ஞாநியின் ‘மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள் ‘ பற்றிய ஒரு எதிர்வினை.

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

ஜெ. ரஜினி ராம்கி


ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனபிறகு திரைப்பட வர்த்தக சபையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித்தலைவியாக ரஜினி விளித்தது அரசியல்வாதியின் பேச்சு போல இருந்தது என்று சொன்ன (மறுபடியும், தினமணி கதிர், 28.4.1996) ஞாநிக்கு, வீரப்பன் விவாகாரத்தை திறமையாக கையாண்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவை தைரிய லட்சுமியாக ரஜினி புகழ்ந்ததும் அரசியல் பேச்சாகத்தான் தெரியும்.

1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழுந்த ஜெயலலிதா எதிர்ப்பு அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக பயன்படுத்திக்கொண்டதை போல இப்போதிருக்கும் ஜெயலலிதா ஆதரவு ( ?) அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக ரஜினி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்று எழுதிவிடாமல் ஞாநி மறந்து போனதுதான் ஆச்சர்யம்.

– ஜெ. ரஜினி ராம்கி

rajni_ramki@yahoo.com

Series Navigation