வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)

This entry is part [part not set] of 1 in the series 20040826_Issue

பனசை நடராஜன்


மற்றவர் வேடங்களை
சுட்டிய விரலை
சற்றுத் திருப்பி நம்மை
சுயசோதனை செய்வோமா ?

கண்கட்டுவித்தை செய்யும்
கயவர்களை ‘சாமி ‘யென்று
கண்மூடித்தனமாக நம்புகின்றோம்!

பிற்காலம் கணிப்பதாக-பணம்
பிடுங்கும் எத்தர்களை
பின்தொடர்ந்து ஓடுகின்றோம்!

இடையசைக்கும் கவர்ச்சியும்
எதுகை மோனை பேச்சுமே
தலைமையேற்கத் தகுதியென்று
தவறாக எண்ணுகின்றோம்!

நிர்வாகம் வரிப்பணத்தில் – நம்
நினைவிலேயே இருப்பதில்லை!
தன் பணத்தைத் தானமாகத்
தருவதுபோல் விளம்பரங்கள்;

இந்தப் போலிகளை
‘வள்ளல் ‘ என்று போற்றுகின்றோம்
வெட்கமின்றி..!

இப்படி…
அடுக்கடுக்காக நம்மீது
அட்டைகளாய் ஒட்டியிருக்கும்
அறியாமை வேடங்களை
அகற்றிடுவோம் முதலில்…!

(முற்றும்)

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –
(feenix75@yahoo.co.in)

இந்த 8 வார ‘ ‘வேடத்தைக் கிழிப்போம் ‘ தொடர் கவிதையின்
பெரும் பகுதி சிங்கப்பூரில் ஜூன் மாதக் கவிமாலை ‘கவியரங்கத்தில் ‘
வாசிக்கப்பட்டது.


  • வேடத்தைக் கிழிப்போம்-8 (தொடர் கவிதை)

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்