கீதாஞ்சலி (22) முடிவை எதிர்நோக்கி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


முதுமையின் எல்லையில் விடுவித்து
இறுதியில் என்னை
அவன் கைவசம் ஒப்படைக்க
பொறுத்தி ருக்கிறேன்,
அவனது
அன்பு வரவேற்புக்கு!
தாமத மாவதின்
காரணம் அதுவே!
என்னைக் கவனிக்காத உந்தன்
புறக்கணிப்பு
குற்ற உணர்வை எனக்குள் எழுப்பும்!
சீக்கிரம் தங்கள்
சட்ட விதி வலைகளில் என்னைக்
பிடித்துப் போட
குடிமக்கள்
ஓடி வருகிறார்கள்!
அவரது பிடிகளி லிருந்து
தப்பி யோட முனைகிறேன்,
எப்போதும்!
ஏனெனில்
இறுதியில் என்னை
அவன் கைவசம் ஒப்படைக்க
பொறுத்தி ருக்கிறேன்,
அவனது
அன்பு வரவேற்புக்கு!

மக்கள் என்மேல் குற்றம் சாட்டி
பழிக்கிறார்!
அக்கறை இல்லாதவன் என்றெனைப்
விளிக்கிறார்!
அவ்விதம் என்மேல் பழி விழுவதை
இல்லை என்று
மறுக்க வில்லை நான்!
சுறுசுறுப் பாளிகளின் அன்றைய
வர்த்தக நாள்
அத்த மித்தது!
ஆரவாரக் காரர் வினைகள் யாவும்
முடிக்கப்பட்டு விட்டன!
விதி வலைகளுடன்,
வீணாய் என்னைத் தேடி
காண வந்தவர் அனைவரும்
திரும்பிச் சென்றனர் சினத்துடன்!
ஆயின் நானோ
இறுதியாய் என்னை
அவன் கைவசம் ஒப்படைக்க
பொறுத்தி ருக்கிறேன்,
அவனது
அன்பு வரவேற்புக்கு!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 8, 2005)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts