பூப்பறிக்கும் கோடரிகள்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

இராம. வயிரவன்வெளிப்பணத்துக்கும் வெள்ளிப்பணத்துக்கும்
உள்ள இடைவெளியால்
பூப்பறித்துக் கொண்டிருந்தன கோடரிகள்
புல்லு வெட்டிக் கொண்டிருந்தன கடப்பாரைகள்

வெளிநாட்டு
அரசன்கள் எல்லாம்
வாயிற் காப்போன்களாக
கோட்டை வாசலில்
முனை மழுங்கிய ஈட்டிகளோடு
குறுக்கும் நெடுக்குமாக. . .

அரசுக்கட்டிலில்
அமரவைக்கப்பட்ட
உள்நாட்டு வாயிற்காப்போன்கள்
ஆளுமைத்திறன் அதிகரிப்பிற்காகவும்
வாள் பயிற்சிக்காகவும்
குருகுலங்களில் . . .

– இராம. வயிரவன்


Vairavan.RAMANATHAN@Statschippac.com

Series Navigation

இராம. வயிரவன்

இராம. வயிரவன்