பேர்லின் ராகவன்
தமிழ்நாட்டில் இவ்வருடம் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கெதிராக இருஉாிமை மறுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதலில் வந்தது கட்டாய மதமாற்றத் தடைச்சட்டமாகும். இச்சட்டமானது இந்திய சாதிய சமூக அமைப்பினுள் ஒடுக்கப்படும் தமது மனித, சமூக உாிமைகளுக்காக, சமூகக் கொடுமைகளுக்கெதிராக ஆட்சியாளர்களுக்கு, ஆதிக்கசாதிகளுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதையே தடை செய்தது. அத்தடன் இவர்களிடையே வேலைசெய்யும் கிறீஸ்தவ, முஸ்லீம் மதகுருக்களை பயமுறுத்துவதாகவும் அமைந்தது.
இதன்பின்னர் வந்தது இன்னும் ஒருபடி மேலேபோய் கோயில்களில் விலங்குகள் பலியிடலுக்கு எதிரான தடைச்சட்டம்
1.தமது குலதெய்வத்திற்கு விலங்குப்பலியிடல் என்பது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினாின் வழிபாட்டுாிமையாகும். இதில் தலையிட யாருக்கும் உாிமையில்லை. இதில் ஐீவகாருண்ய பசுத்தோல் போர்த்தியபடியே வரும் இந்துத்துவ ஆதரவு அரசியலாகட்டும், பகுத்தறிவு, மூடக்கொள்கைளுக்கு எதிர்ப்பு என ஆதரவு வழங்கும் சில மாக்சிய, திராவிடகட்சி ஆதரவாளர்களாகட்டும் யாருக்குமே தலையிட உாிமையில்லை.
2. அத்தடன் இக்கொடை வெறுமளே வழியாட்டுாிமை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, கூட்டுவாழ்வின் மாக்சியமொழியில் சொல்வதானால் ஆதிசோசலிச சமூகத்தின் எச்சம். இங்கு பகிர்ந்து கொள்ளுதலும், கூட்டுணர்வை வளர்த்தலும, பிரச்சனைகளை தீர்த்தலும் முக்கிய சமூகச் செயற்பாடுகளாகும். ஓரு சமூகத்திடமிருந்து இவற்றைப் பறிக்கும் உாிமை எவருக்கும் கிடையாது.
ஆதிக்கசாதியினர் தொடர்ந்து பெற்றுவரும் சமூக, பொருளாதார அரசியல் நலன்களை தக்கவைத்துக் கொள்வதற்கு இந்த சாதிய கட்டமைப்பை, இந்துவென்ற கட்டாய அய்க்கியத்தை தொடர்ந்து காப்பாற்றிக் கொள்வது தேவையாகிறது. இந்நிலையில் கோயில்களில் அன்னதானம், கவனிப்பாறற்று கிடந்த கோயில்கள் புனருத்தானம், கும்பாபிசேகம், பூசை என தமிழகம் இன்று அமர்க்களப்படுகிறது. இது கோயில்களை மையமாக்கி பழமைவாத சமூகக் கட்டுமானத்தை இன்னுமாய் இறுக்குகிறது. மறுபுறம் இன்றும்கூட கோயில்களில் தலித்துக்கள் அநுமதி மறுப்பு, தமிழில் குடமுழுக்குக்கு எதிர்ப்பு, தமிழில் பூசைக்கு எதிர்ப்பு என சனநாயக மறுப்பே இந்துமதவாதிகளிடம் உள்ளது. பெருங்கோயில்களில் தமிழில் குடமுழுக்கை தீட்டென கூறியவர்கள் இன்று சிறுதெய்வவழிபாட்டின் பலியிடலை தீட்டென தடைசெய்கின்றனர்.
சில மாக்சியவாதிகள், பகுத்தறிவுவாதிகளின் இச்சட்டம் தொடர்பான மருட்சிக்கு
யார் குத்தினாலும் அாிசி எனும் மனநிலை:
இது இந்திய சாதியக்கட்டுமானத்தையும், இந்துத்துவவாதிகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளை மென்மையாக எடைபோடுவதின் விளைவு. இச்சட்டம் சிறுதெய்வவழிபாட்டை ” பண்படுத்தும் ” ” ஐீவகாருண்யமான ” பார்ப்பனியப்படுத்தலன்றி வேறென்ன ? இது மக்களை தமக்கு நெருங்கிய கடவுளிடத்தேயிருந்து, பூசாாியிடமிருந்து விடுவித்து தமக்கு அந்நியமான பார்ப்பனிய அல்லது பார்ப்பனியமயமாக்கப்பட்ட கடவுள்களிடத்தேயும், அய்யர்களிடத்தேயும் காலப்போக்கில் சிறைப்படுத்தும். மாறாக இம்மக்களின் பண்பாட்டு அடையாளங்களை சிதைக்கும் இம் முயற்சியை மூடப்பழக்கங்களிலிருந்தும் கடவுள் நம்பிக்கையினின்றும் விடுதலைபெற உதவும் என்றும் எம்மையே ஏமாற்றிக் கொள்வோமா ? சிறுதெய்வ வழிபாட்டையும் நிறுவனமான, மேல்-கீழ் படிநிலையை காத்துநிற்கும் பார்ப்பனிய, ஆதிக்கசாதி கருத்தியலைக் கொண்டதான பெருந்தெய்வ வழிபாட்டினையும் ஒன்றாக கொள்ளமுடியுமா ? சிறுதெய்வ வழிபாடு அந்நியமில்லாதது, பெரும்மாலும் எதிர்ப்புணர்வின் சாட்சியாக இருப்பது.
இச்சட்டத்தை சிலர் சதி, தேவதாசிமுறைமை, தீண்டாமை ஒழிப்புகளுடன் ஒப்பிடுகின்றனர். இவை மூன்றுமே இந்துவென்ற அடையாளம் சுமத்திய கொடுமைகள். மனிதமறுப்பு, இழிவுபடுத்துதல், சிறுமைப்படுத்துதலே அதன் உயிர்மூச்சு. பெண்களின், தலித்துக்களின் உடல்மீது, உயிர்மீது, உணர்வுகள்மீது ஆதிக்கம் செலுத்துபவை. குறைந்தபட்சம் சதி, தேவதாசிமுறை ஒழிப்பு போன்றன இந்துசமயத்தினுள் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களாக இருந்தது. ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இவ்விரு சட்டங்களும் இந்துசமயத்தினுள் மேற்கொள்ளப்படுகின்ற சீர்திருத்தம் கூடக்கிடையாது. மாறாக கோயில்களில் விலங்ககளை பலியிடல் தடைச்சட்டம், அம்மக்களை தமது நம்பிக்கை, பண்பாட்டு அடையாளம் என்பவற்றிலிருந்து அறுத்தெடுத்து, தொடர்ந்து தமது மேல்-கீழ் படிநிலையைக் காத்துக் கொண்டே, சட்டம் போட்டு வன்முறையாக இந்துவாக்கும் சூழ்ச்சி. அவர்களின் வழிபாட்டிடங்களை, கடவுளரை தீட்டு நீக்கி சுத்தம்செய்து இவர்கள் அங்கு சென்று வேலை செய்வதற்கு சூழ்நிலையை ஏற்படுத்தவே இந்தப் பலியிடல் தடைசட்டமாகும்.
இன்னும் சிலாிங்கு விலங்கு பலியிடல் காட்டுமிராண்டித்தனமானது, நாகாீகமில்லாதது, குரூரமானமுறை என தமது உணர்ச்சிகளை கொட்டியுள்ளனர். இந்த ஐீவகாருண்யம் சக மனித உயிாியிடத்திலில்லாத போலியானது. இவர்கள் எமது சமூகத்தைச் சிறிது பார்த்தாலே எது காட்டுமிராண்டித்தனமானது, நாகாீகமில்லாதது, குரூரமானமுறை என்பது தொியும். ஆதிக்கம் செய்பவர்கள் தமது மோசமான சுரண்டலையும், மனித உாிமைமீறல்களையும் மறைத்துநின்று பாதிக்கப்பட்டவர்களின் மோசமான நிலமைமக்கு அவர்களின் செயற்பாடுகளே பொறுப்பு என குற்றத்தையும் சுமத்திவிடும் நிலைமைதானிது.
வேதகாலத்தில் இடம்பெற்ற பெருந்தொகையான விலங்குப்பலி விபரமாக பாடப்பட்டுள்ளது. பின்னாளிலும் யாகங்களில் பெருந்தொகையாகவே பலியிடப்பட்டுள்ளன. இவற்றை இங்கு சுட்டிக்காட்டுவது வேதங்களைத் தமது மறைநுாலாக கொண்டும், புலால் உணவுமறுப்பை ஒருஆயுதமாக கொண்டும், தம்மை மேலானவர்களாக, மேலாண்மை செய்வதற்கு விசேச தகுதியுடையவர்களாக காட்டிநிற்கும் பார்ப்பனிய மற்றும் ஆதிக்கசாதியினாின் புனிதத்தையும் மேன்மையையும் கட்டுடைப்பதற்காகவேயன்றி இச்செயல் அநாகாியமானது என்பதற்காகவல்ல. இப்பலியிடல் உலகுதழுவியதாக பல குழுக்களிடம் இருந்துள்ளது. இன்றும் இருக்கின்றது.
ஆனால் யாகம் செய்வதுவும், அதில பெருந்தொகையாக் நெய்யை ஊற்றுவதும், பொருட்களை போடுவதுவும், பால் அபிசேகம்…….மூடப்பழச்கங்களும் வீணடிப்பேயொழிய, விலங்குகளைப் பலியிட்டு கூடியுண்பதல்ல.
அசுத்தம் x சுத்தம், தீட்டு x புனிதம், காட்டுமிராண்டித்தனம் x நாகாீகம், விலங்குப்பலி x ஐீவகாருண்யம் போன்ற சொல்லாடல்களுக்கூடாக தமது நலன்களை, ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளுவதற்கும், தமது மனித விரோத செயற்பாடுகளுக்கும் ஒரு நியாயப்பாட்டை கற்பிக்கின்றனர். சக சமூகத்தைப் பாதிக்காத, ஒரு சமூகத்தினரது வாழ்முறையை, வழமையைக்கூட குற்றச் செயலாக இவர்களால் அறிவிக்க முடிகிறது.
————————
திண்ணை பக்கங்களில் தொடர்பான கட்டுரைகள்
- வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு
- எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.
- அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா
- கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை
- அலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்
- வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும்: அலன் ஸாக்கலுடன் ஷூலியன் பாக்கினி : உரையாடல் மொழியாக்கம்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)
- நகைச்சுவைத் துணுக்குகள்
- ஒரே வரி
- ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:
- சங்கம் சரணம் கச்சாமி
- நீயே உனக்கு சாட்சியாளன்!
- பால்யம்.
- குறும்பாக்கள்
- சூட்சுமம்
- கை நழுவின பகலிரவுகள்
- முன்னோடி
- செம்பருத்தி
- புரியாமல் கொஞ்சம்…
- அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு
- விடியும்!-நாவல் – (27)
- விடாது கருப்பு
- விமோசனம்
- நான் கணேசனில்லை…
- கடிதங்கள் – டிசம்பர் 18, 2003
- வாரபலன் – குறும்பட யோகம்
- விலங்குப் பலி x ஐீவகாருண்யம்
- ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல
- வாசகர்கள் கவனத்திற்கு
- தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)
- கவிதைகள்
- நிறக்குருடுகள்
- எளிதாய்
- எத்தனை காலமாய்…
- எனக்கு வேண்டும் வரம்
- நன்றி
- புரிந்ததா
- திரை அரங்கில்
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]