இலை போட்டாச்சு ! -24 – கரம் மசாலாப் பொடி, வற்றல் குழம்புப் பொடி

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

பாரதி மகேந்திரன்


கரம் மசாலாப் பொடி
தேவைப்படும் பொருள்கள்

பட்டை – 100 கிராம்
லவங்கம் – 100 கிராம்
சோம்பு – 100 கிராம்
மராட்டி மொக்கு – 100 கிராம்
ஏலக்காய் – 100 கிராம்
பட்டை இலை – 25 கிராம்
அன்னாசி பூ – 100 கிராம்
ஜாதிக் காய் – 4
ஜாதிப் பத்திரி – 50 கிராம்

இவை யனைத்தையும் எண்ணெய்யில் வறுக்காமல் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நன்கு பொடி செய்து ஒரு டப்பாவில் அழுத்தமாக மூடி வைக்கவும்.

இந்நாளில் மசாலாப் பொடி கடைகளில் கிடைக்கிறது. இதைச் செய்வதற்கென்று மெனக்கெட வேண்டியதில்லை.

ஆனால், கடைகளில் வாங்கும் பொடிகளில் அவற்ரில் பூச்சிகள் வராமலிருக்கும் பொருட்டு இராசயனப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். அது வேண்டாம் என்று நினைப்பவர்கள் தாங்களே வீட்டில் இதைத் தயாரிக்கலாம்.

குருமா, பிரியாணி, சில கூட்டு வகைகள், கறி வகைகள் ஆகியவற்றில் சேர்க்க இது பயன்படுகிறது.

வற்றல் குழம்புப் பொடி

தேவைப்படும் பொருள்கள்:

தனியா எனும் கொத்துமல்லி விதை – கால் கிலோ
வெந்தயம் – 50 கிராம்
மிளகாய் வற்றல் – கால் கிலோ
மிளகு – 100 கிராம்
கடலைப் பருப்பு – 200 கிராம்
துவரம் பருப்பு – 200 கிராம்
உளுத்தம் பருப்பு – 200 கிராம்

பருப்புகளை ஒன்றாய்க் கலந்து வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுக்கவும். வெந்தயத்தையும் அவ்வாறே, தனியாக, சிவக்க வறுக்கவும். மிளகாய் வற்றலையும் நெடி கிளம்புவதற்கு முன்னால் வறுத்து இறக்கவும். மிளகு பொரியும் வரை வறுக்கவும்.

பிறகு எல்லாவற்றையும் கலந்து மையாய்த் திரித்து ஒரு சம்புடத்தில் போட்டு மூடி வைக்கவும்.


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்