மனிதன்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

செய்டில்ஹாமோ மோட்சாபி


ஏறத்தாழ மறந்துவிட்ட நண்பன்
நகரத்திற்கு சமீபத்தில் வந்திருந்தான்
அவன் உள்ளே வரும்போது
மழை ஆரம்பித்தது என்பதை கவனித்தேன்

எளிய மனிதனாக அவனை அறிந்திருந்தேன்
வளரும்போது நாங்கள் எல்லோரும்
டாக்டர்களாக, எஞ்ஜினீயர்களாக ஆசிரியர்களாக
ஆக வேண்டுமென விரும்பியிருந்தோம்
அப்போதுதான் ரத்தம் கிராமத்திலிருந்து வெளியேறும்

என்னுடைய நண்பன் போதையற்ற கனவுகளை கொண்டிருந்தான்
வீட்டுக்கு பின்புறத்தில் நீல நிறை பசை ஒன்றை இறையிடம் கேட்டிருந்தான்
எல்லா ஏழைகளும் அவனிடத்தில் கண்ணீரை அனுப்ப வேண்டுமென்று கேட்டான்
அப்போதுதான் சூரியனைப் போல அடக்கத்துடன் இருக்கமுடியுமென்றான்
அப்போதுதான் நட்சத்திரங்களிடமிருந்து சிவப்பு மெழுகு அவன் மீது வழியுமென்றான்

அவனை நான் இன்று நினைவு கூர்ந்தேன்
வெட்கப்படும் தேவதையின் தேஜஸைத்தான்
நான் ஞாபகப்படுத்திக்கொள்ள முடிந்தது

அவனது கனவுகளைப்பற்றி
அவன் எங்களிடம் சொன்னான்
அவனது இரவுகளில் தூக்கத்தில்
முழு காடுகளும் அவனை ஆக்கிரமிப்பதாய்..
அவனது கனவுகளுக்கு அங்கே
நிற்கும் இடம்தான் கிடைக்கிறது என்று..

Seitlhamo Motsapi

Series Navigation