தாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு !

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன் இதயத்தின் இரகசியத்தை
உனக்குள் வைத்துக் கொள்ளாமல்
என்னிடம் சொல் !
எனக்கு மட்டுமே சொல்
என் நண்பா
இரகசிய மாக !
புன்முறுவல் மென்மையாய்ப் பூக்கும்
உன்னிதழ்கள்
மெல்ல முணுமுணுக்கட்டும்
என் இதயத்திடம் !
என் செவிகட்கு வேண்டாம் !
ஆழ்ந்த இருட்டில்
மூழ்கிப் போனது இரவு !
மௌன மானது என்னில்லம் !
பறவைகள் கூடுகளில்
உறங்கிய வண்ணம் உள்ளன !
என்னிடம் பேசு
தயங்கும் கண்ணீ ரோடு
தடுமாற்றப் புன்னகை யோடு !
இனிய நாணத்தோடு
என்னிடம் சொல் இன்னலோடு,
உன் இரகசியத்தை !

************
1. The Gardener,
Translated By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20,, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா