பைரவர்களின் ராஜ்ஜியம்!

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

எஸ். அர்ஷியா


“பாதுகாப்பும் உற்றத் தோழனுமாக இருந்துவந்த நாய்களின் உணவு முறை, இப்போது மாறிவிட்டது. அவை இத்தனை நாளும் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த, தங்கள் மூதாதையர் ஓநாய்களின் வெறித்தனத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளன. உலகம் முழுவதும் நாளொன்றுக்கு நாற்பதாயிரம்பேர் நாய்க்கடிக்கு உயி¡¢ழக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது!”

நாய் வீட்டைக் காக்கும். அது, மனிதர்களுக்கு உற்றத்தோழன் என்று பள்ளிக்கூடப் புத்தகத்தை எழுத்துக்கூட்டி வாசிக்குமுன்பே, ‘டேய்.. நாயோட விளையாடாதே.. கடிச்சு வெச்சுரும்!’ என்று வீட்டாரால் அறிவுறுத்தப்பட்டது தான், என் மனதில் ஆழமாய்ப் பதிந்திருக்கிறது. ஆனாலும் எனக்கு நாய் களை ரொம்பவே பிடிக்கும்!

என் நண்பனின் தாத்தாவுக்கு பொ¢ய தோப்பு இருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஓணான் பிடிக்கவும் மாங்காய் அடிக்கவும் அங்கே போவதுண்டு. அங்கே ஒருநாய். அவர்கள் வளர்க்கவில்லையென்றாலும் அந்தத் தோப்புக்குள் இருந்து வந்தது. தோப்பின் நீளஅகலம் அதற்கு அத்துப்படி. அதுவாகவே ரவுண்டஸ் போய்வரும். புது ஆள் நுழைந்துவிட முடியாது. இரவு நேரத்தில் தாத்தா பாதுகாப்புக்குச் சென்று வரும்போது, அவர் விரட்டிவிட்டாலும் கூடவே இருக்கும். இருட்டில் வரும் பாம்பு மற்றும் வேறு மிருகங்களை முன்கூட்டியே கண்டறிந்து, குரைத்துக் காட்டிக் கொடுத்துவிடும். அப்படி அது காட்டிக் கொடுத்த பாம்புகள் ஏராளம். நாங்கள் ஓணான் பிடிக்கப் போகும்போதும் அது கூடவே வரும். ஓணான் பிடிக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது என்று அதற்கு தொ¢ந்தது போல, மூச்சுக்காட்டாமல் அமைதியாக நடந்து கொள்ளும். அதற்குப் பெயர் மணி!

எங்கள் பக்கத்து வீட்டிலும் ஒருநாய் உண்டு. நாங்கள் குடிவந்த முதல்நாள் பார்த்தபோது எப்படியிருந்ததோ, அப்படியே இன்றும் இருக்கிறது. மார்க் கண்டேய நாய். முக்கால் அடிக்கு மேல், அது வளரவே இல்லை. ஆனால், இரண்டடிக்கு அகன்று, வளமையாக இருந்தது. அதற்குப் படுக்கை, மனிதர்களுடையது தான். வாரத்திற்கு மூன்று நாள், ஷாம்புப் போட்டுக் குளியல். தினமும் பால்சோறு. எலும்பு சூப். நொறுக்குத் தீனியாக பிடிகி¡¢. கடித்து மகிழ பிளாஸ்டிக் எலும்பு. காலையிலும் மாலையிலும் வாக்கிங். வாழ்க்கை தான்!

அந்த வீட்டுக்காரம்மாள் வேலைகளெல்லாம் ஒழிந்து ஹாயாக இருந்தால், வாசல் படிக்கட்டில் வைத்து, அதைக் கொஞ்சும். அந்த அம்மாள் நல்ல சிவப் பாகவும் கொஞ்சம் அழகாகவும் இருப்பதால், அந்தநாய்மேல் எனக்குப் பொறாமைகூட வந்தது உண்டு. போதாக்குறைக்கு, கல்லூ¡¢ படிக்கும் அந்த வீட்டுப் பெண்ணும் நாயை மடியில் தூக்கிவைத்துக் கொஞ்சும். குழந்தைகளின் சேனலில் வரும் ஒருபாத்திரத்தின் பெயர் தான், அதற்கு வைத்திருந்தார்கள். டப்பி (TUFFY)அதிர்ஷ்டக்கார நாய்!

எனக்கும் ஒருநாய் வளர்க்க வேண்டும் என்று அவ்வப்போது ஆசை முளைவிடும். அதை நானும் என்மகளும் வீட்டில் முன்மொழியும்போது, “இப்ப இருக்குற ரெண்டு நாய்களைப் பாத்துக்கவே முடியலை. இதுல இன்னொரு நாய் வேறயா?” என்று குரைப்புச் சத்தம் கேட்கும். முன்மொழிவு, கல்லடிப் பட்ட நாய்போல வாலைச் சுருட்டிக் கொள்ளும்!

திமுக தலைவர் மு. கருணாநிதியைப் பற்றிய பிரத்தியேகப் பேட்டிகள் வரும்போதெல்லாம் அவர் வீட்டிலிருக்கும் படத்தில், அவர்கூட கறுப்புநிறத்தில் பொ¢ய வாழைக்காய் போல ஒருநாயும் இருக்கும். சில படங்களில் அதே வாழைக்காய், பழுப்புநிறத்தில் இருக்கும். அந்த இருவேறு நாய்களுடன் கொஞ்ச நேரமாவது கொஞ்சிப் பேசுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளச் செய்தி, என்னை பிரமிக்கவே செய்யும். அத்தனை வேலைப்பளுவிலும் அவரால் இந்த வேலையையும் செய்ய முடிகிறதே எனும் ஆச்சர்யம், எனக்குள் முண்டிக் கொள்ளும். ‘தோட்டத்துல செடிகளுக்கு தண்ணீ ஊத்தி மூணு நாளாச்சு’ எனும் மனைவியின் குரல், தேனாய் இனிக்காது.

இப்போதெல்லாம் புதிதாய் வரும் பேட்டிகளில், அந்த கறுப்புநிற வாழைக்காய்ப் படம் வருவதில்லை! இந்தியா டுடே ஜீன் 2008 மு. கருணாநிதி சிறப்பிதழில் இடம்பெற்றிருப்பது பழைய படம்!

அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெ. ஜெயலலிதா வீட்டில் நாய் இருக்கிறதா என்று தொ¢யவில்லை. இருந்தால், யானைகளுக்காகப் புத்துணர்ச்சி முகாமெல்லாம் நடத்திய அவர், நிச்சயம் நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்து, புத்துணர்ச்சி ஏற்படுத்தி, ‘இன்னார்க்கு இன்னார்’ என்று பாட்டுப் பாடி, அட்சதைத் தூவி முதலிரவுக்கெல்லாம் அனுப்பியிருப்பார் எனும் நம்பிக்கை எனக்குண்டு. ‘நாய் இருக்கிறதா.. இல்லையா..’ என்று தொ¢ந்தவர் கள், கீழ்க்காணும் மின்னஞ்சலுக்குத் தகவல் கொடுத்தால், நாயைவிட நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று உங்கள் தலையில் அடித்து சத்தியமாய்க் குரைக்கிறேன்!

பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் நாய்களுடன் இருக்கும் காட்சி, ஒருவித மிரட்டலாய் இருந்தது மட்டும் உண்மை!

கமலஹாசன், சொல்லிக் கொள்ளும் அளவில் நாய்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று கருதுகிறேன். என் கருதுதல் தவறாகக் கூட இருக்கலாம்.

ஆனால், எழுத்தாளர் சுஜாதா இறந்து ஒருவாரத்தில், ஒருபத்தி¡¢கை ஒருநாய்ப் படத்தைப் பிரசு¡¢த்து, இயக்குநர் பாலுமகேந்திராவின் பேட்டியை வெளியிட்டிருந்தது. நாய்க்காக பாலுமகேந்திரா, ‘அது சுஜாதா வீட்டு நாய்’ என்று சொல்லி உருகியிருந்தது, காதலிக்க நேரமில்லை படத்தில் மூத்த நடிகர் நாகேஷ், ‘அப்டியே வானத்தை நோக்கி கேமராப் போகுது’ என்று சொல்லிக் கலாய்த்ததை நினைவுக்குக் கொண்டு வந்தது.

நாய்களுக்கான வாழ்வு, ‘டேய்.. நாயோட வெளாடாதே.. கடிச்சு வெச்சுரும்!’ என்று வீட்டாரால் அறிவுறுத்தப் பட்டதையும் தாண்டி, எப்போதுமே எனக்கு அதிர்ஷ்டத்தையே நினைவுபடுத்தி வந்திருக்கிறது!

என் சின்னவயதில், தெருநாய் ஒன்றுடன், நான் ரொம்பவே சிநேகமாக இருந்து வந்திருக்கிறேன். என்னைக் கண்டதும் எனக்காகவே காத்திருந்தது போலவும் என்னிடம் சொல்வதற்கு ஏதோ சேதி இருப்பது போலவும் அது ஒருதுள்ளலுடன் ஓடிவந்து என் கால்களைச் சுற்றிச் சுற்றி, நடக்கவிடாமல் முற்றுகை செய்யும். அதனுடன் பேசுவதற்கு என்னிடம் தடையோ தயக்கமோ எதுவுமில்லை. மனிதர்களுடன் பேசும் அதே மொழியைத்தான் அதனுடன் பேசினேன். என்றாலும் நாய் என்னவோ பு¡¢ந்து கொண்டது போலவே நடந்து கொள்ளும்!

நாங்கள் வீடுமாறிப் போன ஒருஇரவுவேளையில், அந்த நாய் தெருவில் இல்லை. அதன் பிறகு அந்த நாயைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆறுமாதம் கழித்து அந்தத் தெருவுக்குள் போனபோது, அடையாளம் கண்டு ஓடிவந்த அந்தநாய், அதனுடைய பாஷையில் ஏதோ சொல்லிக் குரைத்தது. ‘இப்டிச் சொல்லமாக் கொள்ளாமப் போயிட்டியேடா?’ என்று கேட்பதாக அர்த்தம் கற்பித்துக் கொண்டேன். அந்தத் தெருவிலிருந்து நான் கிளம்பும் வரையில் அது என்னுடனே இருந்தது, ஆச்சா¢யத்தை தந்தது. தெருமுனையைக் கடந்து கொஞ்ச தூரம்வரை என்பின்னாலேயே வந்த நாய், ‘என் எல்கை இத்துடன் முடிந்தது என்பது போல’ நின்று விட்டது. நான் நின்று திரும்பி அதைப் பார்த்தபோது, சிநேகமாக வாலை ஆட்டியது.

அடுத்து, ஒரு ஆறுமாதம் கழித்து, பழையத் தெருவுக்குப் போனபோது, நாய் ஓடிவரவில்லை. நான் திரும்பும்வரை கண்ணில் படவும் இல்லை. தெரு முனையில் நண்பர்களிடம் விசா¡¢த்தபோது, ‘லா¡¢ அடிச்சு செத்துப் போச்சு’ என்றார்கள்.

அன்றிரவு எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை!

நாட்டுநாய்கள், கோம்பை, ராஜபாளையம், குறுங்காது என்ற உள்ளூர் வகைகளும், பொமரேனியன், ஷெப்பர்ட், புல்டாக், கிரேடன், டால்மேஷன், டாபர் மேன் என்பது உள்ளிட்ட பலவகை வெளிநாட்டுநாய்களும் என் கண்ணுக்குள் வலம் வந்தன. அவை எல்லாவற்றிலும் என் சின்னவயது தெருநாயின் சாயல் தொ¢ந்தது!

நாய்கள், கிறிஸ்து பிறப்பதற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவை. தற்போது பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே காணப்பட்டுள்ளன.

இந்துக் கடவுளான ஆயர்பாடிக் கண்ணன், மாட்டு மந்தைகளை மேய்த்தக் காலத்தில், நாய்கள் துணையிருந்ததாக கூறப்பட்டுள்ள புராணங்களில், தமிழர்கள் நாயை பைரவர் என்று கும்பிட்டு வழிபட்டு வந்ததும் காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் பைரவர் சிலை இருப்பது, அவை மக்களின் தெய்வங்களாக இருந்ததன் வெளிப்பாடே!

சார்லஸ் டார்வின் தனது ஆய்வில், ஓநாய்க் குடும்பத்திலிருந்து உருவானவை நாய்கள் என்று கூறியிருந்தாலும் அவை நா¢, கோயெட்டிஸ் ஆகிய விலங்கினக் குடும்பங்களைச் சேர்ந்த பிராணி என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகள் நாய்கள், ஓநாய்க் குடும்பங்களைச் சேர்ந்த வை தான் என அறுதியிடுகின்றன.

ஆதித் தொல்குடிப் பெண்கள், தங்கள் துணைக்கு ஓநாய்களை வைத்திருந்தார்கள். பின்பு, அதிலிருந்து சற்றுப் பா¢ணாம வளர்ச்சிக் கண்ட நாய்களை, அதன் துவக்க காலத்திலிருந்தே பாதுகாப்புக்கும் வேட்டைக்கும் மனிதன் பயன்படுத்தி வந்திருக்கிறான். அதனால் தான், நாய் வீட்டைக் காக்கும். அது, மனிதர்களுக்கு உற்றத்தோழன் என்ற சொல் வழங்கப்பட்டு வந்துள்ளது.

தற்போது அமொ¢க்காவில் 5 கோடி நாய்கள் இருக்கின்றனவாம். அதுவே இந்தியாவில் 5 மடங்குக்கும் அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. போலி ரேஷன் கார்டுகளும் போலி வாக்காளர்களும் நடமாடும் நம் பூமியில், சுருதி சுத்தமாக நாய்க்கணக்கு இருக்க வாய்ப்பில்லை தான். அதுபோலத்தான் நாய்க்கடிகளும்!

சமீபகாலமாக நாய்க்கடிகளைப் பற்றியச் செய்திகள், அரசியல் பரபரப்பில்லாத காலகட்டங்களில் செய்தியாளர்களின் அறிவு வறுமைக்கு ஈடுகட்டுவதாக அமைகின்றன. அப்படி இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளியான ஒருசெய்தி. ஊட்டியைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியை, தெருநாய்கள் வெறிகொண்டு கடித்துக் குதறியச் செய்தி! கிழிந்த சாக்கைத் தைப்பது போல, நானூறுக்கும் அதிகமான தையல்கள் உடம்பெங்கும் போடப்பட்ட அந்தச்சிறுமியின் புகைப்படங்கள் அச்சு ஊடங்களிலும் திரை ஊடகங்களிலும் இடம்பெற்று பா¢தாபத்தை அள்ளிக்கொண்டன.

அப்படங்களைத் தொடர்ந்து, பரபரப்பில்லாத அரசியலை நடத்திக் கொண்டிருந்த அரசியல் கட்சிகள், ‘வெறிநாய்களை ஒழிக்கவேண்டும். நாய்க்கடிக்கு மருந்து அரசு மருத்துவமனைகளில் எப்போதுமே கையிருப்பு வைத்திருக்க வேண்டும்’ என்று கடிபட்டவர்களைப் போல, படம் ஓட்டி மகிழ்ந்தன. ஆனால், நாய்க் கடிப்பட்டச் சிறுமி பூரணநலம் பெறுமுன்னமே துண்டை உதறுவதுபோல அந்தச்செய்தியை மறந்துவிட்டன.

அதற்கடுத்துக் கொஞ்சநாளில், அதுபோலவே ஒரு சிறுமி. அதுபோலவே ஒரு வெறிநாய். அதுபோலவே பரபரப்பு. அவ்வளவு தான்!

ஆனால், இந்த ஜூன் மாதத்தின் கணக்கு அப்படியாக இல்லை!

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நாய்க்கடிகளும், வெறிநாய்கள் ஆடுகளைக் கடித்துக் கொல்லும் செயல்களும் அதிகா¢த்துள் ளன.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது சென்னிமலைக் கவுண்டனூர். அந்தக் கிராமத்தினுள் புகுந்த வெறிநாய்கள், கிராம வீடுகளில் கட்டிக்கிடந்த ஆடுகளை கடித்துக் குதறியிருக்கின்றன. இதில் பத்துக்கும் மேலான ஆடுகள் செத்துவிட்டன. பத்து என்பது எண்ணிக்கையில் சிறிய அளவில் தொ¢யலாம். அது ஒரு குடியானவனின் வாழ்க்கை. அவனது பொருளாதாரம். ஓராண்டுக்கான வரவு செலவின் மூலதனம். அதை வைத்து அவன் பற்பல கனவுகளையும் கடன்களையும் மனதுக்குள் பூட்டி வைத்திருப்பான். அத்தனையும் கடித்துக் குதறப்பட்ட வலி, அவனால் மட்டுமே உணர முடியும்!

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி சாத்தணி கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி கவிதா. வீட்டில் இருந்த மாணவியை பக்கத்துவீட்டு நாய் ஓடிவந்து கடித்திருக்கிறது. அதற்கு இளையாங்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்திருக்கிறார், அம்மாணவி. இருந்தும் அவரது நாக்கு உள்ளிழுத்துக் கொண்டு பேச முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். அவரை மதுரை ராஜாஜி அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ராபிஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு, கொலைக்குற்றம் செய்த கைதி போல, தனி செல்லில் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். உடனடி மற்றும் முறையான சிகிச்சை மேற்கொள்ளாததால், அந்தச் சிறுமி இப்போது உயிருடன் இல்லை. பா¢தாபமாகச் செத்துப் போனார். நாய்க்கடி குறித்த விழிப்புணர்வின்மை, மருத்துவ வசதியின்மை, அரசு தரப்பில் மருந்து கை வசமின்மை ஆகியவையே அச்சிறுமியின் உயிரைக் காவு வாங்கியதாகக் கொள்ளலாம்!

பெற்று, ஆசையுடன் சீராட்டிப் பாராட்டி வளர்த்த அந்தச் சிறுமியை, பெற்றவர்களும் மற்றவர்களும் தொட்டு அழக்கூட முடியாத நிலையில், மருத்துவ மனை ஊழியர்களே சடங்குகளைச் செய்து அப்புறப்படுத்தியது, பா¢தாபமாக இருந்தது!

இது நடந்து, ஒருவாரம்தான் போனது. மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை ஓவியா. தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அந்தப் பிஞ்சை, வெறிநாய் ஒன்று தேடிவந்துக் கடிக்க, அதைத் தொடர்ந்து வந்த மற்றநாய்கள், கும்பலாகக் குதறியெடுத்து விட்டன.

ஜூன் 23. திங்கட்கிழமை. நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகிலுள்ளது, நாகல்குளம். அந்த ஊ¡¢ல் 120 ஆடுகளுடன் கிடை போடப்பட்ட இடத்தில், நள்ளிரவில் புகுந்த நாய்க்கூட்டம் ஆடுகளைக் கடித்துக் குதறியதில், இருபது ஆடுகள் செத்துப்போயின.

இது தவிர, காட்டிலிருந்து வழிதவறி வந்துவிடும் மான்கள், நாய்களிடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டக் கதைகளும் அவ்வப்போது பத்தி¡¢கைகளில் படத்துடன் இடம் பெறுவதுண்டு!

நாய் வீட்டைக் காக்கும். அது, மனிதர்களுக்கு உற்றத்தோழன் என்று சொல்லப்பட்ட நாய்கள், சமீபகாலமாக ஏன் அட்டகாசம் செய்துவருகின்றன?

தெருநாய்களின் இனப்பெருக்கம் பன்மடங்காகிவிட்டது. தெருநாய்களுக்கானப் பாதுகாப்பைச் செய்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சுனாமி பாதிப்பு, குப்பையான நகரத்தை சுத்தம் செய்தல் என்ற வேறுவேறு சேவை(!)களுக்குள் தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. அவ்வப்போது நாய்ப் பிடிக்க, பிடித்து அறுவை சிகிச்கைச் செய்ய ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆளனுப்புவதுடன் சா¢. அதன் பின்பு என்ன நடந்திருக்கிறது என்பதை அவர்களின் நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்ளும் கவலையும் பதற்றமும் மறக்கடித்து விடுகின்றன. ஆனால் நாய்ப் பிடித்த, நாய் அடித்தச் செலவுக் கணக்கு மட்டும் கணக்காக எழுதப்பட்டு விடுவதை யாரும் மறப்பதே இல்லை!

பாதுகாப்பும் உற்றத் தோழனுமாக இருந்துவந்த நாய்களின் உணவு முறையும், இப்போது மாறிவிட்டது. இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு உணவு ஊட்டும் அம்மாவோ… அக்காவோ…அல்லது இன்னபிற பிகரோ…’நீ சாப்புடாட்டி நாய்க்குப் போட்டுருவேன்!’ என்று சொல்லி மிரட்டி சோறூட் டிய காலமும், குழந்தை சாப்பிடாத மீதச் சோற்றை, ‘சூச்சூ..’ கொட்டி அழைத்து, நாய்க்குப் போட்டதெல்லாம் பழங்கதை ஆனதடி என்றாகிவிட்டது.

இப்போது அவை, யார் வீட்டுவாசலுக்கும் வந்து எப்போது மீதச்சோறு போடுவார்கள் என்று காத்துக் கிடக்கவேண்டிய அவசியமெல்லாம் இல்லாமல் போய்விட்டது. நாள்தோறும் கவிச்சியைத் தவிர வேறு எதையும் இன்றைய நாய்கள் சாப்பிடுவதே இல்லை. அந்த வசதியைச் செய்து தருவது, நாடெங்கும் முளைத்துவிட்ட பிராய்லர் சிக்கன் கடைகள் தான்!

தெருவுக்கு நாலாய் முளைத்துவிட்ட இந்தக் கடைகளிலிலிருந்து கொட்டப்படும் கால், தலை, குடல் உள்ளிட்டக் கழிவுப் பொருட்களைத் தின்று கொழுக்கும் தெருநாய்களின் வாழ்க்கை முறையும், முற்றிலும் மாறிவிட்டது என்பது தான் உண்மை! ‘பெட்’ எனப்படும் வளர்ப்பு நாய்கள் உட்பட, மனிதனிடமிருந்து விலகிவரும் மற்ற நாய்கள் எல்லாமே, தங்களின் இயற்கைக் குணத்துக்குத் திரும்புகின்றன. அவை இத்தனை நாளும் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த, தங்கள் மூதாதையர் ஓநாய்களின் வெறித்தனத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளன.

கூட்டங் கூட்டமாய் வாழப் பழகிவிட்ட தெரு நாய்கள், தங்களுக்குள் தொடரும் விளையாட்டை வி¡¢வாக்கிக் கொண்டே ஊருக்குள் நுழையும் போது, அதைப் பார்த்து பயந்து ஓடுபவர்களை விரட்டத் துவங்க.. பயந்து ஓடுபவர்களை அவை கடித்துவிடுகின்றன!

‘ஓடாமல் நின்றால் கடிக்காதா?’ எனும் கேள்விக்கு, யாரையும் இன்னும் பா¢ட்சித்துப் பார்க்கவில்லை என்பதே சா¢யான பதிலாகும்!

நாய்க்கடிக்கு மருந்து?

லூயி பாஸ்டர் கண்டுபிடித்த நாய்க்கடிக்கான அற்புத மருந்து, உலகம் முழுவதும் உற்பத்திச் செய்யப்பட்டாலும், அது பற்றாக்குறை மருந்தாகவே இருந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கையிருப்பு என்று ஒருபோதும் இருந்ததில்லை.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் நிலைமைக் குறித்துக் கடுமையாக இந்த வாரம் சாடியிருக்கிறார். இதே சாடலை திமுக தலைவர் மு. கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைத்திருக்கிறார். இனியும் எடுத்துரைக்கலாம். வெறுமனே சாடல் களுடன் முடிந்து போகும் விஷயங்களாகவே அவை இருந்து வருகின்றன.

நாய்க்கடிப்பட்டு வரும் நபர்களுக்கு, அரசு மருத்துவ மனைகளில் தரப்படும் மா¢யாதை, ஏழைக் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு வரும்போது கொடுக்கப்படும் மா¢யாதையைப் போன்றது தான்!

சினிமாவில் பம்பரம் விட, ஆம்லேட் போட, மற்றும் உயர்ந்த மூக்கு இல்லாத சப்பைகள் தங்கள் மூக்குத்தி ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பயன் படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தத் ‘தொப்புளை’ச் சுற்றி நாய்க்கடிக்கு, முன்பு பதினாறு ஊசிகள் வரைப் போடப்பட்டதும், பிணம் எ¡¢யும்போது வாடை பிடிப்பதும், இப்போது பழைய முறையாகிவிட்டது.

விலை ஒசத்தியான ஒரேயொரு ஊசி அல்லது வாரம் ஒருதடவையாக நான்கு வாரம் குத்திக்கொள்ள வேண்டிய புதியமுறைதான் இன்றைய வழக்கத் தில் உள்ளது. அந்த ஊசிகளுக்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு தான்!

தனியார் மருத்துவமனைகளில் விற்பனைக்குத் தயாராக உள்ள இந்த மருந்தின் விலை, மொத்தமாக ரூபாய் நான்காயிரம். அல்லது ஒருதடவைக்கு ஆயிரம் ரூபாய்!

விழிப்புணர்வுயின்மை, வசதியின்மை, அலைச்சலுக்குத் தயக்கம் என்று யோசிப்பவர்கள், ஊசிக்குத்துவதற்கு நாய்க்கடியே மேல் என்று இருந்து விடுகின்றனர்.

நாளொன்றுக்கு நாற்பதாயிரம்பேர், நாய்க்கடிக்கு உலகம் முழுவதும் உயி¡¢ழக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

அடிபட்ட நாய்க்கு அல்லது மனிதனற்ற வேறு ஜீவராசிகளுக்கு ஓடோடி வந்து உதவுவதற்கு, ஆங்காங்கே ஒருசில அமைப்புகள், ஏழெட்டு வா¢சை கொண்ட தொலைபேசி எண்களுடன் தயாராக இருக்கின்றன. அவை, ஆண்டுக்கு இத்தனை முறையென்று கணக்கு வைத்து, மாநில அரசு அலுவலகங்கள் முன்பும் டில்லியின் ஏதாவது ஒருபகுதியிலும் கொடிகளும் பதாகைகளும் உயர்த்திப் பிடித்துக் கோஷம் எழுப்பும் காட்சிகள் அத்தனை ஊடகங்களிலும் இடம்பெறுவதும் வழக்கத்தில் உள்ளது. இது, நல்ல விஷயம் தான். ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் வந்தக் குட்டி ஒட்டகத்துக் கான முத்த மருந்து அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்க்காது!

ஆனால், நாய்க்கடிப்பட்ட மனிதர்களுக்கு ஆதரவாக இதுபோன்ற கோஷங்கள் எத்திசையிலும் எழுந்ததாகத் தொ¢யவில்லை. அதனால் அவர்களைக் காப்பாற்ற அரசு முன்முயற்சியெடுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், நாய்கள் கட்டுப்பாட்டு வா¡¢யத்தை அமைத்தும் இப்பிரச்சனையை ஒழித்து, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதி¡¢யாகத் திகழ வேண்டும். அல்லது இதில் ஊழலாவது செய்ய வேண்டும்!

இந்தச் செய்தி வெளியாகும் போது, நாய்க்கடி பட்டவர்களின் எண்ணிக்கை, தசம எண்ணிக்கையிலாவது கூடியிருக்கும் என்பது, எனது தாழ்மையான கருத்து!

எங்கள் தெருவில் ஒரு பொட்டைநாய், இரண்டு நாட்களுக்கு முன் ஆறு குட்டிகளைப் போட்டிருக்கிறது என்றும் அவை ஓநாய்களைப் போல இருப்ப தாகவும் சொல்லிவிட்டு, “நாம ஒண்ணை எடுத்து வளர்ப்போமாப்பா?” என்று கேட்கிறாள், என் மகள்.

வேறு வினையே வேண்டாம்!


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா