முதல் காலை

This entry is part [part not set] of 18 in the series 20010610_Issue

வாஸனா


முதல் இரவுக்குப் பின் வருவது
முதல் காலை.
விடிந்து நேரமாகிவிட்டதோ என
வாாிச் சுருட்டிக்கொண்டு
யார் கண்ணிலும் படாமல்
குளியலறை புகுந்து
அவள் நீராடும்போது
அவளது உள்ளத்தில் எழும்
சங்கீத அதிர்வுகளைக்
குளியலறைச் சுவர்கள் அறியும்.
கூடந்தாண்டி வாசல் வந்து
வெளி பார்க்கும்போது
அது புத்துலகமாய்த் தோன்றும்.
கீழ் வானத்தையெல்லாம்
வண்ணம் தீட்டி
மேலெழுந்துகொண்டிருக்கும்
சூாியனை படம் பிடிக்க
ஒரு கேமரா கேட்பாள்,
கொண்டவாிடம்.
தந்தை வாங்கித் தர மறுத்த பொருள்.
முந்தானையை செருகிக் கொண்டு
சமையலறை நுழைவாள்;
அங்கே அம்மாவைக் காணாமல்
தரை அமர்ந்து
அழுவாள் சத்தமில்லாமல்.

Series Navigation

வாஸனா

வாஸனா