சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1

குறைந்த பட்சமாக தகவல்களைக் கூட சூர்யா புரிந்து கொள்ளவில்லை என்பதையே கட்டுரை

http://www.thinnai.com/pl1225034.html புலப்படுத்துகிறது.ஜெயமோகன் சீடர்கள் இப்படி எழுதுவதன் மூலம் தாங்கள் குருவைப் போலவே எழுதுபவர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.விடிய விடிய கதைக் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொல்வதைப் போல் உள்ளது அவர் எழுதியுள்ளது.இத்தகைய புரிதல்தான் அவர் கட்டுரை முழுவதும் உள்ளது.ரோசா வசந்த் என்ன சொல்கிறார் என்பதே அவருக்குத் தெரியவில்லை.கண்ணன் என்ன எழுதியுள்ளார்,அதற்கும் அவர் ஆதாரம் காட்டும் கட்டுரையும் வேறுபடும் இடங்கள் என்ன என்பதும் அவருக்குப் புரியவில்லை.சோசியல் டெக்ஸ்ட் பற்றி எழுதுவருக்கு அப்படி ஒரு ஏடு தன்னைக் கூறிக்கொண்டால் அது பின் நவீனத்துவ ஏடாக இருக்கமுடியாது என்பது கூட விளங்கவில்லை.அது தன்னை பின் நவீனத்துவ ஏடு என்று பிரகடனப்படுத்தவில்லை,அதில் மார்க்சியர்கள் உட்பட பல்வேறு சிந்தனைகளை முன்னிறுத்துபவர்கள் எழுதியுள்ளார்கள்.இந்த கட்டுரைக் குறித்த சர்ச்சையை ஒட்டி எந்த இந்திய வெளியீட்டில் பல கட்டுரைகள் வெளிவந்தன, அதில் எதை கண்ணன் ஆதாரம் காட்டினார் என்ற அடிப்படை உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல் எழுதுபவர் நான் என்ன எழுதியுள்ளேன் என்பதை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பது வீண். எனவே அவர் எழுதியுள்ள பிற அபத்தங்கள் குறித்து நான் விரிவாக விளக்கவிரும்பவில்லை.

உயிர்மையில் வெளியான கட்டுரையில் கூறப்படுள்ளது

‘அகத்துறை நூல்கள் காட்டும் அந்த முந்தைய சமூகம் ஏன் அத்தனை சுதந்திரத்தை பெண்களுக்கு அளித்தது ?

அதற்கான விடையை முதலில் ப்ரெட்ரிக் எங்கல்ஸில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். ‘குடும்பம் தனிச்சொத்து சமூகம் ‘ என்ற நூலில் எல்லா புராதன சமூகங்களும் தாய்வழிச் சமூகங்களே என்று சொல்கிறார்.அந்நூலிலேயே கேரள(நாயர்) தாய்வழிச்சமூக அமைப்பைப் பற்றிய குறிப்பும் உள்ளது ‘.

நான் எழுதியது

‘அறிவுத்துறை வட்டாரங்களில் ஏங்கெல்ஸின் நூல் ஒரு முக்கியமான பங்களிப்பு,ஆனால் இன்று அதன் பலவீனங்கள் குறித்து தெளிவாகத் தெரிந்துவிட்டதால் அதன் மையக்கருத்துகளை பலமான சான்றுகளாக பயன்படுத்தமுடியாது என்று கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் ஆதி தாய்வழி சமூகம் குறித்த ஏங்கெல்ஸின் கருத்துகள் காலாவதியாகிவிட்டன ‘

விடையை அந்த நூலிலிருந்து துவங்க வேண்டும் என்றால், யூகங்களை முன்வைப்பவர் அந் நூலில் சொல்லப்பட்ட கருத்துகள் இன்று எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டவில்லை என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.நான் என் கட்டுரையில் எழுத்தாளர்-விமர்சகர் முன்வைத்துள்ள ஊகங்கள் குறித்து எதுவும் சொல்லவில்லை.எங்கெல்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்று சர்ச்சிக்கப்பட்டு பலரால் நிராகரிக்கப்பட்டுவிட்டாலும் அவை நமக்கு ஒரு புரிதலைப் பெற உதவும் என்பதால் நான் அதிலிருந்து விடையை ஆரம்பிக்கலாம் என்று எழுதுவதனால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.அந்நூலையே சான்று காண்பிப்பவர் அது குறித்து சர்ச்சை உள்ளது என்பதையாவது தெளிவுபடுத்தியிருக்கலாம்.தமிழ்ச் சூழலில் இதையெல்லாம் எதிர்பார்ப்பது

தவறு போலும். ‘சமீபத்திய கேரள யதார்த்தத்தை ‘ ஆதாரமாகக் கொள்வதற்கு எங்கெல்ஸிடமிருந்து எதற்கு துவங்க வேண்டும்.உயிர்மையில் வெளியாகியுள்ள கட்டுரை ஊகங்களின் தொகுப்பாக உள்ளது.அதற்கான அடிப்படை விடை ஏங்கெல்ஸின் நூலில் உள்ளது.கவனிக்க அனுமானமல்ல, விடை.ஆனால் அந்த நூலின் அடிப்படை கருத்துகள் இன்று சர்சிக்கப்பட்டு, பலமற்றவை என்று கருதப்படுகின்றன.இந்த உண்மையை சுட்டிக்காட்டினால்

அதைப் புரிந்து கொள்ளாமல் ஒருவர் எழுதுகிறார்.அவருக்கு தகவல் என்றால் என்னவென்றும் தெரியாது,கோட்பாடுகள் குறித்த விவாதங்களையும் புரிந்து கொள்ள முடியாது.

2

ராஜபாண்டியன் எழுதியிருக்கும் கட்டுரை http://www.thinnai.com/pl1225035.html இன்னொரு அபத்தம்.ஏற்கனவே வேதசகாய குமார் எழுதிய கட்டுரையின் பாதிப்பை இதில் காணலாம்.உயிர்மையில் வெளியான கட்டுரை இலக்கிய சான்றுகளையே மிகப் பெருமளவிற்கு ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரை.அதில் பல ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன.இத்தகைய கட்டுரைகளின் பலவீனம் எது என்பது வெளிப்படை.அதை நான் கருத்தில் கொள்ளவில்லை.ஏனெனில் கட்டுரையாசிரியர் சில ஊகங்களை முன்வைக்கிறார், அவ்வளவுதான்.இது போன்ற கட்டுரைகள் இலக்கியம் மூலம் வரலாறு,சமூக அமைப்பினை புரிந்து கொள்ளும் முயற்சிகள் என்பது வாசகர்களுக்குத் தெரியும்.ராஜபாண்டியனுக்கு நான் என்ன எழுதியுள்ளேன் என்பதே புரியவில்லை போலும்.நான் சுட்டிக்காட்டியது ஒன்றைத்தான், மற்றபடி கட்டுரை மீது நான் கருத்துக் கூறவில்லை.

ஒரு கோட்பாட்டை நான் முன்வைக்கிறேன் என்றால் ஆய்வாளன் என்ற முறையில் அது குறித்த விவாதங்களை கணக்கில் கொண்டே நான் அது பற்றிய எழுத வேண்டும்.உயிர்மை போன்ற பத்திரிகைகளில் எழுதும் போது ஒருவர் இது குறித்த விவாதங்களை விரிவாகக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை.ஆனால் விடையை ஆரம்பிக்கலாம் என்று ஒரு நூலைச் சுட்டிக்காட்டினால் அது குறித்து இன்று எத்தகைய கருத்துகள் நிலவுகின்றன என்பதைப் பற்றி ஒரு வரியாவது எழுதுவதில் என்ன பிரச்சினை.அதுவும் மிகவும் அதிகமாகப் பேசப்பட்டுள்ள/விவாதிக்கப்பட்டுள்ள ஒரு நூலைப் பற்றி.நான் வாசகர்கள் கவனத்திற்க்கு இந் நூல் குறித்த சில கருத்துகளை சுட்டிக்காட்டினேன்.இவை முக்கியமானவை, ஆனால் உயிர்மையில் உள்ள கட்டுரையில் இவை இடம் பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன்.இந்த எளிய உண்மையை ஏற்க முடியாமல் எழுதுபவர் அதன் மூலம் தனக்கு ஆய்வுமுறை,ஆராய்ச்சி என்றால் என்னவென்றே தெரியாது என்பதை நிரூபிக்கிறார்.உயிர்மையில் வெளியான கட்டுரையில் கேரள சமூகம் குறித்து எத்தனை கள ஆய்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன,புராதன தமிழ் சமூகம் பற்றி எத்தனை வரலாறு,தொல்லியல் ஆய்வுகள் மேற்கோள் காட்டப்படுள்ளன. வேறு எத்தனை தாய் வழி சமூகங்களைக் குறித்து எத்தனை ஆய்வுகள் சான்று காட்டப்படுகின்றன. எங்கெல்ஸ் நூல் குறித்து எழுந்த விவாதங்கள் வெறும் தகவல் மறுப்பு விவாதங்கள் அல்ல.மாறாக அவை பண்டைய சமூகங்கள் குறித்த புரிதல்கள், வரலாற்றுக் கண்ணோட்டங்கள் குறித்த விவாதங்கள்.ஒருவர் வரலாறு குறித்து எழுதும் போது சமகால கருத்துகள் அவர் பார்வையில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்படுவது , தகவல் மறுப்பு விவாதமல்ல.

ஒன்று ஒழுங்கான ஆராய்ச்சி/ஆய்வு என்றால் அதன் அடிப்படைகள் என்ன என்பதாவது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.எது தகவல் குறித்த சர்ச்சை, எது கோட்பாடு குறித்த விவாதம் என்பதை பிரித்துப்பார்க்கவாவது தெரிந்திருக்க வேண்டும். ஒரு வாதத்திற்காக கள ஆய்வின் முடிவுகளை இன்னொரு கள ஆய்வின் மூலமே என்பதை ஏற்றாலும், ஜெயமோகன் கட்டுரையில் எத்தனை கள ஆய்வுகள் உள்ளன.ancetodal evidence ஒரு வலுவான ஆதாரமாகவே கொள்ளதக்கதல்ல.என் தாத்தா 70 வயதில் தினசரி 5 கி.மீ நடந்தார் என்பதால் அந்த வயதில்லுள்ள எல்லா ஆண்களும் அவ்வாறு நடந்தனர் என்று வாதிட முடியாது.கட்டுரையில் எங்கெல்ஸின் கருத்துக்களின் தாக்கம் தெளிவாக உள்ளது.அவ்வாறிருக்கும் போது நான் குறிப்பிட்டது பொருத்தமானதே. மேலும் பழங்காலத் தமிழகம் குறித்த பல்துறை ஆய்வுகளை முன்னிறுத்தி அவர் வாதிடவில்லை.கட்டுரை முழுக்க இலக்கிய சான்றுகளின் அடிப்படையில் கூறப்படும் ஊகங்கள்.இன்று இத்தகைய கண்ணோட்டம் குறைமிக்க கண்ணோட்டம் என்றே கருதப்படும்.ஏனெனில் இலக்கிய சான்றுகளுடன், அகழவாராய்ச்சி மூலம் பெறப்பட்ட தகவல்கள்,சரித்திர ஆய்வாளர்கள் முன்வைக்கும் கருத்துகள் உட்பட பல சான்றுகள் இருந்தால்தான் ஒரு கருத்தினை கவனிக்கதக்கதாக கருதமுடியும்.யூகங்கள் யூகங்கள் என்றே மதிப்பிடப்படும்.

ராஜபாண்டியன் மானுடவியல்,வரலாறு குறித்த நூல்களையோ அல்லது அத்துறையில் வெளியாகும் ஜர்னல்களையோ படித்துப் புரிந்து கொண்டிருந்தால் இவ்வாறு வாதிட்டிருக்கமாட்டார்.இன்று சங்க கால

தமிழகம், புராதன தமிழகம் குறித்து எழுதும் போது சம்பகலஷ்மி போன்றோர் எழுதியிருப்பதையும் கருத்தில்

கொள்ள வேண்டும்.(1).இது தவிர புராதான தமிழகம் குறித்த ஆய்வுகளில் எந்த சான்றுகளை,எப்படி கையாள வேண்டும்,இலக்கியப்பிரதி சான்றுகளுடன் பிற துறை சான்றுகளையும் சேர்த்து ஒரு புரிதலை முன்வைக்க

முனைய வேண்டும்(2). தாய்வழி சமூகம் குறித்து பேசும் போது அது குறித்து பெண்ணியவாதிகள் எழுதியுள்ளதையும்

கருத்தில் கொள்ள வேண்டும். குடும்பம்,ஆண்-பெண் உறவுகள்,சமூகங்கள்,அரசு குறித்து மானுடவியலாளரகள்,பெண்ணிய அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.(3).பெண்ணிய வரலாற்றுக்கண்ணோட்டங்கள் குறித்த ஒரு புரிதலும்

தேவை.புராதன சமூகங்கள் தாய்வழி சமூகங்களா என்பது குறித்தும் விவாதம் உள்ளது.(4)

உயிர்மை கட்டுரையில் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள தாய்வழி சமூகங்கள் எவை என்பது குறித்து ஒரு

குறிப்பு கூட இல்லை.கேரள சமூகம் ஒட்டு மொத்தமாக தாய்வழி சமூகமா என்ற கேள்வியும் எழுகிறது.கேரளத்தில்

ஒரு சில சமூகங்களே matrilineal முறையை அனுசரிக்கின்றன என்று கருதப்படுகிறது.(In Indian context, the matrilineal social system is found only among small pockets of south the and northeast India. The Nairs and Mappilles in Kerala, the tribal groups of Minicoy Island and the Khasis and the Garos of Meghalaya are the followers of matrilineal

system.)

ஒரு ஆய்வாளர் எழுதுகிறார்(5)

‘According to evolutionary theory, the early human society lived in promiscuity. Due to the biological factors of pregnancy and childbirth, it was easier to trace biological relationship of children to their mothers, than to their fathers. Hence, human organization at a later stage revolved around mothers than around fathers. From matriliny there evolved patriliny when

men were able to assert their superiority. This evolutionary theory from promiscuity to patriliny via matriliny is now discarded (Chacko, 1998). Both patrilineal and matrilineal systems have developed and flourished independently.

Early evolutionists have attempted to demonstrate that most societies in this universe have eventually evolved from matriarchy to their present form. Today assumptions of universal male dominance, rather than universal female dominance hold the stage (Fox, 1967; Divale and Harris, 1976). Analyses of the matrilineal system operating in a variety of cultural and ecological settings and their comparison with kinship systems based on different principals of descent, inheritance and succession, have contributed to a clearer understanding of certain distinctive type of social structure.

Most of the anthropologists do not believe in the existence of any true matriarchy.They, however, suggest that there exist three characteristics of matriarchy, viz., descent through the mother (family name through mother), matrilocal residential system (husband) lives at the residence of wife after marriage) and inheritance of property by females. Thus,any society, which follows these three norms, is presently called matrilineal society.In a matrilineal society, the descent or the family name is through the mother ‘s side,and is known as ‘matrilineal descent ‘. This affiliates an individual with kin of both sexes,related to him or her through women only. Kapadia (1966) has mentioned that all children of a woman take the family name of their mother. As decent is through female side, only the children of the female of the family can become members of the family. The children of the male child cannot be the member of his mother ‘s family as they cannot take the family name of their fathers.

Matrilineal societies also exhibit interesting variety of residence patterns, like, ‘a man residing with his wife ‘s matrilineal kin ‘, ‘a wife residing with her husband ‘s matrilineal kin ‘ or ‘with his paternal kin ‘, ‘couples settling down together in a new residence ‘, or the ‘two living with their respective natal groups following the duolocal pattern ‘ (Richards, 1950;Dube, 1969). Traditionally, it has been assumed that in those societies where married children live near or with kin, residence will tend to be patrilocal if males contribute more to the economy and matrilocal if women contribute more (Ember and Ember, 1971; Divale, 1974).

Ember and Ember (1971) have also mentioned that those cross-cultural evidences also suggest that in societies where war exists amongst the neighboring communities, residence is almost always matrilocal.Usually in a matrilineal system, it is the husband who lives with his wife in his inlaws house and doesn ‘t take his bride home, as is the case with other communities. After the birth of one or two children, the man frequently takes his wife to his own house. Generally at this point of time, they form a neo-local family. However, an interesting feature of neo-local family set-up is that the mother of the bride mostly gifts the house in which the couple usually settles down (Sinha, 1970).

Property is transmitted through the female and is held by the females alone. Whatever a male member of the family earns belongs to the family, to which he belongs, and either goes to his mother or is inherited by his sister and her female descendants.

Matrilineal Society in India

When most of the people in the world follow the patrilineal system, there exist a few groups here and there who believed to be the descendants of Japheth (son of Noah), and are followers of the matrilineal system (Syiemlieh, 1994).At the global level, the existence of matrilineal society is found among the tribes of African countries, in some part of Southeast Asia and among three groups of India. It is the Minangkabaus of West Sumatra, Indonesia, comprising the largest ethnic group in the world

who follow a matrilineal system (Tanius, 1983).In Indian context, the matrilineal social system is found only among small pockets of south the and northeast India. The Nairs and Mappilles in Kerala, the tribal groups of Minicoy Island and the Khasis and the Garos of Meghalaya are the followers of matrilineal system. However, the matrilineal system of the African countries differs considerably from that of the Southeast Asian groups. Even within India, the system differs from one group to

another (Kapadia, 1966).Among these groups, difference is mostly observed in the type of residence after marriage. The pattern of duo-local residence exists among the Ashanti of the Gold Coast in Africa, Minangkhau of Sumatra and the Nayars of Central Kerala. However, the Khasis of Meghalaya, generally follow the residential pattern known as ‘matrilocal residence ‘, where the husband resides with his wife ‘s matrilineal kin or in other case couples settle down together in a new residence in and around his wife ‘s maternal place (neo-local residence). ‘

கள ஆய்வுகள்,ஒப்பிட்டு ஆய்வுகள்,பல்துறை சான்றுகள் மூலமே ஒரு புரிதலைப் பெறமுடியும். உயிர்மையில் வெளியான கட்டுரையையும், நான் மேற்கோள் காட்டியுள்ள பகுதியையும் ஒப்பிடுங்கள். எது ஆய்வுக் கட்டுரை,எது ஊகங்களின் தொகுப்பு என்பது தெளிவாகும்.கேரளத்தில் உள்ள/நிலவிய சமூகம் குறித்து எத்தனை சான்றுகளை அவர் தருகிறார்.matrilneal சமூகங்கள் குறித்து இந்தியாவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வைக்கூட அவர் சுட்டிக்காட்டுவதில்லை, தொன் தமிழகம் குறித்த ஆய்வுகள் குறித்து கட்டுரையில் எதுவுமே இல்லை.எனவே இது ஆய்வுக்

கட்டுரையே அல்ல.ராஜபாண்டியன் பிறருடன் சேர்ந்து அந்தக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தெற்காசிய ஆய்வுகள்/வரலாறு/மானுடவியல்/பெண்ணிய துறை ஜர்னல்களுக்கு பரீசலனைக்கு அனுப்பி அது பிரசுரத்திற்கு

அப்படியே ஏற்கப்படுகிறதா என்பதை பரிசோத்தித்துப் பார்க்கட்டும்.

3

கொள்வின-கொகுப்பினை உறவுகள்,வம்சாவழிகள்,மண உறவுகள் போன்றவை குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள பல நூல்கள்,கட்டுரைகள் உள்ளன.கேரளாவில் உள்ள நாயர் சமூகம் குறித்தும் பல ஆய்வுகள் உள்ளன.1950 களின் இறுதியில் காதலீன் கெளவ் நாயர் சமூக ‘திருமண முறை ‘ குறித்து எழுதியதும், அது குறித்த விவாதங்களும் இன்றும் மேற்கோள் காட்டப்பட்டு பேசப்படுகின்றன.இது போல் எத்தனை ஆய்வுகளை கட்டுரையாசிரியர் காட்டியுள்ளார்.கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்றால் என்ன ? ஒரு பெண்ணிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட கணவர்கள்

என்று எழுதும் போது இங்கு கணவர்(கள்),குடும்பம் போன்றவை குறித்த தெளிவான விளக்கங்கள் தேவை.இதையெல்லாம் கட்டுரை தருகிறதா ? கேரளத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரிடமும்/ஜாதிகளிலும்/

மதத்தினிரிடையேயும் ஒரே மாதிரியான குடும்ப முறையே நிலவியதா ?.நம்பூத்திரி சமூகத்திலும்,நாயர் சமூகத்திலும்

ஒரே மாதிரியான குடும்ப அமைப்பு,உறவு முறைகள் இருந்தனவா ?. இது போல் பல கேள்விகள் உள்ளன.ஒரு ஆய்வுக்கட்டுரை இந்த கேள்விகளை கருத்தில் கொண்டு விவாதிக்கும்.

இவ்வாறில்லாத போது இந்தக் கட்டுரையை ஆய்வுக்கட்டுரை என்று கருதி விவாதிக்க முடியாது, ஒரு வாததிற்காக, ராஜபாண்டியன் எழுதியுள்ள கருத்துகளை ஏற்றால் கூட.முன்வைக்கப்படும் கருத்தைப் பற்றிய ஒரு முக்கியமான

எதிர்கருத்தை வைப்பது தகவல் குறித்த விஷயமல்ல,மாறாக கருத்துசார்ந்த ஒன்று.நான் அதைச் சுட்டிக்காட்டாவிட்டாலும் கட்டுரையை விமர்சித்திருக்க முடியும்.அதன் பலவீனங்களைப் படித்த உடன் புரிந்து கொண்டேன்.இருந்த போதிலும் பலவகை கருத்துகள் முன்வைக்கப்படுவதில் எனக்கு ஆட்சேபம் எதுவுமில்லாத போது இந்த ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டினேன்.ஏங்கல்ஸ் எழுதியதை ஆதாரமாக கொள்பவர்தான் அவரை அத்தாரிட்டியாக கொண்டு எழுதுகிறார். நானல்ல.யாரையும் முட்டாள் என்று நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருள் கொள்ளக் கூடிய வகையில் எழுதவில்லை.

திண்ணையிலும்,பிற வெளியீடுகளிலும் நான் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன்.ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன்.

ராஜபாண்டியனும்,சூர்யாவும் அவை பற்றி எழுதட்டும்.அதை செய்யமுடியாது என்பதால்தான் நான் குருவை விமர்சித்தால் அதை ‘தகவல் ‘ சார்ந்த ஒன்றாக காட்டும் யுக்தியை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.இனக் குழு குறித்த விவாதம்,ஒமலாஸ் கதை குறித்த விவாதம் என பலவற்றில் நான் மிகத்தெளிவாக ஆதாரங்களுடன் வாதிட்டுள்ளேன்.

தமிழ்ச்சூழலில் எந்தப் பேராசிரியர்/பேராசிரியர்களின் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நான் எழுதவில்லை.தமிழில்

எழுதுவது என்பது என் எழுத்தின் ஒரு பகுதிதான்.நாளைக்கே நான் தமிழில் எழுதுவதை நிறுத்திக் கொண்டால் கூட அதன் பொருள் நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்பதல்ல.நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் ஒருவரின் கட்டுரைக்கு எதிர்வினையாக நீண்ட கட்டுரை எழுதி, அவர் முன்வைத்த கருத்தைச் சர்ச்சித்தேன்.அதற்காக அவர் என் மீது கோபம் கொள்ளவில்லை. அறிவுலகில் இது போல் வாத,பிரதிவாதங்கள் மிகவும் சாதரணம்.

ஆலிவர் சாக்ஸ்,லெய்ங் போன்ற பெயர்களையும்,பிரமீள் சொன்ன ஒரு தகவலையும் முன்வைத்து சுந்தர ராமசாமியை வசைபாடி கட்டுரை எழுதிய சூர்யாவும்,ஆய்வு முறை எதையும் பின்பற்றாத ஒரு கட்டுரை குறித்து முன்வைக்கப்பட்ட கருத்தை வேறுவிதமாக சித்தரிக்கும் ராஜபாண்டியனும் இக்கட்டுரையை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.இருப்பினும் என் தரப்பு வாதத்தை முன்வைக்கும் முயற்சி இது.

1,Champakalakshmi, R. 1996 Trade, Ideology and Urbanization: South India 300 B.C. to A.D. 1300. Delhi: Oxford University

Press.

2,Chera, Chola, Pandya: Using Archaeological Evidence to Identify the Tamil Kingdoms of Early Historic South India-

SHINU A. ABRAHAM-asian perspectives . 42(2) . fall 2003

3,Feminism and Anthropology-Henrietta Moore-University of Minnesota Press 1988

4,The Myth of Matriarchal Prehistory:Why an Invented Past Won ‘t Give Women a Future-Cynthia Eller-Beacon

Press 2000

5,CHANGING FAMILY SYSTEM AMONG A MATRILINEAL GROUP IN INDIA-Dr. Madhumita Das

XXIV IUSSP General Conference-Session No.: S12 Session Name: Changing Family Network-2001

Series Navigation