வரவிருக்கும் தண்ணீர் போர்கள் – இறுதிப்பகுதி

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

சாம் வாக்னின்


வறட்சி பெரும்பாலும் மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளாலேயே வருகிறது. மாசடோனியா நாட்டில் வந்த பெரும் வறட்சி அங்கு நடந்த உள்நாட்டுப்போரின் விளைவால் வந்தது. ஆஃப்கானிஸ்தானில் இன்றும் தொடர்கிறது வறட்சி. வெட்டுப்பூச்சிகள், வேகமான திட்டமிடப்படாத நகரமயமாதல், பாலைவனமாக்குதல், பொங்கும் மக்கள்தொகை, திடுமென வரும் பொருளாதார வளர்ச்சி, அதுவும் முக்கியமாக தண்ணீர் மிகவும் அதிகமாகத் தேவைப்படும் தொழிற்சாலைகளான மைக்ரோபுரோஸ்ஸ்ர் தொழிற்சாலைகள் இவை எல்லாம் உலகம் இதுவரை கண்ட வறட்சிகளை எல்லாம் விட மிகப்பெரிய வறட்சியை எதிர்நோக்க வைத்துள்ளன.

துருக்கி டைக்ரிஸ் ஆற்றின் மீதும், யூஃப்ரேட்ஸ் ஆற்றின்மீதும் இ24 அணைகளைக் காடிக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டம் முடிந்தால், சிரியா ஈராக் இரண்டு நாடுகளும் நீர்ப் பற்றாக்குறையில் தவிக்கும். துருக்கி இந்த அணைத் தடுப்பு போதாதென்று, இந்த இரண்டு நாடுகளுக்கும் மானவ்காத் நதியின் தண்ணீரை விற்க முன் வந்துள்ளது. ஈராக்கின் ஆறுகளி பாதி வற்றிப் போய் விட்டன. ஆனால் தண்ணீர்ப் பிரசினைகளில் மிகப் பெரும் பிரசினை இதல்ல.

இஸ்ரேல் காலீலீ கடலின் கின்னரத் பகுதியைச் சொந்தமாக்கிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இஸ்ரேலின் தண்ணீர்த் தேவையில் மூன்றில் ஒரு பகுதி இந்த நீர் இந்தப் பகுதியில் உள்ள மற்ற ஆறுகளையும் இஸ்ரேல் பயன் படுத்திக் கொள்வதால் சிரியா, லெபனான், ஸே¢ார்டான் ஆகிய நாடுகள் கலவரம் அடைந்துள்ளன. நீர்க் கட்டுப்பாடு பற்றி பலவாறாய்ப் பிரச்சாரம் செய்தாலும் இஸ்ரேலியர்கள் தண்ணீரை தாராளமாகப் பயன் படுத்துகிறார்கள். அருகில் இருக்கும் அராபிய-பாலஸ்தீனியர்களைக் காட்டிலும் தனி நபர் நுகர்வு நான்கு மடங்காகும்.

‘தி எகானமிஸ்ட் ‘ ஏடு கூறியது : ‘சிரியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி நிலவ ஒரே தடை கலீலி கடலின் தண்ணீர் ஒப்பந்தமே. சென்ற ஸ்னவரியில் பேச்சு வார்த்தைகள் முறிந்தன. காரணம்: வடகிழக்குக் கரைப் பகுதியை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற விவாதமே. இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டில் தான் இந்தப் பகுதியை வைத்திருக்கவேண்டும் என்று கோரியது. காரணம் இஸ்ரேலின் குடிதண்ணீர்த் தேவையில் 40 சதவீதம் இந்த நீர் நிலையிலிருந்தே கிடைக்கிறது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முபு வரையில் ஆரல் கடல் (ஏரி) தான் உலகத்தின் நான்காவது பெரிய நீர் நிலையாய் இருந்தது. இபோது அது வெறும் ரசாயனக் கழிவுகள் நிரம்பிய சிறு ஏரிகளாய் ஆகிவிட்டுள்ளது.

நீர் போதாமை கிளப்பும் பிரசினைகளைப் போலவே நீர்ப் பெருக்கமும் பிரசினைகளுக்குக் காரணமாய் இருக்கிறது. ஸ்ாம்பேசி நதியின் வெள்ளப் பெருக்கினால், பல நாடுகள் ஆபத்துக்குள்ளாயின. ஜிம்பாப்வே தன் கரிபா அணையைத் திறந்தபோது, மார்ச் 2000-ல் பெரு வெள்ளம் திரண்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் பல நாடுகள் – கானா முதல், மாலி வரையில் – ஒரே ஆறு உள்ள தேசங்கள். தண்ணீரைப் பொறுத்துதான் இந்த நாடுகளின் ஏற்றமும் இறக்கமும்.

சில சமயம் நதிநீர்ப்போக்கில் அழிவும் மரணமும் ஏற்படுவதுண்டு. ரோமேனியாவில் ஒரே ஒரு பெரும் ரசாயனக் கழிவு தீசா ஆறு முழுவதையும் கெடுத்தது. இந்த ஆறு யூகோஸ்லேவியா, ஹங்கேரிக்கு இடையில் ஓடுவது. இந்தக் கழிவு டானுபே நதியில் கலந்தபோது தான் மேற்கு நாடுகள் விழித்துக் கொண்டன.

ஏழைநாடுகளின் பிரசினை மட்டுமல்ல இது. ஸ்பெயின் காடலோனியா பகுதியிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை. ஃப்ரான்ஸின் ரோன் நதியை பார்சிலோனாவை நோக்கித் திருப்பலாம என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு திட்டம் இரண்டு வருடங்களாக, மழை நிரம்பப் பெய்யும்பகுதியிலிருந்து , உலர்ந்த பகுதிக்கு – ஸ்பெயினில் 60 சதவீதம் பகுதி, உலர்ந்த பகுதியே – தண்ணீரைத் திருப்பிவிடும் திட்டம் ஒன்றுக்கு எதிர்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஒகால்லாலா புதர்க் காடுகள் மழையில்லாமல் காய்ந்து இருந்த இடமே தெரியாமல் ஆகிக்கொண்டிருக்கின்றன. 2000-வரை இதன் இழப்பு 18 கோலோராடோ நதிகளுக்குச் சமம் என்று பி பி சி மதிப்பிட்டிருக்கிறது.

மெக்சிகோவைச் சுற்றியுள்ள ஏரிகள் வற்றிவிட்டன. இதனால் நீர்த் தேக்கம் இருந்த பள்ளத்தை நோக்கி நகர் சரியத் தொடங்கியுள்ளது. பாங்காக்கிலிருந்து , வெனிஸ் வரையில் பல நகரங்களில் மண் சரிவு பெரும் பிரசினையே. ‘தி எகானமிஸ்ட் ‘ ஏட்டின் படி பொலிவியாவின் கொச்சாகம்பா பள்ளத் தாக்கு முன்னால் பூத்துக் குலுங்கியது. இன்று தூசி மண்டலம் தான் மிச்சம். அதன் மக்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு நாளைக்கு ஒரு முறை ஓரிரு மணி நேரம் தான் தண்ணீர் கிடைக்கிறது. உலக வங்கியின் உதவியுடன் அருகில் மலைப் பகுதியின் தண்ணீர் வரத்திலிருந்து இங்கு தண்ணீர் கிடைக்க வழி செய்திருக்கிறார்கள்.

சிங்கப்பூர் மலேசியாவைத் தண்ணீருக்கு நம்பியிருக்கும் நிலையை நீக்க, தனியார் வசம் உப்பு நீக்கும் பணியை அளித்து, 10 சதவீதம் வருடாந்தரத் தண்ணீர்த் தேவையை தீர்க்க முயன்று கொண்டுள்ளது.

சிங்கப்பூர் இந்தோனேசியாவின் ஆசே பகுதியிலிருந்து தண்ணீரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. செப்டம்பர் 2000-ல் கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, மலேசியா தரும் தண்ணீரின் விலை இரண்டு மடங்காகி விட்டது.

நதி மூலங்களைக் கட்டுப் படுத்துவது எப்போதுமே அரசியல் நோக்கங்களுடன் தான் செய்யப் படுகிறது. மத்திய ஆசியாவில் கிர்கிஸ்தான், தாஸ்ிக்ஸ்தான் இரண்டு நாடுகளும் தம் அண்டை நாடுகளான கசாக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் மீது தண்ணீரை நிறுத்தி விடுவோம் என்று மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்கின்றனர். சில சமயம் நிறுத்தியும் விடுகின்றனர். இதனால் எரிவாயு, கரி, விவசாயப் பொருட்களை மிக மலிவு விலையில் இந்த நாடுகள் பெற வழி பிறந்தது.

இப்படியுள்ள சார்பு நிலையைத் தவிர்க்க, துர்க்மினிஸ்தான் அமு தாரியா என்ற தன் ஆற்றின் படுகைப் பகுதியிலிருந்த்து தண்ணீரை வேறு திசைக்குக் கொண்டு செல்ல 6 பிலியன் டாலர் செலவு செய்து செயற்கை ஏரி ஒன்றைத் தயார் செய்யவுள்ளது. இந்த முட்டாள்தனமான திட்டத்துடன் ஒப்பிடத்தக்கது, சீனாவின் மூன்று அகழி அணைக்கட்டு . இதன் செலவு 30 பில்லியன் டாலர் ஆகும். 180 மீட்டர் உயரத்தில் , நீர்மின்சாரத் திட்டம், மெருகிவரும் யாங்க்ட்சே நதியை அணைப் படுத்தும்.

ஸ்னவரி 2000-ல் கின்ஸ்ாசா(ஆப்பிரிக்கா)வில் இருந்த ஒரு கம்பெனி வெஸ்டர்ன் ட்ரேட் கார்ப்பரேஸ்ன் காங்கோ நதியில்ருந்து 1000-2000 கி மீ குழாய்கள் இட்டு நீரைக் கொண்டு செல்லும் திட்டம் ஒன்றைஅறிவித்தது. தண்ணீர் இதன் பின்பு விலையில்லாமல் கிடைக்கும் என்ற அறிவிப்பு இந்தத் திட்டம் இருக்கிறதா என்ற ஐயத்தைக் கிளப்பியது.

இப்படி ஏமாற்றுத் திட்டங்கள் ஒரு புறம் இருக்க தண்ணீர் உண்மையிலேயே மிக பெரும் வியாபாரம். தண்ணீர்ச் சம்மேளனம் -2002, உலக வங்கி, பல கம்பெனிகள், தன்னார்வக் குழுக்கள் இணைந்து நடததவுள்ளன. மோரோக்கொவில் இது நடைபெறும். ‘தண்ணீருக்கு விலை நிர்ணயம், முதலீடைத் திரும்பப் பெறுதல் ‘ பற்றி விவாதிக்கும் என்று மொரோக்கோவின் அரசு சொல்கிறது.

டெக்ஸ்ாஸ் மானிலத்திலிருந்து கடந்த வருடத்தின் உலர்காலத்தில் . டி. பூன் பிக்கென்ஸ் என்ற பெரும் கம்பெனி ஆள், தண்ணீர் உரிமத்தை வாங்கியிருக்கிறார். 200000 ஏக்கர்-அடி தண்ணீரை – 200 மில்லியன் டாலர் மதிப்பு – இவர் கையகப் படுத்தியுள்ளார்.

‘உலக வெப்பம் ‘ (global warming) உடன், இப்போது ‘தண்ணிர்ப் பிரசினை ‘யும் உலகின் கவனிப்புக்கு ஆளாகியுள்ளது. ஸ்ாக் நகரில் மார்ச் 2000-ல் அமைச்சர்கள் மாநாட்டில் ஏழு முக்கியமான ‘தண்ணீர்ப் பிரசினைகள் ‘ இனங் காணப் பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ‘உலக தண்ணீர்த் தேவை கணிப்பு ‘ ஒன்றும், யுனெஸ்கோவின் ‘சச்சரவிலிருந்து சமரசத்திற்கு ‘ என்ற ஒரு திட்டமும் (From Potential Conflict to Cooperation Potential) தண்ணீர்ப் பகிர்வுக்கென அரசாங்கங்களுக்கு இடையில் திட்டமிடவும் முடிவு செய்யவும் உருவாக்கப் பட்டுள்ளது.

உலக பசுஞ் சிலுவைச் சங்கம் (Green Cross International) மற்றுஸ்ம் யுனெஸ்கோ இணைந்து ‘அமைதிக்காக தண்ணீர் ‘ என்ற திட்டத்தின் கீழ் தண்ணீர் பற்றிய சச்சரவுகளைத் தீர்க்க முன் வந்துள்ளது. இஸ்ரேல், ஸே¢ார்டான், சீனா, கொலம்பியா போன்ற நாடுகளில் எழுந்துள்ள தண்ணீர்ப் பிரசினை பற்றி இது கவனம் செலுத்தும்.

பீட்டர் க்லீக் (பசிஃபிக் இன்ஸ்டிட்யூட்) தண்ணீர்ப் பிரசினைகளை இப்படிப் பகுத்தாய்வு செய்கிறார். ‘ நதிமூலங்களை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்ற பிரசினை. ராணுவம் – நதி மூலங்களையும், நதிகளையும் கைக்கொண்டு ராணுவ நடவடிக்கைக்கு சார்பாய்ப் பயன்படுத்துதல். அரசியல் – நதி மூலங்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துதல். பயங்கரவாதம் – நதி நீர் பயங்கரவாதத்திற்கு ஆயுதமாகவோ அல்லது, பாதிக்கப்பட்ட நிலையிலோ பயன் படுத்துவது. ராணுவத் தாக்குதலுக்கான குறி . வளர்ச்சிப் பிரசினைகள். ஆகியவை இவை.

மார்க் டி வில்லியர்ஸ் ‘தண்ணீர்ப் போர்கள் ‘ நூலின் ஆசிரியர். தண்ணீர்ப் பிரசினையில் இரு மாறுபட்ட சாத்தியங்களைக் குறிப்பிடுகிறார். தாமஸ் கோமர் டிகசன் கனடாவின் பாதுகாப்பு ஆய்வாளர். இவர் சொல்வது : ‘ ஒரு நாட்டின் எல்லாச் செயல்பாடுகளுக்கும் தண்ணீர் மிக அவசியம். உலகின் 40 சதவீத மக்கள் 250 நதிப் படுகைகளில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நதியை நம்பி வாழ்கின்றனர். கீழோட்டத்தில் இருக்கும் நாடுகள், மேலோட்டத்தில் இருக்கும் நாடுகளை நம்பி வாழ வேண்டியுள்ளது. கீழோட்டத்தில் உள்ள நாடுகள் ராணுவ பலம் கொண்டிராவிட்டால், அவர்களுக்கு வேண்டிய நீர் கிடைப்பது அரிது. ‘

பென்சில்வேனியா பல்கலைக் கழக்த்தின் ஃப்ரெடெரிக் ஃப்ரே மாறுபடுகிறார். ‘ தண்ணீர் நான்கு விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. நீர்நிலையின் முக்கியத்துவம், போதாமை, சரியான வினியோகம் இல்லாமை, பகிர்வுக்கு ஆட்படுவது. இதனால் மற்ற பொருட்களைக் காட்டிலும் நீர் சச்சரவிற்குக் காரணாமாகும். ஸ்னத்தொகை வளர்ச்சியும், நீரை வீணாக்கும் வளர்ச்சித் திட்டங்களும் சச்சரவை அதிகப் படுத்துகின்றன. இந்தப் போக்குகளைக் கட்டுப் படுத்தும் வழியில்லாமல் இருப்பது, பிரசினையை இன்னமும் அதிகரிக்கிறது. ‘

யார் நிலைபாடு சரியானதுஸ்

இந்தியாவில் கர்நாடகத்திற்கும் , தமிழ் நாட்டிற்கும் இடையில் காவேரி நீர் பற்றிய பிரசினை தொடர்ந்து இருக்கிறது. சஹாராவின் கொஞ்ச நஞ்ச காடுகளை கடாஃபி அழித்து வருகிறார், ஆனால் பிரசினை எதுவும் உருவாகவில்லை. ரியோ கிராண்டே நதி மெக்சிகோ வளைகுடாவை அடையவில்லை- வரலாற்றில் முதன் முறையாக . இருந்தும் மெக்சிகோ அமெரிக்கா இடையே சச்சரவு உருவாக வில்லை.

தண்ணீர் தட்டுப் பாடு பெருகிவரும்போது, சந்தைப்பொருளாதாரத்தின் தீர்வுகள் முன்வைக்கப் படலாம். தண்ணீர் பெரும் மானியம் பெறும் ஒரு பொருள் என்பதால் மிகவும் வீணாக்கப் படுகிறது. அமெரிக்காவில் தண்ணீரி உரிமங்கள் ஏற்கனவே வாங்க விற்கப் படுகின்றன.

தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது இன்னொரு தீர்வு. மாஸ்கோ நகராட்சி, தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன் படுத்துகிறது.

தண்ணீர்ப் பிரசினையச் சுமுகமாகத் தீர்க்கவும் ஒரு அமைப்பு அவசியம். சச்சரவு பெருமளவில் பரவ வேண்டியதில்லை.

***

http://www.nthposition.com/politics_water.html

Series Navigation

சாம் வாக்னின்

சாம் வாக்னின்