சொந்தக் கதை, சோகக் ……..

This entry is part [part not set] of 14 in the series 20010115_Issue

ஆகேஷ்

அனைவருக்கும் வணக்கம்.

ஏதோ என் சோகத்தை பகிர்ந்தக்கணும்னு தோணித்து. பொியவா எப்பொழுதும் சொல்லிண்டே இருக்கா, அடுத்தவா உடைய சோகத்தை பகிர்ந்திருக்கிறதுதான் பொிய சந்தோஷம்ன்னு. அதே மாதிாி, நம்முடைய சோகத்தை பகிர்ந்துகிட்டா சோகம் பாதி ஆயிடும்னு.

என்ன பண்றது சொல்லுங்கோ, சின்ன வயசில் இருந்தே புலம்பறது என் கூட பிறந்ததுன்னு ஒரு எண்ணம். எனக்கு பள்ளியில் கூட ‘புலம்பல் பத்து ‘ ன்னே செல்ல(!)ப் பெயர். சில காலத்திற்கு பிறகு பத்பனாபன்னு (பெற்றோர் இட்ட நாமகரணம்) கூப்பிட்டா கூட திரும்ப மாட்டேன்னு ஆயிடுத்து. அப்படி புலம்பல்க்கும் எனக்கும் ஒரு Fevicol தொடர்பு.

அட எதையோ சொல்ல ஆரம்புத்து எதையோ சொல்லிக்கிட்டு, மன்னிக்கனும் புலம்பிகிட்டு இருக்கேன் பாருங்கோ.

நான் கல்லூாி முடித்த சமயத்தில் கூட மற்றவர்கள் மாதிாிதான் இருந்தேன்.என்ன ? என்று பலாின் ஒற்றை புருவம் ஒயர்வது தொிகின்றது. எனக்கும் நன்றாகத்தான் தலையில் முடி இருந்தது. ஆனால் அந்த சம்பவம் என் 22ம் வயதில் நடந்தது. எங்கள் மதுரை காகாத்தொப்பு தெரு (என்ன பெயரோ !) ஒண்டிக்குடுத்தன மொட்டை மாடியில் அன்று காலை கண் விழித்து, எப்பொழுதும் போல் வாிசையில் நின்று பாத்ரூமில் நுழைந்த போதுதான் கவனித்தேன். எந்த நாவிதனோ தூங்கும் போது கத்தியால் சீவி விட்ட மாதிாி முன் தலையில் லேசாக ஒரு வடு. அங்கிருந்த முடி எல்லாம் போயே போச், போயிந்தே !! எப்பொழுதும் என் அருகில் படுக்கும் கிச்சா தூக்கத்தில் கடிச்சிருப்பானோ என்று உடனே ஒரு பயம். கிருஷ்ணசாமி, கிருஷ்ணன் என்றேல்லாம் பெயர் வைத்தால் எப்படியும் உலகம் அவனை ‘கிச்சா ‘ என்றே கூப்பிடும் என்று தொிந்து ‘கிச்சா ‘ என்றே அவனுக்கு பெயர் சூட்டி இருந்தார்கள் அவன் தீர்க்க திருஷ்டி பெற்றோர். ஆனால் அவனும் அன்று NIGHT SHOW போயி விட்டு வந்து மொட்டை மாடியில் படுக்கவில்லை என்று உரைத்தது. அம்மாவை அலறியடித்துக் கொண்டு கேட்டால், கரப்பான் பூச்சி எச்சை படுத்தி இருக்கும் (அது என்ன குழந்தை ! எங்கு வேணாலும் எச்சை பண்ண !) என்று அடுத்த கதவு பாட்டியிடம் ஒரு களிம்பு வாங்கி தந்தார்கள். சின்ன வயதிலேயே விதவையாகி அன்றே மொட்டையடிக்கப்பட்டு இன்று வரை அப்படியே இருக்கும் அப்பாட்டியிடம் இதற்கான மருந்து இருந்தது என்பது அவளுக்கே தொிந்த சிதம்பர ரகசியம். ஆனால் நாளோரு பொழுதும் பொளுதொரு வண்ணமாய் எச்சம் பட்ட விட்டம் பொிதாகிக் கொண்டே போனது ஒழிய, குறையவில்லை. என் Medical Representative வேலையும், அதோடு இரட்டை குழந்தையாக வரும் வெயியில் அலைச்சல், சென்ற ஊாில் கண்ட தண்ணீாின் எாிச்சல் ஆகியவை என் வழுக்கையோடு நண்பர்கள் ஆகிப் போயின.

சில காலம் கழித்து கண்ணாடியின் முன் நேரே நின்றால்,இது வேறே யாரோ என்று பயப்படும் நிலைக்கு போயி, அதிர்ச்சியாகி ஒரு நாள் ஓடிச் சென்று கீழ மாசி வீதியின் எங்கள் ஒண்டிக்குடுத்தன டாக்டாின் முன் நின்றேன். அவர் மாத்திரையின் சக்தியால் அதீத வேகத்துடன் என் வழுக்கை வளர்ந்ததே ஒழிய குறையவில்லை. சாி , குடும்பத்தில் யாருக்காவது வழுக்கை இருந்தால் வரும் என்று ஒருவர் சொல்ல , என் குடும்ப மரத்தை (FAMILY TREE !) பார்க்கத் தொடங்கினேன். ஒரு PhD பட்டம் பெறும் அளவுக்கு ஆராய்ந்த பின்னும் , வழுக்கை பெண்களே மாட்டினார்கள் தவிர , ஆண்கள் இல்லை. வெளியே சென்றால் ‘என்ன REAL ESTATE business ஆ ? இவ்வளவு இடம் தலையில் வாங்கி போட்டு இருக்கியே ? ‘ என்று தொிந்தவர்களின் இளக்காரம் வேறு.

இதை விடக் கொடுமை, என்னை தொிந்தவர்கள் யாராவது பார்த்தால் தான். ஒரு சமயம் பாங்க்கில் நிற்கும் போது ஒருவர் ‘ என்ன பத்து , என்னை தொிகிறதா ? ‘ என்றார். எனக்கோ கற்பூர நினைவாற்றல் எதற்கும் இருக்கட்டும் என்று ‘பார்த்த மாதிாி இருக்கு ‘ என்றேன். ‘நான் யாருன்னு கரெக்டா சொல்லு ‘ என்று நக்கல் வேறு. இந்த மாதிாி ஆட்களை வீரப்பனிடம் கைதிகளாக அனுப்ப வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. பிறகு தான் யாரன்று தானே சுயவிளம்பரம் செய்து கொண்டு, ‘ என்ன பத்து, திருப்பதிக்கு போயிட்டு வந்தியா ? முடி இறக்கி இருக்க, பொிய வேண்டுதல் போல் இருக்கு ‘ என்று எாியும் வழுக்கையில் அமிலம் ஊற்றி சென்றார்.

உங்களிடம் சொல்றதுக்கென்ன , எனக்கு வரும் கனவுகளை கேட்டால் சிாிப்பீர்கள். சுற்றி இருப்பவர் எல்லாம் மொட்டையாக, நான் மட்டும் MTV பாப் பாடகர்கள் மாதிாி தோள் வரை தொங்கும் முடியுடன் தான் முக்கால் வாசி கனவு, கனவு கலைந்து உடனே ஓடிச் சென்று கண்ணாடியில் பார்த்த சம்பவும் ஓண்டு.

எனது வயது 30தை நெருங்கும் போது, தீடிரென்று என் அம்மாவிற்கு தன் மருமகளை பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆகவே பெண் தேட ஆரம்பித்தார்கள் எனக்கு. என் கழிவிறக்கம் என்னை காதலிப்பது பற்றி யோசிக்க விட்டதேயில்லை. என் அம்மாவின் ஆசைக்கு இணங்கி அம்மா பார்த்த பெண்ணை பார்க்கச் சென்றேன். புகைப்படம் பார்க்காததால், நேரே பார்த்ததும் அதிர்ச்சியானேன். இவ்வளவு நீழ கூந்தலா, இல்லை சவுாியா ? தனியாக எப்படியாவது கேட்டு விட வேண்டும் என்று எண்ணி , அடுப்பங்கரையின் ஓரத்தில் சந்திக்க வைக்கப் பட்டோம். நான் ஏதும் கேட்கும் முன்னே, அகிலாவே (ஹா ஹா அதான் அவள் பெயர்) அழத் தொடங்கினாள். ஏதோ புதுவித வியாதியால், முடியெல்லாம் கொட்டி விட்டதென்றும், வைத்திருப்பது விக்தான் என்றும், இதனால் தான் இத்தெனை நாள் கல்யாணம் ஆகவில்லை என்றும் ஏதேதோ பினாத்தல்கள்…. நான் எங்கே கேட்டேன், வானத்தில் மிதந்து கொண்டிருந்தேன்.பிறகென்ன , முடியும் சீ சீ குடியும் குடித்தனமுமாய் இருக்கிறோம்.

இருந்தாலும் Sir, இன்னும் வழுக்கைக்கு காரணம் கரப்பான் பூச்சியா, அலைச்சலா,குடும்ப ஜ ‘னா என்று இன்னும் தொியவில்லை. ஒரு நல்ல டாக்டர் தொிந்தால் கூறுங்களேன் ! எனக்கும் என் மனைவிக்கும் …..

Series Navigation