பெண்ணியம் தொடர்பான வெளியீடுகளின் பின்னணியில் பெண்கள் சந்திப்பு மலர் 2004

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

என்.செல்வராசா


பெண்ணியம் தொடர்பாகப் பேசும் நூல்கள் பல தாயகத்திலும் புலத்திலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பெண்களின் சமூகநலன்பேணும் நிறுவனங்கள சில தாயகத்தில் இயங்கிவருகின்றன. இவை பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் நிறுவனங்கள் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆய்வு வட்டம் என்ற அமைப்பு, பார்வதி கந்தசாமி, சித்திரலேகா மெளனகுரு போன்றோரின் வழிகாட்டலில் பல்கலைக்கழகப் பின்புலத்தில் வெற்றிகரமாக 80களில் ஆரம்பித்து இயங்கி வந்தது. இதன் வாயிலாக பெண்ணியச் சிந்தனைகளை வித்தூன்றும் வகையிலான பல நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. இன்னுமொரு ஜாதி: இலங்கைத் தமிழ்ப்பெண்கள் என்ற எல்ஸெஸ் யோன்ஸ் பேர்க் எழுதிய ஆங்கில நூல், பார்வதி கந்தசாமி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. பெண்நிலைவாதம் பொருத்தமானதே என்ற தலைப்பில் பெண்நிலைவாதக் கருத்துக்களை விதைக்கும் மற்றொரு நூலும் யாழ்ப்பாணம்: பெண்கள் ஆய்வு வட்டத்தால் 1985இல் வெளியிடப்பட்டது.

கொழும்பு 4இல் சாந்தி சச்சிதானந்தன் போன்றோரின் வழிகாட்டலுடன் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் இயங்குகின்றது. இவ்வமைப்பின் மூலம் பெண்களின் சுவடுகளில் என்ற நூல் சாந்தி சச்சிதானந்தம் அவர்களால் எழுதப்பட்டு, சென்னை: தமிழியல் வெளியீட்டகத்தின் மூலம் 1989 இல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நூலின் முதலாம் பாகத்தில் பெண்கள் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்ட திருமணங்களின் தோற்றம் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்பகுதி தனியாகப் பிரித்து மற்றொரு நூலினை பெண்களின்; சுவடுகளிலிருந்து சில அடிகள் என்ற மற்றொரு தலைப்பில் சாந்தி சச்சிதானந்தம் அவர்கள் பெண்கல்வி நிலைய வெளியீடாகவும் மீள்பதிப்புச் செய்திருந்தார். பெண்நிலைச் சிந்தனைகள் என்ற பெயரில் சித்திரலேகா மெளனகுரு அவர்களின் மற்றொரு நூலும் பெண்விடுதலை வாதத்தின் பிரச்சினைமையம்: அது ஒரு மேலைத்தேயக் கோட்பாடா ? என்ற தலைப்பில் செல்வி திருச்சந்திரன் அவர்கள் எழுதிய நூலும், மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் என்ற சந்திரிகா சோமசுந்தரம் அவர்களின் நூலும் வார்ப்புகள் என்ற பாரதியின் நூலும் பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தால் வெளியிடப்பட்டிருந்தன. நிவேதினி என்ற பெயரில் பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை ஒன்றினையும் கடந்த பத்தாண்டுகளாக பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. (றுழஅநெ ‘ள நுனரஉயவழைெ யனெ சுநளநயசஉா ஊநவெசநஇ 58 னூயசஅயசயஅய சுழயனஇ ஊழடழஅடிழ 6)

கொழும்பு 5 இல் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயற்பாட்டு முன்னணி என்ற மற்றொரு பெண்கள் அமைப்பு இயங்குகின்றது. இவ்வமைப்பு “கட்;டவிழும் முடிச்சுக்கள்: பெண்கள் தொடர்பான பொய்மைகளும் உண்மைகளும்” என்ற நூலை சுல்பிகா ஆதம் அவர்களின் வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டிருந்தது.

கொழும்பு 5 இல் இயங்கும் சமூக விஞ்ஞானிகள் சங்கம் குமாரி ஜயவர்த்தனா, மாலதி டா அல்விஸ் போன்றோரின் வழிகாட்டலுடன் பெண்களின் சமூக விழிப்புணர்விற்கு வழிகாட்டும் பல கருத்தரங்குகளையும், நூல்வெளியீடுகளையும் மேற்கொண்டு வந்துள்ளது. தமிழ்ப் பெண்ணியச் சிந்தனையாளர்களின் ஆதரவுடன் தமிழிலும் சில நூல்களை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஊயளவைபெ Pநயசடள: வூந றழஅநெ ‘ள குசயெஉாளைந ஆழஎநஅநவெ ைெ ளுசை டுயமெய என்ற நூல் மாலதி டா அல்விஸ், குமாரி ஜயவர்த்தனா ஆகியோரால் எழுதப்பட்டு முத்துக்களை வீசுதல்: இலங்கைப் பெண்களின் வாக்குரிமை இயக்கம். என்ற பெயரில் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், என்ற பெண்கள் அமைப்பு செயற்படுகின்றது. “கட்டுக்களை அவிழ்த்தல்: சமூகப்பால்நிலை: பெண்நிலைவாதம்” என்ற தலைப்பில் ஒரு நூலை அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். கருத்தோவியங்களுக்கூடாக எளிய நடையில் பெண்ணியச்சிந்தனைகளைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த இலகு வாசிப்பு நூல் ஈழத்தின் குறிப்பிடத்தகுந்த ஓவியர் கமலா வாசுகி அவர்களால் தயாரிக்கப்பட்டது. பெண் என்ற பெயரில் மட்டக்களப்பிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக ஒரு சஞ்சிகையையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றார்கள். (சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 20 டயஸ் வீதி, மட்டக்களப்பு)

இப்படியாக பெண்ணியச் சிந்தனைகளை விதைக்கும் பல நூல்கள் தமிழில் பெண்கள் அமைப்புக்களின் வாயிலாக தாயகத்தில் வெளியிடப்பட்டு வந்துள்ளன. கொள்கைப்பற்றுள்ள சிலரின் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்ட அமைப்புக்களின் வாயிலாக இவை திட்டமிடப்பட்டு போதிய நிதி வசதியின் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

இவை தவிர, தனிப்பட்டரீதியில் பெண்ணியச் சிந்தனைகளை ஜனரஞ்சக இலக்கியங்களின் வாயிலாக வாசகர்களிடையே கட்டவிழ்த்து விடும் பணியையும் சிலர் செய்துவருகின்றார்கள். அவர்களுள் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர். சென்னையிலிருந்து செ.கணேசலிங்கம் அவர்கள் தனது குமரன் பதிப்பகத்தின் வாயிலாகப் பெண்ணியம் சம்பந்தமான சில நூல்களை வெளியிட்டுள்ளார். அவை அறிவியல்நூல்களாகவும், ஜனரஞ்சகமான நாவல் இலக்கியங்களாகவும் அமைந்து பெண்களின் சமூக அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் உணர்வினை ஊட்டிவந்துள்ளன.

பெண்ணடிமை தீர என்ற பெயரில் செ.கணேசலிங்கன் அவர்கள் தனது குமரன் பதிப்பகத்தின் வாயிலாக சென்னையிலிருந்து 1995 இல் ஒரு நூலை எழுதியிருந்தார். பெண் எவ்வாறு அடிமைப்பட்டாள். இன்றும் எவ்வாறெல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றாள். அவளது உழைப்பு எவ்வாறெல்லாம் சுரண்டப்படுகின்றது. அவளது விடுதலைக்கு வழி என்ன. வரலாற்றில் அவளது எதிர்காலம் என்ன. இது போன்ற பல்வேறு கேள்வி களுக்கு இந்நூல் விஞ்ஞானபூர்வமாக விடை காணவைத்தது.

பெண்ணியப்பார்வையில் திருக்குறள் என்ற இவரது மற்றொரு நூல் மே 2000 இல் வெளியானது. உலக மக்கள் தொகையில் பாதிப்பங்கினரான பெண்களின் மனித இனப்பெருக்கச் செயலும் உழைப்பும் இல்லாவிடில் மானிட இனமே நிலைக்கவியலாது என்பதை அழுத்தமாகக் கூறும் நூலாக இது அமைந்தது. பெண்ணினத்தின் உயர்வு பற்றிக் கூறும் நூல்கள், சமயங்கள் பல. மனுதர்ம சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம், தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் சமண பெளத்த சமயங்கள் ஆகியவற்றில் கூறப்பட்ட கருத்துக்களை கணேசலிங்கன் இந்நூலில் சுருக்கமாகத் தொகுத்திருக்கின்றார்.

இவை தவிர உலகச் சந்தையில் ஒரு பெண், நீ ஒரு பெண் போன்ற நாவல்களும் கணேசலிங்கனின் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களைக் காவி வந்துள்ள மற்றும் சில படைப்புக்களாகும்.

புகலிடத்தில் ஐரோப்பிய வாழ்வியல் சூழலில், பெண்ணியச் சிந்தனையாளர்களின் முயற்சிகள் சில பரவலாக இடம்பெற்று வந்துள்ளன. பெண் படைப்பாளிகள் பலர் புலம்பெயர்ந்து வாழ்கின்றபோதிலும், இவர்களுள் குறிப்பிட்ட சிலரே தங்கள் படைப்புக்களில் பெண்ணியக்கருத்துக்களை அவர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூகப்பிரச்சினைகளை, அடக்குமுறைகளைத் துணிச்சலுடன் தமது இலக்கியப்படைப்புக்களினு}டாக வெளிக்கொண்டு வருகின்றார்கள். பெண் எழுத்தாளர் பலரும் கவிதைகள், சிறுகதைகள் நாவல்கள் என்று படைக்கும் போது தமக்குள்ளேயே ஒரு சமூகக்கட்டுப்பாட்டினை வரம்புகட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறிவிடாது எச்சரிக்கையுடன் தமது படைப்புக்களை புலத்தில் வெளியிட்டு வருவதை வெளிப்படையாகக் காணக்கூடியதாக உள்ளது. ஆணாதிக்க உலகில் தமக்கு நேரும் இன்னல்கள், சுதந்திரமான வளர்ச்சிக்கான தடைகள், பாரம்பரியமாகத் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறிப் புலத்தில் தமது இருப்பை ஆணித்தரமாகப் பதியவைக்கும் போக்கு என்பன விரல்விட்டு எண்ணக்கூடிய சில பெண்எழுத்தாளர்களிடமே காணக்கூடியதாக உள்ளது.

புலத்தில் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களை துணிச்சலுடனும் சமூக அக்கறையுடனும் பதிவுசெய்யும் நோக்கில் வெளியிடப்பட்ட வெளியீடுகள் வரிசையில், ஊதா, மறையாத மறுபாதி என்ற தலைப்பில் வெளிவந்த புலம்பெயர்ந்து வாழும் பெண் எழுத்தாளர்களின் கவிதைத்தொகுப்பு, நோர்வேயிலிருந்து சக்தி அமைப்பினால் வெளியிடப்பட்ட புலம்பெயர் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு, புது உலகம்; எமை நோக்கி, ஊடறு என்பன போன்ற சில படைப்புக்களைக் குறிப்பிடப்படலாம். இவை தனிப்பட்ட நிதிமுதலீட்டுடன், எந்தவொரு அமைப்பினதும் அனுசரணையின்றி புலத்தில் சுதந்திரமாக வெளிவந்த படைப்புக்களாகும்.

இந்த வகையில் புலம்பெயர்ந்து வந்து பரவலாகவாழும் பெண்ணியம் தொடர்பான தீவிர சிந்தனைவாதிகளை ஒன்றுதிரட்டி வுயஅடை றழஅநெ ‘ள குழசரஅஇ என்ற தமிழ்ப் பெண்கள் சந்திப்பு இயங்கி வருவது குறிப்;பிடத்தக்கது. இக் குழுவினரின் தளர்வுறாது வளர்ந்து செல்லும் பணிகள் இங்கு விதந்து கூறத்தக்கதாக அமைந்துள்ளன. 17.3.1990 இல் தமது முதலாவது சந்திப்பினை ஜேர்மனியில் நிகழ்த்தியிருந்த இந்த அமைப்பினர், 15 வருடங்களாக புலத்தின் பல நாடுகளிலும் ஒன்றுகூடல்களை நிகழ்த்தி பெண்களிடையே விழிப்புணர்வினை ஊட்டும் பல நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இச்சந்திப்புக்கள் ஜேர்மனியில், கேர்ண், வுப்பெற்றால், ஸ்ருட்காட், நொயிஸ், முல்கைம், எசன், பேர்லின், கார்ல்ஸ்ரூக், டுயிஸ்பேர்க், பிராங்பேர்ட், பொன் ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்தாலும், அதன் தடங்களை சுவிஸ், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் பதித்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது, வெளியிடப்படும் மலர்களில் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள், பெண்ணியம் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் என்பன பரந்த அளவில் இடம்பெறுகின்றன. இதுவரை 22 சந்திப்புகளை புகலிடமெங்கும் ஒழுங்குசெய்து வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ள இவ்வமைப்பினர் இதுவரை 8 பெண்கள் சந்திப்பு மலர்களையும் வெற்றிகரமாகத் தொகுத்து வெளியிட்டு வைத்துள்ளனர்.

அண்மையில் இந்த பெண்கள் அமைப்பின் முக்கிய அங்கத்தவரான ரஞ்சி அவர்கள் பெண்கள் சந்திப்பு மலர் 2004. என்ற சிறப்பு மலரை சுவிஸ்சிலிருந்து எனக்கு அனுப்பி வைத்திருந்தார். ஒக்டோபர் 2004 இல் கோயம்புத்தூர் விடியல் பதிப்பகத்தின் வாயிலாக அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த மலர் புலத்தில் வாழும் பெண்ணியச் சிந்தனை கொண்ட பல இளம் படைப்பாளிகளின் செறிவான பல படைப்புக்களைத் தாங்கி வந்துள்ளது. 168 பக்கங்களில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள பெண்கள் சந்திப்பு மலர் 2004 இதுவாகும்.

சுவிஸ்ஸிலிருந்து ரஞ்சி அவர்களையும், ஜேர்மனியிலிருந்து தேவா, உமா, நிருபா ஆகியோரையும், பிரான்சிலிருந்து விஜி அவர்களையும் மலர்க்குழுவாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இம்மலரில் தொகுக்கப்பட்டுள்ள 50 படைப்புக்களும், புகலிடத்துப் பெண் எழுத்தாளர்களின் உருவாக்கத்தில் மலர்ந்தவை. கவிதைகள், ஓவியங்கள், சிறுகதைகள், பெண்ணியம் சார்ந்த சில கட்டுரைகள் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களினு}டாகத் தமது உணர்வுகளைத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும், துணிச்சலுடனும் இம்மலரில் பதிவுசெய்திருக்கின்றார்கள். முன் அட்டையிலும் பின் அட்டையிலும், இன்று எம்மிடையே பிரகாசித்து வரும் இரு ஓவியர்களான வாசுகி, அருந்ததி ஆகியோரின் நவீன ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் உள்ளேயும், இவர்களது ஓவியங்களுடன் மோனிகா, சுகந்தி ஆகியோரின் ஓவியங்களும், 11 வயதேயான சுவிஸ்ஸில் வாழும் ஆரதியின் ஓவியமும் கருத்தையும் கண்ணையும் கவர்வதாக உள்ளன. 1990ம் ஆண்டு ஜேர்மனியில் கால்கோள் கண்ட பெண்கள் சந்திப்பு நிகழ்வு 14 வருடங்களாகத் தொடர்ந்து பல புதிய பெண் எழுத்தாளர்களை உள்வாங்கி வளர்ந்து வந்துள்ளது. இந்தப் படிமுறை வளர்ச்சியினை புலத்தில் நடந்து முடிந்த தமிழ்ப் பெண்கள் சந்திப்புகளின் போது இதுவரை வெளியிடப்பட்டுள்ள எட்டு மலர்களின் வாயிலாகவும் எம்மால் அறிந்தகொள்ளக்கூடியதாக உள்ளது.

இம்மலர்க்குழுவில் ஒருவரான தேவா அவர்கள் இம்மலருக்கான அறிமுகஉரையில் தமது அமைப்பின் சந்திப்புக்கள் பற்றிய நோக்கத்தைக் குறிப்பிடும் போது, 1990இல் முதன்முதலாக ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இச்சந்திப்புக்களில் ஆராயப்பட்ட, விவாதிக்கப்பட்ட, விடைகாணா விடயங்கள் ஏராளம். ஆனால் இவை பெண்களால் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆண் சிந்தனையில் உருவாக்கப்பட்டுள்ள பெண்ணின் மீள் உருவாக்கம் பற்றிய கேள்விகள் மற்றும், பெண்- பெண்ணாகவே ஒரு மனிதஜீவியாக இல்லாததை விமர்சிக்க சந்தர்ப்பங்களை இச்சந்திப்புகள் உருவாக்கிக் கொடுத்தன என்று குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்புகள், ஆக்கத் திறனுக்கும், செயல்திறனுக்கும் ஊக்கமளித்தன என்றும் புலம்பெயர் பெண்களை எழுதுவதற்கு ஊக்கம் தந்தது மட்மல்லாமல் அதை வெளிக்கொண்டும் வந்தன என்று மேலும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

இந்தப் பெண்கள் சந்திப்பு மலரில் பெண்ணியம் பற்றிய செய்திகள் மாத்திரம் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. இந்துசமயக் கேடான வர்ணாச்சிரமக் கொள்கைகள், தாயகம் மற்றும் உலக அரசியல் நிலைப்பாடுகள், வளர்முக நாடுகளை சீர்குலைக்கும் சந்தைப் பொருளாதாரம், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், போர், உலகமயமாக்கல், சாதியம், தலித்தியம் எனப் பலதரப்பட்ட கருத்துக்களும் இச்சந்திப்புகளிலும், அதன்வழியாக மலர்ந்த சிறப்பு மலர்களிலும் விமர்சிக்கப்பட்டுள்ளன. பெண்கள் சுயாதீனத்துடன் செயற்படவும், கருத்துக்களைத் துணிச்சலுடனும் நம்பிக்கையுடனும் பரிமாறிக்கொள்ளவும், இம்மலர் புலத்தில் களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றது.

தமிழகத்திலிருந்து வைகைச்செல்வி எழுதியுள்ள “பெண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற கட்டுரை இம்மலரில் முதலாவதாக இடம்பெற்றுள்ளது. இன்றைய பெண் படைப்பாளிகளையும், பண்டைத்தமிழ்ப்பெண் படைப்பாளிகளையும் ஒப்புநோக்கி எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் சகலவிதத்திலும் வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் படைக்கப்பட்ட ஒருசில பெண் எழுத்துக்களில் இருந்த வலிமையும், வீரியமும் உயிர்ப்பும், காலத்தை வென்று நிற்கும் தன்மையும் தற்காலப் பெண் படைப்பாளிகள் பலரின் படைப்புக்களில் இன்னும் வரவில்லை என்று சாடியிருக்கிறார்.

கற்புநிலை என்று சொல்ல வந்தார் என்ற தலைப்பில் அவுஸ்திரேலியாவிலிருந்து சந்திரலேகா வாமதேவன் எழுதிய கட்டுரையில் எப்பொழுதும் பெண்களுக்காகவே வகுக்கப்பட்ட கற்பியல் கோட்பாடு விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி- நிருபாவின் மழை ஏன் வந்தது, என்ற கதையில் துளசி என்ற சிறுமி, தனக்கெதிரான பாலியல் வன்முறையிலிருந்து அதுபற்றிய தெளிவற்ற நிலையிலும் தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள முற்படுகின்றாள் என்பது மிக அழகாக, நாகரிகமாகச் சொல்லப்பட்டுள்ளது.

சிறகிழந்த பறவையாய் என்ற கதையில் இளம்பெண்ணொருத்தி பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து நீங்கி உயர்கல்விக்காக அமெரிக்காவில் நம்பிக்கைக்குரிய தன் குடும்பத்தவரிடையேயே வாழநேர்ிடுகின்றது. அங்கு நம்பிக்கைக்குரியவர்களிடமிருந்து அவள் எதிர்கொள்ளும் பாலியல் சார்ந்த வரம்புமீறல்களை உள்வாங்கிக்கொள்ள முடியாது திணறும் உணர்வுகள் மிகைப்படுத்தப்படாத வசனநடையிலும் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஷாமிலா எழுதியுள்ள இக்கதை, சந்திரவதனா அவர்களால் மிகநேர்த்தியாக தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாமாவின் அந்தி என்ற கதை கொளத்தூர் கிராமத்தில் தனியாக வாழும் முதிய தவசிப்பாட்டியின் இறுதிக்காலம் பற்றிப் பேசுகின்றது. அவள் பாசத்துடன் வளர்த்த ஆட்டுக்குட்டியுடனான அவளது தாய்மை உறவு கதையின் பலமாக உள்ளது. இக்கதை சிக்கலான தமிழகக் கிராமியப் பேச்சுவழக்கில் அவதானமாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலிருந்து உமாவின் சிறுகதையான மரியானா, கனடாவிலிருந்து சுமதி ரூபனின் நாகதோஷம்;, இலண்டனிலிருந்து சந்திரா ரவீந்திரனின் பனிமழையும் ஒரு சனிக்கிழமை மாலையும்;, சாந்தினி வரதராஜனின் வீடு ஆகிய சிறுகதைகள் இம்மலரில் தேர்ந்த சிறுகதைகளாக சேர்க்;கப்பட்டுள்ளன. வீடு சிறுகதை புலம்பெயர்ந்து வந்துவிட்ட ஒருபெண்ணின் இழந்துபோன தாய்ப்பாசம் பற்றியதாக அமைகின்றது, சுகந்தி நீண்டகாலத்தின் பின்னர் தாயகம் திரும்புகின்றாள். தான் வாழ்ந்து வளர்ந்த வீட்டின் ஒவ்வொரு அணுவும் அவளது இறந்துவிட்ட இளமைக்காலத்தை, தாயின் உபசரிப்பை அரவணைப்பை நினைவூட்டுகின்றன. கட்டுரைகளைப் பொறுத்தவரையில், ஆணாதிக்கத்துக்கு முகம்கொடுப்பது பற்றிய சில தனிப்பட்ட பிரதிபலிப்புகள் என்ற தலைப்பில் ஊாசளை ஊசயளள அவர்கள் நோர்வேஜிய மொழியில் எழுதிய ஆணாதிக்கம் பற்றியதான கட்டுரை தயாநிதி அவர்களால் தமிழுக்க மொழிமாற்றம் செய்யப்பட்டு இம்மலரில் இடம்பெற்றுள்ளது. கைவிடப்பட்டவளாய் என்ற தலைப்பில் அமைந்த ஒரு உண்மைக்கதையும் இம்மலரில் மனதைத்தொடுவதாய் அமைந்துள்ளது. சமூகக் கொடுமையால் ஆப்கான் சிறையில் வாடும் ஆப்கானிஸ்தானிய 13 வயதுச் சிறுமி நூரிஜாவின் சோகக்கதை அதுலண்டன் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின் இன்னும் இருபது வருடங்களில் என்ற தலைப்பில் புலம்பெயர் வாழ்வியலில் பெண்கள் பற்றிய சமூகவியல் பார்வை, கனடா எழுத்தாளர் மதி கந்தசாமி அவர்களின் இணையத்தில் குடில் போடலாம் வாருங்கள் என்ற இணையத்தளம் தொடர்பான கட்டுரை ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை.

மும்பை புதிய மாதவியின் என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்ற என்ற கட்டுரையில் ஊடகங்கள், தனிமனித வாழ்க்கை முறைகள், அரசியல் என்ற மூன்று பெரும் வகைப்பிரிவினரால் பெண்கள் எவ்வாறு கருத்தாக்கம் பெற்றுள்ளார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் சமூகத்தில் பார்க்கப்படுகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

சமகால ஓவியத்துறையில் தனக்கென்றொரு தடம்பதித்துப் பெயர்பெற்றுள்ள ஓவியர் கமலா வாசுகி, பெண்களின் உள வெளிப்பாடுகளை ஓவியப்பயிற்சியின் மூலம் பெண்ணிலை நோக்கில் நின்று வெளிக்கொண்டுவருபவர். பரீட்சார்த்தமான படைப்பாக, வண்ணங்களில் உணர்வெழுதி என்ற தபால் அட்டை அளவிலான கையடக்க ஓவிய நூலொன்றையும் வெளியிட்டிருந்தவர். சுவிஸ் ரஞ்சி அவர்களுடனான இவரது நேர்காணல் பல தகவல்களை வழங்கி இவ்விதழில் சிறப்புற அமைந்துள்ளது.

இவை தவிர பல பெண்கவிஞர்களின் தேர்ந்த கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. அவுஸ்திரேலியாவிலிருந்து பாமதி, செளந்தரி, ஆழியாள், இலங்கையிலிருந்து விஜயலட்சுமி சேகர், பாலரஞ்சினி (மட்டக்களப்பு) முகைசிரா முகைதீன், பாலரஞ்சனி சர்மா, இந்தியாவிலிருந்து மாலதி மைத்ரி, மும்பை புதிய மாதவி, சுவிஸ்ஸிலிருந்து நளாயினி தாமரைச் செல்வன், கனடா எதிக்கா, துர்க்கா, ஜேர்மனி விக்னா பாக்கியநாதன், சுகந்தினி சுதர்சன், மற்றும் திலகபாமா ஆகியோரின் கவிதைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

© ே.ளுநடஎயசயதயா. Pசநியசநன கழச முயடயை முயடயளயஅஇ ஐடாஊ வுயஅடை 10.01.2005

என்.செல்வராசா (லண்டன்)

Series Navigation

என்.செல்வராசா

என்.செல்வராசா