சுங்கச் சாவடிக்கு மறுபுறம் தங்கியிருந்த ரதங்கள் குலுங்கியபடி ஊருக்குள் நுழைந்தன. தெருவெங்கும் பூத்தோரணங்கள் அசைந்தன. எங்கெங்கும் உற்சாகம் ததும்பும் முகங்கள். காரணமில்லாமல் சிரித்தபடியும் கைகோர்த்தபடியும் குறுக்கும் நெடுக்கும் நடக்கும் ஆண்கள். பெண்கள். கண்களாலேயே அவர்கள் காட்டும் ஜாடைகள். புன்னகை தவழும் உதடுகள். வெட்கத்தில் சிவக்கும் கன்னங்கள். வெளிப்படையாய் காதலைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்களைப் பார்ப்பது விந்தையாகவும் வெறுப்பாகவும் இருந்தது அல்லிக்கு. அவள் பல்லக்கு மெள்ள மெள்ள நகரத் தெருவில் முன்னேறிக் கொண்டிருந்தது. முன்னும் பின்னும் காவல் வீரர்கள். தோழிகள்.
வைகை நதி சுழித்தோடிக் கொண்டிருந்தது. அதன் கரைகளில் நிறைய கூடாரங்கள் தெரிந்தன. குதிரைகள் மரத்தடிகளில் புல் மேய்ந்தபடி நின்றிருந்தன. எங்கும் கசகசவென்று கூட்டம். குளித்துக் கரையோரமாக நடந்து செல்லும் பெண்களின் கூட்டத்தைப் பார்த்தபடி படித்துறைகளில் இளவட்டங்கள் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆச்சரியத்தோடு அனைவரையும் பார்த்தபடி வந்தாள் அல்லி. பார்த்த திசையிலெல்லாம் ஆனந்தம். சந்தித்த முகம் முழுக்க உல்லாசம். காமத்தின் சமிக்ஞை. எந்த முகத்திலும் வலியின் இம்சை இல்லை. எப்படி முடிகிறது இவர்களால் ? சிரிப்புத் தவழும் ஆண்களையும் பெண்களையும் காணும்போதெல்லாம் அல்லிக்கு ஆச்சரியம் தொற்றியது. எப்படி ஒருவரை ஒருவர் சட்டென்று ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பாக இருந்தது. ஆண்களின் தந்திரமும் தகிடுதத்தமும் இப்பெண்களின் பார்வைக்குப் படவே படாதா ? பட்டும் கூட பொருட்படுத்தவில்லையா ? வேஷத்தைக் கண்டுபிடிக்க இயலாத அப்பாவிகளாக இப்பெண்களால் எப்படி இருக்க முடிகிறது ? மதுரை வீதியில் இறங்கும் போதெல்லாம் தொற்றிக் கொண்டு மண்டையை உடைக்கத் தொடங்கும் கேள்வி அப்போதும் பற்றிக் கொண்டது. திகைப்போடு தெருக்களைப் பார்த்தபடி வந்தாள். அவர்கள் காட்டாத கூர்மையை அவர்களுக்கும் சேர்த்துத் தான் ஒருத்தியே காட்டுவதால்தான் தனக்கு அகங்காரிப் பட்டம் வந்து வாய்த்ததோ என்று தோன்றியது. அகங்காரம். அற்பத்துக்கு அடிபணியாத அகங்காரம். கீழ்மைக்குத் தலை வணங்காத அகங்காரம்.
மறபடியும் தலை வலி. ஒரு பெரியபாறையில் மோதி உடைத்துக் கொள்ள வேண்டும்போல இருந்தது. நெற்றியை விரல்களால் தேய்த்தபடி யோசிக்கக் கூடாது எனறு முடிவு கொண்டாள். வேடிக்கை மட்டும் பார் என்று மனத்திடம் சொல்லிக் கொண்டாள்.
கருநீலத் தலைப்பாகையோடு ஒரு பாம்பாட்டி எதிரில் தென்பட்டான். ‘ஐயா பாருங்க..அம்மா பாருங்க.. ‘ என்று கூட்டத்தாரைப் பார்த்து அழைத்தான். அவன் குரலின் இனிமை கட்டிப்போடுவதைப் போல இருந்தது. நொடிநேரத்தில் அங்கே பரபரப்பாக கூட்டம் சேர்ந்துவிட தோள் பையில் இருந்து மகுடியை எடுத்து ஊதத் தொடங்கினான் பாம்பாட்டி. அவன் முன்னால் தரையிலிருந்த கூடையின் முடியைத் திறந்து கொண்டு நல்ல பாம்பு வெளிப்பட்டது. உடனே சுற்றிலும் உற்சாகமான குரல் எழுந்தது. கண்டவர் முகங்களிலெல்லாம் பயமும் பரபரப்பும் விரிந்தன. கும்பலில் இருந்த ஆண்கள் நின்றிருந்த இளம்பெண்களைப் பார்வையாலேயே விழுங்கினார்கள்.
பல்லக்கை நிறுத்திவிட்டுக் காவலர்கள் அக்கூட்டத்தைக் கலைக்கப் போனார்கள். திரைச் சிலையை விலக்கிக் கைதட்டி வீரர்களை அழைத்தாள் அல்லி. தடுக்க வேணன்டாம் என்று சொன்னாள். பாம்பின் நடனத்தையும் மகுடியின் நாதத்தையும் கேட்க அவள் மனம் விழைந்தது. ஒரு கணம் அரச பல்லக்கையும் வீரர்களையும் கண்ட கும்பல் மிரண்டு அல்லியைக் கண்டதுமே சட்டென விலகி வழிவிட்டது. பல்லக்கு இறக்கப் பட்டது. இறங்கி நின்ற அல்லி பல்லக்கின் பக்கமே ஒயிலாக நின்று கொண்டாள். விடுவிடுவென்று ஏழெட்டுத் தோழிகள் அவளை நெருங்கி நின்று கொண்டார்கள்.
முதல முறையாகப் பாம்பின் நடனத்தைப் பார்க்கப் போகும் பரபரப்பு அல்லியின் முகத்தில் தெரிந்தது. கூடைக்குப் பக்கத்தில் சுருண்ட உடலை உதறியபடி வளைந்து நெளிந்து பாம்பு அலைவது தெரிந்தது. கோதுமை நிறம். நீண்ட ஜரிகை போல உடலில் மின்னும் ஒரு கோடு. பக்கத்தில் முடிந்த சடையுடன் பாம்பாட்டி. ‘நடக்கட்டும் ‘ என்று அவனைப் பார்த்துக் கையசைத்தாள் அல்லி.
கரிய திடமான உடல். கழுத்தில் ஏதோ மணிமாலை. கூர்மையான கண்கள். எடுப்பான முக்கு. அவனா பாம்பாட்டி என்று ஆச்சரியமாக இருந்தது.
பாம்பாட்டி கூட்டத்தைப் பார்த்தான். பிறகு மகுடியை இசைக்கத் தொடங்கினான். கிளைவிட்டு இறங்குவது போலத் தாழ்ந்த நாதம் சட்டெனச் சீராகி ஒரு புள்ளியில் குவிந்து ஆழத்தில் இறங்குவது போலஇருந்தது. நாதத்தின் ஒவ்வொரு வளைவுக்கும் பாம்பு வளைந்து நெளிந்தது. அதன் அடர்ந்த படமும் உட்குழிந்த படத்தின் லாவகமும் அவள் கண்களைப் பறித்தன. உத்வேகமும் ஆசையும் முண்டது. அந்த நாதம் மிகவும் பழகிய நாதம் போலிருந்தது. சட்டென அவள் இதயம் குழையத் தொடங்கியது. ஆண்டுக் கணக்கில் அவள் நரம்புகளில் ஊறிப் பரவும் நாதத்தின் தொடர்ச்சியாக இருந்தது அந்த நாதம். உடல் விட்டு உடல் ஒரு நாதம் நீள முடியுமா ? தவிப்பும் அந்தப் பாம்பின் படத்தையும் கண்களையுமே பார்த்தாள். அவற்றில் பெரும் மயக்கம். அதைச்சுற்றியும் ஒரு மணம். திடுமெனப் பரவுவது போல இருந்தது. நெஞ்சை நிறைக்கும் மணம். தன்னுணர்வின்றி ஒடுங்கிப் போனாள் அல்லி. தன் மார்பில் கைகளால் அழுத்திக் கொண்டாள். இதயம் உருகி வழிந்து விடும்போல இருந்தது . இடை துவண்டது.
பாம்பாட்டி அல்லியைப் பார்த்தான். கூட்டத்தைப் பார்த்தான். பிறகு உரத்த குரலில் ‘ஐயாமாரே..அம்மாமாரே.. இந்தப் பாம்பு விஷமெடுக்கப்பட்ட பாம்பு. சத்தியத்தக்குக் கட்டுப்பட்ட பாம்பு. மண்ணிலும் ஆடும். மலையிலும் ஆடும். மனித உடல் மீதும் ஏறி ஆடும். ஆடும் பாம்புக்குத் தன் உடலையே மேடையாக்கித்தர இங்கே யாரும் தயாராக உள்ளார்களா ? ‘ என்றான். குனிந்து அந்தப் பாம்பை அள்ளித் தன் தோளில் போட்டுக் கொண்டான் பாம்பாட்டி.
எங்கும் மெளனம். பாம்பாட்டி எல்லாருடைய முகங்களையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். பிறகு உணர்ச்சியற்ற முகத்துடன் ‘என்ன யாருமே இல்லையா ‘ என்று மறுபடியும் முழங்கினான். தன் மகுடியை மக்கள் முன்னால் அசைத்துக் கூப்பிட்டான். அவன் பார்வையே தன் மீது படவிலலை என்பது போல ஒதுங்கினார்கள் பலர். ‘இந்த மதுரை மாநகரத்தின் வீரம் இவ்வளவுதானா ? தைரியமள்ள ஆணோ பெண்ணோ யாருமே இல்லையா ‘ என்று ஏளனத்துடன் சிரித்தான். அந்த கிண்டலைத் தாங்க முடியாத ஒருவன் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு தலையை நீட்டியபடி ‘மதரையில் வீரர்களே இல்லை என்றா சொல்கிறாய் பாம்பாட்டி ? வித்தை காட்டிப் பிழைக்க வந்த உனக்கு இவ்வளவு திமிரா ? உன்னைக் கொல்ல வேண்டும் ‘ என்று கூவினான். ‘முதலில் அவன் நாக்கை அறுத்து வீசுங்கப்பா ‘ என்று கேட்டுக்கொண்டது இன்னொரு குரல்.
கூட்டத்தில் பரபரப்பு எழுந்து அடங்கியது. காவல் வீரர்கள் வேகமாக ஈட்டியை எடுக்கக் குனிந்தார்கள். அல்லி அவர்களைத் தடுத்துவிட்டுப் பாம்பாட்டியை நோக்கி கைதட்டிக் கவனத்தை ஈர்த்தாள். ‘உன் பாம்பு என்னைத் தீண்டலாம் ‘ என்று கம்பீரமாக அறிவித்தாள். உடனே ‘ராணி வேணாம், ராணி வேணாம் ‘ என்று நூறாயிரம் குரல்கள் தடுத்தன. ‘ராணி நீங்கள் நகருங்கள். என் மீது ஆடட்டும் பாம்பு ‘ என்று தோழிகள் முன்வந்தார்கள். தோழிகளைக் கண்டு பல்லக்குத் தூக்கிகள் முன்வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து காவல் வீரர்களும் முன்வந்தார்கள். ‘ஆமாம் அம்மா .. முதலில் எங்கள் மீது ஆடட்டும். அப்புறம் உங்கள் மீது ஆடட்டும் ‘ என்று கத்தினார்கள். கூச்சல்களின் எழுச்சி கூட்டத்துக்குத் தைரியத்தைத் தந்தது. ஏதோ போதையில் ‘ஆமாம், எங்கள் மீது பாம்பு முதலில் ஆடட்டும் ‘ என்று சத்தமிட்டார்கள். அப்பெரும் கூச்சலைக் கையை உயர்த்தி சைகையாலும் பார்வையாலும் கட்டுப்படுத்தி நிறுத்தினாள் அல்லி. ‘நீ தொடங்கலாம் பாம்பாட்டி ‘ என்று அதே கம்பீரத்துடன் பாம்பாட்டியைப் பார்த்துச் சொன்னாள்.
பாம்பாட்டி புன்னகை மாறாத முகத்துடனும் அமைதியுடனும் தன் மகுடியை எடுத்தான். தோளில் இருந்த பாம்பைக் கீழே விட்டு இசைக்கத் தொடங்கினான். பாம்பு படத்தை விரித்து நின்றது. விறைத்த அதன் கழுத்து. நெளிவு. மின்னல். அல்லியின் மனம் கொந்தளிப்பில் ஆழ்ந்தது. சதாகாலமும் தன் இதயத்தில் ஊற்றெடுத்து நரம்பிலும் நாளங்களிலும் வழியும் இசையையே தெளிவாகக் காதுபடக் கேட்பது போல இருந்தது பாம்பாட்டியின் நாதம். அந்த நாதத்தைக் குறித்து ஒருவரிடமும் பிரஸதாபித்தது இல்லை அவள். அதே இசை. அதே தாளம். அதே ஏற்ற இறக்கம். அதே மென்மை. எப்படி அறிந்தான் பாம்பாட்டி ? அல்லியின் மனத்தில் கேள்விகள் நிறைந்தன. ஒரு விடைக்கு அலைந்து முடிவதற்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் அவளை நோகக்ி வந்தடைந்தன. பதில் தெரியாமல் அவள் குழம்பினாள். ஆயிரமாயிரம் தீவட்டிகள் நெஞ்சில் எரிந்தன.
பாம்பை நோக்கி நாதத்தை இசைத்தவண்ணமிருந்தான் பாம்பாட்டி. பாம்பு நகர்ந்து நகர்ந்து அல்லியை நோக்கி வந்தது. உடலிலிருந்து தலை மேலெழுந்தது. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அசைந்தது. கழுத்து உப்பியது. இலை போல தலைவிரிந்து படமாகியது. விரிந்த படத்துடன் விறைத்த கழுத்து. ஸஸ என்ற சீறலுடன் முச்சு அதனிடமிருந்து வெளிப்பட்டது. படத்தைச் சுருக்கி ஊர்ந்துவரத் தொடங்கியது. பல்லக்கில் உட்கார்ந்திருந்தாள் அல்லி. அவளுக்கு அந்தப் பாம்பு வளைந்து வளைந்து வருவது வேடிக்கையாக இருந்தது. நெருங்க நெருங்கக் குமட்டலாகவும் அருவருப்பாகவும் இருந்தது. காலருகில் வந்த பாம்பு தன படத்தை அவள் பாதத்தின் மீது வைத்தது. ஒரு கணம் பனிக்கட்டி மேலே சரிந்ததைப் போல இருந்தது. அதே நேரத்தில் நெருப்புப் பட்டது போலவும் இருந்தது. கண்ணை முடிக் கொண்டாள். ரத்தம் முழுக்க வற்றியது போலத் துவண்டாள். நீண்ட பெருமுச்சுகள் வெளிப்பட்டன. மார்பு ஏறித் தாழ்ந்தது. வெடித்து விடுவது போல இதயம் துடித்தது. உட்கார்ந்திருக்க இயலாமல் பல்லக்கில் சாய்ந்தாள் அல்லி. பாதத்தில் படத்தைப் பதித்த பாம்பு காலைத் தொட்டு மெள்ள ஊரத் தொடங்கியது. சுற்றியும் ஒரே மெளனம். சருகு விழுந்தாலும் சத்தம் கேட்கும் என்கிற அளவுக்கு அமைதி. அவர்கள் கவனம் முழுக்க பாம்பின் மீதும் அல்லியின் மீதும் கவிந்திருந்தது. மெய்மறந்த நிலையில் துணி நெகிழ்ந்து நழுவுவதும் தெரியாமல் நினைவிழந்து நின்றார்கள்.
வலது காலில் ஏறிய பாம்பு ஊர்ந்து இடைவரைக்கும் சென்று இடையைச் சுற்றிக் கொண்டது. பிறகு தன்னைத் தானே விடுவித்துக் கொண்டு இடது கால் வழியே இறங்கியது. சட்டெனத் திரும்பி இடது கால்வழியே ஊர்ந்து முன்னேறி இடுப்பைச் சுற்றி வலது காலுக்கு வந்தது. அதன் ஒவ்வொரு அங்குல ஊர்தலையும் அவள் மனம் உணர்ந்தது. ஒருவித பூமணம் அதன் உடம்பிலிருந்து வெளிப்பட்டுக் கமழ்ந்தது. கூடவே எச்சில் வீச்சமும். மெல்ல மெல்லப் பாம்பின் மணம் அவள் உடல் முழுக்கப் பரவியது. ஆலித் தெழுந்திருந்து அஞ்சுபடம் விரித்து கோலித் தெழந்து குடைபோலப் படம்விரித்து அல்லியின் வயிற்றில் ஆடியது பாம்பு. மெல்ல ஊர்ந்து மார்பின் மேல் புரண்டாடியது. வளைந்து வளைந்து நெளியும் கொடிபோல இருந்தது அதன் ஆட்டம். மகுடியின் நாதம் எங்கோ நெடுந்தொலைவில் கேட்பது போல இருந்தது. அப்பாவின் கம்பீரமான முகம் அவள் நினைவில் வந்து கலைந்தது. பாம்பின் ஊர்தலை மனித ஸபரிஸம் போல உணர்ந்தாள் அல்லி. சதையுடன் சதை அழுந்துவது போல ஒரு அழுத்தம். ஒரு துடிப்பு. அல்லியின் உடல் அப்படியே உறைவது போல இருந்தது. ரத்த நாளங்களில் நெருப்பு பொங்கியது போலிருந்தது. சடசடவென உடலெங்கும் பரவியது வெப்பம்.அவள் வயிற்றின் தசைகள் முறுக்கிக் கொண்டன. கால்கள் விறைத்துத் தளர்ந்தன. பெரும்பாரமாய்த் தலை அழுந்தியது. முதுகுத் தண்டு அருவியின் குளுமையை உணர்ந்தது. கழுத்தில் வெப்பம் புரண்டது. மாபெரும் வலிமையோடு ஏதோ ஒன்று தன்னை அழுத்தி விலகியது போல இருந்தது. மறுகணமே சகல நரம்புகளும் தளர உடல் துவண்டது. காற்றோடும் விண்ணோடும் வெளியோடும் ஒருகணம் கலந்து திரிந்து சுழன்று மறுகணமே திடமான உடலுடன் பூமியின் மீது வீசப்பட்டதைப் போலிருந்தது.
எவ்வளவு நேரமானதோ தெரியவில்லை. பாம்பாட்டி நகர்ந்து வந்து பாம்பின் அருகில் நின்றான். பாம்பு அவனை நிமிர்ந்து பார்த்தது. அது ஒரு மனிதப் பார்வை போலவே காணப்பட்டது. அல்லியின் நெஞ்சைவிட்டுப் பிரிய மனமில்லாததைப் போல அவள் ஆடைக்குள் ஒளிய முயற்சி செய்தது. பின்னர் பாம்பாட்டியின் சமிக்ஞைகளுக்குக் கட்டுப்பட்டு அல்லியின் உடலைவிட்டு இறங்கியது. அவன் நீட்டிய கூடைக்குள் புகுந்து சுருண்டுகொண்டது. இசை அறுந்ததும் புதிய உலகத்திலிருந்து விழித்தெழுவது போல அல்லி எழுந்தாள். அவள் உடல் வியர்வையில் தெப்பமாக நனைந்திருந்தது. கண்களில் மிதமிஞ்சிய சோர்வு. அவள் உதடுகளில் நெளிந்த சிரிப்பைக் கண்டு சுற்றியும் வாழ்த்தொலிகள் உற்சாகமுடன் எழுந்தன. தோழிகள் முகங்களில் ஒருவித அமைதி திரும்பியது. காவலர்கள் நெஞ்சிலிருந்த அச்சம் அகல நிம்மதியாக முச்சுவிட்டார்கள்.
பாம்பாட்டி தன் பிச்சைப் பாத்திரத்தை அல்லியின் முன் நீடடினான். அல்லி தயக்கமில்லாமல் தோழியின் பக்கம் திரும்பினாள். தோழி பல்லக்கிலிருந்து பொன் நாணயப்பையைக் கொண்டுவந்தாள். பொற்காசுகளை அள்ளித் தாராளமாக அவன் பாத்திரத்தில் போட்டாள்.
பணிவுடன் பாம்பாட்டி ஒதுங்கிக் கொள்ள ‘நேரமாகிறது ராணி ‘ என்றார்கள் பல்லக்குத்தூக்கிகள். மீண்டும் பல்லக்கில் ஏறினாள் அல்லி. காவல் வீரர்கள் கூட்டத்தைக் கலைத்தார்கள்.
நான்கு
ஒரு சாட்டையைப் போலவும் ஒரு இளங்கொடியைப் போலவும் சுழன்று சுழன்றாடிய அந்தப் பாம்பின் உருவம் அல்லியின் மனத்தில் மறுபடியும் மறுபடியும் எழுந்தது. அதன் படமும் ஈரம் மின்னும் கண்களும் ஞாபகம் வந்தன. அருவிச் சாரலைப் போல அவள் மனத்தை ஆனந்தம் வருடியது. மறுகணமே கேள்வி அவள் மனத்தைக் கொக்கி போட்டு இழுத்தது.
நெஞ்சின் இசையை மீட்டுவதுதான் காதல் என்றால் பாம்பாட்டியின் நாதமும் பாம்பின் நடனமும் தன் நெஞ்சில் இசையை எழுப்பியது எப்படி ? வீரமுள்ளவன் மதுரையில் இல்லவே இல்லையா என்று கேட்ட பாம்பாட்டியின் அறைகூவலில் அடங்கியருந்தது ஆண்மையின் தந்திரமா ?
கவணிலிருந்து புறப்பட்ட கற்கள் போலக் கேள்விகள் நெற்றியில் மோதின. தலையைப் பிடித்தபடி மஞ்சத்தில் சாய்ந்தாள் அல்லி. எரியும் தீபச்சுடரைப் பார்த்தாள். சுடர் விரிந்து விரிந்து அதன் வயிற்றுக்குள் தன்னை இழுத்துக் கொள்வது போல இருந்தது. எதிர்த்திசையில் சுவரில் தெரிந்த தன் நிழல் அவளுக்கே பீதியூட்டுவது போல இருந்தது. சுற்றியள்ள சகலமும் எரிந்தது. அந்தத் தீயின் நடுவில் அவள் நின்றிருந்தாள். ஆச்சரியம் என்னவென்றால் அந்தத் தீ அவளைச் சுடவில்லை. ஈரப் பனிக்கட்டி போலச் சிலிர்க்க வைத்தது. அப்போதுதான் கவனித்தாள். சுற்றிலும் பற்றி எரியும் தீயில் யாரும் கதறவில்லை. எல்லாருடைய முகங்களிலும் கீற்றுப் போல ஒளிரும் புன்னகை. சுடாத நெருப்பா ? சந்தேகம் அவளை உலுக்கியது.
திரைச்சீலை அசையும் ஓசை கேட்டு அவள் சுயஉணர்வு கொண்டாள். பணிப்பெண்தானே என அசட்டையாக முகம் திருப்பிக் கொண்டபோது ‘அல்லி ‘ என்ற ஆதரவான குரல் அவளை இந்த உலகத்துக்கு இழுத்து வந்தது. சட்டென்று எல்லாம் ஓய்ந்துவிட்டன. எல்லாக் கேள்விகளும் மறைந்தன. அழுத்தம் முழுக்கக் கரைந்துவிட்டது. ‘அம்மா ‘ அல்லி ஓடிச் சென்று தன் தாயைத் தழுவினாள். அவள் கண்களிலிருந்து தாரைதாரையாய்க் கண்ணீர் வழிந்தது. ‘அம்மா உன் வழிக்கே வருகிறேன் அம்மா.. இது பெரிய சுமை அம்மா . சந்தேகங்களை ஏற்றிக் கொண்டே போகிற சுமை அம்மா. எங்காவது என்னை அழைத்துப் போ அம்மா..நீ யாரைக் காட்டுகிறாயோ அவனைக் கட்டிக் கொள்கிறேன். புதிய முகம் பழகிய பின்னர் புதிய இசையை நாங்கள் இருவரும் சேர்ந்து மீட்டுவோம். அம்மா. எனக்கும் பிள்ளைகள் பிறப்பார்கள் அம்மா. அவர்களும் என்னைப் போலவே வளர்ந்து அவர்களும் இப்படி விடை தெரியாத திசையில் அலைவார்கள் . தவிப்பின் சாபம் தலைமுறை தாண்டித் தொடருமா அம்மா.. ‘
வார்த்தை வராமல் அம்மாவைத் தழுவியபடி கிடந்தாள் அல்லி. பிறகு எழுந்தாள். அவள் பசியை அறிந்து அம்மா தட்டில பழங்கள் கொண்டுவந்து உரித்துத் தந்தாள். பசியாறத் தின்றபின் அல்லி மிகவும் சோர்ந்தாள். அவள் உடல் ஒரு கட்டையைப் பொல ஆவதாக நினைத்தாள். தாயின் மடியில் தலைவைத்த கணத்தில் அவள் கண்கள் முடின. ஆண்டுக் கணக்காக வராத தக்கம் இமையை முடியதும் அவளைத் தொத்திக் கொண்டது. வழக்கமாக அவளைக் குடையும் கேள்விகளின் குரல்கள் கேட்காத ஆழத்தில் அவள் மனம் அமிழ்ந்தது.
மறுநாள் காலையில் அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது பாம்பாட்டி வந்திருப்பதாகச் சேவகன் சொன்னான். அவள் உடல் அதிர்ந்து அடங்கியது. அனுப்பு என்று சொல்லி அனுப்பினாள் அல்லி. உடனே அருகில் இருந்த அம்மாவிடம் அல்லி படபடவென்று பேசத் தொடங்கினாள். அந்தப் பாம்பாட்டியின் நடத்தையைப் பற்றியும் பாம்பின் நடனத்தைப் பற்றியும் அம்மாவின் முன் அடுக்கத் தொடங்கினாள் . ஆண்டுக் கணக்காக அல்லியின் சிரித்த பேச்சைக் காணாத அம்மா அவள் பேச்சில் வியந்து நின்றாள்.
பாம்பாட்டி வந்து நின்றாள். அல்லியின் அம்மா சட்டென எழுந்து நின்றாள். ‘நீங்கள்.. ‘ என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையைப் பாம்பாட்டியின் கண்கள் கட்டிப் போட்டுவிட்டன. உனக்கு ஏற்கனவே தெரியுமா அம்மா என்று விசாரித்தாள் அல்லி. எங்கோ பார்த்த ஞாபகம் என்று இழுத்தாள் அம்மா.
‘என்ன பாம்பாட்டி, செளக்கியமா ? மதுரையில் வீரர்கள் எத்தனை பேர் என்று எண்ணிவிட்டார்களா ? ‘
தன் வார்த்தைகளுக்கடியில் தொனித்த கிண்டலை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள் அல்லி.
‘ஐயோ. அன்னைக்கு ஏதோ தப்பா சொல்லிட்டேன். அதப் போயி இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே ராணி.. ‘
பாம்பாட்டி வினயமாகக் குனிந்து அடங்கிய குரலில் சொன்னான். தொடர்ந்து
‘என்ன குத்தமோ
தெரியல ராணி. நேத்து ஆட்டத்துக்கப்பறம் பாம்பு நெல கொள்ளாம தவிச்சிட்டே இருக்குது. இரை கூட எடுக்கல. சோர்ந்து சோர்ந்து படுத்துக்குது ‘ என்றான்.
பிறகு குனிந்து கூடையைத் தரை
நான்கு ஒரு சாட்டையைப் போலவும் ஒரு இளங்கொடியைப் போலவும் சுழன்று சுழன்றாடிய அந்தப் பாம்பின்உருவம் அல்லியின் மனத்தில் மறுபடியும் மறுபடியும் எழுந்தது. அதன் படமும் ஈரம் மின்னும்கண்களும் ஞாபகம் வந்தன. அருவிச் சாரலைப் போல அவள் மனத்தை ஆனந்தம் வருடியது. மறுகணமே கேள்வி அவள் மனத்தைக் கொக்கி போட்டு இழுத்தது. நெஞ்சின் இசையை மீட்டுவதுதான் காதல் என்றால் பாம்பாட்டியின் நாதமும் பாம்பின் நடனமும்தன் நெஞ்சில் இசையை எழுப்பியது எப்படி ? வீரமுள்ளவன் மதுரையில் இல்லவே இல்லையா என்றுகேட்ட பாம்பாட்டியின் அறைகூவலில் அடங்கியருந்தது ஆண்மையின் தந்திரமா ? கவணிலிருந்து புறப்பட்ட கற்கள் போலக் கேள்விகள் நெற்றியில் மோதின. தலையைப்பிடித்தபடி மஞ்சத்தில் சாய்ந்தாள் அல்லி. எரியும் தீபச்சுடரைப் பார்த்தாள். சுடர்விரிந்து விரிந்து அதன் வயிற்றுக்குள் தன்னை இழுத்துக் கொள்வது போல இருந்தது. எதிர்த்திசையில் சுவரில் தெரிந்த தன் நிழல் அவளுக்கே பீதியூட்டுவது போல இருந்தது. சுற்றியள்ள சகலமும் எரிந்தது. அந்தத் தீயின் நடுவில் அவள் நின்றிருந்தாள். ஆச்சரியம்என்னவென்றால் அந்தத் தீ அவளைச் சுடவில்லை. ஈரப் பனிக்கட்டி போலச் சிலிர்க்க வைத்தது. அப்போதுதான் கவனித்தாள். சுற்றிலும் பற்றி எரியும் தீயில் யாரும் கதறவில்லை. எல்லாருடைய முகங்களிலும் கீற்றுப் போல ஒளிரும் புன்னகை. சுடாத நெருப்பா ? சந்தேகம் அவளைஉலுக்கியது. திரைச்சீலை அசையும் ஓசை கேட்டு அவள் சுயஉணர்வு கொண்டாள்.
பணிப்பெண்தானே என அசட்டையாக முகம் திருப்பிக் கொண்டபோது ‘அல்லி ‘ என்ற ஆதரவான குரல் அவளை இந்தஉலகத்துக்கு இழுத்து வந்தது. சட்டென்று எல்லாம் ஓய்ந்துவிட்டன. எல்லாக் கேள்விகளும்மறைந்தன. அழுத்தம் முழுக்கக் கரைந்துவிட்டது.
‘அம்மா ‘ அல்லி ஓடிச் சென்று தன் தாயைத்தழுவினாள். அவள் கண்களிலிருந்து தாரைதாரையாய்க் கண்ணீர் வழிந்தது.
‘அம்மா உன் வழிக்கேவருகிறேன் அம்மா.. இது பெரிய சுமை அம்மா . சந்தேகங்களை ஏற்றிக் கொண்டே போகிற சுமைஅம்மா. எங்காவது என்னை அழைத்துப் போ அம்மா..நீ யாரைக் காட்டுகிறாயோ அவனைக் கட்டிக்கொள்கிறேன். புதிய முகம் பழகிய பின்னர் புதிய இசையை நாங்கள் இருவரும் சேர்ந்துமீட்டுவோம். அம்மா. எனக்கும் பிள்ளைகள் பிறப்பார்கள் அம்மா. அவர்களும் என்னைப்போலவே வளர்ந்து அவர்களும் இப்படி விடை தெரியாத திசையில் அலைவார்கள் . தவிப்பின்சாபம் தலைமுறை தாண்டித் தொடருமா அம்மா.. ‘
வார்த்தை வராமல் அம்மாவைத் தழுவியபடி கிடந்தாள் அல்லி. பிறகு எழுந்தாள். அவள் பசியைஅறிந்து அம்மா தட்டில பழங்கள் கொண்டுவந்து உரித்துத் தந்தாள். பசியாறத் தின்றபின் அல்லிமிகவும் சோர்ந்தாள். அவள் உடல் ஒரு கட்டையைப் பொல ஆவதாக நினைத்தாள். தாயின்மடியில் தலைவைத்த கணத்தில் அவள் கண்கள் முடின. ஆண்டுக் கணக்காக வராத தக்கம் இமையைமுடியதும் அவளைத் தொத்திக் கொண்டது. வழக்கமாக அவளைக் குடையும் கேள்விகளின் குரல்கள்கேட்காத ஆழத்தில் அவள் மனம் அமிழ்ந்தது.
மறுநாள் காலையில் அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த போது பாம்பாட்டிவந்திருப்பதாகச் சேவகன் சொன்னான். அவள் உடல் அதிர்ந்து அடங்கியது. அனுப்பு என்றுசொல்லி அனுப்பினாள் அல்லி. உடனே அருகில் இருந்த அம்மாவிடம் அல்லி படபடவென்று பேசத் தொடங்கினாள். அந்தப் பாம்பாட்டியின் நடத்தையைப் பற்றியும் பாம்பின் நடனத்தைப் பற்றியும் அம்மாவின் முன் அடுக்கத் தொடங்கினாள் . ஆண்டுக் கணக்காக அல்லியின் சிரித்தபேச்சைக் காணாத அம்மா அவள் பேச்சில் வியந்து நின்றாள். பாம்பாட்டி வந்து நின்றாள்.
அல்லியின் அம்மா சட்டென எழுந்து நின்றாள். ‘நீங்கள்.. ‘என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையைப் பாம்பாட்டியின் கண்கள் கட்டிப் போட்டுவிட்டன.
‘உனக்கு ஏற்கனவே தெரியுமா அம்மா ‘ என்று விசாரித்தாள் அல்லி.
‘எங்கோ பார்த்த ஞாபகம் ‘என்று இழுத்தாள் அம்மா.
‘என்ன பாம்பாட்டி, செளக்கியமா ? மதுரையில் வீரர்கள் எத்தனை பேர் என்றுஎண்ணிவிட்டார்களா ? ‘
தன் வார்த்தைகளுக்கடியில் தொனித்த கிண்டலை உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள்அல்லி.
‘ஐயோ. அன்னைக்கு ஏதோ தப்பா சொல்லிட்டேன். அதப் போயி இன்னும் ஞாபகம்வச்சிருக்கீங்களே ராணி.. ‘ பாம்பாட்டி வினயமாகக் குனிந்து அடங்கிய குரலில் சொன்னான்.
தொடர்ந்து ‘என்ன குத்தமோதெரியல ராணி. நேத்து ஆட்டத்துக்கப்பறம் பாம்பு நெல கொள்ளாம தவிச்சிட்டே இருக்குது. இரைகூட எடுக்கல. சோர்ந்து சோர்ந்து படுத்துக்குது ‘ என்றான்.
பிறகு குனிந்து கூடையைத் தரையில்வைத்துத் திறந்து காட்டினான். சட்டென உடலை நீட்டி நிமிர்ந்தது பாம்பு. அம்மா அல்லியின் தோளை அழுத்தினாள். ஒருகணம் அல்லியையே நேருக்கு நேர் பார்த்தபின்பு தயங்கித்தயங்கி அவளை நோக்கி ஊர்ந்து வந்தது. அல்லியின் மனத்தில் பரபரப்பு கூடியது. ரத்தநாளங்களின் வேகம் அதிகரிப்பதை அவளே உணர்ந்தாள். சட்டென்று அவள் உடலிலிருந்து இசைஎழுந்து பரவுவது போல இருந்தது. பாம்பு ஸஸ என்ற முச்சொலியுடன் தரையை முகர்ந்துபார்த்தது. முகம் திருப்பி எல்லாரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. தலையைத் தூக்கிஇருபுறமும் அசைத்தது. விரிந்த தலைப்பாகம் உலர்ந்தஆல இலையைப் போல அசைந்தது. சிவந்த நாக்கின் நுனியைப் பக்கவாட்டில் சுழற்றியது. தன் தலையை அல்லியின் பாதத்தில்சாய்த்துப் படுத்தது. படத்தைச் சுருக்கியது. ஒருகணம் அறுபட்டு விழுந்த ஏதோ கொடிபோலத்தோற்றம் தந்தது. அச்சமும் குறுகுறுப்பும் கலந்த எழுச்சி அவள் உடலில் பரவியது. பாதத்தைத்தொடர்ந்து அது தன் உடலில் ஏறிவரப் போகிறது என்கிற எண்ணம் அவளுக்குள் பேரானந்தத்தைக்கொடுத்துக் கொண்டிருந்தது. மிகவும் ஆவலுடன் அக்கணத்தை அவள் எதிர்பார்த்தபடி இருந்தாள். அசைவின்றி மரத்தடியில் படுத்துறங்கும் குழந்தை போல பாதத்தைப் பற்றித் தலைசாய்த்துக்கிடக்கும் பாம்பை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
ஆர்வம் தாளாமல் குனிந்து அதை எடுத்தாள். வருடிக் கொடுத்தாள். கை வழவழத்தது. அவள் பிடியில் ஒருகணம் இறுகி விரைப்பதும் மறுகணம்நெளிந்து இளகுவதுமாகப் பாம்பு சுருண்டதை அவளால் உணர முடிந்தது. அதன் வாய் மெல்லத் திறந்து ஏதோ ஓசையெழுப்பியது. உடலை வளைத்து நெளித்தது. கழுத்து நீண்டு திரும்பியது. அதன் உடல்முழுக்கக் கதகதப்பு ஓடிப் பரவியது. தாடை புடைத்து விரியத் தயாரானதைப் போல இழுபட்டது. அதன் கண்களில் புதிய வெளிச்சம் சேர்ந்ததைப் போல இருந்தது. குனிந்து அதன் தலையில்முத்தம் கொடுக்கவேண்டும் என்ற ஆவல் பொங்கியெழுந்தது. சுற்றி நிற்கிறவர்கள் பதறிப்போகக் கூடும் என்ற எண்ணத்தில் அதைத் தவிர்த்தாள். தன் உடல பதற்றமுறுவதையும் முறுக்கம்கொள்வதையும் உணர்ந்தாள். என்ன செய்வது இப்போது ? ஒரு மாலையாய் அணிந்து கொள்ளலாமா ? ஒட்டியாணமாகச்சுற்றிக்கொள்ளலாமா ? மாறி மாறி எண்ணங்கள் அவள் மனத்தில் எழுந்தவண்ணம் இருந்தன. எதையும்செய்ய இயலவில்லை. அந்தப் பாம்பைத் தூக்கிக் கொண்டு கண்காணாத காட்டுக்கோ,மலையடிவாரத்துக்கோ, குகை¢கோ ஓடிச் செல்ல வேண்டும் போல இருந்தது. கண்கள் பரபரக்க அதன்விழிகளைப் பார்த்தாள். ஆசையையும் மயக்கத்தையும் உணர்த்தும் பார்வை. அதன்விளிம்பில் ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.
‘நேத்து ராத்திரி முழுக்க சோர்ந்து கெடந்த பாம்புக்கு உங்களப் பார்த்ததும் எவ்வளவுசந்தோஷம் பாருங்க ராணி.. ‘
பாம்பாட்டி குறுக்கிட்டுப் பேசிய குரல் எங்கோ தொலைதூரத்தில் கேட்பது போல இருந்தது.
‘குட்டியிலிருந்து வளர்க்கற எங்கிட்ட கூட இது இப்படி ஆடியதில்லம்மா. ஒரே நாள்ல உங்களோடஎப்படி ஒட்டிடுச்சி பாருங்க. ‘ அல்லி அவனைப் பார்த்துப் புன்னகை சிந்தினாள்.
அப்போது பாம்பை நோக்கி ‘வாடா வா ராஜா. வா போகலாம் ‘ என்று அழைத்தான் பாம்பாட்டி. உடலை முறுக்கி அல்லியின் உடலோடு ஒட்டிக் கொண்டது பாம்பு.
‘பாருங்க ராணி. எவ்வளவு பாசம் அதுக்கு உங்க மேல ‘ பாம்பாட்டி ஆச்சரியத்தை வெளிப் படுத்தினாள். தொடர்ந்து அர்த்தமற்ற சொற்கோவைகளைச்சொல்லி அப்பாம்பைச் செல்லமாய் அதட்டினான். எதற்கும் காது கொடுத்துக் கேட்காமல்பாம்பு அவள் இடையைச் சுற்றிக் கொள்ளத் தொடங்கியது.பாம்பின் எச்சில் ஈரம் ஒரு கோடுபோல இடையில் விழுந்தபோது அல்லிக்குக் கூச்சமாக இருந்தது.
‘ராணிய விட்டுட்டு வரமாட்டியா ? ‘ பாம்பாட்டியின் அடுத்த கேள்விக்கும் பாம்பு தலைசாய்க்கவில்லை.
‘இங்க பாரு இப்ப வந்தாதான் உண்டு. இல்லைன்னா நான் பாட்டுக்குப் போய்ட்டே இருப்பேன். அப்பறம் நீ கூப்பிட்டாலும் வரமாட்டேன் ‘ பாம்பு இப்போதும் அவள் பக்கம் திரும்பவில்லை.
முதுகுப்பக்கம் தலையைத் திருப்பிஅல்லியின் கச்சனை நோக்கி விரைந்தது.
‘வா கண்ணு போவலாம் சொன்ன பேச்ச கேளு ‘
அவன் கெஞ்சல்களைக் கேட்டு அல்லிக்குச் சிரிப்பு வந்தது. பணிப்பெண்ணை அழைத்து ஒருதட்டில் பால் கொண்டுவரச் சொன்னாள். வந்ததும் தட்டைப் பாம்பின் முன் நீட்டினாள். ஆர்வமுடன் அவள் விழிகளை நோக்கிய பாம்பு குனிந்து தட்டை நெருங்கிப் பாலை உறிஞ்சிக்குடித்து முடித்தது. ஈரத்தைத் துடைக்கப் பாம்பாட்டி நெருங்கிய போது மறுபடியும் அல்லியின்பக்கம் திரும்பிக் கொண்டது.
‘மன்னிக்கணும் ராணி. இந்தப் பாம்புக்குப் புத்தி இப்படி போகுமின்னு நெனைக்கலை ‘ பாம்பாட்டி வருத்தத்தைப் புலப்படுத்தும் முறையில் சொன்னான்.
‘ஆடட்டும் விடு பாம்பாட்டி ‘
‘ நான் ஊருக்குக் கிளம்பணும் ராணி. இந்தச் சமயத்துல இப்பிடி தொல்லை தருது பாருங்க ராணி. ‘
‘பாவம் . வாயில்லாத ஜீவன். என்ன சொல்லத் தவிக்குதோ ‘
‘தலையில ரெண்டுபோடு போடு போட்டா கொட்டம் அடங்கி கூடைக்குள்ள போய்டும். இப்பிடிகொஞ்சம் காட்டுங்க
‘
‘இருக்கட்டும் விடு பாம்பாட்டி. இங்கயே இருக்கட்டும். அடுத்த முறை வரும்போது வந்து தூக்கிக்கொண்டுபோ ‘
பாம்பாட்டி தயக்கம் காட்டினான். திரும்பி அல்லியின் தாய் மற்றும் தோழிகள் பக்கம் திரும்பினான். ஒரு கணம் யோசனையோடு தரையைப் பார்த்திருந்த பிறகு ‘சரி உங்க விருப்பம்ராணி ‘ என்று தணிந்த குரலில் சொன்னான். மற்ற கூடைகளை எடுத்துக் கொண்டு திரும்பினான். சிலகணங்கள் அவன் பார்வை அப்பாம்பின் பக்கம் பட்டுத் திரும்பியது. மெல்ல வாசலை நோக்கிநடந்தான்.
ஒருகணம் கழித்து ‘பாம்பாட்டி ‘ என்று அழைத்தாள் அல்லி. திரும்பியவனிடம் ‘இதைஎன்ன பெயர் சொல்லி அழைப்பது ? ‘ என்று சிரித்தபடி கேட்டாள். ‘அர்ஜூனன் ராணி.அர்ஜூனன் ‘ என்று பணிவுடன் சொன்னான் பாம்பாட்டி. ‘அர்ஜூனனா, எங்கோ கேட்ட பேராகஇருக்கிறதே ‘ என்று சற்றே தடுமாறினாள்.
மறுகணம் குழம்பும் மனத்தை உதறி பக்கத்திலிருக்கும்தோழியிடம் ‘அந்தப் பாம்பாட்டியை அழைத்துச் சென்று ‘பசிக்கு ஏதாவது கொடு. வழிப்பயணத்துக்கும் கட்டிக் கொடு. செலவுக்குப் பொன் நாணயங்களைக் கொடுத்தனுப்பு ‘ என்று சொன்னாள்.
மறுபடியும் தலைவணங்கிக் குனிந்து வணங்கினான் பாம்பாட்டி.ஐந்து திரைச்சீலை அசைந்தது. கருத்த நிழலாகத் தெரிந்த பணிப்பெண் அல்லியின் அருகில் எரியும்தீபத்தின் பக்கம் சென்றாள். ஊற்றுவதற்காக எண்ணெயக் கலயத்தை உயர்த்தியபோது ‘வேண்டாமடி ‘ என்று தடுத்தாள் அல்லி.
கேள்வி பொதிந்த பார்வையுடன் திரும்பியபணிப்பெண்ணிடம் மறுபடியும் ‘வேணாமடி, உறக்கம் வருகிறது ‘ என்றாள். நம்ப முடியாமல் இமைகளைப் படபடத்தவளிடம் ‘அர்ஜூனனுக்குகுப் பால் ஊற்றினாயா ? ‘ என்று கேட்டாள். அவள் பார்வைமுலையில் இருந்த கூடையின் பக்கம் சென்றது.
‘ஊற்றிவிட்டேன் ராணி ‘ என்று பணிவுடன்சொன்னாள் பணிப்பெண். அவள் கண்களில் மின்னும் குறும்பை அல்லியால் படிக்க முடிந்தது. திரியை அடக்கிவிட்டுத் திரும்பிச் சென்றாள் பணிப்பெண்.
மஞ்சத்தில் சாய்ந்ததும் வழக்கமாய் நிலைகுலைய வைக்கும் கேள்விகள் அவளை அரிக்கத்தொடங்கின. எனினும் ஆச்சரியமான விதத்தில் அவற்றின் மீது கவனத்தைக் குவித்து அசைபோடமனம் இடம் தரவில்லை. மிதமிஞ்சிய களைப்பில் உடல் பாரமாய் இருப்பதாய்ப் பட்டது. வழக்கமாய் இருட்டை வெறிக்கும் கண்களை முட வேண்டும் போல இருந்தது. இருளில் அப்பாவின் உருவம் அசைவதைக் கண்டாள் அல்லி. மாறாத அன்புடன் பாரக்கும் அவர்கண்கள். அவற்றில் ததும்பும் பெருமை. அவற்றில் மின்னும் சந்தோஷம். அப்பா அப்பா என்றுஉள்ளம் கூவுவது போல இருந்தது. இருள் படரத் தொடங்கும் மாலைப் பொழுதுகளில் வைகைக் கரையில் உலவ அழைத்துச் சென்ற அனுபவம் நினைவுக்கு வந்தது. உலவலின் முடிவு எப்போதும் ஒரு மரத்தடியில் நிற்கும் பிறகுஅங்கிருந்து தொலைவில் தெரியும் இன்னொரு மரத்தைத் தொட்டுவிட்டு வரச்சொல்வார். கால் அழுந்திக் கூச்சம் கொடுக்கிற பொடிமணலில் வெற்றுக் கால்களோடு ஓடிவருவது ஆனந்தமாகஇருக்கும். பக்கவாட்டில் காவலர்கள் நின்றிருப்பார்கள். ரதம் நின்றிருக்கும். தோழிகள் காத்திருப்பார்கள். இறக்கை முளைத்த பறவை போல பறந்து வந்து அவர் மார்பில் விழுவாள். மனத்தில் ஆனந்தவெறி ஏறியபடி இருக்கும் மேலும்மேலும் என்று கால்கள் பரபரக்கும் . தாவுவதிலும் ஓடுவதிலும் குதிப்பதிலும் அவளுக்கிருந்த ஆர்வம் சொஞ்சநஞ்சமில்லை. ‘புறாஜென்மமடி நீ. ஒரு இடத்தில் தங்குகிறாயா ? ‘ என்று செல்லமாய்ச் சொல்லும்போது அவர்கண்களில் பூரிப்பு மின்னும். அப்போது ஓடிச் சென்று அவர் கன்னத்தைக் கடிப்பதில் அந்தஆட்டம் முடியும். அவர் கிண்டல் மேலும் மேலும் உற்சாகத்தைத் தூண்டும். மரத்தில் ஏறி ‘அப்பா என்னைப் பிடி ‘ என்று சொல்லிக் கொண்டே குதிப்பாள். உயரத்திலிருந்து குதித்து வரும்அவளை அவர் கைகள் தேவதை போலத் தாங்கிக் கொள்ளும். ஒரு பழக்குலைபோல அவர் மார்பில்சரியும் போது தடுமாறாமல் உறுதியாய் நிற்பார் அவர்.
புசுபுசுவென்று முடியடர்ந்த கரியமார்பு. விசாலமான தோள்கள். பின்பக்கம் படரும் முடிக்கற்றை. சிறிய கண்கள். சற்றேபூசிய கன்னங்கள். முறுக்கிய மீசை. நேரம் காலமின்றி விரும்பும் போதெல்லாம்மரத்திலேறி அவர் மடியில் குதிக்க வேண்டும் போலிருக்கும். அவரைப் போல ஓர் ஆண்உலகத்தில் மறுபடியும் பிறக்காமலேயே போனானா ? கேள்வி ஒரு உதிர்ந்த இறகு போல மிதந்து இறங்கி அவள் நெஞ்சை அடைந்தது. துயரத்தில் நெஞ்சு விம்முவதைப் போல இருந்தது. அதே கணத்தில் வைகையும் மணற்பரப்புமான காட்சி மாறி அவள் கண்முன் ஒரு குகையின் காட்சி விரிந்தது.
பிரமிப்பூட்டும் அக்குகையின் வாசல் திறப்பதைக் கண்டாள். சுற்றிலும் உருண்டுகிடக்கும் பெரும் பாறைகள். முட்காடு. புதர்கள். சரிவுகள். எங்கும் படர்ந்திருந்தஇருள். அந்தப் புதிய இடத்தில் பளீரென மின்னும் இரு கண்கள். ஒளிபெருகும் புள்ளியில் கவனத்ைதுக் குவித்தபோது ஒரு பாம்பு வெளிப்படுவது தெரிந்தது. எங்கும் தப்பி ஓடிப் போகமுடியாத இடம். கூச்சம் அவளைத் தளரச் செய்தது. ஒரு பெரிய மலர்ப்படுக்கையில் மல்லாந்துபடுத்த்ிருப்பதைப் போல இருந்தது. படுத்த கணத்திலேயே அவளும் ஒரு மலராக மாறிவிட்டதாகத்தோன்றியது. வைரம் போல ஒளி உமிழும் புள்ளிகள் படுக்கையை நெருங்கி வந்தன. படுக்கையில்படிந்து புரண்டன. அவளை அள்ளின. அணைத்தன. அந்தரத்தில் மிதக்கச் செய்தன. நழுவிவிழும்போது கைநீட்டித் தாங்கின. பீறிட்டெழும் ஓர் ஊற்று அவளுக்குள் பொங்கிப் பாய்ந்தது. கேள்விகளம் குழப்பங்களும் அடித்துப் புரண்டோட, சாரலில் நனைந்து துவண்ட மலர் இதழாகவிழுந்தாள் அல்லி. வானத்துக்கு அருகிலா, பூமிக்கு அருகிலா எங்கே இருக்கிறோம் என்பதேதெரியவில்லை, ஒருகணம் கனவும் நனவும் கலந்த குழப்பம். பதற்றம். கணக்கற்ற மேகங்களிடையேஊடுருவி வந்தது போல இருந்தது.
விழித்தபோது திடுக்கிட்டாள் அல்லி. யாரோ அருகில் நெருங்கிக் கிடந்தது போல இருந்தது. சட்டென்று உடல் கூச எழுந்து அமர்ந்தாள். வேகவேகமாக தளர்ந்திருந்த மார்புக் கச்சையைக்கட்டியபடி எழுந்து அமர்ந்தாள். நெஞ்சு உலர்ந்தது. அருகிலிருந்த தீபத்தின் திரியைத்தூண்டிவிட்டுத் திரும்பியபோது உடம்பு தூக்கிவாரிப் போட்டது. கட்டுக் குலையாத உடலுடன் ஓர்ஆணின் உருவம். ஐயோ என்று பதறினாள். நொடியில் அருகில் இருந்த வாளை உருவி எடுத்தாள்.
‘யார் நீ ? ‘ என்று கடுமையான குரலில் கேட்டாள்
‘அர்ஜூனன் ‘
‘அர்ஜூனனா அது பாம்பு அல்லவா ? ‘ அவசரமாய் அறையின் முலையில் வைத்திருந்த கூடையின் பக்கம் பார்த்தாள்.
கூடைதிறந்திருந்தது. பாம்பு இல்லை. அதே கணத்தில் யாரோ மேற்கிலிருந்து அர்ஜூனன் என்பவன் வந்துள்ளான் என்று அம்மா முன்வைத்த கோரிக்கையின் குரல் பொறிதட்டியது. அவள் மனம் உடனடியாக இறுகியது. ஒருகணம் தன்னையே அருவருப்பான வஸதுவாக நினைத்து அவமானமுற்றாள்.
மறுகணமே ‘சீ..போ ..நாயே ‘ என்றாள். பொருட்படுத்தாதவனைப் போல அவளை நெருங்கி இடையைத் தன்பக்கம் இழுக்க முனைந்தவனை முரட்டுத்தனமாய்த் தள்ளினாள். எதிர்பாராத தாக்குதலுக்கானவன்தடுமாறிச் சுவரில் மோதி இடித்துக் கொண்டான்.
‘போ.. போய்விடு இங்கிருந்து.இல்லாவிட்டால் வெட்டிவிடுவேன் ‘ என்று மறுபடியும் வாளை ஓங்கினாள் அல்லி.
அதற்குள் வெளியே ஆட்கள் ஓடிவரும் சத்தம்.
‘ராணி.. ராணி.. ‘ என்று அழைக்கும் சத்தம். தயக்கமும் மிரட்சியுமாய் அர்ஜூனன் சட்டென வெளியே ஓடி மறைந்தான்.
‘என்ன சத்தம் ராணி.. ? ‘ என்றார்கள் பணிப்பெண்கள். ஒரு கும்பலே ஓடிவந்துவிட்டது.அவர்களின் திடுமென்ற நுழைவில் தடுமாறினாள். ‘யாரோ இருட்டில் நின்ற மாதிரி தோன்றியது. ஒற்றனோ என்று தோன்றியது. அதுதான் வாளை எடுத்து விரட்டினேன் ‘ என்றபடி ஒரு திசையைக் காட்டினாள். அங்கே இருள் மட்டும் அப்பியிருந்தது. ஓரிருவர் அங்கே சென்று பார்த்துவிட்டுத் திரும்பி ‘யாருமில்லை ராணி.. ‘ என்றார்கள்.
‘ஓடிவிட்டானோ என்னமோ, சரி சரி தீபத்தில் எண்ணெய் நிரப்படி ‘ என்று சத்தமிட்டாள் அல்லி.
வாளை ஓரமாய் வைத்தாள். ஒரு நொடியில்வெளியே ஓடிப்போய் எண்ணெய்க் கலயத்தோடு திரும்பிய பணிப்பெண் அகலில் எண்ணெயைநிரப்பினாள். சுடரைத் தூண்டிவிட்டாள். எல்லாரும் திரும்பி நடந்தார்கள். சட்டென ஒருத்தியின் பார்வை பாம்புக் கூடையின் பக்கம்சென்று மீண்டது. ‘ராணி..இங்கிருந்த பாம்பைக் காணோம் ‘ என்று பீதியுடன் சொன்னாள்.
‘எக்கேடாவது கெட்டுப் போகட்டும் போடி. பெரிய பாம்பாம் பாம்பு ‘ என்று எரிந்துவிழுந்தாள் அல்லி. சீறும் அவள் கோலத்தை விசித்திரமாய்ப் பார்த்தபடி அறையை விட்டுவெளியேறினார்கள் பணிப்பெண்கள்.
- அல்லி
- முகக்களை