சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

அறிவிப்புபொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை வழங்கும்
சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள்
வெளியீட்டு விழா

சென்னைக் கலைவாணர் அரங்கில் 16.06.2007 சனிக்கிழமை காலை 10 மணிக்குச் சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.

திருமதி சௌமியாஅன்புமணி அனைவரையும் வரவேற்கிறார்.

தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் இசைக்குறுந்தகடுகளை வெளியிட்டு நிறைவுரையாற்றவுள்ளார்.

சிலப்பதிகாரம் ஒலிநாடாவை மெல்லிசைமன்னர் ம.சு.விசுவநாதனும்,
குற்றாலக்குறவஞ்சி ஒலிநாடாவைப் புதுவைத்தமிழறிஞர் இரா.திருமுருகனாரும் பெற்றுக்கொள்கின்றனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுப்பிரமணியம்.சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்,முனைவர் ந.நடராசப்பிள்ளை, ஏ.வி.எம்.சரவணன் முதலானவர்கள் வாழ்த்துரைக்கின்றனர்.
மருத்துவர் ச.இராமதாசு சிறப்புரையாற்றுகிறார்.
நிகழ்ச்சியைப் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.காலை 9.45 மணிக்குள் அரங்கிற்குள் இருக்கவேண்டும்.

முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி


Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு