கனடா தேசீய கீதம்

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஓ கானடா !
எங்கள் இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுகிறாய் நீ !
ஒளி நிறைந்த எம்
உள்ளத்துடன் நீ
உயர்வதைக் காண்கின்றோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டம்,
ஓ கானடா !
உனைக் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்க
எமது நாட்டை, இறைவா
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனைக் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனைக் காத்து நிற்போம் !

*********
Canada National Anthem

O Canada !
Our home and native land !
True patriot love
In all thy sons command.
With glowing hearts
We see thee rise,
The true North
Strong and free !
From far and wide,
O Canada,
We stand on guard
for thee.
God keep our land
Glorious and free !
O Canada,
We stand on guard for thee.
O Canada,
We stand on guard for thee.

*******

கானடா நாடென்னும் போதினிலே
சி. ஜெயபாரதன், கனடா

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தேகும்நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததெம் யோகமடா

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசிடும் வெப்ப வீடுகளாம், குளிர்
வெப்பம் மாறிடும் நாடுகளாம்.

ஈரேழு மாநிலப் பனிநாடு, சீராய்
இரட்டை மொழியாளும் தனிநாடு
நீர்வளம், நிலவளம் மிக்கதடா, பயிர்
நீண்டு விளைந்திடத் தக்கதடா

முப்புறம் ஆழ்கடல் முடக்குமடா, பனி
மூடும் துருவம் வடக்கிலடா
கப்பல்நீந் திடும்நீர் மார்க்கமடா, தென்
காவலாய் அமெரிக்கத் தேசமடா

மேப்பிள் சிவப்பிலைக் கொடிபறக்கும், அருள்
மேவிப் பிறர்க்குக் கொடையளிக்கும்
ஆப்பிளும் பீச்சுக்கனி பழுக்கும், பல்
ஆயிரம் தக்காளிக் காய் தழைக்கும்

தாமிர வைரத் தளங்களடா, ஒளிர்த்
தங்கமும் வெள்ளிச் சுரங்கமடா
பூமியில் புதிய காண்டமடா, இதைப்
போற்றிக் காத்திட வேண்டுமடா

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 28 2007)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா