This entry is in the series 20100425_Issue

கலாசுரன்


—————————-

விழியோரமாய் சற்றும்
சேதமின்றி தொடர்வதுண்டு சில
சோகங்களின் அணிவகுப்பு……..!

இதழோரங்களில் சிறிது
புன்னகை அணிந்து செல்கிறேன்
பிறர் பரிதாபத்திலிருந்து தப்பிச் சென்றவாறு………!

இருந்தும் இன்னொரு நான்
வழியோரமாய் நின்றபடி வீசும்
பரிதாபத்தின் சற்று
நீளமான சாட்டை கண் வீச்சு………….!

அதன் முத்தங்கள் பரிசளித்துச் சென்ற
காயங்களை என் அழகுக் கனவுகள்
முதுகுப் பகுதியை காண்பித்தபடி திரும்பி நின்று அழுகின்றன………!

உதிரும் என் விழிநீரைப் பறித்துக்கொண்டு
ஆனந்தத்தில் என்பதுபோல்
வேகமாகச் செல்கிறது காற்று………!

கண் துடைத்து திரும்பிப் பார்க்கையில்
என் முதுகைப் பார்த்தவாறு
அழுதபடி நீ………!
——————————————

20100425_Issue

ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)