மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

செல்வன்மரணதண்டனைக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு பல (தீவிரவாதிகளின்) மனித உரிமை, மற்றும் இடதுசாரி குழுக்கள் வலம் வருகின்றன. பொது அரங்கில் இவர்கள் வைக்கும் ஒப்பாரியின் டெசிபல்கள் மிக அதிகமாக இருக்கும். மரணதண்டனையை எதிர்க்க இவர்கள் பல்வேறு (விதண்டா) வாதங்களை முன்வைப்பார்கள். அதில் முக்கியமான வாதம் மரணதண்டனையால் குற்றம் குறைவதில்லை என்பதுதான்.

இப்போது அந்த வாதத்துக்கு ஆப்பு விழுந்திருக்கிறது. மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் திரு திரு என்று முழிக்கிறார்கள்.

அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா?

மரணதண்டனையால் குற்றங்கள் குறைகிறதா என்ற கேள்வியை ஆராய்ந்த பல விஞ்ஞான ஆய்வுகள் “மரணதண்டனையால் குற்றங்கள் குறைகிறது” என்று சம்மட்டி அடியாக தெரிவித்துள்ளன. அதுவும் ஒன்றல்ல , இரண்டல்ல மொத்தம் ஆறு வருடங்களாக மேற் கொள்ளப்பட்ட 12 அறிவியல் ஆய்வுகளும் ஒருமுகமாக “மரணதண்டனையால் குற்றங்கள் உறுதியாக குறைகின்றன” என்று தெரிவித்துள்ளன.

அதுவும் எந்த விகிதத்தில் தெரியுமா?

கொலராடோ பல்கலைகழகத்தால் செய்யப்பட்ட ஒரு ஆய்வு “ஒவ்வொரு மரணதண்டனை தீர்ப்பும் ஐந்து கொலைகளை தடுத்து நிறுத்துகிறது. ஒவ்வொரு நிறைவேற்றப்படும் மரணதண்டனையும் மேலும் ஐந்து கொலைகளை தடுத்து நிறுத்துகிறது” என்று உறுதிபட தெரிவிக்கிறது.

இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால் இந்த ஆய்வை நடத்திய நசி மோகான் எனும் விஞ்ஞானி மரணதண்டனையை தீவிரமாக எதிர்ப்பவர். தனது ஆய்வு முடிவை பற்றி அவர் சொல்வதாவது

“விஞ்ஞானத்தின் முடிவு தீர்க்கமாக வெளிப்பட்டுவிட்டது. மரணதண்டனை கொலைகளை தடுக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் பொய்யாக இருக்கவேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் உண்மை வேறுவிதமாக இருக்கிறது. நான் மரணதண்டனை எதிர்ப்பாளன் தான். ஆனால் ஆய்வு முடிவுகள் மரண தண்டனை கொலைகளை தடுக்கிறது என உறுதியாக காட்டுகிறது. நான் என்ன செய்ய முடியும்? ஆய்வு முடிவுகளை மறைக்கவா முடியும்?”

எம்ராய் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று ஒவ்வொரு மரனதண்டனையும் 18 கொலைகளை தடுக்கிறது என தெரிவிக்கிறது.மற்ற சில ஆய்வுகள் 3, 5, 14 என்ற எண்ணிக்கையை அளிக்கின்றன.

ஹூஸ்டன் பல்கலைகழக ஆய்வின்படி இல்லினாய் மாநிலத்தில் மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட்டது சுமார் 150 கொலைகளுக்கு தூண்டுகோலாக அமைந்தது என தெரிவிக்கிறது.அந்த தடை மட்டும் இல்லாதிருந்தால் 150 அப்பாவிகளின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாமாம்.

மரண தண்டனயை விரைவாக நிறைவேற்றுவது மேலும் அதிக உயிர்களை காக்கிறதாம். மரண தண்டனை கைதிக்கு, மரண தண்டனை விதிப்பதை 2.75 வருடங்கள் விரைவுபடுத்தினால் அது மேலும் ஒரு உயிர் பலியாவதை தடுக்கிறதாம்.

2005ல் அமெரிக்காவில் 16000 கொலைகளும் 60 மரனதண்டனைகளும் நிறைவேற்றப்பட்டனவாம்.

ஆக இதன் மூலம் தெரியவருவது

மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் உண்மையில் மேலும் 18 கொலைகள் நடக்க காரணமாகிறார்கள்.

மரணதண்டனையை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் உண்மையில் 18 கொலைகளை தடுக்கிறார்கள்.

கொலைகளையும், குற்றங்களையும் தடுக்க மரணதண்டனை வேண்டும். அந்த வழக்கை விரைந்து நடத்தி, அந்த செய்தியை வெளியுலகுக்கு தெரிவிப்பது உண்மையில் மேலும் பல குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும்.பல அப்பாவிகள் பிழைப்பார்கள்.

மரண தண்டனையை எதிர்க்கும் ஒவ்வொருவரும் 18 மரணங்களுக்கு காரணமாகிறார்.

கொலைகாரனை தூக்கில் போடுகிறோமோ இல்லையோ, 18 அப்பாவிகளின் கொலைகளுக்கு காரணமாக இருக்கும் இவர்களைத்தான் முதலில் தூக்கில் போடவேண்டும்.

http://www.holyox.tk
http://groups.google.com/group/muththamiz

Series Navigation

செல்வன்

செல்வன்