ஜெயகாந்தன் பேட்டி

This entry is part [part not set] of 10 in the series 20000924_Issue

பகுதி 2

திண்ணை : ‘ரிஷிமூலம் ‘ பற்றிப் பேசலாம். பொதுவாகவே தமிழ் நாட்டில் செக்ஸ் பற்றிய புரிதல்கள் குறைவு. ஒரு பக்கம் ஆபாச வக்கிரங்களும், இன்னொரு பக்கம் அது பற்றிய அறிவின்மையால் பலர் மன அவசங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ‘ரிஷி மூல ‘ த்திற்கு நிறைய எதிர்ப்பு வந்தத்து. ஒரு பைத்தியக்காரனின் கதை என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாத அளவுக்கு அந்த மனப் பிறழ்வை ஏற்றுக் கொள்ள முடியாத சமூகமாய் நம் சமூகம் இருந்தது உங்களுக்கு வருட்த்தம் தந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதன் விளைவு தான் ‘ரிஷிமூலம் ‘ போலும்.

ஜெயகாந்தன் : ராஜாராமன் ஒரு ரிஷி. ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். நான் பார்த்தேன் . அது தான் கதை. எடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்பது ஒரு பருவத்தில் எல்லோருக்கும் வருவது தான். எடிபஸ் காம்ப்ளெக்ஸ் உள்ளவர்கள் தம்மை விட வயதானவர்கள் மேல் காதல் கொள்கிறார்கள். அல்லது, வயதானவர்களின் அன்புக்கு காதலுக்கு ஆட்படுகிறார்கள். அது தான் ராஜாராமனுக்கு நேர்ந்தது. ஆனால் இதன் வடிகால் செக்சுவல்-ஆக இருக்கும் போது , இந்திய மரபின் உறுத்தல் அவனை ரிஷியாக்கி விட்டது.

திண்ணை : சாரதா மாமி இதில் தெளிவாய் இருக்கிறார்கள். இது நடக்கிறது, இதைத் தூக்கிப் போட்டு விட்டு முன்னே போக வேண்டும் என்று முதிர்ச்சியுடன். .

ஜெயகாந்தன் : சாரதா மாமியின் முதிர்ச்சியும் , குழந்தையை மன்னிக்கிற மாதிரியான போக்கும் அவனுக்கு இருக்க முடியாது. அவன் இதனால் பாதிக்கப் பட்டுவிட்டான். இல்லாவிட்டால் அவன் ரொம்ப நிஜமா ஒரு வடுவுமில்லாமல் இருந்திருந்தால், அவன் பெரிய எல்லோரும் போற்றத்தக்க ரிஷியாய்க் கூட ஆகியிருக்கலாம். சாரதா மாமியுடன் ஏற்பட்ட உறவு அவனை வடுப் படுத்தி விட்டது.

திண்ணை : ஆடும் நாற்காலிகளில் ஆடுகின்றன – வில் அம்மாப் பிள்ளைகளாய், செக்ஸை வெறுக்கச் சொல்லிக்கொடுக்கப் படுகிற,வளர்ந்தும் வளராத முறையில் நான்கு பேர் வருகிறார்கள்.

ஜெயகாந்தன் : அம்மாவின் possessiveness .எவ்வளவு கொடூரமானது என்று நான் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை நான் பார்க்க நேர்ந்தது. அதில் வருகிற போட்டோகிராபர் தான் நான். ஒரு பெண்ண்டுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட போது, அவர் வீட்டில் பயந்து, எங்கே என்னுடன் வந்து விடுவாளோ என்று பயந்து பெண்ணை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டுப் போவாள் அவள் அம்மா. அந்தப் பெண் mental patient ஆகவே ஆகி விட்டார். எல் ஐ சியில் ஆபிஸர். பிறகு நானே அந்தப் பெண்ணை தகுந்த மன வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போய் காண்பித்து , குணப்படுத்தி சீட்டில் உட்கார வைத்து ‘குட் பை ‘ சொல்லி விட்டு வந்தேன். பிறகு கல்யாணம் கூடச் செய்து கொண்டார். Now she is no more. அதனால் தான் இதைச் சொல்கிறேன். நிஜமாகவே நடந்த ஒரு குடும்பத்தின் கதை.

திண்ணை: சிறந்த நாடகத் தன்மை வாய்ந்த கதை இது.

ஜெயகாந்தன் : Right. அப்போது நான் நிறைய டென்னஸி வில்லியம்ஸ் படித்தேன். அதை நாடகமாக எழுதத் தான் ஆசைப் பட்டேன். நாடகமாக எழுதி என்ன செய்வது ? அதை நடிக்க வேண்டும். அது இன்னொரு வேலை. எனவே நாடக உத்திகளைக் கையாண்டு பல சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். அதில் சிறப்பாய் வந்த ஒன்று ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன. ‘

திண்ணை : பல வருடங்கள் முன்பு, சிங்கத்தின் குகையிலேயே சந்திப்பது போல பெரியாரை அவரின் மேடையிலேயே விமர்சித்தீர்கள். சிறப்பாக உங்களுக்கு ஒரு following உருவாகக் காரணமாய் இருந்தது மட்டுமில்லாமல், பல பேரை சுய விமர்சனம் செய்து திரும்பிப் பார்த்துக் கொள்ள உதவியது அந்தப் பேச்சு. யார் கட்டளையையும் ஏற்று எழுத முடியாது என்று அவரிடம் சொன்னீர்கள். ஆனால் பல வருடங்கள் கழித்து சங்கராசாரியாரின் கட்டளையை ஏற்று எழுதுவதாகத் தெரிவித்து, ‘ஜய ஜய சங்கர ‘ எழுதினீர்கள். ஆக பெரியாரிடம் நீங்கள் சொன்னது ‘உங்கள் கட்டளையை ஏற்றுக் கொள்ள முடியாது ‘ என்பதாகத் தான். இல்லிஅயா ?

ஜெயகாந்தன் : ஆமாம். கட்டளையை ஏற்றுக் கொள்ள முடியாத போது தான் அப்படிச் சொல்கிறோம். நம்முடைய மனப் போக்கிற்கு ஏற்ப அவர்கள் கட்டளை அமையுமாயின் அதை யோசனையாகவே ஏற்றுக் கொள்கிறோம். நம்முடைய மனப் போக்கிற்கு உகந்தததாய் கட்டளை அமையாவிட்டால், உன் கட்டளைக்குப் பணிய மாட்டோம் என்று மறுத்து விடுகிறோம். இது தான் நான் பெரியாரிடம் (மறுத்துச்) சொன்னதும், ஆசாரிய சுவாமிகளை ஏற்றுக்கொண்டதும். மக்களுக்குப் பிடிக்கிறது என்பதற்காக மோசமான விஷயங்களை எழுதக் கூடாது. நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. மக்களுடைய ஆத்ம அபிவிருத்திக்காக நீங்கள் எழுத வேண்டும் என்று அவர் சொன்னது என்னுடைய கொள்கை. என்னுடைய கொள்கை என்று சொல்வதை விட , ஒரு பெரியவர் மேலே பாரத்தைப் போட்டு சொன்னால் அதன் பலன் நன்றாய் ஒருக்கும். இன்னும் சொல்லப் போனால், மற்றவர்கள் கட்டளையை ஏற்று எழுதியவனே நான். எனக்குக் கட்டளை இட்டவர்கள் கம்யூனிஸ்டுகளாய் இருந்தார்கள். நமக்குப் பிடித்தவர்கள் நமக்குப் பிடித்தமாதிரி கட்டளை இட்டால் நாம் ஏற்றுக் கொள்கிறோம். பெரியாரின் கட்டளை ரொம்ப முரட்டுத் தனமாய் இருந்தது. ராமாயணம், மகாபாரதம் எல்லாத்தையும் கொளுத்தாமல் நீ என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று அவர் கேட்டது எனக்கு உகந்ததாய் இல்லை என்பதால் நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. பிரசங்கத்தை ஆரம்பிக்கும் போதே ‘எல்லோரையும் கேள்வி கேட்கிற தைரியத்தைக் கொடுத்தவர் நீங்கள் தான். உங்களிடமே கேள்வி கேட்டுத் தொடங்குகிறேன். ‘ என்று தான் ஆரம்பித்தேன். அவரை விமர்சனம் செய்து அவரிடமே பாராட்டுப் பெற்றேன்

திண்ணை : பெரியார் ராமாயணம், மகாபாரதம் மீது இலக்கிய விமர்சனம் வைக்க வில்லை, இப்போது பெண்ணிய விமர்சகர்கள் பழைய இலக்கியங்களில் உள்ள பெண் விரோதக் கருத்துகளைச் சுட்டிக் காட்டுவது போல், பெரியார் அவர் கோட்பாட்டுக்கு விரோதமான கருத்துக்களை ராமாயணம் , மகா பாரதம் இவற்றில் சுட்டிக் காட்ட முனைகிறார். அதைத் தூக்கியெறி என்று அவர் சொன்னது முரட்டுத் தனமாக இருக்கலாம். ஆனால், . .

ஜெயகாந்தன் : ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் புறக்கணித்த ஒருவன் இந்தியாவில் இலக்கியம் பண்ணவே லாயக்கில்லாதவன். அதிலேயிருந்து தான் பல சிந்தனைகளும், கருத்துகளும் நமக்கு வருகின்றன. வேரை அறுத்து விட்டு மரத்தை வளர்க்க முடியுமா ? அது இலக்கிய சம்பந்தமில்லாத விஷயம் , எனவே தான் அதனை நான் மறுத்தேன்.

திண்ணை: அவருடைய பிராமணீய எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு நியாயம் இருந்தது — ஒரு பத்து சதவீதமாவது இருந்தது — என்று நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ?

ஜெயகாந்தன் : அந்த நியாயத்தை நான் பகிர்ந்து கொள்ளவே மாட்டேன். பிராமண ஆதிக்கமாய் இருந்தால் என்ன , சூத்திர ஆதிக்கமாய் இருந்தால் என்ன ? இன்றைக்கு தமிழ் நாட்டில் நடப்பது சூத்திரர்களின் ஆதிக்கம் என்று சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா ?

திண்ணை : ஒப்புக் கொள்வேன்.

ஜெய காந்தன் : ஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும். இந்த ஆதிக்கத்திற்குப் பதிலாக , அந்த ஆதிக்கம் என்று சொல்வது மாற்றாகாது. அது ஆதிக்கக் காரர்களுக்கிடையே நடந்த போட்டி என்று தான் நான் நினைக்கிறேன். படித்த மேல் வர்க்கத்து முதலியார்களுக்கும், பிராமணர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் எனக்குச் சம்பந்தமில்லை, உழைக்கிற, பாடுபடுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள். வஞ்சிக்கப் படுகிற , சுரண்டப் படுகிற பிராமணர்களும் இருக்கிறார்கள்.

திண்ணை : தனிமனித அளவில் நீங்கள் சொல்வது உண்மையாகலாம். ஆனால் civil rights -க் கான சமூகப் போராட்டத்தில். . .

ஜெயகாந்தன் : சமூக அளவிலேயே தான் நான் சொல்கிறேன். ஒளரங்க சீப் பண்ணின கொடுமைக்கு, இன்றைக்கு உள்ள முஸ்லீம்களைப் பகைத்தால் எப்படி ? பிராமணக் கொடுமை என்றைக்கோ நடந்தது என்பதற்காக, இன்று வளர்ந்து, மாறிவந்திருக்கும் பிராமணர்கள் மீது பகைமை கொள்ளத் தூண்டுவது சரியாகாது. இலக்கிய தர்மமாகாது. அரசியலுக்கு வேண்டுமானால் அது அவசியமாய் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் முதலாளி தொழிலாளி விஷயத்தையும் நான் இப்படித் தான் பார்க்கிறேன். 18-ம் நூற்றாண்டின் முதலாளித்துவம் அழிந்து விட்டது . இன்றுள்ள நவீன , வளர்ந்திருக்கும் முதலாளித்துவம் சோஷலிசத்தை விட முற்போக்காக இருக்கிறது. இன்றைக்கு முதலாளித்துவம் அழிந்து தான் தொழிலாளி வர்க்கம் வளர வேண்டுமென்பதில்லை. இரண்டும் இணைந்து, உலகத்தை வளர்க்கிற ஒரு போக்கு இருக்கிறது. Harmonisation தான் முக்கியம். பகைமையை வளர்ப்பது இலக்கியப் பண்பாகாது.

(தொடர்ந்து வரும்.)

Series Navigation