தாய் நாடு

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

சி.ஜெயபாரதன், கனடா



கணனி மதர் போர்டு பிள்ளைகளுக்கு!
மூளைச் சிப்பை எழுப்புவது.
நினைவுக் களஞ்சியம்
நிரப்புவது!
வண்ண ஓவியம்
வரைவது!
எண்ணும், எழுத்தும் தீட்டுவது!
காவியம் படைப்பது!
ஆடுவது, பாடுவது!
பூத உலகைப்
பொரி உண்டை யாய்க்
காட்டுவது!
ஊர்ந்திடும் எறும்புகளை
ஒன்றாய் ஆக்குவது!
பாலூட்டித் தாலாட்டிப்
பண்பை ஊட்டி
உன்னை, என்னை,
மனித னாக்கி,
உலகக் கொலுவில் வைத்து
ஒப்பனை பார்ப்பது!
உயரச் செய்வது!
தாய் போர்டு
தனித்துச்
சீராகப்
பாரில் இல்லை எனில்,
பாய்ந்து மூடும் கணனி,
நோயுற்று
இணைப்பு அடிப்புவி யின்றி!

*******

S. Jayabarathan [jayabarat@tnt21.com (Jan 11, 2007)]

Series Navigation