நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குளம் அணுமின்நிலையமும்

This entry is part [part not set] of 21 in the series 20020224_Issue

டாக்டர். இரா.இரமேஷ் எம்.பி.பி.எஸ்.

இனியவர்களே,

வணக்கம். முன்பு தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள கூடங்குளத்தில் 2 அணுமின் நிலையங்களை அமைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போது அப்பகுதியை பெரியதொரு அணுசக்தி வளாகமாக மாற்றும் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80களின் இறுதியில் இதற்கு எதிராகப் பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன. ஆனால் இப்போது இனம்புரியாத மவுனம் உறைந்துகிடக்கிறது. ஆனால் கடந்தகாலங்களை விடவும் வலுவாக அணுஉலை அமைப்பதற்கு எதிராக ஆதாரபூர்வமாக கருத்துக்கள் அறிவியல்பூர்வமாக நம்முன் உள்ளன. இப்போது கோயமுத்தூரைச் சேர்ந்த டாக்டர் இரமேஷ் ( Doctors for Safer Environment) கூடங்குள‹ அணுமின் நிலையமும் தென்தமிழகத்தின் பூகம்பவியலும் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வேதாத்திரி மகரிஷியும் நிலவியல் அறிஞர் விக்டர் இராஜமாணிக்கமும் இதற்கு அணிந்துரை வழங்கியுள்ளனர். இந்நூல் பின்வரும் முகவரியில் கிடைக்கும். அசுரன், விடியல் இல்லம், ஆதளMளை, வெள்ளமடம் (அஞ்), கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு -629305 மின்னஞ்சல்: asuran98@yahoo.com பக்கம்: 80 (தவிர 5 வண்ணப்படங்களும் உள்ளன), விலை: ரூ.30 இந்நூலின் சில பகுதிகள் இவை.

நிலவியல் பிரச்சினைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும் கூடங்குள அணுமின்நிலையமும்

1989 ஆம் வருடம் இந்தியாவிற்கு வந்திருந்த சோவியத் யூனியனின் ஆட்டம்எனர்கோ எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தலைவரான வி.குல்கோ கூடங்குளˆதில் நிறுவப்படவிருக்கிற வி.வி.இ.ஆர்-1000 வகை அணு உலைகளைப்பற்றி சென்னையில் பிப்ரவரி 5 ஆம் தேதி பேசினார். அப்போது, இந்தவகை உலைகள் எம்.எஸ்.கே அளவையில் 8 புள்ளிகள் (சுமார் 6.2 ரிக்டர்) வரையான பூகம்பங்களைˆ தாங்குவதற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு அணுஉலையை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த இடம் இந்திய பூகம்ப மண்டலப் பகுப்பாய்வின்படி பூகம்ப மண்டலம் 4-ற்கும் அதிகமான மண்டலத்தில் அமைந்திருக்கும்பட்சத்திலும், அந்த இடத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டருக்கு உள்ளில் செயலூக்கம் மிகுந்த நிலப்பிளவு இருக்கும் பட்சத்திலும் அதை இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகமானது (Atomic Energy Regulatory Board-AERB) அனுமதிக்காது. இதுவே நம் நாட்டில் இன்றுள்ள சட்டமாகும்.

ஒரு அணுமின் நிலையத்தைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது பின்வரும் விஷயங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று அமெரிக்க நாட்டின் Nuclear Regulatory Commission (NRC) கூறுகிறது:

1) இந்த இடத்திலிருந்து 320 கிலோமீட்டர் ஆரத்திற்குள் அமைந்துள்ள நிலப்பகுதியில் இதுவரை நடந்துள்ள நிலவியல் நிகழ்வுகள் குறித்த அனைத்து விவரங்களையும் திரட்டி அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

2) இந்த இடத்தில் இருந்து 40 கிலோமீட்டர் ஆரத்திற்குள் அமைந்துள்ள நிலப்பகுதியை நிலவியல், பூகம்பவியல், நில-பெளbக ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும்; இதன் மூலம், இப்பகுதியில் பூகம்பங்களை உருவாக்கவல்ல மூலாதாரப் புள்ளிகளால் எவ்வளவு சக்தியுடைய பூகம்பங்களையும், நில மேலோட்டு மாற்றங்களையும் உருவாக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்; அல்லது, இந்தப் பகுதியில் பூகம்பங்களை ஏற்படுத்தவல்ல ஆதாரப் புள்ளிகள் இல்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

3) இந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் ஆரத்திற்குள் அமைந்திருக்கும் பகுதிக்குள்ளில் மிகவும் விரிவான நிலவியல், நில-பெளbகவியல், பூகம்பவியல் மற்றும் நில-தொழில்நுட்பவியல் (Geological, Geophysical, Seismological, and Geo-technical- GGSG) ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வுகளின் மூலம், இந்தப் பகுதியில் உள்ள தரையானது இங்கு ஏற்படும் பூகம்பங்களின் போதோ அல்லது பூகம்பங்கள் அல்லாத வேறு நிலவியல் நிகழ்வுகளின்போதோ எந்த அளவு மாற்றத்திற்குள்ளாகும் என்பதை அறிய முயற்சிக்க வேண்டும்.

4) மேற்கூறிய ஆய்வினை இந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் ஆரத்திற்குள் இருக்கும் பகுதிகளுக்குள்தான் நடத்த வேண்டும் என்றில்லை; இந்த இடமானது ஒரு சிக்கலான நிலவியல் சூழலில் அமைந்திருக்கிறது என்றாலோ அல்லது ஒரு நிலப்பிளவு மண்டலத்தில் அமைந்திருக்கிறது என்றாலோ அல்லது வரலாற்று ரீதியில் இந்தப் பகுதியில் பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன என்றாலோ அல்லது கடந்த சுமார் 10,000 வருடங்களுக்குள்ளாக இப்பகுதியின் நிலம் நகர்ந்திருப்பதற்கான சான்றுகள் இருந்தாலோ மேற்கூறிய ஆய்வினை இன்னும் பரந்துபட்ட ஒரு பகுதிக்கு விரிவு படுத்த வேண்டியது அவசியமாகும்.

இன்றுவரை இந்தப் பகுதியில் 3 ரிக்டர் அளவுள்ள பூகம்பங்கள்தான் ஏற்பட்டிருக்கின்றன ( 9 பிப்ரவரி 1823 – நாகர்கோவில்; 16 மார்ச் 1881-நாங்குநேரி-3 ரிக்டர்; 26 பிப்ரவரி 2000 – கள‚காடு – 3 ரிக்டர்). இந்த விவரத்தை மட்டுமே ஆதாரமாக வைத்துப் பார்த்தால், இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகம் கூடங்குள‹ அணுமின் திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியும். ஆனால், வரலாற்று ரீதியாக 1823 மற்றும் 1881 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட பூகம்பங்கள் 3 ரிக்டர் அளவாகத்தான் இருக்கும் என எப்படி அறுதியிட்டுக் கூறுவது ? ஏனென்றால், பூகம்பங்களை அளMட உபயோகப்படும் பூகம்பமானி கண்டுபிடிக்கப்பட்டதே 1800-களின் கடைசி பத்து ஆண்டுகளில்தான்! மேலும், ஒரே ஒரு பூகம்பமாணியை வைத்து ஒரு பகுதியில் வரும் பூகம்பத்தைக் கணக்கிடும்போது பெரும் பிழைகள் உருவாவதை அண்மையில் கேரளˆதில் 2000 டிசம்பர் 12 ஆம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தின்போது நன்றாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த டிசம்பர் 12 ஆம் தேதி பூகம்பத்தை 3.5 ரிக்டர் சக்தி வாய்ந்தது என்று கேரள மின்சார வாரியத்தின் பூகம்பமாணிகள் கணக்கிட்டிருந்தன. ஆனால், இந்திய சீதோஷ்ணநிலைத் துறையின் (Indian Meteorological Department-IMD) பூகம்பமாணியோ இதை 5 ரிக்டர் சக்தி உள்ள பூகம்பம் என்றது! எனவேதான், இன்றைய தேதியிலும்கூட, இந்தப் பகுதியில் வரும் பூகம்பத்தின் அளவைக் கணக்கிடும்போது, ஒரே ஒரு பூகம்பமாணியில் இருந்து வெளியிடப்படும் தகவலை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. பூகம்பங்களின் சக்தியைக் கணக்கிடுவதிலேயே இந்தப் பகுதியில் இன்று பிரச்சினைகள் உள்ளபோது, இந்தப் பகுதியில் வரலாற்றில் நடந்த பூகம்பங்களை ஆதாரமாக வைத்து இந்தத் திட்டத்திற்கு AERB அனுமதி அளிப்பது எப்படி சரியாக இருக்க முடியும் ? அதுபோலவே, 1976 ஆம் ஆண்டின் இந்திய பூகம்ப மண்டலப் பகுப்பாய்வு வரைபடத்தை இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளிப்பதற்காக உபயோகிக்கக்கூடாது. ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே பல முறை இந்த பூகம்ப மண்டலப் பகுப்பாய்வு வரைபடம் பிழைகள் நிறைந்தது என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது!

மேலும், கடந்த காலத்தில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பங்களின் அளவு குறித்த ஆதாரங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் இதே அளMல்தான் பூகம்பங்கள் நிகழும் என்று கூறுவது தவறான செயல்பாடு என்று கூறுகின்றனர் ஜெ.பால் குழுவினர்.

‘இந்த நிலப்பகுதியைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இன்றைய தேதியில் நடக்கும் பூகம்பத்தைப் போலவே கடந்த காலத்தில் அங்கு பூகம்பங்கள் ஏதேனும் வந்திருக்கின்றனவா என்று தேடுவது ஒரு பலனற்ற வேலையாகவே இருக்கும். இன்றைய தேதியில் இந்தப் பகுதியில் வரும் பூகம்பங்களெதுவும் கடந்த காலத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட பூகம்பங்களின் தொடர்ச்சி அல்ல. ‘

கடந்த காலத்தில் ஏற்பட்ட பூகம்பங்களின் அடிப்படையில், இந்தப் பகுதியில் எதிர்காலத்தில் வர சாத்தியமுள்ள பூகம்பங்களின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது என்றால், இங்கு கட்டத் தீர்மானிக்கும் கட்டிடங்களை எந்த அளவு பூகம்பங்களைˆ தாங்கும் கட்டிடங்களாக வடிவமைப்பது ? இதை எவ்வாறு அறிந்து கொள்வது ? இந்திய நிலத்தட்டின் மீது செலுத்தப்படும் அழுத்தவிசையின் காரணம் தென் இந்திய நிலத்தட்டு எப்படிப்பட்ட பளுவிற்கு ஆளாகின்றது என்பதை அறிந்து கொள்வதற்கான ஆய்வுகளை சில நிலவியலாள˜கள் செய்துள்ளார்கள் இந்தப்பகுதியில் உருவாகும் பூகம்பங்களின்போது உருவாகும் நில அதிர்வு அலைகள் இப்பகுதியில் உள்ள நிலப்பிளவுகள் அமைந்துள்ள திசையில் கடத்தப்படுமா, அல்லது இந்தப் பகுதியின் மேண்டில் குழம்பில் உள்ள கனிமங்களின் anisotropy அமைந்துள்ள திசையில் கடத்தப்படுமா என்பதுதான் கேள்வி.

இத்தகைய ஆய்வு கூடங்குளˆதிற்கு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் நில அதிர்வு அலைகள் எங்கனம், எந்தத் திசையை நோக்கிக் கடத்தப்படுகின்றன என்பதன் அடிப்படையில்தான் இந்த அணுமின் நிலையம் அமையப்போகும் இடத்தில் உள்ள நில மேலோட்டில் பூகம்பங்களின் போது எவ்வகைப்பட்ட மாற்றங்கள் உருவாகக் கூடும் என்பதை நாம் கணிக்க முடியும். இந்த அடிப்படையில்தான், பூகம்பங்கள் ஏற்படும் தருணங்களில், இந்த அணுஉலையினால் பாதுகாப்பாக இயங்க முடியுமா முடியாதா என்பதைக் கூற முடியும். இதன் அடிப்படையில்தான், இந்த அணுஉலையின் வடிவமைப்பில் தேவைப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ள முடியும். ஆகவேதான், AERB கூறுவதைப்போல இந்த இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர்களுக்கு உள்ளில் செயலூக்கம் மிகுந்த நிலப்பிளவுகள் இல்லை என்றாலே அணுஉலைகள் கட்டுவதற்கான அனுமதியை அளிக்கலாம் என்ற கூற்றை, (இங்கு தோரணமலை நிலப்பிளவு கூடங்குளˆதினூடாக செலகின்றது என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது வேறு விஷயம்!). இன்றைய நிலவியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கூற்றாகவே நம்மால் கருத முடிகிறது. மேலும், இந்தப் பகுதியின் மேண்டில் அடுக்கானது மேடும் பள்ளமுமாகக் காட்சி அளிப்பதால் இத்தகைய ஆய்வினை கூடங்குள‹ அணுமின் நிலையத்தைக் கட்டுவதற்கு முன்னர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அணுசக்திக் கட்டுப்பாட்டு கமிஷன் முன்வைத்துள்ள நிலவியல் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் கூடங்குள‹ ஒரு அணுஉலையைக் கட்டும் முன்பாக அந்தப் பகுதியில் எதிர்காலத்தில் ஏற்படும் பூகம்பங்களின்போது அந்த அணுஉலையின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை நிலவியல் ஆய்வுகள் எவை என்று அமெரிக்காவின் NRC முன் வைத்த கருத்துக்களை மேலே நாம் கண்டோம். அதன் அடிப்படையில் கூடங்குளˆதை இனி பார்ப்போம்.

கூடங்குளˆதைச் சுற்றி 320 கிலோமீட்டர் ஆரத்திற்குள் அமைந்துள்ள நிலப்பகுதியில் இதுவரை நடந்துள்ள நிலவியல் நிகழ்வுகள் குறித்த அனைத்து விவரங்களையும் திரட்டி அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இதன்படி பார்த்தோம் என்றால், கூடங்குள‹ அணுமின் நிலையத்தைக் கட்டும் முன்பு வடக்கில் கரூர், வடமேற்கில் மலம்புழா, குருவாயூர், வட கிழக்கில் இலங்கையின் யாழ்ப்பாணம், கிழக்கில் இலங்கையின் வவுனியா மற்றும் அனுராதபுரத்தை உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த காலத்தில் நடைபெற்ற நிலவியல் நிகழ்வுகளையும், அவற்றால் கூடங்குள‹ எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.

இவற்றையெல்லாம் கூடங்குள‹ அணுமின் நிலைய நிர்வாகம் கணக்கில் கொண்டிருக்கிறதா ? அல்லது, இதெல்லாம் அமெரிக்காவுக் குத்தான் பொருந்தும்; இந்தியாவுக்குப் பொருந்தாது என்று சொல்லப்போகிறதா ? நிலவியல் காரணங்களால் அணுஉலைகளில் நடக்க சாத்தியமுள்ள விபத்துகளை முடிந்தவரையில் தவிர்ப்பதற்காகத்தான் இதுபோன்ற வரைமுறைகளை அமெரிக்க அரசு 1992 ஆம் வருடம் கொண்டுவந்தது. கூடங்குளˆதிலும் இந்த வரையறையை மேற்கொள்வதுதானே மதிமிக்க செயலாக இருக்க முடியும் ?

மேற்கூறிய அமெரிக்க வரையறைகளின் அடிப்படையில் கூடங்குள அணுமின் நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொள்ளŠ போகிறதோ இல்லையோ, அந்த வரையறைகளை நாம் மனதில் கொண்டு கூடங்குளˆதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

கூடங்குளˆதைச் சுற்றி 320 கிலோமீட்டர் ஆரத்திற்கு உள்ளிட்ட பகுதியில்தான் கேரளˆதின் மூன்று முக்கிய பூகம்பப் பகுதிகள் அமைந்துள்ளன. 200-320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலப்பகுதியில் திருச்சூர்-வடக்கன்சேரியும், 150-200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் இடுக்கி மாவட்டமும், 50-150 கிலோமீட்டர் தூரத்தில் திருவனந்தபுரம்-புனலூர் பகுதியும் அமைந்திருக்கின்றன. இந்த மூன்று பகுதிகளிலும் மிக நுணுக்கமான நிலவியல் ஆய்வுகளை செய்திட வேண்டும் என்று 2000 டிசம்பர் 12 ஆம் தேதி கோட்டயத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பின்னர் இந்திய அரசு முடிவெடுத்தது; இந்த ஆய்வுகள் தற்காலம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதே பகுதிகளில் சமீப காலமாக நிலத்தில் பெரும் பள்ளƒகள் உருவாவதும், கிணறுகள் மூடிக்கொள்வதும், கிணற்றுநீர் திடாரென்று கொதிக்கத்தொடங்கி மேலே எழும்புவது போன்ற நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன; இங்கு, நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. தமிழகத்திலேயே பூகம்ப அபாயம் அதிகமுள்ள கோவை மாநகரம் 200-320 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. தமிழகத்திலேயே பூகம்ப அபாயம் அதிகமுள்ள நிலப்பிளவு என்று கருதப்படும் நொய்யல்-காவேரி நிலப்பிளவு (பாலக்காடு-கரூர்) மேற்கூறிய தூரத்தில்தான் அமைந்திருக்கிறது. இதுதவிர இன்னபிற நிலப்பிளவுகளும் இந்தப் பகுதியில் அமைந்திருப்பதையும் வரைபடத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.

மேலும், இந்தப் பகுதிகளில் அமைந்துள்ள மேற்கு மலைத் தொடர்ச்சியில் பல்வேறு பெரிய நீர்த்தேக்கங்கள் (பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சிற்றார்1-2, மணிமுத்தாறு, நெய்யாறு, பெரியார், இடுக்கி) இருப்பதையும் பார்க்க முடிகிறது.

கூடங்குளˆதிற்கு தென்கிழக்கில் சுமார் 120-150 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாக் கடலின் தரையில் எரிமலைகளின் முகவாய்கள் இருப்பதை 1975 ஆம் ஆண்டில் சோவியத் நாட்டின் நிலவியலாளரான ஜி.பி.உடின்ட்சேவ்-ம் 1981 ஆம் ஆண்டு வி.வி.சாஸ்திரி குழுவினரும் தெரிவித்திருக்கிறார்கள். 1994 ஆம் ஆண்டு டாக்டர்.ஜி.ஆர்.கே.மூர்த்தி குழுவினர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், மேற்கூறிய நிலவியல் அம்சங்களை ஆராய்ந்து பார்க்கும் போது மன்னார் வளைகுடாவின் இந்தப் பகுதியில் நில அதிர்வுக்கான ஒரு மிக முக்கியமான அமைப்பு இந்தப் பகுதியின் நிலமேலோட்டில் அமைந்திருக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது, கூடங்குள‹ அணுமின் நிலையத்தை அமைக்கும் முன்பு இந்தப் பகுதியில் உடனடியாக நுணுக்கமான நிலவியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

இந்த ஆய்வுகளையெல்லாம் மேற்கொள்ளாமல், ‘கூடங்குள அணுஉலைகளை எம்.எஸ்.கே.அளவையின் 8 பூகம்ப சக்தியைத் தாங்கும் அளMற்கு (அதாவது 6.2ரிக்டர் சக்தியுள்ள பூகம்பத்தைத் தாங்கும் அளMற்கு) வடிவமைத்திருக்கிறோம்; அதனால் கவலைப் படாதீர்கள்! என்ற வாதங்கள் அனைத்துமே பாமரத்தனமானவை! கடந்த பல வருடங்களில் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பங்களின்போது பெருமளMல் அழிவுகள் ஏற்படவில்லை என்பதாலேயே இனி வரும் பூகம்பங்களின்போதும் இதுபோன்றே இருக்கும் என்ற முடிவுக்கு வருவதுதான் அனுபவவாதம். கூடங்குளˆதில் அமைக்கவிருக்கும் வி.வி.இ.ஆர்-1000 /392 வகை உலைகளும் வி.வி.இ.ஆர்-100/320 வகைமாதிரி உலைகளின் பூகம்பப் பாதுகாப்புத்திறனையே கொண்டிருக்கும். இந்த வகை (320) உலைகளின் அவசர கால மின்சார அமைப்பும், உலையின் குழாய் அமைப்புகளும், உலையின் கட்டுமான அமைப்புகளும் மேற்கத்திய நாடுகளில் உள்ள அணுஉலைகளுக்கு இணையான பூகம்பப் பாதுகாப்புத் திறனைக் கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே, இந்த உலைகளை‚ கட்டிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகள் தனித்தனியாக இந்தப் பாதுகாப்பு அம்சங்களை‚ கூட்டுவதற்கான ஆய்வுகளுக்கும், பணிகளுக்கும் பெரும் தொகையை செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படி என்றால், நாம் வாங்கப் போகும் அணுஉலையில் இந்தக் கூடுதல் அம்சங்கள் எல்லாம் இருக்கும் என்று நம்பலாமா ? இருக்காது என்பது உறுதி. ஏனென்றால், இந்தப் பணிகள் அனைத்துமே ரஷ்யா அல்லாத நாடுகளில் (ஹங்கேரி, பல்கேரியா, செக் குடியரசு, ஸ்லோவாக் குடியரசு) நடந்து கொண்டிருக்கின்றன. நிலவியல் மற்றும் பூகம்பவியல் ரீதியில் கூடங்குள‹ நிலப்பகுதி பதட்டம் மிக்க ஒன்றாக இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, மேற்கூரிய பாதுகாப்பு அம்சங்களெ™லாம் நமக்கும் தேவையாகத்தானே இருக்கும் ? இவையெல்லாம் இல்லாமல் இந்த உலையை வாங்குவது சரிதானா ?

பேச்சிப்பாறை அணையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு கூடங்குளˆதை நோக்கிப் பதிக்கப்படும் தண்ணீர்க்குழாய்கள், இந்த அணுஉலையின் முதன்மைக் குளிர்விப்பான் அமைப்பிற்குத் தேவையான தண்ணீரைக் கொண்டு வரும் பணியைச் செய்யப் போகின்றன. இந்தத் தண்ணீர்க்குழாய்கள் பூகம்பங்களைˆ தாங்கும் சக்தியைக் கொண்டிருக்குமா ? இவை பதிக்கப்பட்டுள்ள நிலத்தில் திடாரென்று பள்ளƒகள் ஏற்பட்டால் அவற்றின் கதி என்னவாகும் ? அபிஷேகப்பட்டியில் நிலத்திலிருந்து பாறைக்குழம்பு வெளியேறியபோது அடுத்து இருந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி முற்றிலும் உருகிப் போனதுபோல, இந்தக் குழாய்கள் உருகாது என்பதற்கு என்ன உத்தரவாதம் ? இங்கு ஏற்படும் பூகம்பங்களின்போது இந்ததக் குழாய்கள் பல இடங்களில் உடைந்து போனால் என்ன ஆகும் ? மீண்டும், இந்த சேதங்களை„ சரி செய்ய மாதங்கள் ஆகக்கூடும் என்ற நிலை ஏற்பட்டால், முதன்மைக் குளிர்விப்பானை ஈடு செய்வதற்கு நம் அணுஉலை விஞ்ஞானிகள் வேறு என்ன திட்டத்தை வைத்திருக்கிறார்கள் ? முதன்மைக் குளிர்விப்பான் இல்லாது போனால், அணுஉலையின் மையம் சூடேறத் தொடங்கி, ஒரு கட்டத்தில் உருக ஆரம்பித்து, உலையில் ஒரு பெருவிபத்து ஏற்படுவதற்கான சூழல் உருவாகுமே ?.

இவை தவிர மிக முக்கியமானது அணுக்கழிவுகளை கூடங்குள அணுஉலை வளாகத்திற்குள் சேமித்து வைக்கும் செயல் பற்றியதாகும்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இந்த இரண்டு அணுஉலைகளில் இருந்து வெளியேறப்போகும் எரிந்து முடிந்த எரிபொருளின் (Spent Fuel) அளவு (ஒரு உலைக்கு மூன்று வருடத்திற்கு 75 டன் குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப் படும் என்ற கணக்கின் அடிப்படையில்) சுமார் 150 டன்களாகும். இந்த எரிந்து முடிந்த எரிபொருளை‚ கூடங்குளˆதில் எதிர்காலத்தில் கட்டப்படவிருக்கின்ற மறுசுத்திகரிப்பு ஆலையானது மறுசுத்திகரிப்பு செய்து அதிலிருந்து புளுட்டோனியத்தைப் பிரித்து எடுக்கும் செயலைச் செய்யும். மீதமுள்ள கழிவுகள் அணுஉலை வளாகத்தின் நிலதத்தினடியில் கட்டப்படவிருக்கின்ற கான்கிரீட் தொட்டிகளில் வைக்கப்படும். இது தவிர, உலையின் இயக்கத்தின்போது வரும் இன்னபிற திடக் கழிவுகளும் இதுபோலவே கையாளŠபடும். திரவக் கழிவுகளை, ஆவியாக்கிகளின் மூலம் திடக் கழிவுகளாக்கி அவையும் மேற்கூறியதைப் போலவே அணுஉலை வளாகத்தில் சேமித்து வைக்கப்படும்.

கடினமான கிரானுலைட் பாறைகள் இந்தப் பகுதியில் அமைந்திருப்பதால் சேதங்கள் நடக்காது என்ற கருத்து தவறானது என்பதை கிரானுலைட் பாறைகளால் ஆன நில மேலோட்டினால் ஆன கேரள மாவட்டத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்தில் 1988 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின்போது ஏற்பட்ட சேதங்கள் உறுதி செய்திருக்கின்றன என்பதை NPCIL மறக்கலாமா ?

இவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ?

கூடங்குள‹ அணுஉலையைக் கட்டுவதற்கு முன்பாக, இந்தப் பகுதியில் நுணுக்கமான நிலவியல் மற்றும் பூகம்பவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, அந்த விவரங்களின் அடிப்படையில் இங்கு ஏற்பட வாய்ப்புள்ள நிலவியல், பூகம்பவியல் பிரச்சினைகளால் இந்த உலையின் மையம் சேதமடைவதற்கான வாய்ப்பினை (Core Damage Frequency-CDF) முன் வைக்கும் ஒரு பாதுகாப்பு சாத்திய ஆய்வினை (Probabilistic Safety Analysis-PSA) உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாவிட்டால், என்னென்ன விளைவுகளை அடுத்து நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இனி பார்ப்போம்.

கூடங்குள‹ அணுமின் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் 17 கிராமங்கள் அமைந்திருக்கின்றன. 1992 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பினபடி இந்த கிராமங்களின் மக்கள்தொகை சுமார் 19,358 ஆகும். இதுவே, கூடங்குளˆதின் முதல் அணுஉலை இயங்கத் தொடங்கவிருக்கும் வருடமான 2007-இல் சுமார் 26,617 ஆக இருக்கும். 1992 ஆம் ஆண்டின் கணக்குப்படி, கூடங்குள‹ கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 8,015 ஆகும். 2007 ஆம் ஆண்டு இது சுமார் 11,020 ஆக இருக்கக்கூடும்.

கூடங்குள அணுமின் நிலையத்தின் 5 வது கிலோமீட்டர் தூரத்துக்கும் 10 வது கிலோமீட்டர் தூரத்துக்கும் இடையில் 35 கிராமங்கள் உள்ளன. இவற்றின் 1992 ஆம் வருடத்தய மொத்த மக்கள் தொகை சுமார் 29,305 ஆகும். இதுவே 2007 ஆம் ஆண்டு சுமார் 40,294 ஆகக் கூடியிருக்கக் கூடும்.

கூடங்குள அணுமின் நிலையத்தின் 10 வது கிலோமீட்டருக்கும் 16 வது கிலோமீட்டருக்கும் இடைப்பட்ட பகுதியில் 52 கிராமங்கள் அமைந்துள்ளன. அவற்றின் 1992 ஆம் வருடத்தய மொத்த மக்கள் தொகை சுமார் 37,187 ஆகும். இதுவே 2007 ஆம் ஆண்டில் சுமார் 51,132 ஆகக் கூடியிருக்கக்கூடும்.

இது தவிர கூடங்குள‹ அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் கன்னியாகுமரி அமைந்துள்ளது. சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தில் வள்ளியூரும், திசையன்விளையும் அமைந்திருக்கின்றன. ஈத்தாமொழி சுமார் 27 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவில் சுமார் 29 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலின் உத்தேச மக்கள்தொகை 1997 ஆம் ஆண்டில் (நகரத்துக்குள் வந்துபோவோரையும் சேர்த்து) சுமார் 2.5 லட்சமாக இருந்தது.

கூடங்குள‹ அணுமின் நிலையத்தில் மேற்கூறிய நிலவியல் மற்றும் பூகம்பவியல் காரணங்களால் மிகப் பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டால் இத்தனை மக்களையும் அவரவர் இருப்பிடத்திலிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றாக வேண்டும்.

சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் நிபுணரான முனைவர்.டி.சிவாஜி ராவ் கருத்துப்படி, விபத்து நடந்த 6 மணி நேரத்திற்குள் அணுஉலையில் இருந்து 5 கிலோமீட்டருக்குள் வசித்து வரும் மக்களை வெளியேற்றியாக வேண்டும். 12 மணி நேரத்திற்குள் 5 இல் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டாக வேண்டும் (அதாவது வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள அனைத்து கிராம/நகரங்களை இந்த 12 மணி நேரத்திற்குள் காலி செய்தாக வேண்டும்; இதில் கன்னியாகுமரியும் அடங்கும்.) விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் கூடங்குள‹ அணுஉலையில் இருந்து 25-75 கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கும் அனைத்து மக்களையும் வெளியேற்றியாக வேண்டும். 48 மணி நேரத்திற்குள் 75-140 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிக்கும் மக்களை அப்புறப் படுத்த வேண்டியிருக்கும்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களும், அவர்தம் கால்நடைகளும் எப்போது ஊர் திரும்பலாம் ? மேற்கூறிய நிலப்பரப்பு முழுவதையும் மிக நன்றாகக் கழுவிய பின்னரும், அந்த நிலப்பரப்பின் மீது விபத்தின்போது படிந்துவிட்ட கதிரியக்கப்பொருட்களின் கதிரியக்க அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளŠபட்ட பின்னரே இப்பகுதி மக்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியும். 140 கிலோமீட்டருக்கு அருகில் விபத்து நடந்து சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னரும், 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு அருகில் 5 வருட கால கட்டத்திலும், 98 கிலோமீட்டர் தூரத்திற்கு அருகில் 10 வருட காலகட்டத்திலும், 77 கிலோமீட்டர் தூரத்திற்கு அருகில் 20 வருட காலகட்டத்திலும் குடியேறலாம் என்று மேலே குறிப்பிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி பார்க்கும்போது கன்னியாகுமரி மாவட்டம் முழுவதையும் , திருவனந்தபுரம் மற்றும் தூத்துக்குடியை உள்ளடக்கிய பகுதிகள் அனைத்திலும் வசிக்கும் மக்கள் எல்லோருமே இங்கு நடக்கும் விபத்து ஒன்றினால் அகதிகளாக மாற வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்று தெரிகிறது.

இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் அணுஉலைகளை‚ கட்டும் முன்பாக அந்த இடத்தைச் சுற்றியுள்ள மக்கள்தொகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விதியை இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகம் 1990 மார்ச்சில் முன்வைத்தது. இந்த விதியின்படி, அணுஉலையைச் சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் பகுதியில் 10,000 மக்கள் தொகை உள்ள கிராமங்கள் இருக்கக்கூடாது. அதுபோலவே, 30 கிலோமீட்டர் சுற்றளMல் உள்ள பகுதியில் 1,00,000 மக்கள்தொகை உள்ள நகரங்கள் இருக்கக் கூடாது. இதன்படி பார்த்தோம் என்றால் கூடங்குளˆதில் அணுமின் நிலையத்தை சட்டப்படி கட்ட முடியாது!

மேலும், இவ்வாறு விபத்து நடந்தால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு நஷ்ட ஈடு அளிப்பதற்கான திட்டத்தை நம் அரசு வைத்திருக்கிறதா ? அல்லது, போபாலில் நடந்த விபத்துக்குப் பின்னர், அந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நஷ்ட ஈடு கேட்டு இன்று வரை போராடி வருவதைப் போல, இந்தப் பகுதி மக்களும் போராட வேண்டி வருமா ? இந்த பிரச்சினை குறித்த விவாதங்கள் 1950-களின் ஆரம்ப வருடங்களில் அமெரிக்காவில் நடந்தன. விபத்துகளின் போது பாதிக்கப் படும் மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதை நினைத்தே பல தனியார் நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் அணுமின் நிலையங்களை‚ கட்ட அச்சப்பட்டன.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே 1957 ஆம் ஆண்டின் பிரைஸ் ஆண்டர்சன் சட்டத்தை அமெரிக்க அரசு இயற்றியது. இந்த சட்டத்தின்படி, நஷ்ட ஈட்டை வழங்குவதற்கென்றே ஒவ்வொரு அணுஉலையும் சுமார் 2240 கோடி ரூபாயை (56 கோடி அமெரிக்க டாலர்கள்) வைப்பு நிதியாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் இந்த சட்டம் சமீபத்தில் திருத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இந்த நஷ்ட ஈட்டுக்கான வைப்பு நிதி ரூ.2240 கோடியில் இருந்து சுமார் ரூ.28,000 கோடியாக (700 கோடி அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சட்டம் நம் நாட்டில் இன்று வரை இல்லை. அப்படி என்றால், நம் நாட்டின் அணுஉலைகளில் விபத்துக்கள் நடக்காது என்று நம் அரசு நினைக்கிறதா என்ன ? அல்லது, நம் உயிர் அமெரிக்கர்களின் உயிரைப் போல அத்தனை மதிப்புடையது அல்ல என்று அரசு நினைக்கிறதா ? கூடங்குள அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால் அதை சமாளிக்கத் தேவையான பணம் தமிழக அரசிடம் இருக்கிறதா ?

இதுபோன்ற சட்டங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை! இந்த அணுஉலையை நாம் கட்டித்தான் தீர வேண்டும் என்று நாம் அனைவரும் ஒருவேளை நினைப்போமேயானால், இந்த அணுஉலை பாதுகாப்பாக இயங்க வழிவகை செய்யும் ஆய்வுகளை மேற்கொள்வதுதானே சரியான செயலாக இருக்க முடியும் ?

டாக்டர். இரா.இரமேஷ் எம்.பி.பி.எஸ். Design element  

Feb 24 Sunday 2002 Copyright © Thinnai. All rights reserved.

Series Navigation