மார்ட்டின் எபனேசர் கவிதைகள்

This entry is part 30 of 49 in the series 19991203_Issue

கடைசி ஆட்டம்செகண்ட் ஷோ முடிந்து

ஓயவில்லை இன்னமும்

வாசல்நோக்கி விரையும் கால்களும்

தேயும் டயர்களும்

நொிசலுள் திசையறியாது

தாவுகின்ற தவளையும்


வாழ்க்கை

விவரம் புாியும்வரை –

பெற்றோர், சாமி,

பேய் பிசாசுக்கும்

புாிந்தபின் –

மதிப்பெண்ணுக்கும்,

ஒதுக்கீட்டுக்கும்,

ஓடும் வயதுக்கும், வேலை வாய்ப்புக்கும்

வாய்த்தபின் –

கிடைத்த வேஷங்களுக்கும்,

நடித்த வேஷங்களுக்கும்

ஓய்ந்தபின் –

ஆதாிக்கும் மக்களுக்கும்

வரப்போகும் சாவுக்கும்

கணக்குப் பதிவேட்டுடன்

காத்திருக்கும் கடவுளுக்கும்

பயந்து பயந்தே முடிந்துபோனது

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< திருநெல்வேலிஎனக்குள் ஒரு கனவு >>

கடைசி ஆட்டம்

கடைசி ஆட்டம்