காதல் நாற்பது (15) காதலிப்பாய் காதலுக்காக !

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என்னைக் காதலிக்க வேண்டு மெனின்
ஏதோ ஒன்றுக் கென
நீ குறிப்பிட வேண்டாம்,
காதலுக்காக மட்டுமே என்னைக்
காதலிப்பது தவிர !
“அன்பு கொண்டது, அவள் அழகிய
புன்னகைக்கு !
கண்கவரும் அவளது தோற்றத் துக்கு !
கண்ணியக் கனிவுப் பேச்சுக்கு !
எந்தன் மனம் ஒத்துப் போகு மொரு
சிந்தனைச் சூழ்ச்சிக்கு !
நிச்சயம் அவற்றில் மனதுக் கினிய
நிம்மதி கிடைக்கும்.” என்று
நீ சொல்ல வேண்டாம் !
அவை யாவும் மாறிப் போகலாம்,
என்னினிய காதலனே !
உன்னிடமும் அவை
மாறி விடலாம் அதுபோல் !
மெய் வருந்திக் கொண்ட காதலும்
தேய்ந்து போகலாம் !
தேவை யில்லை அவ்விதம்
மெய்வருந்திக்
காதல் கொள்ள !
கன்னங்களில் வழியும்
கண்ணீரைத் துடைத்து என்னைக்
காதலிக்க வேண்டாம்
பரிதாபப் பட்டு நீ !
உனது ஆறுதலை
நெடுங் காலமாய்ப் பெற்று வரும்
ஒரு பிறவி
ஓலமிட மறந்து போய்
உன் காதலை இழக்கலாம் !
ஆனால்
காதலிப்பாய் நீ என்னை
காதலுக் காக மட்டுமே !
அதற்கு மேலும்
முடிவில்லாக் காதல் பயணத்தில்
தொடரலாம் நீ
நெடுங் காலம் !

********************
Poem -15
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

If thou must love me, let it be for nought
Except for love’s sake only. Do not say
“I love her for her smile–her look–her way
Of speaking gently,–for a trick of thought
That falls in well with mine, and certes brought
A sense of pleasant ease on such a day”–
For these things in themselves, Beloved, may
Be changed, or change for thee,–and love, so wrought,
May be unwrought so. Neither love me for
Thine own dear pity’s wiping my cheeks dry,–
A creature might forget to weep, who bore
Thy comfort long, and lose thy love thereby!
But love me for love’s sake, that evermore
Thou mayst love on, through love’s eternity.

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 26, 2007)]

Series Navigation