தமிழ்த் தேசியமும் சிங்களத் திரைப்படங்களும்

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

ரதன்


தமிழ்த் தேசியமானது கடந்த 60ஆண்டுகளில் படிநிலைகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. 1956, 1976, 1983 இனக்கலவரங்கள் இவற்றை மேலும் கூர்மைப்படுத்தின. 1990இல், ஆண்டாண்டு காலமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகத்தினரை அவர்களின் வாழிடத்தில் இருந்து வெளியேற்றியபோது தமிழ்த் தேசியம் தனக்கொரு புதிய வடிவத்தை ஏற்படுத்திக் கொண்டது. தமிழ்த் தேசியமானது சாதியம், பிரதேசம், வர்க்கம் எனப் பல கூறுகளைக் கொண்டுள்ளது. இன்று இது தான் தேசியம் என்ற நிலையை அடைந்துள்ளது. இவற்றை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையால் எழுந்த இனப்போர் குறித்த சிங்களத் திரைப்படங்களின் கருத்தியல்ரீதியான பார்வையே இக்கட்டுரையின் நோக்கம்.

இனப்போர் இன்று இலங்கையில் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. புலம் பெயர்வு, வறுமை, வெளிநாடுகளின் மேலாதிக்கம், வன்முறை, இலாபகரமான அரசியல், மக்களிடையேயான முரண்பாடுகள் எனத் தொடர்கிறது. இவற்றின்மீது இத் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனவா?

போரில் ஆயுதங்களை விட அதிகமான பாவனையில் உள்ள “பொருள்” இராணுவ வீரர்கள். இவர்கள் போருக்குச் செல்வதன் நோக்கம் என்ன?

அசோக ;;க கந்தகம என்ற சிங்களத் திரைப்பட இயக்குநர் ஒரு பேட்டியின்போது பின்வருமாறு தெரிவிக்கின்றார்:
“யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பதும் ; தேசத்துக்காக, நாட்டு மக்களுக்காக என்று கூறப்படுபவையும் வெறும் அரசியல் கோஷங்கள். வேறு தொழில் இல்லாமையினால் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவே இராணுவத்தில் பலர் சேர்கின்றனர்»
எனவே, இவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிக்கவே இராணுவத்தில் சேர்கின்றனர். இதனை மைக்கல் மூர் தனது படங்களில் பதிவாக்கி உள்ளார். இவர்கள் வேதனம ;, இறந்த பின்னர் இவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் கவர்ச்சிகரமான படிகள் இவர்களை இராணுவத்தில் சேர வைக்கின்றது. போரின் பின்னரும் இந்த வேதியம் தொடருமா? வியட்நாம் போரின் பின்னர், போரில் இறந்த வீரர்களது குடும்பங்களும் போரில் அங்கவீனமான வீரர்களும் கைவிடப்பட்டனர். இந்நிலை இலங்கையிலும் தொடரலாம். போரின ; பின ;னா ;; இராணுவ வீரா ;களது வாழ்க்கை மிகவம ; மோசனமாதாகவே இருந ;துள ;ளது, இருக ;கின ;றது.
மேலும ;1981ம் ஆண்டு தர்மசேன பத்திராஜ ‘பொன்மணி’ என்ற தமிழ்ப் படத்தைநெறியாள்கை செய்துள்ளார். இவர் நெறியாள்கை செய்த பல படங்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளன. இவருடைய SOLDADU UNNAHE (The Old Soldier) “முன்னாள் இராணுவ வீரர்” என்ற படத்தில், இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய இராணுவீரரின் வாழ்க்கை அவலங்களை வெளிப்படுத்தி இருந்தார். இது ஒரு முன்னுதாரணம். இலங்கையில் இனப்பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைவதற்குச் சற்று முன்னதாக இப்படம் வெளிவந்துள்ளது. இப ;படததில ;; இராணுவவீரர்கள் வெறும் சடப் பொருளாகவே பாவிக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுளளது.

;. 1983ம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் வெளிவந்த பல சிங்களப் படங்கள் இனவாதத்தை வளர்த்தன. இனத்துவேசத்தைப் போதித்தன. தமிழ்ப் போராளிகள் பற்றிய பல தவறான கருத்துக்களைப் பரப்பின. ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய சந்தோஷ் சிவனின் ‘ரெறரிஸ்ட்’ என்ற படம் பல தவறான கருத்துக்களை வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில் Mohan NIYAZ இயக்கிய KALU SUDU MAL என்ற படம் அமைந்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த நிர்மலா (அழியாதவர் என்ற பொருள்), திலீப் ஆகியோர் தற்கொலைத் தாக்குதலை நடாத்துவதற்காக கொழும்பிற்கு வருகின்றனர்.( இவர்களது நடவடிக்கையின் பெயர் DOUBLE X. இது இஸ்ரேலியத் துருப்புக்கள் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய நடவடிக்கையின் பெயர்.) இங்கு தங்கி இருந்த பொழுது நிர்மலா கருத்தரிக்கின்றார். தாக்குதலை நடாத்தித் தப்பிவிடும் இவர்களைப் புலிகள் துரத்துகின்றனர். முன்னாள் புலி உறுப்பினர் மாலா இவர்களுக்கு உதவி புரிகின்றார். ஆனால் இறுதியில் இவர்களைப் புலிகள் அழித்து விடுகின்றனர். இந்தப் படத்தில் நேரடியாகப் ‘புலிகள்’ என்ற பெயர் பயன்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் பாலியல் நடவடிக்கைகள், உடை என்று கலாச்சார ரீதியாக புலிகள் கேவலப்படுத்தப்பட்டுள்ளனர். சந்தோஷ் சிவனின் ‘ரெறரிஸ்ட்’ஐ விட அதிகமாக புலிகளின் «தற்கொலையியல்» இதில் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒரு புறத்தில், இந்த விமர்சனங்கள் நிராகரிக்கப்பட முடியாதவை. மறுபுறத்தில், இவை சிங்கள இனவாதத்திற்கு சாதகமானவை.

இவற்றிற்கு அப்பால் முற்போக்கு சிங்களப் படைப்பாளிகள் தமது கருத்துக்களை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகின்றனர்.
1. விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை முற்போக்காகக் கருதி கருத்துக்களை வெளியிடுவது
2.; தமிழ் மக்களின ; சுயநிh ;ணய உரிமையை ஏற ;றுக ; கொண்டு, ஆக்கப+ர்வமான கருத்துக்களை வெளியிடுவது
முற்போக்கு படைப்பாளிகள் என்ன கூறியிருக்கின்றார்கள் என இங்கு பார்ப்பது நல்லது. இவர்கள் இந்தியத் தமிழ்ப் படைப்பாளிகளைப் போல் பொறுப்பற்று வியாபார நோக்குடன் தமது படைப்புகளை வெளியிடவில்லை.

லிண்டன் கமகே என்ற படைப்பாளி (இவரது Pick Pocket என்ற படம் சர்வதேச விருதுகளைப் பெற்றது.) ‘நிழல்’ சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், “மணிரத்தினம் சினிமாக்காரனாக இருந்துகொண்டு அவர் பேசும் விதம் சரி. அது அவருடைய பார்வை. என்னால் அப்படி LTTE பற்றிப் பேச முடியாது. ஏனென்றால் நாங்கள் அவர்களுடன் வாழ்வதினால் அவரைப்போல என்னால் பேச முடியாது. நான் தமிழர்களை மிகவும் நேசிக்கிறேன். என்னால் அவர்களைப்பற்றி தவறாக, விரோதமாகப் பேச முடியாது. அதேநேரம் என்னால் சிங்கள மக்கள் பற்றியும் ஆதரவாகப் பேச முடியாது. எல்லோரும் மனிதர்கள்தான். நாம் பார்க்க வேண்டியதெல்லாம் எங்கே தவறு இருக்கிறது என்பதை மட்டுமே. வெறுப்பு பற்றி அல்ல” என்கிறார். இவரது பொறுப்புமிக்க தன்மை வர்த்தக தமிழ் சினிமாப் படைப்பாளிகளிடம் அறவே இல்லை.

காமினி பொன்சேகா மூலக்கதை எழுத ‘சருங்கலே’ என்ற படம் வெளியானது. இப்படம் யாழ்ப்பாண சாதியத்தையும் சிங்கள இனவெறியையும் விமர்சிக்கின்றது. தாழ்த்தப்பட்ட குடும்பத்து வாலிபனைக் காதலிக்கும் தங்கை பெற்றோரின் எதிர்ப்பை மீற முடியாமல் தற்கொலை செய்கின்றாள். கொழும்பு வரும் நாயகன் இனக்கலவரத்தில் இறக்கிறான்.
இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கிறிஸ்தவ மதம் பரவியமைக்கு காரணம் இந்து ‘உயர்குல’க் கொடுமைகள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத ரீதியாக இந்துக் கடவுள்களையும் வணங்கும் சிங்கள மக்கள் ஏன் தமிழ் மக்களை விரோதிக்கிறார்கள் எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பின்னாளில் காமினி பொன்சேகா « நொமியன மினிசுன்» என்ற தமிழ் ஆதரவுப் படம் ஒன்றையும் நெறியாள்கை செய்திருந்தார்.

இவருக்குப் பின்னர் பிரசன்ன விதானகே, அசோக £ந்தகம, சோமரட்ண திசநாயக்க, விமுக்தி ஜயசுந்தர போன்றோர் தமது படைப்புக்கள் மூலம் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளனர். இவர்கள் முன்வைத்துள்ள கருத்தியல்கள் மிகவும் முக்கியமானவை.

அசோக £ந்தகம
அசோக £ந்தகமவின் This is my moon (இது என் நிலா)
போரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடைகிறாள் ஒருத்தி. சிப்பாய் இவளைக் கண்டதும் சுட முயற்சிக்கிறான். அவள் தனது சங்கிலியைக் கழற்றுகிறாள். ஆனால் அவன் குறி வைப்பதில் இருந்து விலகவில்லை. அடுத்து பாவாடையைத் தூக்குகிறாள். முகத்தை மூடிக் கொள்கிறாள். அவன் புணர்கிறான். அவனைத் தொடர்ந்து அவளும் கிராமத்துக்குச் செல்கிறாள். இவளது வருகை அவனது முறைப் பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. கிராமத்தில் சிப்பாயின் அண்ணன், மாணவன் போன்றோரால் அவள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிறாள். இறுதியாக அருகில் உள்ள பௌத்த விகாரையில் தஞ்சம் அடைகிறாள். மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு பிக்கு காணாமல் போய்விடுகிறார்;. இறுதியில் இப் பெண்ணுக்கு பிறக்கும் பிள்ளையை கைகளில் ஏந்தி இது என் நிலா என்கிறான்.

இங்கு யுத்தத்தின் கொடுமையை பாலியல், மதம் எனபனவற்றின் ஊடாக் காட்ட முற்படுகிறார். யுத்தத்தின் பிரதிபலிப்புகளை சமூக தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். கிராமங்களில் பாலியல் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அதன் வெளிப்பாடு தான் போர்ப்பிரதேசங்களில் இராணுவ வீரர்களின் பாலியல் கொடூரங்கள் என சமாதானம் கூறுகிறாரோ என்ற ஜயமும் எழுகிறது. மனிதனின் வழமையான இயங்குதலை, இருத்தலை தீர்மானிப்பது பாலியலா?

இறுதியாக ;இது என் நிலர் என இராணுவவீரர் கூறும் காட்சி தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் ஒன்ற விடவேண்டுமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. இங்கும் யுத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச சொச்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.

பிரசன்ன விதானகே:

யுத்தம் பற்றிய இரண்டு முக்கியமான படங்களை இயக்கியுள்ளார் பிரசன்ன விதானகே:
.

1962இல் பிறந்த இவர் ஒரு நாடகர். இவர் மொழிபெயர்ப்பு நாடகங்களில் அதிகளவு ஆர்வம் காட்டினார். பெர்னாட் ஷாவின் ; Arms and the man, Rasberries and Trumpets ஆகியன இவர் மொழிபெயர்த்து இயக்கிய நாடகங்களுள் குறிப்பிடத்தக்கவை.

இவரது நான்காவது படம் ; Death On A Full Moon Day பௌர்ணமியில் மரணம். புர £ந்த களுவர. (1997)
இலங்கை இனப் பிரச்சனையானது நேரடியாகக் காட்டப்படாமல், போர்ச் சூழலின் தாக்கம் பாத்திரங்களுடாக காட்டப்பட்டுள்ளது. வறுமையான குடும்பத்தில் பிறந்து பொருளாதாரக் கட்டாயத்தின் சூழலால் இராணுவத்தில் சேர்ந்து வடக்கு நோக்கிச் செல்கின்றான்; பண்டார. போரில் அவனது மரணச் செய்தியை நம்ப மறுக்கின்றார், கண் தெரியாத தந்தையான வன்னிகாமி. ஆனால், மூத்த மகன் இளைய மகளின் காதலன் ஆகியோர் உள்ளுர் அரச அதிகாரியைக் கொண்டு கட்டாயப்படுத்தி தந்தையை நட்டஈட்டுப் பத்திரத்தில் கையொப்பமிட வைக்கிறார்கள். ஆனால் ஒரு நாள் தனது மகனின் கல்லறையைத் தோண்டி சவப்பெட்டியை உடைக்கின்றார். அங்கு மகன் இல்லை. மரக்குத்தியே உள்ளது. இவரது இளையமகளின் காதலனும் இராணுவத்திற்குச் செல்ல விரும்புகின்றான். ஒரு சராசரி வாழ்வுக்கு இராணுவச் சம்பளமே நல்லதென நினைக்கின்றான். இத்திரைப்படம் ஓர் எதிர்நிலையைக் காட்டி நிற்கின்றது. அதாவது மகன் திரும்பி வருவான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும் துக்கரமான யதார்த்தங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றது. இராணுவத்தில் மகன் ஒரு சிறு வீடு கட்டுவதற்கும். தனது சகோதரியின் திருமணத்தை முடிப்பதற்காவும் சேருகின்றான். ஓரு சராசரி வாழ்வுக்கு இராணுவம் தான் சிறந்த தேர்வு என்பதை அரசு சிறப்பாக முன்வைத்துள்ளது. அரசின் வரவு செலவு திட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு போருக்கு பயன்படுத்தப்படும் பொழுது சாதாரண மக்கள் சுகமான வாழ்விற்கு இராணுவத்தை தேர்வுசெய்கிறார்கள்.

ஒரு சராசரி வாழ்விற்கு இராணுவ வேலையே சிறந்தது எனத் தீர்மானிக்கும் அளவிற்கு கவர்ச்சிகரமான சம்பளம், நட்டஈடுகள் என்பன அமைந்துள்ளன. பரனைற் 9ஃ11இலும் கூட மைக்கல் மூர் இதனைக் காட்டியுள்ளார்.

பௌர்ணமியில் மரணம் ;படம் இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது. போரின் வெற்றிக்கான நெறிமுறைகளில் பணம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை வெகு அழகாக வெறிப்படுத்தியுள்ளார் பிரசன்னா.

இவரது அனைத்து படங்களும் குற்ற உணர்வுகளை மையக் கருவாகக் கொண்டு விமர்சிக்கின்றன. நீதி, அநீதி, ஒழுக்கவியல் என்பனவற்றுடன் கலாச்சார அனுபவம் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. தனி, சமூகம், கலாச்சாரம் என்ற இந்த மூன்று கூறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இவை கட்டில் கருதுகோள்களாகவே உலவுகின்றன. சிந்தனாசக்தியின் வெளிப்பாடாக அமையவில்லை. எனவே இவை ஆழமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது இவரது படைப்புகளுக்கூடாக இவர் வைக்கும் விமர்சனம்.

இந்த படங்களில் இருந்து தனது ஐந்தாவது படமான ஆவணி வெய்யில் என்னும் படத்திற்குச் செல்கிறார். இவரது படங்கள் ஒரு வகை யடிளவசயஉவ வடிவம் (நேரடியாகக் கூறப்படாமல் வித்தியாசமான படிமங்களுக்கூடாகக் காட்டப்படுவது) பிரசன்னா இசையில் மிகுந்த கவனம் செலுத்துபவர்.

ஆவணி வெய்யில்
நடிகர்கள்: Peter D’almeda, Nimm, Harsgama

கதைவசனம்: Priyath Liyanage
கருச்சுருக்கம்:
சாமரியின் கணவன் ஓர் இராணுவ விமானமோட்டி. தமிழ்ப் போராளிகளிடம் சிக்கி விடுகின்றான். தமிழ்ப் போராளிகளுக்காக வாதாடும் சிங்களப் பத்திரிகையாளரான பீற்றரின் தொலைக்காட்சிப் பேட்டியின் பின்னர் அவரைச் சந்தித்து அவருடன் தனது கணவனைத் தேடி வடக்கு நோக்கிச் செல்கிறாள்.
வடக்கில் கொந்தளிப்பு. முஸ்லிம் சிறுவன் ஒருவனுக்கு ஒரு நாயுடன் நெருக்கமான நட்பு. தான் தனது பெற்றோருடன் புத்தளத்திற்குப் புலம்பெயரும்பொழுது நாய் கடற்கரை வரையும் வந்துவிடுகிறது. குடும்ப வறுமையால் இராணுவத்திற்குச் சென்றுவிட்டு விடுமுறைக்கு வீடு திரும்பும் னுரஅiனெய (யேஅயட துயலயளiபொந) பாலியல் தொழிலாளர் விடுதியில் தனது சகோதரியும் வேலை செய்வது கண்டு வேதனையடைகிறான். சாமரி வடக்குக்குச் செல்ல முடியாமல் கொழும்பு திரும்புகிறாள். இடையில் அவளுக்குப் பீற்றரின்மேல் நட்பும் ஏற்படுகின்றது. சிறுவனுக்கு புதிய இடத்திலும் ஒரு நாய் கிடைத்து விடுகின்றது. இறுதியில் துமிந்த மீண்டும் இராணுவத்திற்குச் செல்கிறான். சிறுவன் தனது தந்தையுடன் அதேவீதியில் பாரத்துடன் சைக்கிளில் செல்கிறான்.பாதை ஒன்று, பாரமும் பழையதே, இடம் தான் மாறியுள்ளது. சாமரி துமிந்தவுடன் அதே பஸ்ஸில் பயணம் செய்கிறாள். புயணஙகள் மாறவில்லை.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த ப+மியில் இருந்து, சுமார் 4000 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டு, வெளியேற்றப்படுகின்றார்கள். சோதனைச் சாவடியில் சோதனையிடும்பொழுது மேலதிகமாக பணம் கொண்டு சென்றவர்களது பணம் பறிக்கப்படுகின்றது. ஏனிந்த நாலாயிரம்? ஏனிந்த வெளியேற்றம்? பிரசன்ன கேள்விக் குறியுடன் எதிர் நோக்குகிறார். முஸ்லிம்கள் புலம்பெயர்க்கப்பட்டமையை சிறப்பாகப் பதிவாக்கியுள்ளார் பிரசன்ன. சாமரி,முஸ்லிம் தந்தை, மகன் டமிந்த அனைவரும் ஒரே வீதியில் பயணிக்கின்றனர். இனப்பிரச்சினை வேறெங்கும் நகரவில்லை. எதில் தொடங்கப்பட்டதோ அதில்தான் இன்றும் உள்ளது.

இப்படத்தில் பல காட்சிகள் கவனத்திற்குரியவை. முதலில் உறவு முறைகள், பௌத்த சிங்களக் கலாச்சார விழுமியங்கள் உள்ள சூழலில் சாமரி தனது பள்ளிக் காதலனுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்கிறாள். இதே கலாச்சாரச் சூழலில் வாழும் துமிந்தவின் சகோதரியை வறுமை பாலியல் தொழிலாளியாக்குகின்றது.

இவரது முன்னைய படங்களிலும் உறவு முறைகள், சமூக வழக்காறுகள் என்பன உடைக்கப்படுகின்றன. தமிழ்ச் சமூகச் சூழலில்கூட இவ்வாறான சம்பவங்கள் (வயலட்டின் பாத்திரம்) -திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்தல்கள் நடைபெறுகின்றன. சாமரியின் தனிமை அவளைப் பீற்றரின்மீது நாட்டம் கொள்ளச் செய்கிறது. அபர்ணா சென்னின் Mr and Mrs Iyer இவ்வாறான சம்பவங்களைக் கொண்டது.

இங்குகூட, சாமரியின் குற்ற உணர்வுதான் தனது கணவனைத் தேடி வடக்கு நோக்கிச் செல்ல வைக்கிறது. இது இவள்மீது சமூகத்தால் சுமத்தப்பட்ட நிர்ப்பந்தம். மறுபுறம் நினைவுகளின் சித்திரவதை அவளை வாட்டி எடுக்கின்றது. தனது வாழ்வை ஒரு கோப்பியுடன் காலையில் ஆரம்பிக்கும் அவள், படம் முடியும்பொழுதும் அதே கோப்பியுடன் தொடங்குகிறாள். துமிந்தவின் குற்ற உணர்வு, வறுமை என்பன மீண்டும் அவனை இராணுவத்திற்குச் செல்ல வைக்கின்றது.

இவரது பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. பிரசன்ன தன்னையும் இங்கு விசாரணைக்கு உட்படுத்தத் தவறவில்லை. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் கருத்துக்களை முன்வைக்கின்றார். சர்வதேச விழாக்களில் காட்டப்பட்ட இவரது திரைப்படத்தில் இவர் முன்வைத்த தமிழ்த் தேசியம் குறித்த கருத்துக்கள் முக்கியமானவை. படத்தில் பல உத்திகள் கையாளப்பட்டுள்ளன. முதலாவது நிறம். பளீரென நீலம், பின்னர் கடற்கரையில் செல்ல முடியாமல் இருக்கும்பொழுது கடும் மஞ்சள் என்று இவை குறியீடாக வந்து போகின்றன. பாத்திரங்களின் மனோநிலையைக் காட்டவும் நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் அவதானத்துடன் கையாளப்பட்டுள்ள இசை, பல இடங்களில் மௌனம் காத்து அசை போடுகின்றது.

கிரிக்கட் வா ;ணனை (உழஅஅநவெயசல) – போரில் உயிர்கள் இறந்து மடியும்பொழுது கிரிக்கட் ஓட்டங்களின் எண்ணிக்கையில் மக்கள் களிப்படைகின்றனர். 1982ம் ஆண்டு மாசி மாதம் 17ம் நாள் இலங்கை தனது முதலாவது டெஸ்ட் ஆட்டத்தை இங்கிலாந்துடன் P.சரவணமுத்து மைதானத்தில் விளையாடியது. அன்றில் இருந்து இன்றுவரை கிரிக்கட்டில் பெற்ற வளர்ச்சி அதே காலகட்டத்தில் உச்ச நிலையை எட்டிய தேசிய இனப் பிரச்சனையை தீர்ப்பதில் பெறப்படவில்லை என்பது உண்மையே. (இந ;த 24 வருடங’களில், இலங ;கை அணிக்காக விளையாடிய தமிழ ;வீரா ;கள ; வெறும் சிலரே. (நால ;வா ;)(முரளீதரன், ருசல ; ஆனல ;ட ;,வினோதன் ஜோன் சிறிதரன ; ஜெகனாதன்.)

படத்தில் வரும் பாத்திரங்கள் கிரிக்கட் வெற்றியில் காட்டும் ஆர்வங்களை உயிர்கள் மேல் காட்டவில்லை. இப்படம் போர் ஏற்படுத்திய புதிய சூழலில் ஏற்பட்டுள்ள இனக்கவர்ச்சி விளம்பரங ;கள் இலங்கைத் தேசிய இனப் பிரச்சினையின் அன்றாட அனர்த்தங்களையும் வறுமை நிலையையும் மறைக்க பயன்படுத்தப்படுகின்றது என்பனதனை விமர்சனமாக முன்வைக்கின்றது. மீண்டும் மீண்டும் அதே இடத்தில்தான் மக்கள் வசிக்கத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று குற்றஞ ;சாட ;டுகிறார் பிரசன்னா.
பிரசன்ன தனது படைப்புகள் அனைத்திலும் மனித நினைவில் சிக்கலான முன்னறிந்து கொள்ள முடியாத செயற்பாடுகளின் நேரடி விளைவுகளாகக் குற்ற உணர்வு தோன்றுகின்றது என்ற கருத்தை முன்வைக்கத் தவறவில்லை. வோல்டர் பெஞ்சமின், பிராய்ட் ஆகியோரின் கருத்தாக்கங்களை உள்வாங்கியுள்ள இவரது படைப்புகள் சிங்களத் திரைப்பட உலகையும் அது சூழ்ந்துள்ள சமூகத்தையும் விசாரணைக்குட்படுத்துகின்றது. இந்த ஆவணி வெய்யில் கடும் குளிரில்கூடப் பிரகாசிக்கின்றது. சுற்றுச்சூழல் வெப்பநிலையை அதிகரிக்கின்றது. இப்படத்திலும ; போரில் பணத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2005 ல் வெளிவந்த மியனிச என்ற படத்தில் பணம் பல கொலைகளை செய்வதற்கு எவ்வாறு உதவிசெய்கிறது என்பதை சிறப்பாக பதிவு செய்துள்ளது.

சோமரட்ண திசநாயக்கா

சரோஜா:
புலிகளால் தேடப்படும் தந்தையும் மகளும் சிங்களக் கிராமமொன்றில் ஒளிந்து வாழ்கின்றனர். மகள் குளிக்கச் செல்லும்பொழுது ஒரு சிறுமியின் நட்புக் கிடைக்கின்றது. அதன்மூலம் தந்தைக்கும் சிறுமிக்கும் ஆதரவு கிடைக்கின்றது. தந்தையின் உடலில் உள்ள தமிழ் இலச்சினை மூலம் இவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவளிக்கும் கிராமத்தை நீதிமன்றம்வரை செல்ல வைக்கிறது. இறுதியில் ஊரால் விரட்டப்பட்டு மன்னார் செல்லும் முன்னர் புலிகளால் தந்தை சுட்டுக் கொல்லப்படுகிறார்.
இதிலும முன்னர் கூறிய சிங்கள மக்களுடனான ஐக்கியம் என்கின்ற கூறு முன்வைக்கப்படுகின்றது.

குட்டி தேவதை:

தமிழ்-சிங்களப் படம். ‘குட்டி தேவதையொன்று இறங்கி வந்தது’ என்ற தமிழ் பாடல் படம் முழுவதும் இடம்பெறுகின்றது.
பேசமுடியாத முதலாளியின் மகன், வேலைக்காரனின் மகளுடன் நட்பாகி பேசக் கற்றுக் கொள்கிறான். ஆனால் மொழி சிங்களமல்ல தமிழ். இனக் கலவரத்தின்போது வேலைக்காரத் தந்தை இறந்து விடுகின்றார். சிறுமியை தாய் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றாள். முதலாளி தான் சிறுமியைத் தனது மகள் போல் வளர்ப்பதாக உறுதி கூறுகின்றான். ஆனால் தாய் உயிர்போனால் திரும்பி வராது. நாங்கள் மீண்டும் வருவோம் எனக் கூறுகிறாள். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு மொழிபெயர்ப்பாளராக சிறுமி கடமையாற்றுகிறாள். தாயும் மகளும் வெளியேறியதுடன் முதலாளியின் மகன் மீண்டும் வன்முறையில் இறங்கிவிடுகின்றான்.
மொழி என்பது இருவருக்கிடையிலான செய்திப் பரிமாற்றத்துக்கான ஊடகம். அதிகாரம், மேலாதிக்கம் என்பன இதனை இன்று கொலை செய்து விடுகின்றன. இப்படம் வர்க்கரீதியான விமர்சனத்தை முன்வைப்பதுடன் மொழிபற்றிய ஆழமான கேள்வியை இரு சமூகத்தின் முன்னும் வைக்கின்றது.

இவரது ‘சரோஜா’ படத்தைவிட பல படிகள் மேலே சென்று ஆழமான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளது. ஒடுக்கப்பட்டவரின் மொழியானது ஆதிக்கத்தில் உள்ளவர்களால சுய நல தேவையை ஒட்டி; ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இப்படத்தில் வரும் பாத்திரங்கள் மாறுபட்டிருந்தால? அதாவது முதலாலி குடும்பம் தமிழாக இருந்து , சிறுவன் சிங்களம் பேசக் கற்றிருந்தால் நாம் அதனை ஏற்றுக் கொள்வோமா?

விமுக்தி ஜயசுந்தர

The Forsaken Land:

விமுக்தி ஜயசுந்தரவின் இப்படம் கான் விழாவில் விருதுபெற்றது. திருகோணமலை பிரதேசத்தில் போர்நிறுத்த காலத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. ஓரு சிவில் பாதுகாப்பு வீரர். வேலைக்கு போகும் இளம் பெண்மணி, ஒரு கோழி வியாபாரி. போர் நிறுத்தமாகையால் நேரத்தை போக்க முயற்சிக்கும் பொழுது இப் பெண்மணியை காண்கிறார். கதைப்பதற்கு முயற்சிக்கிறார். ஆனால் கதைக்கவில்லை. நாட்கள் நகர்கின்றன. கோழி வியாபாரி ஒரு வித மன நோய்க்குள்ளாகிறார். பெண்மணி கடை ஒன்றில் திருடியதாக கூறி கடைக் காவலாளி அவளது உடைகளை களைய முயற்சிக்க பிளேட்டால் தாக்கி விட்டு தப்பிக் கொள்கிறாள். சிவில் பாதுகாப்பு வீரர் மீண்டும் போருக்கு ஆயத்தம் செய்கிறார்.

இயக்குனர் தனது கருத்தை கோழி வியாபாரிக்கூடாக கூறுகிறார். கிராமத்தில் உயிருடன் வாங்கும் கோழியை, கொன்று பதப்படுத்தி, குளிரூட்டியில் வைத்து விற்பனை செய்கிறார். கொல்லப்பட் கோழி குளிரூட்டியால் நீண்ட காலம் வாழ்கிறது. ஏன் இந்த நீண்ட போர் நிறுதத்ம்? கோழியின் வாழ்வா?

திருகோணமலை இன்று பலரால் குறிவைக்கப்பட்டுள்ள பிரதேசம். இப்பிரதேசமும் இங்கு ஓர் குறியீடே. ஒரு கவித்துவமான முயற்சி.

சிங்களப் படைப்பாளிகள் சென்ற ஆண்டு இலங்கை இராணுவத்தின் கண்டனத்திற்கு உள்ளாகினர். அமெரிக்காவைப் போல் இங்கும் இவர்களைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போருக்கெதிரான படங்களைத் திரையிடுவதைத் தடைசெய்தல் போன்றன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பல படங்கள் இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன.

பிரசன்ன விதானகே குறிப்பிட்டதுபோல, சிங்கள அரசியல்வாதிகளின் குற்றவியலை விசாரணைக்குட்படுத்தி உள்ளன இப்படங்கள். அதன் விளைவே தடை, தண்டனை. சிங்களப் படைப்பாளிகள் நேர்மையாகத் தங்களது விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
தமிழ் நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள் இலங்கை இனப்பிரச்சினையை வியாபாரமாக்குகின்றனர். மாங்குளத்தில் சிவனொளிபாத மலையை வைக்கிறார்கள்.

ஆனால் சிங்களப் படைப்பாளிகளுக்குள்ள சுதந்திரம் இலங்கைத் தமிழ் படைப்பாளிகளிடம் உள்ளதா? அதனை அவர்கள் வெளிப்படுத்துவார்களா?

உண்மையில் தமிழ்த் தேசியத்தை வளர்க்க முற்போக்குச் சிந்தனையுடைய சிங்களப் படைப்பாளிகள் உதவி புரிகிறார்கள். தமிழ்த் தேசியத்தை தமிழ் படைப்பாளிகள் நேர்மையுடன் விமர்சிப்பார்களா?

இப்படங்கள் கலைப்படங்கள் வகையை சேர்ந்தவையல்ல. ஆனால் இந்திய சினிமா தாக்கம் குறைந்த சிங்கள சினிமா சூழலில், இவை காத்திரமான பங்கை அளிக்கும்.இங்கு சினிமா இயங்கியாக மாறி சமூக சுத்திகரிப்பு செய்கிறது. இவை போர் நிறுத்தம், சமாதானம், போர் வாழ்வு, இராணுவ ஆட்சேர்ப்பு , மொழி, ஊடகம் போன்றன பற்றி பற்றி கேள்வியை எழுப்பகின்றன. இக் கேள்விகளை எங்கள் மீது கேட்போம். எங்களை விசாரணைக்குட்படுத்துவோம்.

நன்றி – உயிர் நிழல்


rathan@rogers.com

Series Navigation