வெசாவின் திண்ணை கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

எண்கோணம்கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்:

வெசாவின் திண்ணை கட்டுரையைப் (தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்) படித்தேன். அவர்போன்ற உயர்தர இலக்கியவாதிகளுக்கே உரித்தான கரு, நடை. சிலாகிக்கவே தோன்றுகிறது.

பொதுவாக பழகிவிட்ட பார்வையின் இயல்பான குறையால் இக்கட்டுரையை வயதானவர்களின் புலம்பலாகவே (என்ன இருந்தாலும் அந்தக்காலம்போல வருமா?) சிலர் புரிந்துகொள்ளக்கூடும். முதுமையின் அறிவுத் திரட்டலை புரிந்துகொள்ளாததால் எழும் அரைகுறைப் புரிதல் இது.

ஒவ்வொரு மனிதக்காலமும் அவற்றிற்கான வேல்யூக்களைக் கொண்டுள்ளன. ப்ரக்ஞையற்று ஸெரெப்ரல் கிளர்ச்சிகளின் ஸுகத்தில் வாழ்வதே வேல்யூ என்ற நம்பிக்கை பரவும் காலத்தில், நுணுக்கமான, தஸமான நொடியில் ஒருநொடி கவனம் சிதறுமானால் உணர்வறிவுத்தளத்திலிருந்து தப்பிவிடுகிற ஆயிரம்கோடி நளினங்கள் கொண்ட நுணுக்கமான ஒரு கலையை, மெக்கானிக்கலான பயிற்சிகளால் வேகத்தையும், இயந்திரத்தனமான ஒழுங்கையும் முன்னிறுத்தும் கலைகள் வெற்றிகொள்ளுவது உயர்கலைகளின் இன்பானுபவம் பெற்றவர்களுக்கு துக்கம் தரும். வெ சாவின் கட்டுரையில் அத்துக்கமே வெளிப்படுகிறது.

மனிதவளத்தின் பல்வேறு பரிமாணங்களுக்கு சம அளவில் தரவேண்டிய மதிப்பு சிதறுண்டு ஒற்றை பரிமாணத்திற்குள் வாழ்வியலின் அனைத்துக்கூறுகளையும் அடக்கமுயல்கிற ஆப்ரகாமிய தன்மை பணத்தின் அடிப்படையிலேயே ஒன்றின் தரத்தை கணக்கிடுகிறது. அவ்வகையில் பணம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக மிருக உணர்வுகளைத் தாண்டாத, துரித ஸ்கலிதங்கள் மனிதரின் ஆமோதிப்பைப் பெறுகின்றன.

இச்சூழலில், இச்சூழலின் சகதிக்குள் சிக்கிக்கொள்ளாமலும் தனிமனிதர்கள் சிலர் வாழ்கிறார்கள் என்று வெசா வெளியிடும் பட்டியலே நம்பிக்கை அளிக்கிறதாகவும் உள்ளது.

இங்கனம்,

எண்கோணம்


saakshin@gmail.com

http://enkonam.blogspot.com/

Series Navigation

எண்கோணம்

எண்கோணம்