பர்ஷானே மிலானி
ஈரானில் பார்த்தது பார்த்தபடி கிடையாது. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறுவிதமான படுகை படுகையான அர்த்தங்களுக்குள் மடிந்து கிடக்கின்றது.
உதாரணமாக மேக்கப்-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இல்லாத அரசியல் அர்த்தங்களும், லட்சியங்களும் இதனுள் குவிந்து கிடக்கின்றன. பெண்கள் தங்களது அரசியல் சார்பையும், அதிகாரத்தை எதிர்க்கும் போக்கையும் தங்கள் மேக்கப் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில் ஈரானுக்கு நான் போயிருந்தபோது, ஒரு கலவரத்தினுள் மாட்டிக்கொண்டு, இந்த பாடத்தை நான் கற்க நேர்ந்தது.
எனது தோழியான மரியம் கூட வர, நான் பெரிய கடைவீதிக்கு ஒரு கம்பளம் வாங்கச் சென்றேன். கம்பளம் வாங்கியபின், எனக்குத் தெரிந்த பழைய சிற்றுண்டி விடுதியில் கபாப் மற்றும் டா சாப்பிடச் சென்றேன். எங்கள் தட்டில் இருந்த உணவைத் தொடக்கூட இல்லை. திடாரென்று கடைக்காரர் விளக்கை அணைத்துவிட்டு கடைக் கதவை மூடிவிட்டார். காற்றில் திகிலின் உணர்வு நிரம்பியது. கடையின் சுவர்கள் பூகம்பம் வந்து ஆடுவதுபோல நடுங்கின.
‘கண்கணிப்பாளர்கள் கடைவீதிக்கு வந்துவிட்டார்கள் ‘ என்று ஒரு பெண் கத்தினாள். பெண்கள் எவ்வாறு உடை உடுத்தவேண்டும் என்று கூறும், ஒழுக்கத்தைக் காப்பாற்றும் போலீஸ் நாங்கள் தான் என்று தன்னிச்சையாய்ப் பறைசாற்றும் ஆட்கள் கடைவீதியை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே புரிந்து கொண்டேன்.
அங்கே நான் பயத்தினால் உறைந்து உட்கார்ந்திருக்கும் போது, மரியம் தனது லிப்ஸ்டிக்கை ஒரு பேப்பர் மூலம் அழித்துக்கொண்டிருந்தாள். ஒரு பெண் தனது நகச்சாயம் பூசப்பட்ட விரல்களைக் கறுப்புக் கையுறை கொண்டு மறைத்துக்கொண்டிருந்தாள். இன்னொரு பெண் தனது வண்ணமயமான தலை அங்கியை எடுத்துவிட்டு, தனது கைப்பையிலிருந்து எடுத்த கறுப்பு நிற தலை அங்கியைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
செருப்புக்கு வெளியே தெரியும் அழகான வண்ணம் பூசப்பட்ட கால்நகங்களை, முழங்கால் வரை நீளமான காலுறை கொண்டு மறைத்துக்கொண்டிருந்தாள் எனது அருகில் உட்கார்ந்திருந்த பெண். இன்னொரு நடுத்தர வயதான பெண் ‘எனக்கு இதைப் பார்த்தால் ஒரே எரிச்சலாக இருக்கிறது. நாம் விடுதலை பெற வேண்டும், இல்லையேல் செத்துத் தொலைய வேண்டும் ‘ என்றாள்.
அதே நேரம், சிற்றுண்டிச்சாலையின் ஆண்கள் பிரிவின் பக்கம், மதவாதிகளின் ஆதரவாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளின் ஆதரவாளர்களுக்கும் சண்டை மூண்டது. எனக்கோ கூண்டுக்குள் மாட்டினாற்போல திகிலாக இருந்தது. கம்பளத்தை விட்டுவிட்டு, மூடப்பட்ட கடைக்கதவின் பக்கம் சென்று கடை முதலாளியை எங்களை வெளியே விடுமாறு கெஞ்சினோம்.
எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. அழகான கடைவீதி, ஆபத்தான புதிராகி விட்டது. முடிவேயற்றது போலத் தோன்றிய காலம் கடந்து இன்னொரு வீதிக்கு ஓடிவந்து அங்கே இருந்த வாடகைக்கார் ஓட்டுனருக்கு ஏராளமான பணம் கொடுத்தோம்.
அந்த கோடைக்கால நாளின் வெப்பத்தில், தலையிலிருந்து கால் வரை இஸ்லாமிய உடை கொண்டு போர்த்தி, வேர்வையிலும் பயத்திலும் நனைந்திருந்தாலும் கூட, எங்களுக்கு அந்த பூட்டப்பட்ட, குளிர்சாதனம் இல்லாத வாடகைக்கார் சொர்க்கமாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் தாண்டி, கடைவீதி எங்களுக்கு வெகுதூரம் பின்னால் சென்றுவிட்ட போது, பெரு மூச்சு விட்டபடி மரியத்தைப் பார்த்தேன்.
என்னால் நம்பவே முடியவில்லை. மரியம் மீண்டும் தன் மேக்கப்பை போட்டுக்கொண்டிருந்தாள். ஒரு அரை மணிநேரம் முன்பு தான் வெகு வேகமாக மேக்கப்பின் சாயலே இல்லாமல் அழித்தாள். அவள் தன் மேக்கப்பை அழித்தவேகமும், மீண்டும் தன் மேக்கப்பை போட்டுக் கொண்ட ஆர்வமும், வேகமும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
‘லிப்ஸ்டிக் வெறும் லிப்ஸ்டிக் இல்லை. அது ஈரானில் ஒரு அரசியல் ஆயுதம் ‘ என்றாள் மரியம்.
என் தோழி சரியாகச் சொன்னாள். நவீன ஈரானின் அரசியல் வரலாற்றில், அதன் நவீனத்தைப்பற்றிய சந்தேகங்கள், மாறுதல்கள், மேற்கு நாடுகளுடனான உறவு அனைத்தும் எப்போதும் பெண்களின் உடல்களின் மீதே பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. 1936இல் மன்னர் ஷா, பெண்களை முக்காடு போடாமல் போகச்சொன்னார். அது நவீனத்துவமாக காண்பிக்கப்பட்டது. 1983இல் இஸ்லாமியக் குடியரசு பெண்களை மீண்டும் முக்காடிட்டது. அது இஸ்லாமிய ஈரானிய அடையாளத்தின் மறு கட்டுமானமாக குறிப்பிடப்பட்டது.
இன்று பெண்கள் தங்களை இஸ்லாமிய உடையில் மூடிக்கொண்டே செல்ல வேண்டும். ஆனால், பெண்கள் இன்று முக்கியமான அரசியல் சக்தியாகவும் ஆகி விட்டார்கள். அதிக அளவில் அவர்கள் மோட்டர் சைக்கிள் ஓட்டுகிறார்கள். பல்கலைக்கழகங்களிலும், மசூதிகளிலும், அரசாங்கத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களது முகங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் கலை இலக்கியத்தில் பங்கு கொண்டு வருகிறார்கள்.
சிறிதளவு லிப்ஸ்டிக் அவர்களை ஜெயிலுக்கு கொண்டு சென்றுவிடும் என்றாலும், ஈரானியப் பெண்கள் வெற்றிகரமாக ஆண்களது உரிமைப் பிரதேசங்களில் ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களது உடல்களின் மீதான உரிமையை பெறுவது அவர்களது அடுத்த வெற்றியாக இருக்கலாம்.
—
பெர்ஷானே மிலானி, பெர்ஷிய மொழி மற்றும் பெண்கள் ஆராய்ச்சிக்கான துணை பேராசிரியராக விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார்.
திண்ணை
Posted inஅரசியலும் சமூகமும்
ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்பர்ஷானே மிலானி ஈரானில் பார்த்தது பார்த்தபடி கிடையாது. ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறுவிதமான படுகை படுகையான அர்த்தங்களுக்குள் மடிந்து கிடக்கின்றது. உதாரணமாக மேக்கப்-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இல்லாத அரசியல் அர்த்தங்களும், குறிக்கோள்களும் இதனுள் குவிந்து கிடக்கின்றன. பெண்கள் தங்களது அரசியல் சார்பையும், அதிகாரத்தை எதிர்க்கும் போக்கையும் தங்கள் மேக்கப் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள். சமீபத்தில் ஈரானுக்கு நான் போயிருந்தபோது, ஒரு கலவரத்தினுள் மாட்டிக்கொண்டு, இந்த பாடத்தை நான் கற்க நேர்ந்தது. எனது தோழியான மரியம் கூட வர, நான் பெரிய கடைவீதிக்கு ஒரு கம்பளம் வாங்கச் சென்றேன். கம்பளம் வாங்கியபின், எனக்குத் தெரிந்த பழைய சிற்றுண்டி விடுதியில் கபாப் மற்றும் டா சாப்பிடச் சென்றேன். எங்கள் தட்டில் இருந்த உணவைத் தொடக்கூட இல்லை. திடாரென்று கடைக்காரர் விளக்கை அணைத்துவிட்டு கடைக் கதவை மூடிவிட்டார். காற்றில் திகிலின் உணர்வு நிரம்பியது. கடையின் சுவர்கள் பூகம்பம் வந்து ஆடுவதுபோல நடுங்கின. ‘கண்கணிப்பாளர்கள் கடைவீதிக்கு வந்துவிட்டார்கள் ‘ என்று ஒரு பெண் கத்தினாள். பெண்கள் எவ்வாறு உடை உடுத்தவேண்டும் என்று கூறும், சுயமாய் நிர்ணயித்துக்க்கொண்ட ஒழுக்கக் காவலர்கள் கடைவீதியை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே புரிந்து கொண்டேன். அங்கே நான் பயத்தினால் உறைந்து உட்கார்ந்திருக்கும் போது, மரியம் தனது லிப்ஸ்டிக்கை ஒரு பேப்பர் மூலம் அழித்துக்கொண்டிருந்தாள். ஒரு பெண் தனது நகச்சாயம் பூசப்பட்ட விரல்களை கறுப்பு கையுறை கொண்டு மறைத்துக்கொண்டிருந்தாள். இன்னொரு பெண் தனது வண்ணமயமான தலை அங்கியை எடுத்துவிட்டு, தனது கைப்பையிலிருந்து எடுத்த கறுப்பு தலை அங்கியை போட்டுக் கொண்டிருந்தாள். செருப்புக்கு வெளியே தெரியும் அழகான வண்ணம் பூசப்பட்ட கால்நகங்களை, முழங்கள் வரை நீளமான காலுறை கொண்டு மறைத்துக்கொண்டிருந்தாள் எனது அருகில் உட்கார்ந்திருந்த பெண். இன்னொரு நடுத்தர வயதான பெண் ‘எனக்கு இதைப் பார்த்தால் ஒரே எரிச்சலாக இருக்கிறது. நம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும், இல்லையேல் சாகவேண்டும் ‘ என்றாள். அதே நேரம், சிற்றுண்டிச்சாலையின் பிரித்துவைத்த ஆண்கள் பக்கம், மதவாதிகளின் ஆதரவாளர்களுக்கும், சீர்திருத்தவாதிகளின் ஆதரவாளர்களுக்கும் சண்டை மூண்டது. எனக்கோ கூண்டுக்குள் மாட்டினாற்போல திகிலாக இருந்தது. கம்பளத்தை விட்டுவிட்டு, மூடப்பட்ட கடைக்கதவின் பக்கம் சென்று கடை முதலாளியை எங்களை வெளியே விடுமாறு வற்புறுத்தினோம். எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தன. அழகான கடைவீதி ஆபத்தான புதிராய் விட்டது. முடிவேயற்றது போலத் தோன்றிய காலம் கடந்து இன்னொரு வீதிக்கு ஓடிவந்து அங்கே இருந்த வாடகைக்கார் ஓட்டுனருக்கு ஏராளமான பணம் கொடுத்தோம். அந்த கோடைக்கால நாளின் வெப்பத்தில், தலையிலிருந்து கால் வரை இஸ்லாமிய உடை கொண்டு போர்த்தி, வேர்வையிலும் பயத்திலும் நனைந்து, பூட்டப்பட்ட, குளிர்சாதனம் இல்லாத அந்த வாடகைக்கார் எங்களுக்கு சொர்க்கமாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் தாண்டி, கடைவீதி எங்களுக்கு வெகுதூரம் பின்னால் சென்றுவிட்ட போது, பெரு மூச்சு விட்டு மரியத்தைப் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. மரியம் மீண்டும் தன் மேக்கப்பை போட்டுக்கொண்டிருந்தாள். ஒரு அரை மணிநேரம் முன்பு தான் வெகு வேகமாக மேக்கப்பின் சாயலே இல்லாமல் அழித்தாள். அவள் தன் மேக்கப்பை அழித்தவேகமும், மீண்டும் தன் மேக்கப்பை போட்டுக் கொண்ட ஆர்வமும் வேகமும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. ‘லிப்ஸ்டிக் வெறும் லிப்ஸ்டிக் இல்லை. அது ஈரானில் ஒரு அரசியல் ஆயுதம் ‘ என்றாள் மரியம். என் தோழி சரியாகச் சொன்னாள். நவீன ஈரானின் அரசியல் வரலாற்றில், அதன் நவீனத்தைப்பற்றிய சந்தேகங்கள், மாறுதல்கள், மேற்கு நாடுகளுடனான உறவு அனைத்தும் எப்போதும் பெண்களின் உடல்களின் மீதே பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. 1936இல் மன்னர் ஷா, பெண்களை முக்காடு போடாமல் போகச்சொன்னார். அது நவீனத்துவமாக காண்பிக்கப்பட்டது. 1983இல் இஸ்லாமியக் குடியரசு பெண்களை மீண்டும் முக்காடிட்டது. அது இஸ்லாமிய ஈரானிய அடையாளத்தின் மறு கட்டுமானமாக குறிப்பிடப்பட்டது. இன்று பெண்கள் தங்களை இஸ்லாமிய உடையில் மூடிக்கொண்டே செல்ல வேண்டும். ஆனால், பெண்கள் இன்று முக்கியமான அரசியல் சக்தியாகவும் ஆகி விட்டார்கள். அதிக அளவில் அவர்கள் மோட்டர் சைக்கிள் ஓட்டுகிறார்கள். பல்கலைக்கழகங்களிலும், மசூதிகளிலும், அரசாங்கத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களது முகங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர்கள் கலை இலக்கியத்தில் பங்கு கொண்டு வருகிறார்கள்.
சிறிதளவு லிப்ஸ்டிக் அவர்களை ஜெயிலுக்கு கொண்டு சென்றுவிடும் என்றாலும், ஈரானியப் பெண்கள் வெற்றிகரமாக ஆண்களது உரிமைப் பிரதேசங்களில் ஆக்கிரமித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களது உடல்களின் மீதான உரிமையை பெறுவது அவர்களது அடுத்த வெற்றியாக இருக்கலாம். — பெர்ஷானே மிலானி, பெர்ஷிய மொழி மற்றும் பெண்கள் ஆராய்ச்சிக்கான துணை பேராசிரியராக விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார்.
|
|
Thinnai 1999 December 3 |