மானுடவியல்(Anthropology) என்பது என்ன ?

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

அமெரிக்க மானுடவியலாளர்களின் சங்கத்தின் வலைப்பக்கத்திலிருந்து

உங்களைப் போலவே நானும், எப்படி மனித வாழ்க்கை இந்த பூமியில் தோன்றியது என்றும், முதல் மனித சமுதாயங்கள் என்ன என்பதையும், அவர்கள் பேசிய மொழி எத்தகையது என்பதையும், ஏன் கலாச்சாரங்கள் பலவிதங்களில் தோன்றி இறுதியில் ஆச்சரியமாக மையப் பாதைகளில் குவிந்தன என்றும், எப்படி சின்னஞ்சிறு குக்கிராமங்கள் தோன்றி பின்னர் அவை கிராமங்களாகி, சிற்றரசுகளாகி அவை அரசுகளாகவும், பேரரசுகளாகவும் ஆயின என்றும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

– மார்வின் ஹாரிஸ், நம்மைப் போன்றோர் (Our Kind) என்ற புத்தகத்தில்

அமெரிக்க மானுடவியலாளரான மார்வின் ஹாரிஸ் எழுதிய இந்த வரிகள், மானுடவியலில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தின் காரணத்தை சொல்ல முயற்சிக்கின்றன. மானுடவியல் என்பது தான் என்ன ?

மனிதர்களை படிப்பது

மானுடவியல் என்ற துறையின் ஆங்கில வார்த்தை anthropology, இரண்டு கிரேக்க வார்த்தைகள் சேர்ந்தது. anthropos ( ‘மனித ‘) and logia ( ‘படிப்பு ‘). இது மனிதக் குழுவை ஆராய்வது, கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றிய இந்த மானுட குடும்பம், அதன் வளர்ச்சி, அதன் இன்றைய வழி அனைத்தையும் ஆராய்வது. மனிதனுக்கு சம்பந்தமான எதுவும் மானுடவியலுக்கு அன்னியமாய் இருப்பது அல்ல. மனிதனை ஆராயும் அனைத்துத் துறைகளிலும், மானுடவியல் மட்டுமே மனிதனை அவன் வாழும் இடம் மற்றும் கால நேரப் பரிணாம வெளியில் மனிதனின் இருப்பை ஆய்ந்து முழுமையாக அவனை அறிய முயல்கிறது.

எளிதாகச் சொல்லிவிட்டாலும், மானுடவியலைப்பற்றி முழுக்க விவரிப்பது கடினமானது. அதன் ஆய்வுக் களம் வினோத வகையறாவிலிருந்து (உதாரணம்: ஆஸ்திரேலிய பழங்குடியினரின் நட்சத்திரக் கதைகள்), மிகவும் பக்கத்திலிருக்கும் ஒன்றிலிருந்து (மனிதக்காலின் அமைப்பு), மிகவும் பரந்த விஷயத்திலிருந்து (மனித மொழியின் தோற்றமும் பரிணாமமும்), மிகவும் சிறிய விஷயம் வரை (ஆப்ஸிடியன் கல் அம்புகளின் மீது இருக்கும் தேய்மானம்) வரை அனைத்தும் இதில் பேசப்படுகிறது. மானுடவியலாளர்கள் தென்னமெரிக்க மாயா பழங்குடியினரின் சித்திர எழுத்துக்களை ஆராய்வதிலிருந்து, ஆப்பிரிக்க பிக்மி பழங்குடியினரின் இசையை ஆராய்வதிலிருந்து, அமெரிக்க கார் கம்பெனிகள் எவ்வாறு தொழிலாளர்களை நடத்துகின்றன, அங்கு எந்தவிதமான வேலைக் கலாச்சாரம் இருக்கிறது என்று ஆராய்வது வரை சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பரந்து பட்ட விஷயங்களை ஆராய்வதற்கு ஒரு பொது குறிக்கோள் இருக்கிறது. அது நாம் யார் என்று நம்மை நாமே அறிவது. எப்படி இந்த நிலைக்கு வந்தோம் என்று அறிவதும், இனி எங்கு போகப்போகிறோம் என்று யோசிப்பதும்.

நான் ஒரு மனிதன், மனிதனுக்குச் சம்பந்தமான எது பற்றியும் நான் அக்கறை கொண்டே ஆக வேண்டும் – டெரன்ஸ், ‘தன்னைத்தானே வருத்துபவர் ‘ என்ற நூலின் ஆசிரியர்

அறிந்து கொள்ள ஆர்வம். நாம் எல்லோரும் ஒருவகையில் மானுடவியலாளர்கள்தான். ஏனெனில் நம் அனைவருக்கும் இருக்கும் இந்த ஆர்வம் ஒரு பொது மனித குணம். நாம் நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள, உலகெங்கும் இருக்கும் மக்களைப் பற்றி இறந்து போன வரலாற்றின் மனிதர்களைப் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறோம்.

நாம் மானுடவியல் சம்பந்தமான கேள்விகளை அடிக்கடி கேட்கிறோம்

எல்லா மனித சமூகங்களுக்கும் திருமண வழக்கங்கள் இருக்கின்றனவா ?

மனிதர்கள் ஒரு வகை உயிரினம் என்று பார்த்தால், மனிதர்கள் அடிப்படையிலேயே வன்முறையானவர்களா, அல்லது அமைதி விரும்புபவர்களா ?

ஆரம்ப கால மனிதர்களுக்கு வெள்ளைத் தோல் இருந்ததா, அல்லது கருப்புத் தோல் இருந்ததா ?

எப்போது மனிதர்கள் முதன்முதலாக ஒரு மொழி என்று பேசினார்கள் ?

குரங்குகளுக்கும், சிம்பன்ஸிகளுக்கும், மனிதர்களுக்கும் என்ன உறவு ?

மனிதர்களின் மூளை இன்னும் பரிணமித்துக்கொண்டிருக்கிறார்களா ?

இவை எல்லாம் பள்ளிக்கூட மைதானத்தில், அலுவலகங்களில், தெருமுனையில் இருக்கும் காப்பிக்கடையில் நாம் பேசும் பேச்சுக்கள். இவை அனைத்தும் மானுடவியல் சம்பந்தமானவையே. நாம் எல்லோரும் அமெச்சூர் மானுடவியலாளர் எனில் , தொழில்முறை மானுடவியலாளர்கள் என்ன படிக்கிறார்கள், என்ன சிந்திக்கிறார்கள் ? எப்படி மானுடவியல் என்ற அறிவியல், நமது சாதாரண அபிப்பிராயப் பகிர்தலிலிருந்து எந்த விதத்தில் மாறுபட்டது ?

ஒப்பிடும் முறை:(Comparative Method):

மானுடவியல் என்ற இந்த அறிவியல், எளிமையான ஆனால் மிகச்சக்திவாய்ந்த ஆயுதத்துடன் களத்தில் இறங்குகிறது. நமது ஒரு தனி குணமும் நடத்தையும், நமது அனைத்துக் குணங்களின், நடத்தைகளின் பின்னணியில் பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் அது. ஒப்பிடும் முறை என்னும் இந்த முறை பலதரப்பட்ட மக்களை அவர்களது குணங்களின் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டு, அதன் பின்னர், மனிதக்குலம் அனைத்துக்குமான ஒரு பின்னணியில் முடிவுகளைத் தர முயற்சிக்கிறது.

ஒரு நடத்தையின் எந்த விவரமும், மனிதக்குலத்தின் நடத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் புரிந்து கொள்ள எளிதானது.

மானுடவியல் மனித சமூகங்களின் நடத்தைகளுக்குக் காரணமான அடிப்படை கொள்கைகளை வெளிக்கொணர முயற்சிக்கிறது. மனிதகுலத்து வேற்றுமைகள், உடல் பருமம், அளவு, பழக்க வழக்கங்கள், உடை, பேச்சு, மொழி, மதம், உலகப்பார்வை அனைத்தும், ஒரு சமூகத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் அறிந்து கொள்ள உதவும் கருவி, பின்னணி. உதாரணமாக நாம் சிவப்பு நிறப் பின்னணியில் மட்டுமே வாழ்நாள் முழுதும் கழிக்க நேர்ந்தால், சிவப்பு நிறம் பற்றிய பிரக்ஞையோ அல்லது, நிறம் பற்றிய உணர்வோ இருக்காது. வானவில்லின் மற்ற நிறங்களூடன் சேர்ந்து உணர்ப் படும்போது தான் வண்ணம் என்பதே அர்த்தம் பெறுகிறது.

மானுடவியலாளர்களான நாமே, ஏராளமான விஷயங்களை முதன்முதலாக வற்புறுத்திச் சொன்னோம். உலகம் பக்தி கொண்டவர்கள், மூடநம்பிக்கை கொண்டவர்கள் என்று இரண்டு பிரிவாக பிரிந்து இல்லை. காடுகளிலும், பாலைவனங்களிலும், ஓவியங்களும் சிற்பங்களும் இருக்கின்றன. அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்ட அரசும், எழுதப்பட்ட அரசியல் சாசனமும் இல்லாமலேயே, அரசியல் நியமங்கள் இருக்க முடியும். மனித காரணார்த்தம் கிரீஸில் தோற்றுவிக்கப்படவில்லை. ஒழுக்கத்தின் பரிணாமம் இங்கிலாந்தில் தான் முழுமை பெற்றது என்பது கிடையாது. இன்னும் முக்கியமாக, நாம் மற்றவர்களைப் பார்க்க நாம் உருவாக்கிய கண்ணாடி கொண்டு பார்ப்பது போலவே மற்றவர்களும் அவர்கள் உருவாக்கிய கண்ணாடி மூலம் நம்மைப் பார்க்கிறார்கள் என்றும் மானுடவியலாளர்களான நாமே முதன்முதலில் சொன்னோம்.

-கிளிஃபோர்ட் க்ரீட்ஸ்

பரிணாமப் பார்வை

ஒரு துறை என்று பார்த்தால், மானுடவியல் வெளிப்படையான பரிணாமப் பார்வையை மனித நடத்தையை ஆய்வதற்குப் பயன் படுத்துகிறது.

மானுடவியலின் நான்கு முக்கியமான உப துறைகளிலும் (சமூகக்கலாச்சார மானுடவியல், உயிரியல் மானுடவியல், தொல்பொருள் மானுடவியல், மொழியியல் மானுடவியல்) மனிதன் பெரும் நீண்ட பரிணாமப் பாதையில் வந்துகொண்டிருக்கிறான் என்று ஒப்புக்கொண்டு, அதை ஆய்வதன் மூலமே மனிதனாக இருப்பது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள இயலும் என்றும் ஒப்புக்கொள்கிறது.

கலாச்சார மானுடவியல் Cultural Anthropology

மானுடவியலின் பெரிய துறையான கலாச்சார மானுடவியல், ஒப்பபீடு முறையுடன் , பரிணாமப் பார்வையில் மனித கலாச்சாரத்தை அணுகுகிறது.

கலாச்சாரம் என்பது, ஒரு சமூகத்தின் அனைத்து அறிவையும், மதிப்பீடுகளையும், பழங்காலம் முதல் தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய வழிகள் மூலம் உலகத்தைப் பார்ப்பதையும், ஒவ்வொரு தலைமுறையும் முந்திய தலைமுறையிடமிருந்து பெற்று அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் இந்த — ஜெனடிக் சம்பந்தமில்லாத — விஷயங்கள் வார்த்தைகள் மூலமாகவும், கருத்துக்கள் மூலமாகவும், குறியீடுகள் மூலமாகவும் செல்லுகின்ற விஷயங்களே.

கலாச்சார மானுடவியலாளர்கள் மனிதர்களை ஆராய்வதற்கு பலவிதங்களில் முயல்கிறார்கள். அதில் முக்கியமானது இனக்குழுவின் பழக்க வழக்கங்கள் மீதான ஆய்வு (ethnographic method) என்பது. இது அந்த மனிதக்குழுவைச் சேர்ந்தவர்களை ஆராய்வது, அவர்களை பேட்டி காண்பது, அவர்களது சொந்த மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களது மொழியில் உரையாடுவது போன்றது. Ethnographers என்ற இவர்கள், ஓர் இடத்தில் பார்த்ததை மற்ற இடங்களில் பார்த்ததோடு, மற்ற சமூகங்களோடு ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள். முன்பு மானுடவியலாளர்கள் ஒரு சமூகத்தின் முழு வாழ்வு முறையைப் பற்றி ஆராய்ந்து முழுமையாக வெளிக்கொணர முயற்சித்தார்கள். இன்று குறிப்பிட்ட துறையை எடுத்துக்கொண்டு (அதாவது அந்த சமூகத்தின் கலாச்சாரத்தில், பொருளாதாரம், அரசியல், மதம், கலை போன்றவற்றை) அதில் ஆழமான ஆய்வு செய்கிறார்கள்

கலாச்சார மானுடவியலாளர்கள் இன்னொரு சமூகத்தின் உள்ளார்ந்த தர்க்கத்தை ஆராய முற்படுகிறார்கள். அந்தச் சமூகத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு வினோதமானதாகவும், பொருளற்றதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கும் சில விஷயங்களை (முகத்தில் வர்ணம் பூசுவது, உடலிலும் முகத்திலும் வடுக்களை ஏற்படுத்திக்கொள்வது போன்றவை) வெளியே இருப்பவர்கள் புரிந்து கொள்ள இது உதவுகிறது.

ஒப்பிடும் முறை மூலம், ஒரு மானுடவியலாளர் தன்னுடைய சமூகத்தின் தனது கலாச்சார அறிவின் மூலம் மற்ற கலாச்சாரத்தை, மற்ற சமூகத்தை எடை போடுவதைத் தவிர்க்க முயல்கிறார்.

இதே முறையினால், தன்னுடைய கலாச்சாரத்தின் உள்ளே இருக்கும் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதும் அந்த மானுடவியலாளருக்கு இயலுகிறது.

இதே அடிப்படைக் கோட்பாடை திருப்பி நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களைப் புதிய கண்ணோட்டத்தில், ஒரு பிரேசில் பழங்குடியினரின் பழக்க வழக்கங்களை பார்க்கும் ஒரு மானுடவியலாளருக்கு இருக்கும் அதே அதிசயத்தோடு, அதே ஆர்வத்தோடு, அதே அனுபவத்தோடு நம்மைச் சுற்றி இருக்கும் கலாச்சாரக் கூறுகளையும் பார்க்கலாம். ஒரு மானுடவியலாளர் என்றால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு ஆயிரக்கணக்கான மைல் தொலைவில், கூரை வீடுகளில், மரப்பாச்சி பொம்மைகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் என்று பலர் கருதினாலும், இன்று பல மானுடவியலாளர்கள் தங்கள் சமூகத்தை, தங்கள் கலாச்சாரத்தையே மானுடவியல் தத்துவங்கள் உதவியோடு ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மொழியியல் மானுடவியல் Linguistic Anthropology

பல மானுடவியலாளர்களுக்கு ஒரு விஷயம் பெரும் ஆர்வம் ஒரு அற்புதமான விஷயத்தின் மீதானது. அது மனித குலத்தின் மொழி.

ஒலிகளை ஒழுங்கு படுத்தி ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த ஒலிக்கூட்டுகளுக்குப் பொதுவாக பொருள்கொடுத்து, உருவாக்கிய அமைப்பு, மனித குலத்தை, ஒரு தனி மனிதனின் ஞாபக சக்தி என்ற எல்லையைத் தாண்ட உதவியிருக்கிறது. பேச்சு மொழி என்பது, (DNA) டி என் ஏவுக்கு அடுத்த படி, ஒரு தலைமுறை தாண்டி அடுத்த தலைமுறைக்குச் செய்தியைக் கொண்டுசெல்ல உருவான மிகச்சிறந்த சாதனம். மொழியின் மீதே கலாச்சாரம் தங்கியிருக்கிறது. அந்த மொழிக்குள்தான் ஒரு மனிதக் குடும்பத்தின் அறிவு தங்கியிருக்கிறது.

‘நீ எனக்கு கட்டளையிட்டது போலவே, நான், சிலந்தி பெண், இந்த முதல் மனிதர்களை உருவாக்கியிருக்கிறேன். இவர்கள் முழுவதுமாகவும், உறுதியாகவும் உருவாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு நடக்கும் திறன் இருக்கிறது. ஆனால் அவர்களால் பேச முடியாது. இதுவே அவர்களிடம் இருக்கும் குறை. ஆகவே நான் அவர்களுக்கு பேச்சு கொடுக்கும்படி உன்னைக் கேட்கிறேன் ‘

ஆகவே, சோடுக்னாங் அவர்களுக்கு பேச்சை கொடுத்தாள். ஒவ்வொரு வர்ணத்துக்கும் ஒரு மொழி. அவரவர்களின் வித்தியாசத்துக்கு தகுந்தது போல. அவர்களுக்கு ஞானமும், மக்கள்பெருக்கத்துக்கு சக்தியும் கொடுத்தாள்.

-ஹோபி(அமெரிக்க பழங்குடியினர்)களின் உலகத்தின் தோற்றம் பற்றிய புராணம்.

மானுடவியலின் பாரம்பரிய உபதுறைகளில் முக்கியமானதான மொழியியல் மானுடவியலாளர்கள், வரலாற்றையும், பரிணாமத்தையும், மனித மொழியின் உள்கட்டுமானத்தையும் ஆராய்கிறார்கள். பலதரப்பட்ட பழங்காலத்திய சமூகங்களுக்கு இடையே இருந்த தொடர்புகள், வினைச்சொற்கள் எப்படி எந்தப் பொருளில் உபயோகப்படுத்தப்படுகின்றன, எந்தக் காரணம் கொண்டு இந்தச் செய்தித் தொடர்பு நடக்கிறது போன்றவற்றை ஆராய்கிறார்கள். மொழியியல் மானுடவியலாளர்கள் மொழியின் அடிப்படை குணத்தையே ஆராய்கிறார்கள். அதன் உள்ளுரை சொற்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதும், அந்தச் சொற்கள் எவ்வாறு மனிதர்களால் தொடர்பு கொள்ளப்படுவதும், மனிதமூளைக்கும் சொற்களுக்கும் உள்ள தொடர்பையும், நடத்தைக்கும் இவைகளுக்கும் உள்ள தொடர்பையும் ஆராய்கிறார்கள்.

மொழியே நம் இனத்தின் மிக முக்கியமான அடையாளம். மொழியின் மீதே நமது கலாச்சாரம் சார்ந்திருக்கிறது.

மொழியியல் மானுடவியலாளர்கள் மட்டுமே கலாச்சாரத்தின் வரலாற்று ரீதியான பரிமாணங்களை ஆராய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. மானுடவியலாளர்கள் இன்றைய சமூகத்தை ஆராய, இன்றைய சமூகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன் என்ன வந்தது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். வரலாறு எழுதி வைக்கப்படாத ஆயிரக்கணக்கான பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எப்படி சமூகம் இருந்தது என்பதை எப்படி அறிந்து கொள்வது ?

தொல்பொருள் துறை Archaeology

அதிர்ஷ்ட வசமாக, மனிதனின் வரலாறு எழுத்துக்களிலும் புத்தகங்களிலும் மட்டும் எழுதி வைக்கப்படவில்லை. அது குகை ஓவியங்களிலும், சித்திர எழுத்துக்களிலும், தூக்கியெறியப்பட்ட கல்லுளிகளிலும், மண்பாண்டங்களிலும், மதச் சிலைகளிலும், உதறப்பட்ட கூடைகளிலும், இன்னும், பழங்காலம் தூக்கியெறிந்த சின்னச்சின்ன தூள்களிலும் துகடுகளிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. தொல்பொருள் துறை சார்ந்த மானுடவியலாளர்கள், இந்த ஆச்சரியமான சின்னச்சின்ன விஷயங்களிலிருந்து, பழங்காலச் சமூகம் எப்படி இருந்தது அதன் கலாச்சாரம் என்ன என்பதை மீண்டும் சித்தரிக்க முயல்கிறார்கள்.

தொல்பொருள்துறை சார்ந்த மானுடவியலாளர்கள் முன்பு கிரீஸ், ரோம், எகிப்து போன்ற பழங்கால புகழ்பெற்ற சமூகங்களையே ஆராய்ந்து வந்தார்கள். இன்று அவர்கள் முன்னும் பின்னும் அதை நீட்டி, மூன்று கோடி வருடங்களுக்கு முன்னர் இருந்த ஆரம்பகால மனிதனின் எலும்பு முதல், 19ஆம் நூற்றாண்டு அமெரிக்காவின் வாழ்வு முறையையும் அதன் சமூகங்களையும் ஆராய்வதுவரை செய்கிறார்கள்.

தொல்பொருள் துறையினர், கலாச்சார மூலதன மேலாண்மையிலும், மத்திய மாநில அரசுகளுக்கு தேசத்தின் கட்டட, வரலாற்று, கலாச்சார பாரம்பரியத்தை காப்பாற்ற உதவுவது போன்றவற்றிலும் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்கள்.

உயிரியல் மானுடவியல் Biological Anthropology

ஆனால் மனித வரலாறு பழங்காலத்தில் இன்னும் வேறுவிதமான முறையில் வளர்ந்துவந்தது. அது குறைந்தது 40 லட்சம் வருடங்களுக்கு முன், குரங்கு மாதிரியான ஒரு உயிரிகளாக கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிறு குழுவாகப் பிரிந்துவந்து பின்னர் தனியான பரிணாமப்பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஆக, மானுடவியலாளனின் ஒப்பிடும் முறையும் கண்ணோட்டமும், இன்னும் பல வரலாற்றுக்கு முந்தைய மனித சமூகங்களின் பழக்க வழக்கங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் மனித சமூகத்தைப் புரிந்து கொள்ள, வாழும் இயற்கையில் மனித சமூகத்தின் இடம் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிரியல் மானுடவியல், மனிதசமூகத்தை ஒரு (genus) பேரினமாகவும் (species) இனமாகவும் பார்த்து, அதன் பரிணாமப் பாதையை வரைந்து, அதற்குள் இருக்கும் உயிரியல் வித்தியாசங்களைப் பற்றியும் ஆராய வேண்டும்.

ஆக, இந்த கலாச்சார மானுடவியல், மொழியியல் மானுடவியல், தொல்பொருள்துறை, உயிரியல் மானுடவியல் என்ற நான்கு உபதுறைகளும் மானுடவியலை முழுமையாக்குகின்றன.

மானுடவியல் முக்கியமான ஆனால் கடினமான ஒரு கேள்வியைக் கேட்கிறது. மனிதனாக இருப்பது என்பதன் பொருள் என்ன ? இந்த கேள்விக்கு எக்காலத்திலும் ஒரு பதில் எழுதிவிட இயலாது. மானுடவியல் ஆய்வு தொடர்ந்து இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கும்.

மானுடவியல் அறிஞரான லோரன் ஐஸ்லி சொன்ன ‘ஆழமான பயணம் ‘ என்ற இந்த மானுடவியல், தொடர்ந்து உலகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்களை ஆகர்ஷித்துக்கொண்டிருக்கிறது. அவர்களது கண்டுபிடிப்புகள் நம்மைப்பற்றிய நமது அறிவை இன்னும் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கும்.

அப்புறம் உன்னை நீ அறிவாயாக..(Know then thyself . . . )

அலெக்ஸாண்டர் போப்

**

Series Navigation