ஒப்புக்கொண்ட உண்மை

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

நாஞ்சிலன்27/07/2006 திண்ணை இதழில், எனக்கு மறுமொழி கூற வந்த முஜீப், இப்போதுதான் நான் கூறியிருந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் எனக்கு எழுதிய மறுமொழியில்,
“உங்கள் பதில், சரியாக வாசித்தபோதும் விளங்காத தன்மையுடன் இருப்பது குறித்த விஷயத்தையாவது விளங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளதைத்தான், முஜீபின் ஆக்கம் குறித்தான எனது விமர்சனத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்.
அழகு தமிழில் மிக எளிமையாக எழுதப்பட்டிருந்த என்னுடைய கடிதம், தாம் சரியாக வாசித்தபோதும் விளங்காத தன்மையுடன் இருப்பதாக முஜீப் கூறுகிறார்; எனில் அவரது ஆக்கத்தில் புரியாத சொற்கள் கொண்டு பட்டியல் இட்டிருந்தது என்னைப் போன்ற பாமர வாசகனுக்கு எப்படிப் புரியும் என்றுதான் நான் கேட்டிருந்தேன்.
அதற்கு மறுவாசிப்பு, மீள்வாசிப்பு, சிறுவாசிப்பு, குறுவாசிப்பு என்றெல்லாம் மீண்டும் ஒரு பட்டியல் போட்டார். அவர் எனக்குச் சொன்ன அறிவுரையைத் தமக்கே சொல்லிக்கொன்டு, என் கடிதத்தைச் சரியாக வாசித்திருந்தால் அவருக்கு அது விளங்காது போயிருக்காது.
பின்நவீனத்துவவாதிகள் பிறருக்கு மட்டுமே அறிவுரை கூறுவார்கள் போலும்.
இந்த உண்மையை உணரத் துணை நின்ற திண்ணைக்கு நன்றி!

naanjilan@gmail.com

Series Navigation

நாஞ்சிலன்

நாஞ்சிலன்