கொச்சைப்படுத்துதல்: மனித அவலட்சணம்

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

தேவமைந்தன்


அடிமை ஆண்டான் உறவுகள்
ஆண்டாள் அடிமை சரண்புகல் யாவும்
புதுவகைக் கோலம் பூண்டன.
நாகரிகம் ஓ! பூத்துமலர்ந்து
எங்கும் வீசுது நறுமணம்.
வேலைக்குச் செல்லும் அம்மை
‘சார் ‘ ‘சார் ‘ என்று பேச,
‘ ‘யார்,சார் ?..படிப்பித்த ஆசானா ?
கல்லூரிப் பேராசிரியரா ? ‘ ‘
என்று கேட்டேன். ஒரு மாதிரி
துழாவும் பார்வை பார்த்துவிட்டு,
‘ ‘சார் ‘னா எங்களுக்கு யாரு..
தெரியாத ‘போல கேக்கறீங் ‘ளே!
சார் ‘னா அவர்தான் _ ஹஸ்பெண்ட்… ‘ ‘
வேலைக்குச் செல்லும் ஐயா
‘மேடம் ‘ ‘மேடம் ‘ என்று பேச,
‘ ‘மேடம் யார் ?..உங்க மனைவியா ? ‘ ‘
அநுபவநிழலால் கேட்டேன். முறைத்தார்.
‘ ‘மேடம் ‘னா எங்களுக்கு யாரு ‘வே!
எங்க ப்ராஞ்ச் மானேஜர் அல்லாம.. ‘ ‘
சரி, சரி.. விடுங்கள். தெரிந்ததுதானே ?
நல்லதொரு பணிக்கு உதவக் கேட்டால்
‘ ‘சாரைக் கேட்டுச் சொல்கிறேன் ‘ ‘ என்பதும்;
மாதத் தவணை சேலை விற்பனை
வந்தால் தானே முடிவை எடுப்பதும்..
சரி, சரி,, விடுங்கள். தெரிந்ததுதானே ?
ஆழமான நட்பும் அன்பும்
அடுத்தவர் எவரையும் மதிக்கும் பண்பும்
‘ஆர்ச்சீவ் ? ‘ சென்றன.
நன்றியை உடனே கழுத்தைப் பிடித்து
நெருக்கிக் கொல்வதும்
பாராட்டுவோரை அலட்சியம் செய்வதும்
வெற்றிடம் மிகுந்த மண்டைமேல் கனத்தை
‘டன்,டன் ‘ஆகக் கணக்கில் கொள்வதும்
எதையும் எவரையும் எப்படியும்
கடைசியில் கொச்சைப்படுத்தி விடுவதும்
இன்றைய மனித நாகரிகம் ஏற்பவை.
ஊடக உலகமும் கொண்டாடுகின்றவை.
கருத்துக் கூறும் சுதந்திரம்
ஒருசிலர் உடைமை.
மனிதமன விகாரங்களுள் கொச்சையின் சிகரம்:
‘ ‘பெத்துப் போடுங்க என்னை! ‘ ‘ன்னு
ஒங்க ரெண்டுபேர் காலையும் புடிச்சிட்டு
நா ‘ அழுதேனா ?… ‘ ‘
ஊட்டிவளர்த்து ஆளாக்கி
எல்லாம் தந்து எப்படியோ தந்து
தன்னையொரு மனு ?ியாய்/மனு ?னாய்த் தாய்பார்க்கும் முன் –
எங்கோ – எவனெவன்/எவளெவளுடனோ….
உலகறிய ஊர்அறிய
நட்சத்திரம் நாள்பார்த்து
பெற்றோர் கடனைப்
பலர்உண்ண விழாஎடுத்து
தன்னைநம்பித் தலைகுனிந்து வந்தவளை
(நம்பினால் தலைகுனியும்தான்..)
வீட்டின் மோட்டுவளை
நீபார்என விட்டுவிட்டு
தன்வீட்டின் அடையாளம்
தான்எண்ண மறந்தவளைச்
சேர்த்துக்கொண்டு வாழ்வது
எதன்கொச்சை ? யார்கொச்சை ?
பணமிருந்தால் விட்டுவிடும்
சமூகம் ஆகக்கொச்சை!
மனம்திறந்து மடல்எழுதி
உன்நலத்தை விசாரிக்கும்
முந்தைய நண்பனுக்கு உன்
முகவரியோ பேசியெண்ணோ
அனுப்பாமல் மெளனத்தை
மறுமொழி ஆக்குவதுவும் கொச்சை.
திகைத்திருந்த காலத்தில் – உன்
தோளின்மேல் கைபோட்டு
தேநீரும் சிற்றுண்டி வகையறாவும்
ஈந்தவனை இந்நாளில் ‘வேஸ்ட் ‘என்று
குறிப்பதுவும் கொச்சையின் செயல்.
—-
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்