சிலேடை வெண்பாக்கள்!
அகரம் அமுதா

கடிதமும் கண்ணும்!
மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்;
ஓடி இலக்கடையும் ஒற்றுமையால்; – நாடிப்
படிப்போர்க்குச் செய்தி பகிர்தலி னால்நற்
கடிதமும் கண்கள்நேர் காண்!
தனமும் குணமும்!
ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்; உற்றவர்க்கே
நன்றாய் பெருமைபல நல்குதலால்; – என்றும்
மனிதர் ஒருசிலர்க்கே வாய்த்தலால் குன்றும்
தனம்குணம்ஒன் றென்றால் தமும்!
agramamutha@yahoo.com