நாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில்

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

அருணகிரி


என். ஐ. டியின் பதில்

நாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில் அனுப்பியிருந்தது. முக்கியமாக இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தது:

‘1. பார்வைக்குறைபாடுள்ளோருக்கு உதவும் வண்ணம் அமைக்கப்பட்ட நாணய வடிவம் இது. இவ்வடிவமைப்பில் எந்த குறிப்பிட்ட பிரிவையும் ஆதரிக்கும் உள்நோக்கம் எதுவும் இல்லை.
2. மார்ச் 2003-இல் அரசாங்கம் இந்த நாணய வடிவமைப்பை என்.ஐ- டி. யின் பொறுப்பில் தந்தது. மார்ச் 2004-இல் இந்த (சிலுவை) வடிவமைப்பு உட்பட்ட பல வடிவமைப்புகளை அரசாங்கத்தால் திறனளிக்கப்பட்ட ஒரு குழுவிடம் (empowered committee) என். ஐ. டி சமர்ப்பித்தது’.

முதல் விஷயம் குறித்து ஏற்கனவே கடந்த வாரம் எழுதப்பட்டு விட்டது. சுருக்கமாகச் சொன்னால், பார்த்தாலே சிலுவை என்று தெரியும் ஒரு வடிவமைப்பை, “அப்படி இல்லை” என எளிதாக ஒதுக்கும் என்.ஐ.டி. யின் பதில் நம்பக்கூடியதாக இல்லை.

இரண்டாவது விஷயம் இந்த முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தது: பாஜக ஆட்சியில்தான் இது நடந்திருக்கிறது என்பதாக இந்த பதில் இருக்கிறது. இதில் என். ஐ. டி சொல்லாத விஷயம் என்னவென்றால், சமர்ப்பிக்கப்பட்ட பல வடிவமைப்புகளில் இருந்து இந்த குறிப்பிட்ட வடிவமைப்பு எப்போது தெரிவு செய்யப்பட்டது என்பது. மார்ச் 2004 தேர்தலுக்கான முஸ்தீபுகளில், ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணி உள்பட அனைத்து கட்சிகளும் மும்முரமாய் இருந்த சமயம். ஏறக்குறைய 6 வாரங்களில் காங்கிரஸ் தலைமை அரசு பதவியேற்று விட்டது. எனவே, நாணய வடிவமைப்பு குறித்த அரசுக்குழுவின் இறுதித்தெரிவு எப்போது நிகழ்ந்தது என்பது முக்கியமான கேள்வியாகிறது. என். ஐ. டி-யிடம் இந்தக்கேள்வியை எழுப்பியுள்ளேன். மேலும், திறனளிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுமாறும் கேள்வி எழுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.


arunagiri_123@yahoo.com

Series Navigation