தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மரணமே ! எனது மரணமே !
உருவாக்கிய
உனது ஏரியின் நீர்மிசை
உஸ்ஸென்று
ஊர்ந்து செல்லும் பாம்புகள் !
சங்க நாதம் கேட்டது,
உன்னுடைய
கழுத்தைச் சுற்றித் தொங்கின
எலும்புகள் !
நெற்றியில் மின்னிடும்
வைரக்கல் !
ஊது குழல்
கீதமிசைக்கும் உன் கையில்
மரணமே !
எனது மரணமே என்று !

ஒதுங்க இடமளித்தப்
பொது இல்லத்தில் நான்
சுறுசுறுப்போ டிருந்தால்
எனை ஊக்கி எழச் செய்வாய் !
அவநம்பிக்கை தனை
நீக்கிடு !
எனது இச்சை வேண்டுதலைக்
கனவுகளாய்
எடுத்துக் கொண்டு நான்
படுக்கையில் சோம்பிக் கிடந்தால்,
இதயத்தைச் சுற்றி
தீப்பொறி பற்றி
பாதி விழிப்புடன் நானிருந்தால்,
சங்கு முழக்கி
உன் மூச்சு ஊதி அழித்திடும் !
என் பிரபு ! அப்போது
விரைந்து வருவேன்
மரணமே ! எனது மரணமே !

************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22,, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா