மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

அறிவிப்பு


மறைந்த எழுத்தாளர் அசுரனின்
சுற்றுச்சூழல் ஆர்வலரும், புதிய தென்றல் இதழ் இணை ஆசிரியரும், மனித உரிமைப் போராளியுமான தி. ஆனந்தராம்குமார் (எ) அசுரன் அவர்கள் அண்மையில் அவரது 38ஆம் வயதில் மறைந்தது அறிந்திருப்பீர்கள். தன்னுடைய இறுதி மூச்சு வரை மக்களுடைய அடிப்படைப் பிரச்னைகளை முன்வைத்து எழுதியும், போராடியும் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில், நாகர்கோவில் ராஜேந்திரா சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். உடல் நோயால் அவதியுற்ற நிலையிலும் திண்ணை இணைய இதழ், புதிய தென்றல் இதழ்களில் எழுதி வந்தார். மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுதே புதிய தென்றல் இதழில் இணையாசிரியராக மும்முரமாகப் பணியாற்றினார். பின்பு நோய் முற்றிய நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திண்டுக்கல்லில் இருந்து வெளியாகும் “புதிய கல்வி” என்ற சுற்றுச்சூழல் இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய அசுரனுக்குச் சில ஆண்டுகள் முன்புதான் திருமணம் நடந்தது.

அசுரனின் தொண்டு பற்றிய செய்திகளைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.
http://makkal-sattam.blogspot.com/2007/12/blog-post_22.html
http://madippakkam.blogspot.com/2007/12/blog-post_6603.html
http://athirai.blogspot.com/2007/12/blog-post_1945.html

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20712277&format=print

அசுரனின் சில எழுத்துக்களைப் பின்வரும் சுட்டிகளில் படிக்கலாம்.
http://www.thinnai.com/?module=archives&op=searchauth&search_string=+அசுரன்
http://www.keetru.com/puthiyathendral/index.php

அசுரனின் தன்னலமற்ற பணிகளை நினைவுகூர்ந்து அவரது வாழ்க்கையைப் போற்றும் வண்ணம் அவரது சிந்தனைகளையும், சிறந்த எழுத்துக்களையும் தொகுத்து நூல் வடிவில் கொண்டு வர விரும்புகிறோம். அசுரனின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட எத்தனையோ வாச்கர்களும், களப்பணியாளர்களும் அந்த நூலை வாங்கிக் கவுரவிப்பார்கள் என்ற முழுநம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்நூல் விற்பனையில் வரும் தொகையனைத்தையும், அசுரனது இளம் மகளது எதிர்காலக் கல்விக்காக முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்துக்கு பொருளுதவியளிக்க விரும்பும் நல்ல உள்ளங்கள் பின்வருவோரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். சிறு உதவிகள் கூட பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப் படும்.

இந்தியா:
எஸ். பி. உதயக்குமார்
தொலைபேசி: 91-4652-240657
drspudayakumar@yahoo.com

அமெரிக்கா:

சொ. சங்கரபாண்டி
தொலைபேசி: (443) 854 -0181
sankarfax@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு