திலகபாமா சிவகாசி
அவளுக்கும்
அவனுக்கும்
இடையில்
இன்னொரு நிலா
பொறுமையில் பூமியாய் அவள்
தகிக்கும் சூரியனாய்
தாலி கட்டியவன்.
வந்து மறையும்
வண்ண நிலவாய்
பகலவன் ஒளியை
பறித்துக் கொண்டு
பூமிக்கும்
சூரியனுக்கும் இடையில்
புகுந்து விட்ட நிலா.