லாங்ஸ்டன் ஹ்யூ கவிதை

This entry is part [part not set] of 4 in the series 20000228_Issue

நானும் கூட


நானும் கூடப் பாடுகிறேன் , அமெரிக்கா.


நான் உன் வெளுப்புக் குறைந்த சகோதரன்
விருந்தினர் வந்தால் சமையலறைக்கு என்னைச் சாப்பிட அனுப்பி விடுகிறார்கள்.
ஆனால் நான் சிரிப்புடன்
நிறையச் சாப்பிட்டு
பலசாலி யாகிறேன்.

நாளை ,
விருந்தினர் வரும் போது
மேஜையில் தான் இருப்பேன் நான்
யாருக்கும் தைரியம் வராது
‘சமையலறைக்குப் போய் சாப்பிடு ‘
என்று சொல்ல.
அதில்லாமல்,
என் அழகைப் பார்த்து
வெட்கித் தலை குனிவார்கள்..

ஆம், நானும் தான் அமெரிக்கா..


I, Too

I, too sing America.

I am the darker brother
They send me to eat in the kitchen
When the company comes.
But I laugh,
And eat well,
ANd grow strong.

Tomorrow I will be at the table
When company comes,
Nobody ‘ll dare
Say to me,
‘Eat in the kitchen ‘
Then.

Besides
They ‘ll see how beautiful I am
And be ashamed —

I too am America.

Translation: Gopal Rajaram

Thinnai 2000 February 28

திண்ணை

Series Navigation

நானும் கூட

நானும் கூட