தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்

This entry is part [part not set] of 1 in the series 20040609_Issue

பி.கே.சிவகுமார்


சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய தமிழ் கலைப்பட விழா ஜீன் 5, 2004 அன்று நடந்தேறியது. விழாவில் 70 பேர் கலந்து கொண்டனர். சிந்தனை வட்டம் நடத்திய இக்கலைப்பட விழா சிறப்பு மலராக வெளிவந்த திரைப்படத்துறை சார்ந்த சிற்றிதழ் நிழல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. திரைப்படங்களுக்குப் பின் பார்வையாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்ற கலந்துரையாடல் வெகுநேரம் நிகழ்ந்தது. அக்கலந்துரையாடலின் தொகுப்பை விரைவில் திண்ணையிலும் நிழல் சிற்றிதழிலும் காணலாம். அவ்வமயம் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம். இவை நண்பர் துக்காராமும் நானும் எடுத்த புகைப்படங்கள்.

விழா குறித்து தம் வலைப்பதிவுகளில் பாஸ்டன் பாலாஜி, அருண் வைத்யநாதன்,

சுதர்சன் மற்றும் நான் (புகைப்படங்களினாலான பதிவு) எழுதியிருக்கிறோம். மரத்தடி இணையக் குழுமத்திலும், பத்ரி, அருண் வைத்யநாதன் போன்றவர்களின் வலைப்பதிவிலும் குறும்படங்களை மக்களிடையே கொண்டு செல்வது குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அரங்கிற்கு வெளியே விழாக்குழு உறுப்பினர் சாமிநாதன்

விழாக்குழு உறுப்பினர்களில் சிலர்

விழாக்குழு உறுப்பினர்களில் இன்னும் சிலர்

அரங்கிற்கு வெளியே ராஜன் குறை தம்பதியுடன் விழாக்குழு உறுப்பினர்கள் சிலர்

போஸ்டர்களைப் பார்வையிடும் பார்வையாளர்கள் – 1

போஸ்டர்களைப் பார்வையிடும் பார்வையாளர்கள் – 2

வருகைப் பதிவிற்குப் பின் பார்வையாளர்கள் அளவளாவுதல்

சிந்தனை வட்ட நிறுவனரும் விழாக்குழு ஒருங்கிணைப்பாளருமான முருகானந்தம் நடராஜனின் வரவேற்புரை

நிழல் சிறப்பு மலரை வெளியிட்டு கோபால் ராஜாராம் உரையாற்றுகிறார்

காலை அமர்வுக்கான படங்களை அறிமுகம் செய்கிறார் பி.கே.சிவகுமார்

மனிதநேயம் குறும்படத்தில் இருந்து ஒரு காட்சி

Untouchable Country விவரணப்படத்தில் எழுத்தாளர் விழி ப. இதயவேந்தன் பேசும் காட்சி

Untouchable Country விவரணப்படத்தில் எழுத்தாளர் ராஜ் கவுதமன் பேசும் காட்சி

ஜல்லிக்கட்டு விவரணப் படத்தில் இருந்து ஒரு காட்சி

வாஸ்து மரபு விவரணப்படத்தில் சிற்பி கணபதி ஸ்தபதி பேசும் காட்சி

வயிற்றுக்கும் விருந்து தயார்

மதிய உணவு – 1

மதிய உணவு – 2

மதிய உணவுக்குப் பிந்தைய அமர்வுக்குத் தயாராகும் பார்வையாளர்கள்

பிற்பகலின் முதல் அமர்வுக்கான படங்களை அறிமுகம் செய்கிறார் நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்க ஸ்தாபகர் மருத்துவர் சுந்தரம்

பிற்பகலின் இரண்டாம் அமர்வுக்கான படங்களை அறிமுகம் செய்கிறார் மீனாட்சி சுந்தரம்

தேடல் குறும்படத்தில் இருந்து ஒரு காட்சி

இயக்குனர் அருண் வைத்யநாதனுக்குப் கவுரவப் பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்குகிறார் முருகானந்தம்

ஏற்புரை வழங்குகிறார் அருண் வைத்யநாதன்

பெட்னா 2004 விழாவுக்கு வரச் சொல்லிப் பார்வையாளர்களை அழைக்கிறார் வாஷிங்டனிலிருந்து வந்திருந்த, பெட்னா-2004 விழாக்குழுவைச் சார்ந்த அரசு செல்லையா

ஒருத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோபால் ராஜாராமுக்கு மருத்துவர் சுந்தரம் கவுரவப் பரிசும் பாராட்டுப் பத்திரமும் வழங்குகிறார்

ஒருத்தி திரைப்படத்தை அறிமுகம் செய்கிறார் முருகானந்தம்

ஒருத்தி படத்திலிருந்து ஒரு காட்சி

கடைசி வரிசையில் அமர்ந்தபடி ஒருத்தியை ரசிக்கும் விழாக்குழு உறுப்பினர்களில் சிலர்

வாயிலில் அமர்ந்தபடி ஒருத்தியை ரசிக்கிறார்கள் துக்காராம் கோபால்ராவும் சாரதா முருகானந்தமும்

திரையிடப்பட்ட படங்களைப் பற்றிய பார்வையாளர் கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து ஒருங்கிணைக்கிறார் முருகானந்தம்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் திருமதி ஜமுனா

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் மானுடவியலாளரும் கட்டுரையாசிரியருமான ராஜன் குறை

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் மருத்துவர் சுந்தரம்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்த சங்கரபாண்டி

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் மானுடவியலாளர் கஜேந்திரன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் திருமதி மோனிகா ராஜன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் சுதர்சன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் கோபால் ராஜாராம்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்த M.P. சிவா

கலந்துரையாடலை கவனிக்கும் பார்வையாளர்கள்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்த குமரன்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் துக்காராம் கோபால்ராவ்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் பார்வையாளர் ஒருவர்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் வாஷிங்டனிலிருந்து விழாவுக்காகத் தன் நண்பர்களுடன் வந்திருந்தவர்

கலந்துரையாடலில் தன் கருத்துகளைச் சொல்கிறார் பாஸ்டன் ரமேஷ்

நன்றியுரை சொல்கிறார் சாரதா முருகானந்தம்


  • தமிழ் கலைப்பட விழா புகைப்படங்கள்

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்