விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

அறிவிப்பு


கடந்த பத்து வருடங்களாக வட அமெரிக்காவில் இயங்கி வரும் ‘விளக்கு ‘ இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் ஒரு படைப்பாளியை இனம் கண்டு அவருக்கு ‘புதுமைப்பித்தன் நினைவு விருது ‘ வழங்கி கெளரவித்து வருகிறது.

‘விளக்கு ‘ அமைப்பின் முதல் ஆண்டில் சி சு செல்லப்பா பரிசு பெற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகம் உஇட்பட பல பரிசுகளை நிராகரித்த சி சு செல்லப்பா , ‘விளக்கு ‘ பரிசினை ஏற்று ‘ விளக்கு ‘ அமைப்பினை கெளரவித்தார். இது வரையில் பரிசு பெற்றவர்கள் : பிரமிள், கோவை ஞானி, நகுலன், பூமணி, ஹெப்சிபா ஜேசுதாசன், சி மணி, சே ராமானுஜம் ஆகியோர்.

‘விளக்கு ‘ அமைப்பின் சார்பில் கருத்தரங்குகள் நடத்தவும் திட்டம் உள்ளது. உறுப்பினர்களின் ஆதரவு இருப்பின் வேறு செயல்திட்டங்களையும் வகுத்துச் செயல்படுத்த இயலும்.

‘விளக்கு ‘ அமைப்பின் செயல்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்களை, உறுப்பினர்களாகி ‘ விளக்கு ‘ அமைப்புக்கு ஆதரவு நல்கும் படி வேண்டுகிறோம்.

விளக்குக்கு அளிக்கும் தொகைக்கு , அமெரிக்காவில் வரி விலக்கு உண்டு


vilakku@yahoo.com

தொடர்பு முகவரி :

Dr N Gopalswamy

Vilakku Literary Society

11205 Greewn Watch Way,

North Potomac,

MD 20878 -USA

Phone 301-217-9691

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு