கருத்துக் கணிப்பு – சில ஆலோசனைகள்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

சொதப்பப்பா


சன் டி வியும், தினகரனும் எக்கச்சக்கமான கருத்துக் கணிப்புகள் நடத்துவதற்கு ஆலோசனைகள் கோரியிருப்பதாக அறிகிறேன். என்னுடைய ஆலோசனைகள் இவை

ஒன்று.
சன் டி வியில் நிகழ்ச்சி இடம் பெற என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் பெயர் ராதிகாவாக இருக்க வேண்டும்.
2. அபுதுல் கலாமும் நமீதாவும் என்று டாகுமெண்டரி எடுத்திருக்க வேண்டும்
3. எதிரே நிற்பவரை அறைந்து பழகியிருக்க வேண்டும்.


இரண்டு
கருத்துக் கணிப்பில் யார் முட்டாள்கள்?

1. கருத்துக் கணிப்பு நடத்துபவர்கள்.
2. கருத்துக் கணிப்பிற்கு பதில் சொல்பவர்கள்
3. கருத்துக் கணிப்பை நம்பிப் படிப்பவர்கள்
4. கருத்துக் கணிப்பை வெளியிட்ட பின்பும் அப்பாவித்தனமாக அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள்.

மூன்று
சன் டிவியின் வெற்றிக்கு யார் காரணம் ?

1. கலாநிதி மாறன்
2. பெரியார்
3. கலைஞர் மு கருணாநிதி
4. எம்ஜியார் படங்கள்
5. கிளிசரின் தயாரிப்பாளர்

நான்கு
கலாநிதி மாறனுக்கு யார் வரிசாக வரவேண்டும்

1. ராதிகா சரத்குமார்
2. தயாநிதி மாறன்
3. மெட்டி ஒலி சித்திக்
4. சாலமன் பாப்பையா
5. ஸ்வர்ணமால்யா

ஐந்து
தமிழ் மக்கள் தி மு கவை வெற்றிபெறச்செய்தற்கு என்ன காரணம்?

1. கலாநிதி மாறனும் அவருடைய சன் டி வியும்
2. கலைஞர் மு கருணாநிதி
3. உடல் மண்ணுக்கு, உயிர் கலைஞர் குடும்பம் சொத்து சேர்க்க என்று உயிரிழக்கும் தொண்டர்கள்
4. மக்களின் போதாத காலம்

ஆறு
சன் டிவி சீரியல்களில் யார் காட்டுமிராண்டிகளாய்க் காட்டப்படுகிறர்கள்

1. பெண்கள்
2. ஆண்கள்
3. அரவான்கள்
4. எல்லோரும்

ஏழு.
கலைஞர் இல்லையென்றால் மாறன் குடும்பம் என்ன செய்துகொண்டிருக்கும்?

1. அமெரிக்காவிலேயே பெரிய பணக்கார குடும்பமாக இருக்கும்.
2. சன் டிவி நடத்திக்கொண்டிருக்கும்
3. திருவாரூரில் கடைவைத்திருப்பர்.

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா