வகாபிய புரோகிதர்களுக்கு

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1)(வஹ்)ஹாபியின் கடிதம் வாசித்தேன்.மவ்லிதுகல் என்னும் இசைப் பாடல்கள் வெளிப்படுத்தும்
இஸ்லாமிய பண்பாடு குறித்த தனது அறியாமையை அம்பலப்படுத்தியிருந்தார். மவ்லிதுகளின் தோற்றக்காலம் பாடல்வரிகளின் உள்ளடக்கம்,இசைத்தன்மை,உணர்வுப்படிமங்கள் இவற்றில் முக்கியமானது.

அரபுவட்டாரங்களிலும் பிற பகுதிகளிலும், குறிப்பாக கேரள மற்றும் தமிழ்பகுதிகளிலும் மக்கள் சார்ந்த கூட்டிசைவடிவமாக கூட்டுணர்ச்சியை அடிநாதமாக கொண்டு மவுலிதுகள் நபிப் புகழ்ச்சியாகவும் பாடப்ப்டுகின்றன.இது இஸ்லாமியர்களின் மனவுலகை பக்குவப்படுத்துகிறது.
புருடாவிடும் வகாபிய புரோகிதர்களுக்கு இதன் உளவியல் சாராம்சம் தெரியவாய்ப்பில்லை என்பது
பரிதாபத்துக்குரியதுதான்.

2)திருக்குரான் வசனங்கள் இயல்பிலேயே இலக்கண இலக்கிய மரபுசார்ந்தும் ஒசைநயம்,ஒலிநயம்சார்ந்தும்
கவிதையாகவே செயல்படுகிறது.இதை ஹாபி மருக்கமுடியுமா.. திருக்குரானில் கவிதைக்கான எந்த
அடையாளமும் இல்லையென உருதிபடுத்த முடியுமா… பெரும் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து கிடக்கும் ஹாபியை கைதூக்க இப்னுதைமியாவும் வரப்போவதில்லை..இமாம் வகாபும் வரப் போவதில்லை.

3)கவிதையை நாம் அவருக்கு கற்றுக் கொடுக்கவில்லை, இது ஒரு கவிஞனின் சொல்லன்று என்று
திருக்குரான் சுட்டிக்காட்டுவதாக ஹாபி கூறுகிறார். எவ்வளவு அபத்தமாக இவ்வரிகளை ஹாபி புரிந்திருக்கிறார் பாருங்கள்..

இவ்வரிகளில் இடம்பெறும் அவருக்கு மற்றும் கவிஞனின் என்ற சொற்கள் நபிமுகமதுவை குறிப்பதுவாகும்
திருக்குரான் வசனங்கள் நபிமுகமதுவின் கவிதை வசனங்களல்ல என்பதைத்தான் கூறுகிறது. இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதுசரிதான். திருக்குரான் நபிமுகமதுவின் வசனங்களல்ல அல்லாஹ்வின் கவிதை வசனங்கள்.

கபாவில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்த இம்ருல்கயஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற அரபுக் கவிஞர்கள்
கவிதை வசனங்களுக்கும் திருக்குரானின் வசனங்களுக்கும் இடையே ஒப்பீட்டியல் ஆய்வுகள்கூட
ஏற்கெனவே அரபு இலக்கிய வரலாற்றில் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன என்பதும் ஒரு கூடுதலான உண்மை.

ஹாபி ரொம்பவும் தட்டையாக உப்புசப்பில்லாமல் அசட்டுத்தனமாக பதில் எழுத வேண்டும் என்பதற்காகவே எல்லாமும் தெரிந்த ஏகாம்பரமாய் பதில் எழுத நினைப்பது ஹாபிக்குரியதுதான்.

———————————————————

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்