சிவாஜி

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

கோவிந்த்பல நாள் பார்க்க ஏங்கிய படம்.
துணிச்சலுடன் நாளைய நிலையை நமக்கு பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது.
லட்சியமுடன் வாழ்ந்தவன், இன்று தெருவில் தள்ளிவிடப்பட்டு பஸ்ஸில் செல்வதற்கு மட்டும் எதிரிகளால் தரையில் வீசும் காசை குனிந்து எடுத்து நடக்கும் நிலைமை…
ஆனால், காசை எடுக்க குனிந்தவன் நிமிர்கிறான்….. நாளைய சமுதாயத்தின் வாழ்க்கைக்காக ஒரு லட்சியப் பயணம் தொடர்கிறான்.
படத்தின் அந்த பிரமாண்ட செட்டுகளில் எதார்த்தம் வழிந்தோடுகிறது.
தீபாவளி நாளில் வெடி, மத்தாப்புகளுக்கிடையில் நடந்து செல்வது மாதிரி நாளைய சமுதாயம், துப்பாக்கி குண்டுகள் நடுவே வாழப் பழகிப்போன காட்சிகள்…
மதமோ, மனிதரோ…. தீவிரவாதத்தின் உச்சத்தில் ஒரு நகரம் அதுவும் லண்டன் மாநகர் சந்திக்கப்போகும் பயமுறுத்தும் தோற்றமே, நமக்கு அச்சம் தருகிறது….

ராணுவம், இயக்கம் இரண்டும் எதிரும் புதிருமாக குண்டு மழை பொழிய அந்தச் சத்தத்தில் வரும் பச்சிளம் குழந்தையின் குரல் கேட்டு………. அமைதியாகி ,,,,,,,, அந்தக் காட்சி அமைப்பு பிரமாதம்…

அந்தப் பெண், உலகின் நம்பிக்கை நட்சத்திர குழந்தையைப் பெற்றெடுக்கும் காட்சி……. பார்த்தால் தான் நம்ப முடியும்,,,,, சினிமா காட்சியமைப்பின் உச்சத்தையும் … அது தரும் அதித பாதிப்பையும்….

இது விமர்சனமோ இல்லை… கதை சுருக்கமோ கிடையாது.
நல்ல படம் பார்பதற்காக ஒரு முகவுரை தான்…

கட்டாயம் பாருங்கள் இந்தப் படத்தை….
“CHILDREN OF MEN”

இதோ…. எங்கு திரும்பினும் பிரச்சனையைச் சிக்கலாக்கிக் கொண்டு போகும் நிகழ்வுகள்…
இதன் உச்சத்தைச் சொல்லும் படம் தான் , CHILDREN OF MEN

இது பற்றி மேலும் அறிய..

>> http://www.filmjournal.com/filmjournal/reviews/article_display.jsp?vnu_content_id=1003522882
பாருங்கள்.

<<<< கோவிந்த் >>>>

சரி இதற்கும் , சிவாஜிக்கும் என்ன சம்பந்தம்….
எப்படி தமிழக கலை ரசிகர்களின் ரசனை நாளங்களில், கட்டபொம்மனாக…. முதல்மரியாதை பெரிசாக… கர்ணனாக, இருந்த நமது சிவாஜிகணேசனின் பெயர், சிவாஜி என்றவுடன் அந்த கம்பீர முகம் நினைவில் வந்தது அந்த நாளாகிப் போகும் படி , பரபரப்பு கவர்ச்சிக்கு சினிமாத் தலைப்புக்குப் பயன்படுத்தப்பட்டதுவோ,
அதைவிட,
ஒரு உலகசினிமா பற்றி அறிந்து கொள்ள உபயோகித்தது சரிதான்….
—-
— சங்கர் படம், ரஜினி வேறு… MG Ravichandran என்ற பெயர் வேறு அந்தப் படத்தைப் பார்க்கனும் ஜாலிக்காக … அது வேறு.
ஆனால், CHILREN OF MEN கட்டாயம் பாருங்கள்.


govind.karup@gmail.com

Series Navigation