தூக்கத்தோடு சண்டை
முருகன் சுப்பராயன்
இரவு நேரங்களில்
ஞாபக பதிவேட்டில் உள்ள
மயிலிறகுகள்
விழித்தெழிந்து
ஆடுகின்றன
ஒரு காலத்தில்
ஞாபக சக்திக்கு
மருந்து சாப்பிட்ட நான்
ஞாபக மறதி வேண்டுமாய்
இறைஞ்சி
வேண்டுகிறேன்
அசரீ சொல்லுகிறது
தியானம் செய்
இல்லையேல்
ஞாபக பதிவேட்டில்
எழுதா பக்கங்களை
நிரப்பு
ரெண்டாவது பரிகாரம்
எனக்கு சுலபம்
ஆனாலும் பக்கத்தில்
வர தயங்குகின்றன
எழுத்துக்கள்
அதற்குள்
தூங்க போகிறது
இரவு
எனது தூக்கத்தை
கலைத்து விட்டு
Murugan Subbarayan
murugan_ambal@yahoo.com